அக்னிப்புரட்சி இன்றைய (03.10.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (03.10.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (03.10.2022) முக்கிய செய்திகள்.

* வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசியை (Anti Rabies Vaccine) முற்றிலும் இலவசமாக செலுத்திக்கொள்ளலாம்  என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

* மியான்மர் நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் தரையிலிருந்து 3000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த போது திடீரென குண்டு ஒன்று விமானத்தைத் துளைத்து இருக்கையில் அமர்ந்திருந்த பயணியின் கழுத்தில் பாய்ந்தது. அதில் அவர் பலத்த காயம் அடைந்த நிலையில் விமானம் லோகாவ்கில் தரையிறக்கப்பட்டு, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

* சுங்கக் கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்:

உளுந்தூர்பேட்டை டோல் கேட் ஊழியர்கள் 3வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருவதால் இன்றும் அனைத்து வாகனங்கள் டோல் கட்டணமின்றி சென்று வருகின்றன.

சுங்கச்சாவடி ஊழியர்கள் 28 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக கடந்த 1ம் தேதி முதல் டோல்கேட் பகுதியில் உள்ளிருப்பு போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

* இன்றைய சிந்தனை: 'உண்மையான பரிசு!

நம் வாழ்க்கையில் சில மலிவற்றதை கெட்டியாக பிடித்துக் கொண்டு கை விடுவதற்கு தயாராக இல்லை.

நமது மோசமான பழக்கங்கள், செயல்கள், தீய நட்புகள், உறவுகள், போன்ற எது வேண்டுமானாலும் நம்முடன் மிகவும் பின்னிப் பிணைந்து இருக்கலாம்..

அவைகளால் நமக்கு பாதிப்பு எனத் தெரிந்தும் கூட கைவிட கடினமானவைகளாக இருக்கலாம்... ஆனால் அவைகளை எல்லாம் விட சிறந்தவைகள் நமக்காகக் காத்திருக்கின்றன.... நாம் தான் அவைகளை கண்டு கொள்வது இல்லை..

ஐந்து வயது சிறுமி அமுதா தன் அம்மாவுடன் சூப்பர் மார்க்கெட் சென்று இருந்தாள். அங்கே ஒரு முத்துமாலையைப் பார்த்தாள். அது வேண்டுமென அம்மாவிடம் அடம் பிடித்தாள்.

நான் உன்னோட பிறந்தநாளைக்கு அப்பா கிட்ட சொல்லி 'ரியலான ஒரிஜினல் பியர்ள்ஸ்' மாலை வாங்கித் தரச் சொல்றேன்... இது வேண்டாம்மா" என்றாள் அம்மா.

ஆனால் அமுதா, அழுது பிடிவாதம் செய்து அந்த ப்ளாஸ்டிக் முத்து மாலையை வாங்கிக் கொண்டாள்...

அமுதாவுக்கு அந்த முத்துமாலை மிகவும் பிடித்தமான பொருளாகிப் போனது.

அதை எங்கு சென்றாலும் அணிந்து இருந்தாள் . பள்ளிக்குச் செல்லும் போதும், நண்பர்களுடன் விளையாடும் போதும், ஏன் படுக்கும் போது கூட உடன் கழுத்தில் போட்டிருந்தாள்.

அமுதாவின் அப்பா மிகவும் அன்பானவர். தினமும் அவர் அமுதாவுக்கு படுக்கும் முன் கதை சொல்வார்.

ஒரு நாள் கதை சொல்லி முடித்ததும் கேட்டார், “அம்மு... என்னை உனக்கு பிடிக்குமா?””ஆமாம்பா ரொம்ப பிடிக்கும்.”

“அப்போ, உன்னோட முத்துமாலையை எனக்குத் தரீயா?"

“ஓ.. முடியாதுப்பா... நீங்க வேற எதுனாச்சும் எடுத்துக்கோங்க.. என்னோட பிங்கி பொம்மையை வேணா எடுத்துக்கோங்க.. ஆனா முத்துமாலை மட்டும் தர மட்டேன்ம்பா.. என்றாள். "பரவால்லை குட்டிம்மா .என்று புன்னகையுடன் பதில் சொன்னார் அப்பா.

