அக்னிப்புரட்சி இன்றைய (05.10.2022) முக்கிய செய்திகள்.
* மகிஷனைக் கொன்றவள் மன்பதை காப்பவள் மாமலையாள்
மதியினைச் சூடிடும் மாமறை போற்றிடும் மாண்புடையாள்
விதியினை மாய்க்கும் விமலனின் மேனியில் வீற்றிருப்பாள்
கதியெனப் பற்றினேன் காத்திடு எங்களை கற்பகமே!
கோலனைக் கொன்றவள் கோவலர் தாயவள் கோமகளாம்
மாலனை உற்றவள் மாமழை போன்றவள் மாமலராள்
மேலவர் போற்றிடும் மேதகு கீர்த்தியாள் மேதினியாள்
வேலவன் மாமியாம் வேதனை மாய வணங்குவமே!
நான்முகத் தேவனின் நாவினில் என்றும் நடமிடுவாள்
நான்மறை ஓதிடும் நல்லவர் நெஞ்சில் நயந்திருப்பாள்
நூன்முறை கற்றவர் நுட்பம் அறிந்தவர் நுண்ணறிவாள்
நோன்பினள் மாண்பினள் நோக்கம் உயர்ந்திட நண்ணுவமே!
அனைவருக்கும் விஜயதசமி திருநாள் நல்வாழ்த்துகள்...
* "பசிபோக்குவதே ஜீவகாருண்யம்"
'எல்லா உயிர்களையும் தன் உயிர்போல் பாவித்து, சம உரிமை வழுங்குவோரின் மனதில் இறைவன் வாழ்கிறான்'
- அக்டோபர் 5: வள்ளலார் 200வது பிறந்த தினம் இன்று.
* 18 மாநிலங்களில் 115 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை; கோடிக்கணக்கில் பணம் நகைகள் பறிமுதல்
சிபிஐ அதிகாரிகள் தலைமையில், இன்டர்போல், அமெரிக்க, கனடா, ஆஸ்திரேலிய போலீசார் இணைந்து 18 மாநிலங்களில் 115 இடங்களில் சோதனை நடத்தினர்.
டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் கர்நாடகா, அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் போலி கால் சென்ட்டர் நடத்தியது உள்ளிட்ட சைபர் குற்றங்கள் தொடர்பான இந்த அதிரடி சோதனைகளின் போது 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தானில் நடைபெற்ற சோதனையின் போது ஒரு கோடியே எண்பது லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் ஒன்றரை கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக சிபிஐ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ஆபரேசன் சக்ரா' என்ற பெயரில் பல்வேறு நாடுகளின் போலீசாரும் மாநில காவல்துறை அதிகாரிகளும் இந்த சோதனையில் பங்கேற்றனர். டிஜிட்டல் ஆவணங்கள், லேப்டாப், கணினி செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
* தவறான அக்கவுண்டிற்கு பணம் அனுப்பி விட்டீர்களா? 48 மணி நேரத்தில் புகாருக்கு தீர்வு!
தவறான பரிவர்த்தனை குறித்து வாடிக்கையாளர் புகார் அளித்த 48 மணி நேரத்திற்குள் அந்த பணம் திருப்பி செலுத்தப்பட வேண்டும்
ஒருவரது வங்கிக் கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என்றால், வங்கிகளில் கால் கடுக்க காத்திருந்து பணம் டெபாசிட் செய்த காலமெல்லாம் மலையேறி விட்டது. இப்போதெல்லாம் இருந்த இடத்தில் இருந்தே, ஓரிரு நொடிகளில் நீங்கள் விரும்புவோருக்கு பணம் செலுத்தும் வகையில் யூபிஐ, மொபைல் பேங்கிங் போன்ற வசதிகள் வந்து விட்டன.
தனியாக நேரம் ஒதுக்கி வங்கி வரை அலைந்து, திரிந்து வருவதை தவிர்க்க இது உதவியாக இருக்கிறது. அந்த வகையில் எண்ணற்ற மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை முறைகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஆனால், ஒன்றில் சாதகமான அம்சம் எந்த அளவுக்கு இருக்கிறதோ, அதே அளவுக்கு ஏதேனும் சில குறைபாடுகளும் இருக்கத்தானே செய்யும். குறிப்பாக, நமது கவனக்குறைவு காரணமாகவே இத்தகைய குறைபாடுகள் சில சமயங்கள் ஏற்படுகின்றன.
நாம் யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ, அந்த நபருக்குப் பதிலாக வேறொரு நபருக்கு தவறுதலாக பணம் அனுப்பி விட்டால் என்ன செய்வது? அந்த பணம் இனி நமக்கு திரும்ப கிடைக்குமா? அதை எப்படி திரும்பப் பெறுவது என்ற கேள்விகளுக்கு இந்த செய்தியில் விடை காணலாம்.
ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள்
ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளின்படி, தவறான பரிவர்த்தனை குறித்து வாடிக்கையாளர் புகார் அளித்த 48 மணி நேரத்திற்குள் அந்த பணம் திருப்பி செலுத்தப்பட வேண்டும். ஒருவேளை வாடிக்கையாளர் பணத்தை திரும்பப் பெற வங்கி உதவவில்லை என்றால், தொடர்புடைய நபர், bankingombudsman.rbi.org.in. என்ற இமெயில் முகவரியில் புகார் அளிக்கலாம்.
தவறான பரிவர்த்தனைகள் குறித்து வங்கிகளிலும் நேரடியாக எழுத்துப் பூர்வமாக புகார் அளிக்கலாம்.
என்னென்ன விவரங்கள் தேவை?
தவறான பரிவர்த்தனை குறித்து புகார் அளிக்கையில், வங்கி கணக்கு எண், கணக்காளரின் பெயர், பரிவர்த்தனை குறியீடு எண், பரிவர்த்தனை தேதி, தொகை மற்றும் ஐஎஃப்எஸ்சி கோடு முதலிய விவரங்களை குறிப்பிட வேண்டும்.
சட்ட நடவடிக்கை
எந்த முயற்சியும் பலன் அளிக்காத நிலையில், சட்ட நடவடிக்கை மூலமாக உங்கள் பணத்தை திரும்பப் பெறலாம். அதாவது, நீங்கள் தவறான ஒரு நபருக்கு பணம் அனுப்பி விட்டீர்கள். அதை நீங்கள் திரும்பக் கேட்கும்போது, அவர் திருப்பியளிக்க மறுக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். தொடர்புடைய நபருக்கு எதிராக நீங்கள் வழக்குப்பதிவு செய்யலாம்.
பணத்தை திருப்பியளிக்க மறுக்கும் பட்சத்தில், அது ரிசர்வ் வங்கி விதிமுறைகளை மீறிய செயலாகக் கருதப்படும். ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, பயனாளரின் வங்கிக் கணக்கு குறித்து சரியான தகவல்களை வழங்குவது லிங்கர்களின் பொறுப்பு ஆகும். ஏதேனும் காரணங்களுக்காக லிங்கர் தவறு செய்தால், அதற்கு வங்கி பொறுப்பேற்காது.
JOIN US: https://t.me/Agnipuratchi1
* தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வு:
சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.38,680க்கு விற்பனை.
ஒரு கிராம் தங்கம் ரூ.4,835க்கு விற்பனை; தங்கம் விலை கடந்த 2 நாட்களில் 1,040 ரூபாய் அதிகரிப்பு.
* மியான்மரில் சிக்கி தவித்த 13 தமிழர்கள் தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்தடைந்தனர்.
தாய்லாந்தில் வேலை எனக்கூறி 60 தமிழர்கள் உள்பட 300 இந்தியர்கள் மியான்மர் நாட்டுக்கு கடத்திச்செல்லப்பட்டனர் ஆன்லைனில் சட்டவிரோத வேலைகளை மேற்கொள்ளும் பொருட்டு தாய்லாந்தில் இருந்து மியான்மருக்கு கட்டாயப்படுத்தி அழைத்து செல்லப்பட்டு உள்ளனர். சட்டவிரோத வேலைகளை அவர்கள் செய்ய மறுத்தால் வேலை அளிப்போரால் மின்சாரம் பாய்ச்சி கடுமையாக தண்டிக்கப்படுவதாகவும், பிணைக்கைதிகளாக அவர்கள் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து மியான்மரில் சிக்கி தவித்த தமிழர்களை மீட்க பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அதனையடுத்து எடுக்கப்பட்ட பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு மியான்மரில் மோசடி கும்பலிடம் சிக்கிய தமிழர்கள் 13 பேர் வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் மீட்கப்பட்டு நேற்று இரவு டெல்லி வந்தடைந்தனர். அதன்பின், டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று அதிகாலை 2.20 மணியளவில் சென்னை வந்தடைந்தனர். அவர்களை வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்.
* மக்களை கட்டாயப்படுத்தக் கூடாது
ரேஷன் கடைகளில் மக்கள் விரும்பும் பொருட்களை தவிர்த்து மற்ற பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது என மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயலாளர் சுதன்சு பாண்டே எச்சரித்துள்ளார்.
விருப்பம் இல்லாத பொருட்களை வாங்க மக்களை கட்டாயப்படுத்தினால் ஊழியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், ரேஷன் கடைகளில் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் குறைகள் குறித்து 1967 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றார்.
* காலாண்டு விடுமுறையில் இருக்கும் மாணவர்களுக்கு எச்சரிக்கை
கொள்ளிடம் ஆற்றில் குளித்த 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு உள்ளிட்ட பல்வேறு சோகமான நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் நடந்துள்ளன. இந்நிலையில் காலாண்டு விடுமுறையில் வீட்டில் இருக்கும் மாணவர்கள், ஆறு, குளங்களில் இறங்கி குளிக்க வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர் குழந்தைகளை தனியாக விட வேண்டாம். வீட்டில் இருக்கும் மாணவர்கள் செல்போனில் நேரத்தை செலவு செய்யாமல், புத்தக வாசிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தி ஆக்கப்பூர்வமான செயல்படுங்கள்.
* வாரிசு சான்று.. புதிய நடைமுறை அமல்
வாரிசு சான்றிதழ் பெறுவதற்கான புதிய நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, சான்றிதழில் இறந்தவரின் கணவர் அல்லது மனைவி, மகன் அல்லது மகள் வாரிசாக அறிவிக்கப்படுவர்.
திருமணம் ஆகாதவர் இறந்தால், தந்தை, தாய், சகோதரர், சகோதரிகள் வாரிசுகளாக அறிவிக்கப்படுவர் உள்ளிட்ட புதிய மாற்றங்கள் இதில் இடம்பெற்றுள்ளது.
தற்போது சர்வர் பிரச்சனையால் ஏராளமான விண்ணப்பங்கள் தேங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
* சென்னை: சென்னை மாநகராட்சியில் அக்டோபர் 15ம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தினால் 5% சலுகை அளிக்கப்படும் என மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
2ம் அரையாண்டுக்கான சொத்துவரியை அக்டோபர் 15ம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் சலுகை அளிக்கப்படும்.
2021 -22 நிதியாண்டில் சென்னை மாநகராட்சியில் மொத்தமாகவே ரூ.1,240 கோடி வரி வசூலாகியிருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் மட்டும் ரூ.945 கோடி வரி வசூலாகியுள்ளது.
* 52 வாரங்களுக்கு நடைபெரும் வள்ளலார் முப்பெரும் விழாவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாகவும்,அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்த திராவிட மாடல் அரசு,வள்ளலாருக்கு தனி பெருங்கருணை நாள் அறிவித்தது சிலருக்கு ஆச்சரியமாக, அதிர்ச்சியாக,இருக்கலாம்.
திராவிட மாடல் ஆட்சி ஆன்மீகத்திற்கு எதிரானது என மதத்தை வைத்து பிழைக்கும் சிலர் கூறிவருகிறார்கள்.
திமுக ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல.தமிழ் மண்ணின் சமய பண்பாட்டை அறிந்தவர்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல திமுக.ஆனால் ஆன்மிகத்தை தங்களது சொந்த நலனுக்கும், உயர்வு-தாழ்வு கற்பிக்கவும் பயன்படுத்துவோருக்கு எதிரானது திமுக.
அன்னதானம் வழங்குவது மட்டுமே வள்ளலாரின் அறநெறி அல்ல.ஜாதி,மத வேறுபாடுகளற்ற சமநிலை சமூகம் அமைக்க பாடுபடுவதே அவர் வழியில் நடப்பது.
வள்ளலார் பிறந்தநாளை முன்னிட்டு ஓராண்டுக்கு தொடர் அன்னதானம் வழங்கப்படும்.அதற்கு ரூ. 3.28 கோடி ஒதுக்கீடு-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* மெரினாவில் கடலுக்கு நடுவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் விவகாரம்
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவு
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைக்க தமிழக அரசு அனுமதி கோரி இருந்த நிலையில் உத்தரவு
* நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்தார்கள். என்ன ஆனாது? மக்களை ஏமாற்றுகின்றனர் திமுக.
காவிரி பிரச்னையின் போது அதிமுக சுமார் 22 நாட்கள் நாடாளுமன்றத்தையே முடக்கினோம். தமிழ்நாடு மக்களுக்கான குரல் கொடுத்தோம்.
மின் கட்டணம், சொத்து வரி உயர்வை மக்களால் எப்படி தாங்கிக்கொள்ள முடியும்?;
திமுக ஆட்சியில் மக்கள் துன்பத்தையும் வேதனையும் தான் உள்ளார்கள்- எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்.
சென்னையில் மழைநீர் வடிக்கால் பணிகள் மெத்தனமாக நடைபெற்று வருகிறது.
மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் மின் கட்டணம், சொத்து வரியை உயர்த்தியுள்ளது.
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டப்பணிகளை தான் திமுக தொடர்கிறது. எந்த புதிய, பெரிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை -எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி
* வள்ளலாரின் முப்பெரும் விழாவினை முன்னிட்டு, இலச்சினை, தபால் உறை மற்றும் சிறப்பு மலரை வெளியிட்டு, ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
* "தமிழ்நாட்டில் பெய்த மழையினால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்"
நெல் மூட்டைகளை அவ்வப்போதே கொள்முதல் செய்வதற்கு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்"
- தமாகா தலைவர் ஜி.கே.வாசன்
* பசுவின் கன்றை கொன்றதால் தனது மகனையே தேர்க்காலில் ஏற்றி கொன்ற மனுநீதி சோழன் வாழ்ந்த பூமி தமிழகம் என்பதில் பெருமை
ஆனால் தற்போது தமிழகத்தில் மனு என்ற பெயரை கேட்டாலே பலருக்கு அலர்ஜி ஆகிறது" -துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
* புதிய கட்சி தொடங்கினார் கே.சி.ஆர்.
தேசிய கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார் தெலங்கானா முதல்வர் கேசிஆர்.
தனது கட்சியின் பெயரை பாரத் ராஷ்டிர சமிதி என்று மாற்றுவதாக அறிவிப்பு.
தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் பெயரை மாற்ற பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்.
* மெட்ரிக் பள்ளிகளுக்கு வரும் 9ம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு.
விடுமுறை குறித்த குழப்பம் நீடித்த நிலையில் மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் கருப்பசாமி அறிவிப்பு .
* வேதியியலுக்கான நோபல் பரிசு: மூவருக்கு பகிர்ந்தளிப்பு.
2022ம் ஆண்டுக்கான வேதியியல் துறையில் 3 பேருக்கு நோபல் பரிசு பகிர்ந்து அளிப்பு.
அமெரிக்காவை சேர்ந்த கரோலின் பெர்ட்டோசி, பேரி ஷார்ப்லெஸ், டென்மார்க்கை சேர்ந்த மார்ட்டன் மெல்டல் ஆகியோருக்கு நோபல் பரிசு.
கிளிக் கெமிஸ்ட்ரி மற்றும் பயோஆர்த்தோகனல் கெமிஸ்ட்ரியின் வளர்ச்சிக்காக நோபல் பரிசு.
* திமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாத போலி விவசாயி இபிஎஸ் வெற்று அறிக்கையினை வெளியிட்டுள்ளார்- மழையால் பயிர்கள் நாசமாவது குறித்து இபிஎஸ் அறிக்கைக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில்.
* கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு
நிவாரணம் வழங்குவதில் பாகுபாடு காட்டக்கூடாது : பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்
1. தஞ்சை மாவட்டம் பூண்டி அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 6 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலும், அனுதாபங்களும். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டிருப்பது சரியான நடவடிக்கை!
2. இதே கொள்ளிடத்தில் கடந்த ஜூலை மாதம் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அணைக்கரை மதகு சாலையைச் சேர்ந்த ஆகாஷ், மனோஜ், ராஜேஷ் ஆகியோர் கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு, அடுத்த சில நாட்களில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்!
3. உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று அப்போதே வலியுறுத்தியிருந்தேன். எனினும், அவர்களுக்கு எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை. ஆனால், இப்போது உயிரிழந்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.
4. உயிரிழப்புகளில் பாகுபாடு காட்டப்படுவது நியாயமற்றது. இந்தத் தவறுக்கு அதிகாரிகளின் அலட்சியம் காரணமா அல்லது வேறு காரணமா? என்பது தெரியவில்லை. நடந்த தவறை சரி செய்யும் வகையில் ஜூலை மாதம் இறந்த மூவரின் குடும்பத்திற்கும் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்!
* ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனையை தடை செய்ய, மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு அகில இந்திய மருந்து வணிகர் சங்கம் சார்பாக கடிதம்.
மருத்துவர் பரிந்துரை இன்றி ஆன்லைனில் விற்கப்படும் வலி நிவாரண மாத்திரைகளை, இளைஞர்கள் போதைக்காக பயன்படுத்தும் சூழல் இருப்பதாக கருத்து.
* சரியாக பணி செய்யாதவர்களை உடனே மாற்றுங்கள்: அமைச்சர்
வேலூர் பொன்னையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், துரைமுருகன் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பாம்பு கடிக்கு மருந்தில்லை என்பதும், எக்ஸ்ரே கருவி இல்லை என்பதும் தெரியவந்தது. மேலும் பணியாளர்கள் சரியாக வேலைக்கு வருவதில்லை எனவும் தெரிந்தது. இதனால் கோபம் அடைந்த அமைச்சர் துரைமுருகன், 'சரியாக பணி செய்யாதவர்களை உடனே மாற்றுங்கள்' என்றார்.
* வாட்ஸ் அப்பில் அடுத்த அப்டேட்!
பயனாளர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதமாக வாட்ஸ் அப் பல்வேறு அப்டேட்களை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இனி view once முறையில் வரும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பயனாளர்கள் screenshot அல்லது record செய்ய இயலாதபடி புதிய அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
JOIN US: https://t.me/Agnipuratchi1
* ஹரியானா: தசரா விழாவில் ராவணனின் உருவ பொம்மை எரிக்கும்போது அருகில் நின்றவர்கள் மீது விழுந்து விபத்து.
வீடியோ: https://twitter.com/IndiaNewsDigest/status/1577697199827607553?t=dP5tIx6r-GeWohxfEQiugw&s=19
No comments:
Post a Comment