அக்னிப்புரட்சி இன்றைய (04.10.2022) முக்கிய செய்திகள்.
* அக்னிப்புரட்சி வாசகர்கள் அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்.
- அக்னிப்புரட்சி குழுமம்
* சரஸ்வதி பூஜையை ஒட்டி, கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை...
இந்தியாவிலேயே தனியாக அமையப்பெற்ற ஒரே சரஸ்வதி அம்மன் ஆலயம். திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
* எக்காரணம் கொண்டும் சொல்லிலும், செயலிலும் அலட்சிய போக்குக்கூடாது...
அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
* அரசுப்பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக 2213 புதிய சாய்தள வசதி கொண்ட பேருந்துகள் வாங்க போக்குவரத்து துறை திட்டம்.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களின் நலனை கருத்தில் கொண்டு போக்குவரத்துதுறை முடிவு.
* சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.38,200க்கு விற்பனை; ஒரு கிராம் தங்கம் ரூ.4,775க்கு விற்பனை.
* நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் & இதர மருத்துவக் கல்லூரிகளில் உள்ள AIQ இடங்களுக்கு அக்டோபர் 11 முதல் கலந்தாய்வு தொடக்கம் - மருத்துவக் கலந்தாய்வு கமிட்டி.
அக்டோபர் 17 முதல் 28 ஆம் தேதிக்குள் முதற்கட்ட கலந்தாய்வை மாநிலங்கள் நடத்திக் கொள்ளலாம்.
நாடு முழுவதும் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 15 இல் தொடங்கும் - மத்திய அரசு.
* திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிரம்மோற்சவத்தையொட்டி தினம் தோறும் காலை மற்றும் இரவில் பெரிய சேஷம், சின்ன சேஷம், சிங்கம், அண்ணப்பறவை, முத்து பந்தல், சர்வ பூபாலம், மோகினி அவதாரம் , கருட வாகனம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இன்று பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்ற நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
* ஜம்மு & காஷ்மீர் IPS அதிகாரி கொலை:
ஜம்மு & காஷ்மீர் சிறைத்துறை செயல் இயக்குநர் (DGP) ஹெச்.கே. லோகியா IPS கழுத்தை அறுத்துக் கொலை.
உதவியாளரைக் காணவில்லை. கொலை செய்துவிட்டு, தொண்டைப் பகுதியை பாட்டிலைக் கொண்டு அறுத்துவிட்டு நெருப்பு வைத்துள்ளது தெரியவந்துள்ளது.
* கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,வேலை நிறுத்ததில் ஈடுபட்ட 2,000 தூய்மை பணியாளர்களின் வேலை நிறுத்தம் முடிவு செய்தனர். மாநகராட்சி நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
* இந்தியாவில் வெளிநாட்டவரை கவர்ந்த இடம் என்ற அந்தஸ்தை தாஜ்மகாலிடத்தில் இருந்து மாமல்லபுரம் பறித்துக் கொண்டது.
கடந்த ஆண்டு 1, 44 ,984 பேர் மாமல்லபுரத்தை பார்த்து சென்றுள்ளனர் தாஜ்மஹாலை வெறும் 38 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
* பணி நீக்கத்துக்கு எதிராக சுங்க சாவடி ஊழியர்கள் போராட்டம்.
செங்குறிச்சி, திருமாந்துறை சுங்கச்சாவடிகளுக்கான பாதுகாப்பை தொடர வேண்டும்.
அவசர வழக்காக நீதிபதி வீட்டில் விசாரணை செய்து உத்தரவு.
சுங்க சாவடி பணி பாதிப்பால் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை பாதுகாப்புக்கு அமர்த்த கோரி திருச்சி சுங்கச்சாவடி நிர்வாகம் வழக்கில் உத்தரவு.
* கஞ்சா வியாபாரிகளின் 2,000 வங்கி கணக்குகள் முடக்கம்-காவல்துறை.
தமிழகம் முழுவதும் ஆபரேஷன் கஞ்சா வேட்டையில் கஞ்சா வியாபாரிகளின் 2,000 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
2,000 வங்கி கணக்குகளில் இருந்து சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான சொத்துக்கள், பணம் முடக்கப்பட்டுள்ளன.
* நாட்டின் மீது பறந்த வடகொரியா ஏவுகணை; ஜப்பான் மக்களுக்கு எச்சரிக்கை
வட கொரியா முதல் முறையாக ஜப்பான் மீது ஏவுகணையை ஏவியது, இது ஜப்பானியர்களுக்கு எச்சரிக்கையாக அமைந்தது. இதை தொடர்ந்து வடக்கு ஜப்பானில் ரெயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
ஏவுகணை பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்பு ஜப்பான் எல்லைக்கு மேலே பறந்து சென்றது. இதை தொடர்ந்து ஜப்பான் அரசு நாட்டுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரித்தது.
2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜபானுக்கு மேல் பறந்த முதல் வட கொரிய ஏவுகணை இதுவாகும்.
அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பானின் இராணுவத் பயிற்சிக்கு மத்தியில், 10 நாட்களில் தென்கொரியாவின் ஏவுகணை வீசப்பட்டு உள்ளது.
தென் கொரியாவின் கூட்டுப்படைத் தலைவர்கள் கூறியதகவல்படி. ஏவுகணை வட கொரியாவின் சீனாவுடனான மத்திய எல்லைக்கு அருகிலுள்ள முப்யோங்-ரியில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 7:23 மணியளவில் ஏவப்பட்டது. இது பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்பு ஜப்பானின் தோஹோகு பகுதியில் அதிகபட்சமாக 1,000 கிலோமீட்டர் (621 மைல்) உயரத்தில் 20 நிமிடங்களுக்கு சுமார் 4,600 கிலோமீட்டர்கள் (2,858 மைல்கள்) பறந்து சென்றதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இந்த ஏவுகணை சோதனையை கடுமையாக கண்டித்ததோடு, வட கொரியாவின் சமீபத்திய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை "மோசமானது" என கூறினார்.
ஏவுகணையை சுட்டு வீழ்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஜப்பான் கூறியது. வடகொரியாவில் இருந்து மீண்டும் மீண்டும் ஏவுகணை ஏவப்படுவதை எதிர்கொள்ளும் வகையில் ஜப்பான் தனது பாதுகாப்பை பலப்படுத்த விரும்புவதால், எதிர் தாக்குதல் திறன் உள்ளிட்ட எந்த விருப்பங்களையும் நிராகரிக்காது என்று பாதுகாப்பு அமைச்சர் யசுகாசு ஹமாடா கூறினார்.
தென் கொரியா தனது இராணுவத்தை மேம்படுத்துவதாகவும் நட்பு நாடுகளின் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் கூறி உள்ளது.
இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் ஒரு அறிக்கையில் கூறியதாவது;-
ஜப்பான் மீது நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை செலுத்தும் வடகொரியாவின் "ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற" முடிவை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த நடவடிக்கை ஸ்திரமின்மை மற்றும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் மற்றும் சர்வதேச பாதுகாப்பு விதிமுறைகளை வடகொரியா அப்பட்டமாக புறக்கணிப்பதை காட்டுகிறது என கூறி உள்ளார்.
செவ்வாய் கிழமை வடகொரியா ஏவியது பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் உட்பட இந்த ஆண்டு நாட்டின் 23 வது ஏவுகணை சோதனை ஆகும்.
JOIN US: https://t.me/Agnipuratchi1
* அக். 7, 8-ல் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு: எந்தெந்த மாவட்டங்களில்?
அக். 7, 8-ல் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
05.10.2022 முதல் 6.10.2022 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
* 07.10.2022 முதல் 08.10.2022 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர்ம் பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
* தேசிய கட்சியின் பெயரை நாளை அறிவிக்கிறார் சந்திரசேகர் ராவ்?
தெலங்கானா மாநில முதல்வரும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவருமான கே.சந்திரசேகர் ராவ், தனது தேசிய கட்சியின் பெயரை நாளை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சியில் சந்திரசேகா் ராவ் ஈடுபட்டு வருகிறாா். அதற்காக பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத எதிா்க்கட்சித் தலைவா்களை அவா் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறாா்.
சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே, பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமார், தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் ஆகியோரை சந்தித்துப் பேசினாா்.
மேலும், தேசிய அரசியலில் நுழைவது குறித்து தனது கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் கடந்த ஜூன் மாதம் முதலே சந்திரசேகர் ராவ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தனது தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் பெயரை மாற்றவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், தசரா விழாவான நாளை தனது தேசிய கட்சியின் பெயரை சந்திரசேகர் ராவ் வெளியிடவுள்ளதாகவும், அக்டோபர் 9-ஆம் தேதி தில்லியில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
* 2022ம் ஆண்டின் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு.
பிரான்சின் அலெய்ன் அஸ்பெக்ட், அமெரிக்காவின் ஜான் கிளாசர், ஆஸ்திரியாவின் ஆன்டன் ஷிலிங்கருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு.
சிக்கலான போட்டான் சோதனை, பெல் ஏற்றத்தாழ்வுகளை மீறுதல், குவாண்டம் தகவல் அறிவியல் ஆகியவைக்காக நோபல் பரிசு.
* விருப்பப்பட்டால் கட்டணம் என்பது வதந்தி.
இலவச பேருந்து பயணம் செய்ய விரும்பாத பெண்களிடம் பணம் வாங்கிக்கொண்டு டிக்கெட் கொடுக்க வாய்மொழி உத்தரவிட்டதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை - அமைச்சர் சிவசங்கர் விளக்கம்.
* இலங்கையில் தமிழர்கள் மீது நடக்கும் மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் ஐ.நா மனித உரிமை ஆணைய தீர்மானத்துக்கு மேலும் பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
• இலங்கையில் நடக்கும் இத்தகைய மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் தீர்மானத்தை ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தாக்கல் செய்ய சில நாடுகள் முடிவு செய்துள்ளன.
• இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, மலாவி, மான்டனெக்ரோ, வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் இத்தீர்மானத்தை கொண்டு வருகின்றன.
• இந்த தீர்மானம் மீது இந்த வாரம் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடைபெறும்.
• அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
1)இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதை ஐ.நா. மனித உரிமை ஆணையர் தீவிரப்படுத்த வேண்டும்.
2)மனித உரிமை மீறல்களுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டவும், ஆய்வு செய்யவும் மனித உரிமை அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்.
3))எதிர்கால மனித உரிமை மீறல்களுக்கு எதிராக வியூகம் வகுக்க வேண்டும்.
4)இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து நடக்கும் மனித உரிமை மீறல்கள் கவலை அளிக்கின்றன. போராட்டக்காரர்கள் மீது தாக்குதல், கைது நடவடிக்கை, அரசு ஆதரவாளர்களுக்கு எதிரான வன்முறை, எம்.பி.க்கள் வீடு தீவைப்பு போன்ற நிகழ்வுகள் கவலை அளிக்கினறன.
5)இலங்கையில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். தவறு செய்பவர்களை பொறுப்பேற்க செய்ய வேண்டும்.
* 108 எம்பி கேமராவுடன் 'மோட்டோ ஜி72’ ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்
மோட்டோ நிறுவனம் அசத்தலான அம்சங்களுடன் தன் புதிய தயாரிப்பான ஜி72 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
மோட்டோநிறுவனம் சமீப காலமாக இந்தியாவில் புதிய தயாரிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் புதிதாக ‘ஜி72’ ஸ்மார்ட்போனை சலுகை விலையுடன்இந்தியாவில்அறிமுகம் செய்துள்ளது.
‘மோட்டோ ஜி72’சிறப்பம்சங்கள் :
* 6.60இன்ச் அளவுகொண்ட ஓஎல்ஈடிஎச்டி திரை
* மீடியா டெக் ஹெலியோ ஜி99
* 6ஜிபி ரேம்;128 ஜிபி மெமரி
* பின்பக்கம் 108எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும், முன்பக்க செல்ஃபி கேமரா 16எம்பி பொருத்தப்பட்டுள்ளது.
* 5000எம்ஏஎச் பேட்டரி வசதி, 33வாட்ஸ்சார்ஜ்
* ஆண்டிராய்ட் 12 இயங்குதளம்
இந்தியாவில் இதன் விற்பனை விலை 6ஜிபி ரேம்; 128ஜிபி மெமரிரூ.18,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை வருகிற அக்டோபர் 12 ஆம் தேதி மோட்டோ விற்பனையகங்களிலும் ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களிலும் துவங்க உள்ளது.
மேலும், விற்பனையின்போது ரூ.1,000 சலுகை விலையாகக் குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* இந்தியாவுக்கு வந்து ஜே.இ.இ. தேர்வில் தில்லுமுல்லு செய்த ரஷ்ய ஹேக்கர் - சுற்றிவளைத்து பிடித்த சிபிஐ..!
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) சேர்வதற்கான ஜேஇஇ நுழைவுத்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் கொரோனா கட்டுப்பாடால் இணையவழியில் நடைபெற்றது. அப்போது நடைப்பெற்ற மெயின்ஸ் தேர்வில் முறைக்கேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதில் அஃபினிட்டி எஜுகேஷன் என்ற தனியார் நிறுவனமானது பல்வேறு மோசடியாளர்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளது. இணையவழியாக நடைபெற்ற தேர்வில் கேள்வித்தாளைத் தேர்வுக்கூடத்துக்கு வெளியில் இருந்து தொடர்புகொண்டுள்ளனர்.
அதன் பின் தேர்வெழுதிய நபர்களின் கணினிகளை ரிமோட் ஆக்ஸஸ் மூலம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, தேர்வர்களுக்கு பதிலாக, வெளியிலிருந்து இவர்கள் பதிலளிக்கும் வகையிலான தொழில்நுட்பத்தை உருவாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
ஹரியாணா மாநிலம் சோனேபட்டில் உள்ள ஒரு தனியார் தேர்வு மையத்தில் இந்த மோசடி நடந்ததும், தேர்வு மைய ஊழியர்களும் இந்த மோசடியில் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு விண்ணப்பித்தவர்களிடம் பெரிய அளவில் தொகையை வாங்கிக் கொண்டு, மோசடியில் ஈடுபட்டு அவர்களுக்கு என்ஐடியில் சேர்க்கை உதவியதாகவும் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இயக்குநர்கள் மூவரிடம் சிபிஐ ஏற்கெனவே விசாரணை நடத்தியிருந்தது. இந்நிலையில், வழக்குடன் தொடர்புடைய ரஷிய நபரை சிபிஐ கைது செய்தது.
அவருக்கு எதிராக ஏற்கெனவே லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அந்நபர் வெளிநாட்டில் இருந்து தில்லி விமான நிலையத்துக்கு வந்தபோது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரைக் காவலில் எடுத்து விசாரிப்பதற்கான நடவடிக்கைகளை சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
* தேர்தல்களில் வாக்குறுதிகளை அள்ளித் தெளித்துவிட்டு, "எப்போது நிறைவேற்றுவீர்கள்?" என்று கேட்பவர்களிடம், "தேதி குறிப்பிட்டோமா?" என்றெல்லாம் இனி கேட்க முடியாது போல.
தேர்தல் ஆணையம் கொண்டு வந்திருக்கும் சீர்திருத்தத்தின் படி, "தேல்தலில் கொடுக்கும் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றுவோம்? அதற்கான 'பணம் எங்கிருந்து வரும்?', பயனாளிகள் யார் யார்?" என்றெல்லாம் குறிப்பிட்டு தங்கள் விண்ணப்பத்தில் தெரிவிக்க படிவம் ஒன்றை வடிவமைத்துள்ளது தேர்தல் ஆணையம்.
இதை தேசிய கட்சிகள் பார்வைக்கு கொடுத்துள்ளது தேர்தல் ஆணையம். ஒப்புக் கொண்ட பின், நடைமுறைக்கு வரும்.
* மூன்றாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி.
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த தென்னாபிரிக்க அணி 20 ஓவரில் 227 ரன்கள் குவித்தது.
228 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய இந்திய அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 178 ரன்கள் எடுத்தது.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றியது.
JOIN US: https://t.me/Agnipuratchi1
No comments:
Post a Comment