இது பலநாள் இரவுகள் அப்பா அந்த முத்து மாலையைக் கேட்பதும் அவரது மகள் மறுப்பதும் தொடர்ந்தது.. சில நாட்களுக்குப் பிறகு ஒருநாள், அப்பா இரவு கதை சொல்ல வந்த போது....

அமுதா ஒரு தயக்கத்துடன், “இந்தாங்கப்பா...” என சொல்லிக் கொண்டே ஒரு சிறிய பெட்டியைத் திறந்து அதிலிருந்த அவளின் விருப்பமான முத்துமாலையை எடுத்து அப்பாவின் கைகளில் தந்தாள்.

அது பழசாகியும்... சில முத்துக்கள் உடைந்தும் போயிருந்தன.அதை ஒரு கையில் வாங்கிக் கொண்ட அப்பா, மறுகையால் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு நீல வெல்வெட் பெட்டியை எடுத்தார்.

அதில் உண்மையான முத்துக்களால் ஆன ஒரு அழகிய முத்து மாலை இருந்தது."இதை உனக்குத் தருவதற்காகத் தான்டா அம்மு... நான் தினமும் அந்த ப்ளாஸ்டிக் மாலையைக் கேட்டேன்..." என்றார் அப்பா.

சிறப்பான ஒன்றைப் பெற வேண்டுமானால் போலியான மலிவானகளை நாம் கைவிட வேண்டும்...

* உத்தர பிரதேசம், பதோஹி துர்கா பூஜை நிகழ்ச்சியில் பயங்கர தீ விபத்து
52 பேர் படுகாயம் அடைந்த நிலையில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

* திருவள்ளூர் அருகே தீண்டாமை சுவர் இடிப்பு.

திருவள்ளூர் மாவட்ட தோக்கமூர் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்த தீண்டாமை சுவர் இடிப்பு.

* பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.912 கோடி ஒதுக்கீடு- தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.

மத்திய அரசு சார்பில் ரூ.547 கோடி, மாநில அரசின் பங்கான ரூ.365 கோடி ஒதுக்கீடு.

விண்ணப்பிக்கும் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்காக ரூ.2.75 லட்சம் மானியம்.

* செயலிழந்த மங்கள்யான் செயற்கைக்கோள்!

செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் ஆய்வு மேற்கொண்டு வந்த ‘மங்கள்யான்' செயற்கைக்கோளில் எரிபொருள் மற்றும் பேட்டரி தீர்ந்ததை அடுத்து, அது தன் செயல்பாட்டை நிறுத்திக் கொண்டதாக தகவல்!

₹450 கோடி செல்வவில் இஸ்ரோ தயாரித்த 'மங்கள்யான்' செயற்கைக்கோள், 2013 நவம்பரில் விண்ணில் ஏவப்பட்டு 2014 செப்டம்பரில் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் நிறுவப்பட்டது.

* திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 7வது நாள் பிரம்மோற்சவம்

தங்க சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் மலையப்ப சுவாமி

கிருஷ்ணர் அலங்காரத்தில், நான்கு மாட வீதியில் வலம் வந்து அருள்பாலிக்கிறார் மலையப்ப சுவாமி

* கோவையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் போராட்டம்

சம்பள உயர்வு, நிரந்தர பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்

* பைக் சாகசம் செய்த அதே இடத்தில் விழிப்புணர்வு பிரசாரம்:

சென்னை அண்ணா சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பைக் சாகசத்தில் ஈடுபட்ட ஐதராபாத்தை சேர்ந்த அலெக்ஸ் பினோய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நூதன தண்டனை.

பைக் சாகசத்தில் ஈடுபட்ட இடமான தேனாம்பேட்டை சிக்னலில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசுரங்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டு பினோய்க்கு முன் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்.

முன்ஜாமீன் பெற்ற பினோய், நீதிமன்ற நிபந்தனைபடி பைக் சாகசத்தில் ஈடுபட்ட அதே தேனாம்பேட்டை சிக்னலில் வாகன விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்.

* ஈரான் நாட்டைச் சேர்ந்த பயணிகள் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.

சீனாவை நோக்கி செல்லும் ஈரானிய விமானத்தை ஜெட் விமானங்கள் உதவியுடன் இந்திய விமானப்படை கண்காணித்து வருவதாக தகவல்.

* பேனர்கள் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டால் அனுமதி வழங்கிய அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்.

சாலை ஓரங்களில் வைக்கப்படும் பேனர்கள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் எச்சரிக்கை.

அதிகாரிகள் கூண்டோடு வேறு மாவட்டத்திற்கு மாற்றப்படுவார்கள் எனவும் ஆட்சியர் எச்சரிக்கை.

* இந்திய விமானப்படை தனது அசாத்திய தைரியம், வீரத்தால் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இறையாண்மையை பாதுகாப்பதில் இந்திய விமானப்படை முக்கிய பங்காற்றியுள்ளது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் ஹெலிகாப்டருக்கு பிரசந்த் என பெயர் வைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

* கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் ஏரி வனப்பகுதிக்குள் யானைகள் நடமாட்டம்.

யானைகள் நடமாட்டத்தால் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை தடை விதிப்பு

* TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம்.

அரசாணை எண் 149 ஐ நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்.

* காரைக்கால் துறைமுகம் முழுமையாக தனியார் மயமாகிறது.

600 ஏக்கர் துறைமுகத்தை ஏலம் எடுக்க அதானி, வேதாந்தா உள்ளிட்ட 5 நிறுவனங்கள்  போட்டி.

தற்போது அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் உள்ள காரைக்கால் துறைமுகத்தை முழுமையாக தனியாருக்கு விற்க அரசு முடிவு

காரைக்கால் துறைமுகத்தை ஏலம் எடுக்க அதானி, வேதாந்தா இடையே போட்டி நிலவுகிறது. தற்போது காரைகால் துறைமுகத்துக்கு 2960 கோடி ரூபாய் வங்கி கடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

* UPSC தேர்வுக்கான இலவச பயிற்சி
சென்னையில் தமிழ்நாடு அரசு நடத்தும் அகில இந்திய சிவில் சர்வீசஸ் பயிற்சி மையத்தில் நடைபெறுகிறது

வரும் 7-ம் தேதி முதல் 27-ம் தேதி விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
👉 Link : https://civilservicecoaching.com

* ரஷ்யாவிடமிருந்து முக்கிய நகரை மீட்ட உக்ரைன்: அதிபர் ஜெலன்ஸ்கி மகிழ்ச்சி

உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள லைமன் நகரை தளவாட மற்றும் போக்குவரத்து மையமாக ரஷ்யா பயன்படுத்தி வந்தது. ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட 4 பகுதிகளில் டொனெட்ஸ்க்கும் ஒன்று. அந்த நகரை ரஷ்ய ராணுவத்தினரிடம் கடுமையாக சண்டையிட்டு உக்ரைன் மீட்டுள்ளது. ’லைமன் பகுதி ரஷ்யாவிடமிருந்து விடுவிக்கப்பட்டது. எங்கள் ராணுவத்திற்கு மிக்க நன்றி’ என்று ஜெலன்ஸ்கி மகிழ்வுடன் தெரிவித்தார்.

* குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் - கருத்து கணிப்பு முடிவு

4 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஏபிபிசி வோட்டர் நடத்திய கருத்து கணிப்பில் குஜராத், இமாச்சல் பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியை பாஜக கைபற்றும் என தெரிவித்துள்ளது. தற்போது குஜராத்தில் 99 இடங்களை பாஜக பெற்றுள்ள நிலையில், வருகிற தேர்தலில் 135-143 இடங்களை பெற வாய்ப்பு உள்ளது என்றும், இமாச்சலில் 37-45 இடங்களை பெறக்கூடும் எனவும் கூறியுள்ளது.

* பெண்களுக்கு அதிக மரியாதை அளிக்கும் சமுதாயத்தை உருவாக்குவோம்: குடியரசு தலைவர்

இந்து மத பண்டிகையான துர்கா பூஜையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "துர்கா பூஜை பண்டிகை மூலம் நமது சமூகத்தில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் பலப்படுத்தப்பட வேண்டும். நாட்டை மேம்படுத்தும் செயல்பாட்டில் சம பங்கை அளிக்கும் வகையில் பெண்களுக்கு அதிக மரியாதையை அளிக்கும் சமுதாயத்தை உருவாக்குவோம்" என்றார்.

* பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.912 கோடி ஒதுக்கீடு- தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.

மத்திய அரசு சார்பில் ரூ.547 கோடி, மாநில அரசின் பங்கான ரூ.365 கோடி ஒதுக்கீடு.

விண்ணப்பிக்கும் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்காக ரூ.2.75 லட்சம் மானியம்.

* திமுக தலைவர் பதவிக்கு அக்டோபர் 7ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கிறேன்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நம் தரப்பிலிருந்து தவறுகளுக்கோ, குறைகளுக்கோ குன்றிமணி அளவுகூட இடம் தர கூடாது.

அப்படி ஏதேனும் ஒன்றிரண்டு நிகழ்வுகள் என் கவனத்திற்கு வந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுத்திட சிறிதும் தயங்க மாட்டேன் என்பதைக் கண்டிப்புடன் நினைவூட்டிட விரும்புகிறேன்- தொண்டர்களுக்கு முதலமைச்சர் கடிதம்.

* MBBS, BDS படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் அவகாசம் அக்டோபர் 6ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிப்பு.

இதுவரை 35,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்- மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு.

* மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடனை சேர்ந்த ஸ்வான்டே பாபோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மனித பரிணாம வளர்ச்சியில் மரபியல் சார்ந்த ஆய்வில் சாதித்ததற்காக ஸ்வான்டே பாபோவுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

* கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படுவது ஒரு சலுகையே தவிர உரிமை அல்ல - உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

எப்.சி.டி.எல். நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் 1995 ஏப்ரலில் பணியின்போது உயிரிழந்தார்.

ஊழியரின் மனைவி வேறொரு நிறுவனத்தில் பணியாற்றி வந்ததால் கருணை அடிப்படையில் வேலை தரப்படவில்லை.

ஊழியர் இறக்கும்போது அவரது மகள் சிறுமியாக இருந்துள்ளார்.

மகள் பெரியவரானதும் கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்று நிறுவனத்துக்கு விண்ணப்பித்துள்ளார். 
எப்சிடிஎல் நிறுவன ஊழியர் இறந்து 24 ஆண்டுகளுக்கு பின் கருணை அடிப்படையில் வேலை கோருவதை ஏற்கமுடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

திடீரென்று ஒரு குடும்பத்துக்கு ஏற்படும் நெருக்கடியை சமாளிக்கவே கருணை அடிப்படையில் வேலை தரப்படுகிறது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கருணை அடிப்படையில் வேலை வழங்க பரிசீலிக்குமாறு கேரள உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததுள்ளது.

கேரளத்தைச் சேர்ந்த திருவாங்கூர் உரங்கள், வேதிப்பொருள் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை ஏற்று ஐகோர்ட் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

* தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் 6 பேரை அடித்துச் செல்லப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 6 பேரில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடியில் இருந்து திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டிமாதா கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஆற்றில் குளித்தபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் 40 பேர் பூண்டிமாதா கோயிலுக்கு சுற்றுலாவிற்காக வந்தவர்கள் அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர்.

அப்போது அதில் 6 பேர் நீச்சல் தெரியாததால் ஆழமான பகுதிக்கு அடித்து செல்லப்பட்டனர்.

அதில் சார்லஸ் மற்றும் பிரதீப் ஆகிய 3 பேரின் உடலை தீயணைப்பு வீரர்கள் சடலமாக மீட்டனர்.

மீதமுள்ள 3 பேரின் நிலை என்ன என்பது குறித்து திருக்கட்டு பள்ளியை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் 20-க்கு மேற்பட்டோர் தீவிர தேடலில் ஈடுபட்டுள்ளனர்.

* ஆவின் பால் பாக்கெட்டில் ஆயுத பூஜை வாழ்த்துக்கள்...

* நீட் தேர்வு மதிப்பெண் - நீதிமன்றம் உத்தரவு:

நீட் தேர்வு விடைத்தாள் மற்றும் மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றில் உள்ள மதிப்பெண்களில் தவறு உள்ளதாக மாணவி கிறிஸ்மா விக்டோரியா என்பவர் வழக்கு.

விடைத்தாளை மாணவியிடம் காண்பிக்க தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

நொய்டாவில் உள்ள தேசிய தேர்வு முகமைக்கு நேரில் சென்று பார்வையிட மாணவிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

நீட் தேர்விற்கான விடைத்தாளின்படி 196 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், மதிப்பெண் பட்டியலில் 65 மதிப்பெண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது - மாணவி.

* நவம்பர் 3ம் தேதி 6 மாநிலங்களுக்கு இடைத்தேர்தல்

மகாராஷ்டிரா, பீகார், அரியானா, தெலங்கானா, ஒடிசா, உத்திரப்பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள 7 சட்டபேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலானது நவம்பர் 3ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் நவம்பர் 6ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

* விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது: பள்ளிகல்வித்துறை

தமிழ்நாட்டில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளிகல்வித்துறை வெளியிட்ட உத்தரவில், ''தனியார் பள்ளிகள் காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் அனுமதி பெற்று வகுப்புகள் நடத்தலாம்'' என்று கூறியுள்ளது.

* சென்னையில் குப்பை; ஓபிஎஸ் வலியுறுத்தல்

இந்தியாவில் தூய்மை நகரங்களின் பட்டியலில் சென்னை 44வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ், “சென்னை நகரத்தில் குப்பை நிரம்பி வழிகிறது. வடகிழக்கு பருவமழை துவங்கிவிட்டால் நிலைமை இன்னமும் மோசமாகிவிடும். இதனால் சுகாதாரக் கேடுகள் ஏற்பட்டு, தொற்று நோய்கள் பரவும் சூழ்நிலை உருவாகும். எனவே, முதல்வர் ஸ்டாலின் இதில் தனிக்கவனம் செலுத்தி மக்களைக் காக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

* சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி நீக்கம்: அன்புமணி கண்டனம்

''உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி, பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடிகளில் பணியாற்றிய 54 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டது சட்டவிரோதமாகும். இதை கண்டித்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டு தொழிலாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார்.

* MBBS, BDS மாணவர் சேர்க்கை : கால அவசகாசம் நீட்டிப்பு

மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றுடன் கால அவகாசம் முடிவடையவிருந்த நிலையில், வரும் 6-ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டித்து  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

* 2022 ஆம் ஆண்டிற்கான உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடனை சேர்ந்த ஸ்வான்டே பாபோவுக்கு  அறிவிக்கப்பட்டது. 

அழிந்துபோன ஹோமினின்கள் மற்றும் மனித பரிணாமத்தின் மரபணுக்கள் பற்றிய அவரது கண்டுபிடிப்புகளுக்காக இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

* ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை வெளியிடுவதை தவிர்க்குமாறு செய்தி இணையதளங்கள், OTT தளங்கள், தொலைக்காட்சி சேனல்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

* ஆன்லைன் ரம்மியை முதலில் தடை செய்யுங்கள், பிறகு அந்த விளம்பரத்தில் நான் நடிப்பதை தவிர்க்கிறேன் - நடிகர் சரத்குமார்

* 🏏ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2022ல் இருந்து காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா விலகல் - பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

* உளுந்தூர்பேட்டை டோல்கேட் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் ரூ.1 கோடிக்கு மேல் இழப்பு என தகவல்

* பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா விசுவக்குடியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான வரவு - செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டது.

அதில்  ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி பிளிச்சிங் பொடி வாங்கிய செலவு வெறும் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 214 தான்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages