அக்னிப்புரட்சி இன்றைய (06.10.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (06.10.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (06.10.2022) முக்கிய செய்திகள்.

* சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 7 மணிக்கு மேல் மழை தீவிரம் அதிகரிக்கும்

இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 4 இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

மெய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் தயாரித்த 4 மருந்துகள்தான் காம்பியா நாட்டில் 66 குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.

அதனால் Promethazine Oral Solution, Kofexmalin Baby Cough Syrup,
Makoff Baby Cough Syrup,
Magrip N Cold Syrup ஆகிய மருந்துகளை அனைத்து நாடுகளும் பயன்பாட்டில் இருந்து அகற்றுமாறு தெரிவித்துள்ளது. இந்த நான்கு இருமல் மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் ஆபத்து என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

JOIN US: https://t.me/Agnipuratchi1

* எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2022-23-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு செப்.,12-ல் தொடங்கியது.

இந்நிலையில், விண்ணப்ப பதிவு இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.

* கேரளாவில் அரசுப் பேருந்து - பள்ளி சுற்றுலா பேருந்து மோதி கோர விபத்து; 9 பேர் உயிரிழப்பு.

கேரளா: பாலக்காட்டு - வடகஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும், பள்ளி சுற்றுலா பேருந்தும் மோதி விபத்து - 9 பேர் உயிரிழப்பு.

கோர விபத்தில் 41 பேர் படுகாயம் அடைந்த நிலையில் 4 பேர் கவலைக்கிடம்.

துபாயில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்து கோயிலில் பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி

* ஈக்வடார் சிறையில் கலவரம் 15 கைதிகள் பலி

குய்ட்டோ,
தென்அமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள சிறைகளில் அளவுக்கு அதிகமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் சிறைகளில் தொடர்ந்து அசாதாரண சூழல் நீடிக்கிறது. குறிப்பாக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி வன்முறை சம்பங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இந்த நிலையில் ஈக்வடாரின் லடசுங்கா நகரில் உள்ள சிறையில் கைதிகளில் இருதரப்பினருக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டது சற்று நேரத்தில் இந்த மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. கைதிகள் கூர்மையான ஆயுதங்களால் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.

அதை தொடர்ந்து சிறையில் கலவர தடுப்பு போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கைதிகளை விரட்டியடித்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் இந்த கலவரத்தில் கைதிகள் 15 பேர் பலியாகினர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக
மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

* ஆற்றில் துர்கா பூஜை சிலைக் கரைப்பு, கொத்து கொத்தாக அடித்து செல்லப்பட்ட மக்கள்.. பரபரப்பு காட்சி

கொல்கத்தா,
வடமாநிலங்களில் நவராத்திரி விழாவையொட்டி துர்கா பூஜை பிரபலமாக நடைபெறும். இறுதியில் விநாயகர் சிலை கரைக்கப்படுவதுபோல துர்கா சிலைகளையும் கரைத்துவிடுவார்கள்.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரியில் உள்ள மால் ஆற்றில் துர்கா சிலை கரைப்பின்போது திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் பலர் சிக்கினர். இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் மாயமான பலரை தேடி வருகிறோம் என போலீசார் தெரிவித்துள்ளனர். துர்கா சிலைகளைக் கரைகளைச் சென்று பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் ஆற்றில் துர்கா பூஜை சிலைக் கரைப்பு சம்பவத்தின்போது, கொத்து கொத்தாக மக்கள் அடித்து செல்லப்பட்ட காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

* கர்நாடகாவில் ராகுல் காந்தியின் 'இந்திய ஒற்றுமை பயணம்' பாதயாத்திரையில் சோனியா காந்தி பங்கேற்பு.

விஜயதசமியையொட்டி 2 நாள் ஓய்வெடுத்த ராகுல்காந்தி, தனது 5-வது நாள் பயணத்தை தொடங்கினார்.

மத்திய உள்துறை அமைச்சகம் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் 10 பேரை பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது.

இவர்கள் ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர் இ தொய்பா மற்றும் இதர தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் ஆவர். பாகிஸ்தானை சேர்ந்த ஹபிபுல்லா மாலிக் என்ற சஜித் தத், காஷ்மீரின் பாரமுல்லாவை சேர்ந்தவரும், தற்போது பாகிஸ்தானில் இருப்பவருமான பசிட் அகமது ரேஷி, காஷ்மீரின் சோபோரை சேர்ந்தவரும், தற்போது பாகிஸ்தானில் இருப்பவருமான இம்தியாஸ் அகமது கான்டூ என்ற சஜத், பூஞ்ச் பகுதியை சேர்ந்தவரும், தற்போது பாகிஸ்தானை சேர்ந்தவருமான ஜாபர் இக்பால் என்ற சலிம்.

புல்வாமாவை சேர்ந்த ஷேக் ஜமீல் உர் ரகுமான் என்ற ஷேக் சஹாப், ஸ்ரீநகரை சேர்ந்தவரும், தற்போது பாகிஸ்தானில் இருப்பவருமான பிலால் அகமது பெய்க் என்ற பாபர், பூஞ்ச் பகுதியை சேர்நத் ரபிக் நய் என்ற சுல்தான், தோடா பகுதியை சேர்ந்த இர்ஷாத் அகமது என்ற இத்ரீஸ், குப்வாரா பகுதியை சேர்ந்த பஷிர் அகமது பீர் என்ற இம்தியாஸ், பாரமுல்லா பகுதியை சேர்ந்தவரும், தற்போது பாகிஸ்தானில் இருப்பவருமான சவுகத் அகமது ஷேக் என்ற சவுகத் மோச்சி ஆகிய 10 பேர் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஹபிபுல்லா மாலிக், பூஞ்ச் பகுதியில் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை கையாண்டவர்.

காஷ்மீரில் டிரோன் மூலம் ஆயுதங்கள் போடப்பட்டதில் சம்பந்தப்பட்டவர். காஷ்மீரில் பல தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர். லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்புடையவர். பசிட் அகமது ரேஷி, காஷ்மீரில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு திட்டமிட்டு கொடுத்தவர். இம்தியாஸ் அகமது கான்டூ, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவிக்கு ஏற்பாடு செய்தவர். பல தாக்குதல்களை ஒருங்கிணைத்தவர். ஜாபர் இக்பால், காஷ்மீரில் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் மற்றும் பயங்கரவாதிகள் ஊடுருவலில் தொடர்புடையவர். மற்ற 6 பேரும் பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் ஆவர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்தனர்.

இதற்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தரமற்ற 4 இருமல் மருந்துகள் காரணமாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், நச்சுத்தன்மை கொண்ட இந்த மருந்துகள் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு வெளியிலும் விநியோகம் செய்யப்பட்டிருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. காம்பியா நாட்டில் ஏற்பட்ட சிறுநீரக பாதிப்பு மற்றும் 66 குழந்தைகளின் உயிரிழப்பிற்கும் இந்த 4 மருந்துகளுக்கும் தொடர்பிருக்கலாம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "நச்சுத்தன்மை கொண்ட இந்த இருமல் மருந்துகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காம்பியா நாட்டில் ஏற்பட்ட சிறுநீரக பாதிப்பு மற்றும் 66-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரிழப்புக்கு இந்த மருந்துடனான தொடர்பு கண்டறியப்பட்டுள்ளது'
இந்தியாவில் உள்ள மெய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் என்ற மருந்து நிறுவனத்தால் இந்த 4 இருமல் மற்றும் சளி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மெய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் என்ற இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 4 இருமல், சளி மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்: உலக சுகாதார அமைப்பு

⭕ 1.Promethazine Oral Solution,

⭕ 2.Kofexmalin Baby Cough Syrup

⭕ 3.Makoff Baby Cough Syrup

⭕ 4.Magrip N Cold Syrup

* கெட்டுப்போன உணவு உண்டதால் 3 சிறுவர்கள் உயிரிழப்பு.

திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் விவேகானந்த சேவாலயம் நடத்தும் விடுதியில் கெட்டுப்போன உணவு உண்டதால் 3 சிறுவர்கள் உயிரிழப்பு.

உடல்நலம் பாதிக்கப்பட்ட 5 பேர் மருத்துவமனையில் அனுமதி.

* தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது - சுகாதாரத்துறை.

நடப்பாண்டில் இதுவரை 4,266 பேருக்கு டெங்கு பாதிப்பு. செப்டம்பர் மாதத்தில் மட்டும் 572 பேருக்கு பாதிப்பு.

குழந்தைகளுக்கு கொசு வலையை பயன்படுத்தவும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளவும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.

* பர்கர் வாங்கிக் கொடுத்தால் பலாத்கார வழக்கு ரத்து: நீதிமன்ற நிபந்தனைக்கு காரணம் இதுதானா?

பலாத்கார வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றால், 2 ஆதரவற்றோர் இல்லக் குழந்தைகளுக்கு பர்கர் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி விதித்த நிபந்தனை பேசுபொருளாகியுள்ளது.

ஏமாற்றுதல், குற்றப் பின்னணி மற்றும் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், ஒருவரின் முன்னாள் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அந்த நபர் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதி, நன்கு சுத்தமான இடத்தில் தயாரான பர்கர்களை வாங்கி 100க்கும் மேற்பட்டோர் இருக்கும் தலா 2 ஆதரவற்றோர் இல்லங்களில் இருக்கும் பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டும் என்றும், பர்கர் சுத்தமாக நல்ல முறையில் இருப்பதை காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.

மேலும், இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர் ரூ.4.5 லட்சத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என்றும், இந்த பணம் புகார் தாரரான முன்னாள் மனைவிக்கு வழங்கப்படும் என்றும் நீதிபதி கூறினார்.

குற்றம்சாட்டப்பட்டவரும், அவரது முன்னாள் மனைவியும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்துள்ளனர்.பிறகு கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டனர். இதையடுத்து, அப்பெண், பலாத்கார வழக்குத் தொடர்ந்தார்.  ஆனால் இது தம்பதிகளுக்கு இடையேயான பிரச்னையாகவே பார்க்கப்பட்டது.

நீதிமன்றத்தில், இருவரும் சமரசப் பேச்சில் உடன்பட்டு, எந்த மிரட்டலும் இன்றி சுயமாக வழக்கை முடித்துக் கொள்ள முன்வந்தனர். குற்றம்சாட்டப்பட்டவர் மீதான முதல் தகவர் அறிக்கையை ரத்து செய்யவும் புகார் அளித்தவர் ஒப்புக் கொண்டார்.

இது தொடர்பாக நீதிபதி குறிப்பிடுகையில், இந்த வழக்கு 2020ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கு பதிலாக மிக முக்கிய வழக்கு விசாரணை நடைபெற்றிருக்கலாம். இதனால் நீதிமன்றத்துக்கு கால விரையம்தான் ஏற்பட்டுள்ளது. எப்படியும் முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்பட வேண்டும்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் பர்கர் உணவகத்தை நடத்தி வருவதாகக் கூறினார். இதையடுத்தே ஆதரவற்றோர் இல்லக் குழந்தைகளுக்கு பர்கர் வழங்குமாறு நிபந்தனை விதிக்கப்பட்டது. நீதிமன்ற நேர விரயத்துக்கு பதிலாக, ஏதோ ஒரு சமூகச் சேவையாவது கிடைக்குமே என்ற அடிப்படையில்தான் இந்த நிபந்தனை விதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

* வடக்கு மண்டல ஐஜி உட்பட 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்:

சென்னை வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக தேன்மொழி நியமனம்.

ஆயுதப்படை பிரிவு ஐஜி கண்ணன் வடக்கு மண்டல ஐஜியாக நியமனம்.

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பிரதீப் நியமனம்.

சென்னை பரங்கிமலை காவல்துறை துணை ஆணையராக தீபக் சிவாச் நியமனம்.

சென்னை காவல்துறை கிழக்கு மண்டல போக்குவரத்து துணை ஆணையராக சமாய் சிங் மீனா நியமனம்.

🔴 தாய்லாந்தில் குழந்தைகள் பகல் நேர பராமரிப்பு மையத்தில் பயங்கர துப்பாக்கிச்சூடு...

வீடியோ: https://twitter.com/IndiaNewsDigest/status/1577942978848440322?t=ICll09f4BJNoSLk6uhPLQg&s=19

குழந்தைகள் உள்பட 31 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்

* அகமதாபாத்: 36 வது தேசிய விளையாட்டு தொடரின் கூடைப்பந்து போட்டியில் தமிழக ஆடவர் அணி தங்கமும், மகளிர் அணி வெள்ளியும் வென்றது.

இறுதிப்போட்டியில் தமிழக ஆடவர் அணி 97-89 என்ற புள்ளி கணக்கில் பஞ்சாப் அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.

தெலங்கானா அணியிடம் 67-62 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்து தமிழக மகளிர் அணி வெள்ளிப்பதக்கம் வென்றது.

* கான்கன்: மெக்சிகோவின் சான் மிகுவெல் டோடோலாபன் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் அப்பகுதி மேயர் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மேயர் கான்ராடோ மென்டோசா அல்மேடா, போலீஸ் அதிகாரிகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர்

* மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டன ஆர்ப்பாட்டம்.

மத்திய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்தும் அரசியலமைப்பு சட்டத்தின் 8வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அலுவல் மொழியாக அறிவிக்ககோரி ஆர்ப்பாட்டம்.

* கர்மா அடிப்படையில் நீதிபதி வழங்கிய தீர்ப்புக்கு தடை.

காவலர் பணியிட மாற்றத்திற்கு 'கர்மா' அடிப்படையில் தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு, தடை விதித்து அமர்வு நீதிபதிகள் உத்தரவு.

கர்மா காரணத்தைக் கூறி அரசுத் துறை ஊழியர்களின் தண்டனையை ரத்து செய்ய முடியாது - அரசுத் தரப்பு வாதம்.

18 முறை பணியில் கவனக்குறைவாக செயல்பட்ட காவலர் முருகன், தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.

கர்மா அடிப்படையில் காவலர் முருகன் பல தண்டனைகளை அனுபவித்துவிட்டார் எனக்கூறி பணியிட மாற்றத்தை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஸ்ரீமதி ரத்து செய்து உத்தரவிட்டார்.

* 2022ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்சின் ஆனி எர்னாக்ஸ்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

“l occupation” என்ற நூலை எழுதியதற்காக பிரெஞ்சு பெண் எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ்-க்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

* தமிழ்நாட்டை சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் கம்போடியா நாட்டில் சிக்கி தவித்து வருகின்றனர்.

அடித்து துன்புறுத்துவது உடலில் மின்சாரம் பாய்ச்சுவது உள்ளிட்ட கொடுமைகளுக்கு உள்ளாவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆன்லைன் நிறுவனத்தில் வேலை என்று அழைத்துச் செல்லப்பட்டு சட்டவிரோத செயல்களை செய்ய கூறி மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது.

உணவு இன்றி தவிப்பவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள்  எழுந்துள்ளன.

* 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு.

தமிழகத்தில் 2,748 கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

அவற்றை தமிழக அரசின் உத்தரவின்படி நிரப்புவதற்காக மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கடந்த செப். 30-ந்தேதி நிலவரப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் காலியாக இருக்கும் கிராம உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை பற்றிய தகவலை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க கலெக்டர்கள் அந்த தகவலை அளித்துள்ளனர்.

அதன்படி தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த காலிப்பணியிடங்களை விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதற்கான தேதிகளை குறித்தும் அரசு தெரிவித்துள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
வரும் அக்., 10ஆம் தேதியிலிருந்து தாலுகா மூலமாக அறிவிப்பாணை வெளியிடப்படும். காலி பணியிடங்களுக்கான விண்ணப்பத்தை அளிப்பதற்கு கடைசி தேதி நவ., 7 என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அப்படி பெறும் விண்ணப்பங்களை ஆய்வு செய்து நவ., 14ஆம் தேதிக்குள் பரிசீலனை செய்யவிருக்கின்றன.

பரீட்சைகள்:
இதன்பிறகு, வாசிப்பு மற்றும் எழுத்து திறன் பரீட்சையை நவ., 30ல் நடக்கவிருக்கிறது. எழுத்துத்திறன் பரீட்சையை கண்காணிக்க தாலுகா அளவில் துணை கலெக்டரை கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவார்.

கிராமத்தை பற்றிய விவரங்கள் அல்லது நில வகைப்பாடுகள் அல்லது கிராம கணக்குகள் அல்லது மாவட்ட கலெக்டர் கூறும் தலைப்பு பற்றி 100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுத செய்யலாம். வாசிப்பு திறனை அறிந்து கொள்வதற்காக எந்த ஒரு புத்தகத்திலும் இருந்து ஏதாவது ஒரு பக்கத்தில் உள்ள வாசகங்களை விண்ணப்பதாரரை வாசிக்க சொல்லலாம்.

அதன் பிறகு டிச., 15 மற்றும் 16ஆம் தேதிகள் நேர்முகத்தேர்வு நடைபெறும்.

டிச.,19ல், தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட்டு அன்றே பணி ஆணைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தாசில்தார்கள் மூலம் தாலுகா அளவில் மேற்கொள்ளப்படும் ஆட்கள் தேர்வு, முறையாக விதிகளை பின்பற்றி நடைபெறுகிறதா என்பதை மாவட்ட கலெக்டர்கள் உறுதிசெய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து முறையான அறிவிப்பு அந்த அந்த மாவட்டங்களில் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

* தீபாவளி பண்டிகையையொட்டி தி.நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள்

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் தி.நகர் வட்டார பகுதிகளுக்கு வருகைத் தர வாய்ப்புள்ளதைக் கருத்தில் கொண்டுப் பொதுமக்களின் வசதிக்காகவும் போக்குவரத்தினைச் சீரமைக்கும் நோக்கிலும் 08.10.2022 முதல் 24.10.2022 வரை, தி.நகர் பகுதியில் சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை சார்பில் கீழ்கண்ட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

1.தேவைக்கேற்ப ஆட்டோக்களின் இயக்கமானது, தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலைச் சந்திப்பிலிருந்தும், ரோகிணி சிக்னல் சந்திப்பிலிருந்தும், வடக்கு உஸ்மான் சாலை மற்றும் கோட்ஸ் சாலைச் சந்திப்பிலிருந்தும், வடக்கு உஸ்மான் சாலை மற்றும் மகாராஜபுரம் சந்தானம் சாலை சந்திப்பிலிருந்தும், பிருந்தாவன் சந்திப்பிலிருந்தும் மற்றும் கண்ணம்மாபேட்டைச் சந்திப்பிலிருந்தும் பனகல் பூங்கா நோக்கிச் செல்ல தடை செய்யப்படும்.

2.சரக்கு மற்றும் வணிக ரீதியான வாகனங்கள் தி நகர் பகுதிக்குள் வியாபார நேரத்தில் செல்லத் தடை செய்யப்படும், இத்தகைய வாகனங்கள் இரவு 23:00 மணி முதல் காலை 07:00 மணி வரை தி நகர் பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்படும்.

3.ஏற்கனேவே பயன்பாட்டில் உள்ள தியாகராய சாலை, ஜி.என்.செட்டி சாலை மற்றும் தணிகாசலம் சாலை பன்னடுக்கு வாகன நிறுத்தமிடங்கள் தவிர விடுமுறை நாட்களில் பிரகாசம் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளி, பாஷ்யம் சாலையில் உள்ள இராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி மற்றும் தண்டபானி சாலையில் உள்ள இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி வளாகங்களில் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.

பொதுமக்களும் வணிகர்களும் போக்குவரத்து காவல் துறையினருக்குத் தக்க ஒத்துழைப்பை நல்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

* சென்னையில் 5ஜி சேவையை துவக்கியதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 5ஜி சேவையை கடந்த 1ம் தேதி டில்லியில் நடந்த இந்திய மொபைல் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

முதல்கட்டமாக சென்னை, டில்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் 5ஜி சேவை துவக்கப்பட்டுள்ளது.

இதன் வேகம், 4ஜியை விட 30 மடங்கு அதிகமாக இருக்கும். 4ஜி சிம்கார்டிலேயே 5ஜி சேவையை பெறலாம்.

5ஜிக்காக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனக்கூறியுள்ளது.

JUST LAUNCHED! Airtel 5G Plus is now Live in India. Data Speeds are going to get up to 30 times faster. To know more, click https://i.airtel.in/e/Airtel5Gishere

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages