அக்னிப்புரட்சி இன்றைய (08.10.2022) முக்கிய செய்திகள்.
* ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களா? இது உங்களுக்கான அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் வருகின்ற அக்டோபர் 10 திங்கள்கிழமை தொழில் பழகுநர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த பயிற்சியில் பங்கு பெறுபவர்களுக்கு மத்திய அரசின் என்.ஏ.சி சான்றிதழ் வழங்கப்படும்.
இதுகுறித்த தகவலை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் நேரிலோ, 9499055663, 9444224363, 9444139373 என்ற எண்ணிலோ கேட்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
* ஆசிரியர் தகுதித் தேர்வு கால அட்டவணை வெளியீடு
கணினி வழி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, தேர்வுக்கான அட்டவணையை http://trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் தேர்வர்கள் அறிந்து கொள்ளலாம்.
மேலும், தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அனுமதிச் சீட்டு 1-ஐ தேர்வர்கள் இப்போதே பதிவிறக்கம் செய்யலாம்.
அனுமதிச் சீட்டு 2-ஐ தேர்வு தேதிக்கு 3 நாட்களுக்கு முன்னதாக பதிவிறக்கம் செய்யலாம்.
* பேருந்து தீப்பிடித்து எரிந்தது... 8 பேர் மரணம்... பெரும் பரபரப்பு
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நேற்று இரவு ஓடும் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
தீ விபத்தில் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பலர் கவலைக்கிடமாக உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
உயிரிழந்தவர்களின் அடையாளம் காணும்பணி நடைபெற்று வருகிறது. முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை.
* எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்பு சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்.
இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் - ஓபிஎஸ்.
* மது அருந்திவிட்டு பேருந்தை இயக்கினால் பணிநீக்கம்!
ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், மது அருந்திவிட்டு அரசுப் பேருந்தை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!
அண்மைக் காலத்தில் சில அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மது அருந்திவிட்டு பணிக்கு வருவதாக புகார் எழுந்த நிலையில் அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை!
* புதிய வகை மோசடி - திண்டுக்கல் சைபர் கிரைம் எச்சரிக்கை
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அறிவுறுத்தலின்படி ஏ டி எஸ் பி சந்திரன் தெரிவித்ததாவது-:
திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய வகை மோசடியாக 4 ஜி சிம் வைத்திருப்பவர்களுக்கு 5 ஜி சிம் செல்போன் மூலம் அப்டேட் செய்து தருவதாக கூறி OTP - யை பெற்று கொண்டு அவர்கள் புது சிம் வாங்கி கொண்டு தங்களது நமது தகவல்கள் மற்றும் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தினை நூதன முறையில் திருடி மோசடி செய்கிறார்கள் ஆகவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் இதுபோன்ற குற்றங்களால் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசியை தொடர்பு கொள்ளலாம் அல்லது சைபர் கிரைம் காவல்துறையினரை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
* சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு;
அமைச்சர்கள் கே.என்.நேரு,சேகர்பாபு,எம்.பி தயாநிதி மாறன்,மேயர் பிரியா,ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் ஆய்வில் பங்கேற்பு
* சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு துவக்கம்.
பக்தர்கள் sabarimalaonline.org என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்-சபரிமலை தேவசம் போர்டு.
* கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ் காலனியில் போலி 2000 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக பறிமுதல்.
இது தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை.
இரிடியம் என கூறி மோசடி செய்யும் கும்பல் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
* திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள், சாமி தரிசனத்திற்கு 48 மணி நேரம் காத்திருப்பு:
புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க லட்ச கணக்கில் பக்தர்கள் குவிந்து இருக்கிறார்கள்.
கட்டணமில்லா தரிசனத்திற்கு 48 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.
திருப்பது ஏழுமலையான் கோயிலில் சாமி இன்று புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமை என்பதால் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
காத்திருப்பு அறையில் உள்ள 32 அறைகளும் நிரம்பிய நிலையில் நாராயண தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வரிசைகளும் நிரம்பியதால் தற்பொழுது பாபநாசம் சாலையில் உள்ள நீண்ட வரிசையில் 5கி.மீ. தூரத்திற்கு பக்தர்கள் காத்து இருக்கின்றனர்.
இதன் காரணமாக கட்டணமில்லா தரிசனத்தில் சாமி தரிசனம் செய்வதற்கு 48 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைன்னில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு 6 மணி நேரமும், கல்யாண உற்சவம், முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்கள் அடிப்படையில் வருகின்ற பக்தர்களுக்கு 3 மணி நேரமும் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர். ஏழுமலையான் கோவிலுக்கு 1 மணி நேரத்திற்கு 4,000 முத்த 5,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான வசதிகள் உள்ளது.
இந்நிலையில், பக்தர்களில் வருகை இரண்டு மடங்காக உள்ளதால் காத்திருப்பு நேரம் அதிகரித்துள்ளது.
எனவே, பக்தர்கள் பொறுமையுடன் காத்திருந்து தேவஸ்தானத்துக்கு ஒத்துழைப்பு அளித்து சாமி தரிசனம் செய்து செல்ல வேண்டும் எனவும், பக்தர்களுக்காக 2 மணி நேரத்திற்கு ஒரு முறை பால் உள்ளிட்ட அன்ன பிரசாதங்கள் வரிசையில் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம் எனவும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
* மழைக்கால வெள்ள தடுப்பு பணிகள் திருப்திகரமாக உள்ளது- மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த பின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி.
மழை அவ்வவ்போது பெய்து வருவதால் வடிகால் பணிகள் தடைபட்டுள்ளது.
குறைந்தபட்சம் 15 நாள்,அதிகபட்சம் 1 மாதத்திற்குள் பணிகள் முடிவடையும்.
எப்படிப்பட்ட மழை வந்தாலும் சமாளிக்கும் வகையில் பணிகள் உள்ளது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு துவக்கம்: சபரிமலை தேவசம் போர்டு அறிவிப்பு
* தமிழகம் முழுவதும் போலீசார் நடத்திய மின்னல் ரவுடி வேட்டையில் கடந்த 24மணி நேரத்தில் 133 ரவுடிகள் கைது.
மின்னல் ரவுடி வேட்டையில் பல ஆண்டுகளாக போலீசாரிடம் பிடிபடாமல் இருந்த 13ரவுடிகளும் கைது- டிஜிபி சைலேந்திர பாபு.
தமிழகம் முழுவதும் மின்னல் ரவுடி வேட்டை தொடரும்- டிஜிபி சைலேந்திர பாபு.
* ஆமதாபாத்: குஜராத் கடற்கரை பகுதியில் ரூ.350 கோடி மதிப்பு கொண்ட 50 கிலோ ஹெராயினுடன் பாக்., படகு பறிமுதல் செய்யப்பட்டது.
குஜராத் கடற்கரை பகுதியில், சர்வதேச கடல் எல்லைக்கோடு பகுதியில், இந்திய கடலோர காவல்படையினர் மற்றும் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்தினர். அப்போது, பாகிஸ்தானுக்கு சொந்தமான அல் சகார் என்ற படகு சிக்கியது. அதில் சோதனை நடத்தியதில் 50 கிலோ ஹெராயின் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.350 கோடி ஆகும். இதனையடுத்து அந்த படகையும், அதில் இருந்த 6 பேரையும் ஜகாவு பகுதிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த அழைத்து வந்தனர்.
கடலோர காவல்படை மற்றும் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள், இவ்வாறு சோதனை நடத்துவது, இந்தாண்டில் மட்டும் 6வது முறையாகும். இதற்கு முன் கடந்த 14 ம் தேதி நடந்த சோதனையில் பாகிஸ்தானை சேர்ந்த படகு சிக்கியது. அதில் இருந்து ரூ.240 கோடி மதிப்புள்ள 40 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
* இந்தியா கிரிக்கெட் அணியில் தீபக் சாஹருக்கு பதில் வாஷிங்டன் சுந்தர்
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில், தீபக் சாஹருக்கு மாற்றாக வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் சேர்ப்பு.
* இந்திய அணியில் பும்ரா, ஜடேஜா இல்லாதது பெரிய இழப்பு: ரவி சாஸ்திரி
”டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, ஆல்ரௌண்டர் ஜடேஜா ஆகியோர் இடம் பெறவில்லை. இது நிச்சயம் இந்தியாவுக்கு பெரிய இழப்புதான். அதே சமயம் இவர்கள் இல்லாதது அணியில் புதிய சாம்பியன் வீரரை அடையாளம் காண்பதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்” என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறினார்.
* இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் டிஜிட்டல் ரூபாய்!
இந்தியாவில் சோதனை அடிப்படையில் டிஜிட்டல் ரூபாய் அல்லது இ-ரூபாய் நோட்டுகளை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள பணத்திற்கு இ-ரூபாய் கூடுதல் விருப்பத் தேர்வாக இருக்கும் என்றும், இது வழக்கமான ரூபாய் நோட்டுகளிலிருந்து வேறுபட்டதல்ல என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
* கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து - உத்தரவு
தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க மறுத்து அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவு ரத்து
நான்கு வாரங்களில் பல்கலைக்கழக மானியக்குழு சுதந்திரமாக முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
அண்ணா பல்கலைக்கழகத்தின் விதிகளை பூர்த்தி செய்யவில்லை என நிராகரிப்பு உத்தரவை எதிர்த்து வழக்கு
* வாட்ஸ்ஆப்பில் வருகிறது புதிய வசதி.
கோப்புகள் அனுப்புவதை எளிதில் தெரிந்துகொள்வது தொடர்பாக புதிய வசதியை வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் வாட்ஸ்ஆப் செயலியில் அனுப்பப்படும் கோப்புகளுடன் அவை குறித்த செய்தியை தட்டச்சு செய்து அனுப்பும் வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இந்த வசதி கிடைக்கப் பெறலாம் எனவும் சோதனை முறையில் உள்ள இந்த வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
* எய்ம்ஸ் மருத்துவமனையை பொறுத்தவரையில் 38 திமுக எம்பிக்கள் என்ன செய்தார்கள்?
இது குறித்து நாடாளுமன்றத்தில் ஏன் குரல் எழுப்பவில்லை- அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் சேலத்தில் பேட்டி.
கடந்த அதிமுக எம்பிகள் நாடாளுமன்றத்தை முடக்கினார்கள்.
தற்போது திமுக எம்பிகள் வாய் மூடி மௌனம் சாதிப்பதற்கு காரணம் என்ன?
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் தொடங்க மத்திய அரசை வலியுறுத்தி உள்ளோம் - இபிஎஸ்.
* ஈபிஎஸ் ஆதரவாளர் ஓபிஎஸ் உடன் இணைந்தார்
சென்னை, எழும்பூரில் ஈபிஎஸ் அணியில் இருந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயன் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார்
மாற்று கட்சியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஓபிஎஸ் அணியில் இணைந்தனர்
* SSC_CGL தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் 5 நாட்கள் காலக்கெடு நீட்டிப்பு
சர்வர் கோளாறால் விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் இன்னலுக்கு உள்ளாகிய நிலையில் 13.10.2022 வரை காலக்கெடு நீட்டிப்பு.
* சந்தர்ப்பம் கிடைக்காத போது, தடம் மாறுவதும், சந்தர்ப்பம் கிடைக்கும் போது, தடுமாறுவதும் தான் மனித இயல்பு!
எப்பவும் தவறு செய்யறவங்களோட, ஒரு சின்ன நல்ல விஷயம் பெருசாவும், எப்பவும் நல்லது செய்யறவங்களோட, சின்னத் தவறு பெருசாவும் பேசப்படுகிறது!!
எந்த ஒரு முயற்சிக்கும், அதன் முடிவு வெற்றியாகத் தான் இருக்க வேண்டும் என்பதல்ல, நல்ல ஒரு பயிற்சியாகவும் கூட இருக்கலாம்; வெற்றிக்கு முயற்சி முக்கியம்போல பயிற்சியும் முக்கியம்!!!
🙏இனிய இரவு வணக்கம்🙏
No comments:
Post a Comment