அக்னிப்புரட்சி இன்றைய (10.10.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (10.10.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (10.10.2022) முக்கிய செய்திகள்.

* பிரபல வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் காலமானார்.

சென்னை: பிரபல வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் (93) வயது முதிர்வு காரணமாக இன்று (அக்., 10) சென்னை கே.கே. நகரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

இவர் 1928 ம் வருடம் திருநெல்வேலி மாவட்டம் சத்திர புதுக்குளத்தில் பிறந்தார். சுப்பு ஆறுமுகம் தனது வில்லுப் பாட்டின் வாயிலாக சுதந்திர போராட்ட காலத்தில் மக்களிடையே ஆன்மிகம், தேச பக்தியை வளர்த்து வந்தார்.

கடந்த 40 வருடங்களாக வில்லுப்பாட்டு கச்சேரியினை நடத்தி வந்தார். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் தன் வில்லுப்பாட்டினால் மக்களை பெரிதும் கவர்ந்தவர். ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை வில்லுப்பாட்டின் வாயிலாக வழங்கினார்

இவர் வில்லுப்பாட்டினை மறைந்த பழம்பெரும் திரைப்பட நடிகர் என்.எஸ் கிருஷ்ணன் மற்றும் சுப்பையா பிள்ளை போன்றவர்களிடம் கற்றார். 1975ம் ஆண்டு கலைமாமணி விருதும், சங்கீத நாடக அகாடமி விருதினையும் பெற்றார்.

2021ம் வருடம் மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ விருதினை வழங்கி கவுரவித்தது. சுப்பு ஆறுமுகத்தின் மறைவு குறித்து பல தலைவர்கள் தங்களின் இரங்கலை தெரிவித்துள்ளனர்

JOIN US: t.me/Agnipuratchi1

* பாதுகாப்புத்துறை கீழ்நிலை பணிக்கான \'குரூப் C\' தேர்வில் ப்ளூடூத் மூலமும், ஆள்மாறாட்டம் செய்தும் தேர்வு எழுதிய ஹரியானாவை சேர்ந்த 29 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் நடந்த தேர்வில் மோசடி செய்ய முயன்ற 29 பேர் மீதும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

* ரஷ்யா-கிரிமீயாவை இணைக்கும் கெர்ச் பாலத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பிற்கு உக்ரைன் மீது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன் இது "பயங்கரவாத செயல்" என்று கூறியுள்ளார். உக்ரைனின் உளவுப் படைகள் ரஷ்யாவின் சிவில் உள்கட்டமைப்பில் முக்கியமான பகுதியை அழிப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

ரஷ்யாவை கிரிமீயாவுடன் இணைக்கும் 19 கிலோமீட்டர் நீள கெர்ச் பாலத்தில் எரிபொருள் டேங்கர் சரக்கு ரயிலில் வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், பாலம் பலத்த சேதமடைந்தது.

* மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 76 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

85 பேருடன் நைஜர் ஆற்றில் சென்ற படகின் இயந்திரம் திடீரென பழுதடைந்தையடுத்து, பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

* சென்னை பல்கலையில் 116பேர் முறைகேடாக தொலைதூரக்கல்வி படித்ததாக சான்றிதழ் பெற முயன்ற விவகாரம்.

விசாரணை குழுவின் பரிந்துரை படி உதவி பதிவாளர் உள்ளிட்ட 5 பேர் சஸ்பெண்ட்.

5 பேரில் இருவருக்கு பணி ஓய்வு என்பதால் ஓய்வூதிய பலன்கள் நிறுத்தம்.

* சட்டவிரோதமாக இளைஞர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பும் முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக அரசு எச்சரிக்கை..

சட்டவிரோதமாக இளைஞர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி வைக்கும் முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

தமிழக அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டை சேர்ந்த தொழில்நுட்ப கல்வி பயின்ற இளைஞர்கள் சிலரை நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்து, அரசு பதிவு பெறாத மற்றும் சட்டவிரோதமான முகவர்கள், மியான்மர், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் அவர்களை அழைத்துச் செல்கின்றனர். ஆனால் அங்கு இந்த இளைஞர்கள், ஆன்லைன் மூலமாக சட்டவிரோதமான செயல்களை செய்ய வலியுறுத்தப்படுகின்றனர்.

அவ்வாறு செய்ய மறுக்கும் நிலையில் அவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற தகவல் வரப் பெற்று நடவடிக்கை மேற்கொண்டு வரப்படுகின்றது. அந்த வகையில், சமீபத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகள் மூலமாக தாய்லாந்தில் சிக்கி தவித்த தமிழ்நாட்டை சேர்ந்த 13 இளைஞர்கள் மீட்டு அழைத்து வரப்பட்டனர்.

இச்சூழ்நிலையில், தற்போது கம்போடியா நாட்டிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றது என்று செய்தி வர பெற்றதை தொடர்ந்து, அங்கு உள்ள தமிழ் இளைஞர்களை மீட்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகத்துடனும் தமிழக அரசு தொடர்பில் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மியான்மர்போல கம்போடியாவிலும் சிக்கி தவிக்கும் தமிழர்கள்
மீட்பு நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்த கம்போடியா நாட்டில் இருந்து மீட்டு அழைத்து வரவேண்டிய  நபர்கள் குறித்த தொலைபேசி எண்கள் அல்லது அவர்கள் அங்கு பணிபுரியும்  நிறுவனங்களின் பெயர் போன்ற விவரங்களை +91-9600023645, +91-8760248625, 044-28515288 என்ற எண்களுக்கு தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

JOIN US: https://t.me/Agnipuratchi1

இந்நிலையில் இதுபோன்று சட்டவிரோதமான முறையில் இளைஞர்களை வெளிநாட்டுக்கு  அனுப்பி வைக்கும் முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* முலாயம் சிங் யாதவ் காலமானார்
மூத்த அரசியல்வாதியும் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும் உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான முலாயம் சிங் யாதவ் காலமானார்.

உடல்நலக்குறைவால்,  குருகிராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 82.

* முலாயம் சிங் யாதவ் உ.பி மற்றும் தேசிய அரசியலில் தனித்துவம் மிக்கவர். எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்தின் முக்கிய வீரராக இருந்தவர். பாதுகாப்பு அமைச்சராக, வலிமையான இந்தியாவுக்காக உழைத்தார்"

"முலாயம் சிங் யாதவ் ஒரு குறிப்பிடத்தக்க ஆளுமை. மக்களின் பிரச்னைகளை உணரும் ஒரு தலைவராக அவர் பரவலாகப் போற்றப்பட்டார். மக்களுக்கு விடாமுயற்சியுடன் சேவை செய்தார். லோக்நாயக் ஜேபி, டாக்டர் லோஹியாவின் கொள்கைகளை பரப்ப தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்"
- பிரதமர் மோடி ட்வீட்

* அதிமுக பிளவு எப்படியும் பாஜகவுக்கு ப்ளஸ் தான்..” அதிமுக கதி அவ்ளோதான்? பகீர் கிளப்பிய குருமூர்த்தி!

அதிமுக 2017 ஆம் ஆண்டில் என்னிடம் ஆலோசனை கேட்டது, அப்பொழுது நான் ஆலோசனை வழங்கினேன்.அன்று கேட்டார்கள், இன்று கேட்கவில்லை’ என்று கூறியுள்ளார் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக இரு அணிகளாக உடைந்த பிறகு சசிகலா டிடிவி தினகரனை ஓரம் கட்டி விட்டு ஓபிஎஸ் உடன் கைகோர்த்தார் எடப்பாடி பழனிச்சாமி. பிறகு பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதோடு அவரது ஆதரவாளர்களும் வெளியேற்றப்பட்டனர்.

தொடர்ந்து இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் சட்ட போராட்டங்கள் மூலம் அதிமுகவில் தனது அதிகாரத்தை நிலை நிறுத்த ஓ.பன்னீர்செல்வம் போராடி வருகிறார். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் மாறி, மாறி இருவரின் ஆதரவாளர்களை நீக்கி வருகிறார்கள். இந்த நிலையில் ஆடிட்டரும், துக்ளக் ஆசிரியருமான குருமூர்த்தி தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், ‘திமுக தலைவர் ஸ்டாலின் இன்று அக்கட்சியின் பொதுக்குழுவில் பேசியது அவர் மனதில் வேதனை இருப்பதை காட்டுகிறது. அவர் தூக்கமில்லாமல் இருப்பதை காட்டுகிறது. ஆனால் அதற்கு இவர் தான் காரணம் என்று சொல்லவில்லை. அவரது நிலை பரிதாபமாக உள்ளது. அவர் வலியுடன் இருப்பதை காட்டுகிறது. (மு.க.ஸ்டாலின் பேசியதை பார்க்க: https://youtu.be/SJNBCg-pjiU ) அதிமுக 2017 ஆம் ஆண்டில் என்னிடம் ஆலோசனை கேட்டது, அப்பொழுது நான் ஆலோசனை வழங்கினேன்.

அன்று கேட்டார்கள், இன்று கேட்கவில்லை. கடந்த 50 ஆண்டுகளாக என்னிடம் ஆலோசனை கேட்பவர்களுக்கு ஆலோசனை தருவேன். பாஜக அதிமுகவை பிளவு படுத்தாது. ஆனால் அதிமுக பிளவால் பாஜக வளர்ச்சி பெறும். பொதுமக்கள் ஒத்துழைப்புடன் இருக்கும். அதிமுக தொடர்ந்து இதே போல் இருந்தால் அது சின்ன கட்சியாக மாறிவிடும். அதிமுகவின் அடையாளமாக எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே இருந்தால் அதிமுக சின்னக்கட்சி ஆக மாறிவிடும்’என்று கூறினார்.

JOIN US: https://t.me/Agnipuratchi1

* கட்டாய இந்தியைப் புகுத்தி இன்னொரு மொழிப்போரைத் திணிக்காதீர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசிப் பார்த்திட வேண்டாம்.

மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு அறிக்கைக்கு முதல்வர் கண்டனம்.

இந்தியைக் கட்டாயமாக்குவதைக் கைவிட்டு, இந்திய ஒற்றுமைச் சுடரைக் காத்திட வேண்டும்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

* ஆத்தூரில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியி ஈபிஎஸ் பேச்சு:

கண்ணை இமைக்காப்பது போல் மக்களை காத்த அரசு அதிமுக அரசு.
திமுக அரசு, அதிமுகவின் திட்டங்களை கிடப்பில் போடுகிறது.

திமுக தேர்தல் அறிக்கையில் முதியோர் உதவித்தொகை ரூ.1,000 - ரூ.1,500 என உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்கள்.

உயர்த்தி வழங்காவிட்டாலும் பரவாயில்லை.1000 ரூபாயை முறையாக வழங்குங்கள்.ஆட்சிக்கு வரும்போது ஒரு பேச்சு,வந்தவுடன் ஒரு பேச்சு-இபிஎஸ்.

* தீபாவளி பண்டிகையை ஒட்டி 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்.

சென்னையிலிருந்து தினசரி 2,100 பேருந்துகளுடன் 4,218 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.

* கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை நடத்திய விசாரணைக்கான ஆவணங்கள் சமர்ப்பிப்பு

உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது தனிப்படை போலீஸ்

1500 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் சமர்ப்பித்தனர்

316 பேரின் வாக்குமூலங்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஒப்படைப்பு

* டிரையத்லானில் தமிழ்நாடு வீராங்கனை ஆர்த்திக்கு வெண்கலம்

குஜராத்தில் 36வது தேசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நீச்சல், சைக்கிளிங், ஓட்டம் ஆகிய போட்டிகள் அடங்கிய டிரையத்லானில் பெண்களுக்கான தனிநபர் பிரிவில் தமிழ்நாடு வீராங்கனை எஸ்.ஆர்த்தி வெண்கலப்பதக்கம் வென்றார். பதக்கப்பட்டியலில் தமிழ்நாடு 22 தங்கம், 21 வெள்ளி, 24 வெண்கலம் என்று 67 பதக்கங்களுடன் 5ம் இடம் வகிக்கிறது.

* துணை ஆட்சியர் ஆன நடிகரின் வாரிசு

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராகப் புகழ் பெற்றவர் சின்னி ஜெயந்த். இவரது மகன் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் திருப்பூர் மாவட்ட துணை ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2019ம் ஆண்டு நடைபெற்ற குடிமைப் பணிகள் தேர்வில் அவர் தேர்ச்சியடைந்தார். பல நடிகர்களின் வாரிசுகள் நடிகர்களாகவே மாறி வரும் நிலையில் துணை ஆட்சியராக வந்துள்ள ஸ்ருதனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

* ஹிந்தி அதிகமாக பேசும் A பிரிவு மாநிலங்களில் ஐ.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் ஹிந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற குழு சிபாரிசு!

இந்த குழு ஹிந்தி மொழி பயன்பாட்டை வைத்து மாநிலங்களை A, B, C என மூன்று வகையாக பிரித்துள்ளது.

* தமிழக அரசு, அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிவோருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 25 சதவிகித போனஸை உடனடியாக வழங்க வேண்டும்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

* 2022ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பென் பெர்னாக், டக்லஸ் டைமண்ட், ஃபிலிப் ஹெச்.டிப்விக் ஆகிய மூன்று பொருளாதார வல்லுநர்களுக்கு நோபல் பரிசு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடிகள் குறித்து ஆய்வுக்காக மூன்று பேருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

* பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிப்பு:
தீபாவளி பண்டிகையன்று காலை 6மணி முதல் 7மணி வரையும், இரவு 7 மணி முதல் 8மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதி.

அதிக ஒலியெழுப்பும் சரவெடிகளையும்; எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதையும் தவிர்க்க வேண்டும் - தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்.

* சென்னையில்  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மாலையில் சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.38,200-க்கும், கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.4,775-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.20 குறைந்து ரூ.64.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

* சென்னை: ராயப்பேட்டை, எம்.ஜி.ஆர் மாளிகையில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள்,எம்எல்ஏக்கள் கூட்டம்.

அதிமுகவின் 51-ம் ஆண்டுவிழா முன்னேற்பாடுகள் குறித்து  ஆலோசனை.

* வரும் 14 ம் தேதி மாலை 6 மணிக்கு அமைச்சரவை கூட்டம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்.  வரும் 17ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் அறிவிப்பு.

* கடலூர்: தவறான சிகிச்சையால் மீனா(58) என்பவர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு  
பாரதி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை கண்ணாடி உடைப்பு  - போலீசார் குவிப்பு

* ஆசிய கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் தாய்லாந்து அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.

முதலில் பேட் செய்த தாய்லாந்து மகளிர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 37 ரன்னில் சுருண்டது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய மகளிர் அணி 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

* எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்

உயர்நீதிமன்றங்கள் 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

தண்டனை குற்றவாளிகளை தேர்தலில் போட்டியிட ஆயுள்கால தடை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு.

* மூன்றாம் உலகப் போருக்கு சாத்தியமுள்ளது! – டிரம்ப்

உக்ரைன் விவகாரத்தை ஜோ பைடன் முட்டாள்தனமாக கையாள்வதாகவும், இதனால் 3ம் உலகப் போர் மூளும் அபாயம் ஏற்படக் கூடும் என்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அரிசோனாவில் குடியரசுக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய டிரம்ப், உக்ரைன் விவகாரத்துக்கு, உடனடியாக அமைதித் தீர்வு காண வேண்டும் என்றும், இல்லையெனில் 3ம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்தார்.

* கட்சிக்காரர்களை பார்த்து முதல்வர் பயப்படுகிறார்: ஈபிஎஸ்

சேலம், ஆத்தூரில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "முதல்வர் ஸ்டாலின் கட்சிக்காரரை பார்த்து பயப்படுகின்றார். ஏனென்றால் தினமும் ஊடகங்களில் வரும் செய்தியே திமுகக்காரர்கள் செய்கின்ற பிரச்சனைதான். அதை பார்த்து பயந்து காலையில் எழுகின்றபோது எதுவுமே நடக்கக்கூடாது என வேண்டுகின்றேன், என அவரே கூறுகிறார்" என்றார்.

* மலேசிய நாடாளுமன்றம் கலைப்பு: மலேசிய பிரதமர்

மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் அறிவித்துள்ளார். அடுத்த 60 நாள்களுக்குள் மலேசியாவில் 15வது பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்ப்புகள், சிக்கலான பொருளாதார சூழலுக்கு மத்தியில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். எதிர்க்கட்சிகள், பிரதமரின் கூட்டணிக் கட்சிகள் பொதுத்தேர்தலை நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

* DEE தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

DEE முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நிலையில், இதன் முடிவுகள் நாளை (11ம் தேதி) வெளியாக உள்ளது. மேலும் முடிவுகளை அந்தந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் வாயிலாக அறியலாம் என்றும் மறுகூட்டல், மறுமதிப்பீடு, விடைத்தாள் நகல் ஆகியவற்றுக்கு அக்டோபர் 12 முதல் அக்டோபர் 14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* நகர்ப்புற நக்சல்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: பிரதமர் மோடி

குஜராத்தின் பரூச் மாவட்டத்தில் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகளை பிரதமர் மோடி இன்று (10ம் தேதி) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ''நகர்ப்புற நக்சல்கள் புதிய தோற்றத்துடன் குஜராத்துக்குள் நுழைந்து நமது ஆற்றல்மிக்க இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறார்கள். நாட்டை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நகர்ப்புற நக்சல்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்'' என்றார்.

* செப்டம்பர் மாதத்தின் ஐசிசி சிறந்த வீரர் & விராங்கனை யார்?

செப்டம்பர் மாதத்தின் ஐசிசி சிறந்த வீரராகப் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிறந்த வீராங்கனை விருதை இந்தியக் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் வென்றார். கடந்த மாதத்திற்கான விருது வாங்கிய இருவருமே பேட்டர்கள் ஆவர். முகமது ரிஸ்வான் டி20யில் சிறப்பான ஃபார்மில் உள்ளார். கேப்டனான ஹர்மன்ப்ரீத் பொறுப்பாக ஆடி வருகிறார்.

* டி20 உலகக்கோப்பை பயிற்சிப்போட்டி - இந்தியா வெற்றி

இந்தியா - மேற்கு ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பையின் பயிற்சி போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய இந்தியா, 157 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய மேற்கு ஆஸ்திரேலியா, 144 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோல்வியடைந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தப் போட்டி நேரலையில் ஒளிபரப்பாகவில்லை.

* தமிழகத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு வரும் 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

tnhealth.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்-இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை அறிவிப்பு.

* உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் - முக்கிய கட்டிடங்கள் தகர்ப்பு

ரஷ்யா - உக்ரைனுக்கு இடையேயான போர் 6 மாதங்களை கடந்து தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று (10ம் தேதி) காலை ரஷ்யா, உக்ரைன் தலைநகர் கீவ்வில் ஏவுகணைகளை ஏவியுள்ளது. இதனால் கீவ் நகரின் முக்கிய கட்டிடங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் தரைமட்டமாகத் தகர்க்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்படுவதால் இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படவில்லை.

* தமிழ் மட்டுமே 'திராவிடம்' அல்ல: ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் மாளிகையில் ஒரே பாரதம் உன்னத பாரதம் இணைக்கும் பாரதம் திட்டம் குறித்த கருத்தரங்கை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், ''அரசியல் கட்சிகள் மக்களின் அறிவை குறுக்கிவிட்டன. தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்பது தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரா,கேரள மாநிலங்களை உள்ளடக்கியது. ஆனால் தற்போது திராவிடம் என்றால் தமிழ் என கூறப்பட்டு வருகிறது'' என்றார்.

* பசு வை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க கோரி மனு – நீதிபதிகள் காட்டம்

பசு மாட்டை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என, கோவன்ஷா சேவா சடன் என்ற அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதி, ‘இது தான் கோர்ட்டின் வேலையா? அபராதம் விதிக்கும் வகையிலான மனுக்களை ஏன் தாக்கல் செய்கிறீர்கள்? மனு தாக்கல் செய்த நபருக்கு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்ததுடன் மனுவை தள்ளுபடி செய்தனர்.

* ஆம்னி பேருந்தில் அதிக கட்டணமா? புகாரளிக்கலாம்

தீபாவளி பண்டிகை வரும் 24ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வர். இதைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவ சங்கர், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார். இதற்கு 1800 425 6451 என்ற எண்ணில் புகாரளிக்கலாம்.

* ஈரோடு: அந்தியூர் அருகே உள்ள தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த  சிபினேஷன் (11), ராகவன் (10), நந்த கிஷோர் (10) ஆகிய 3 சிறுவர்களும் அப்பகுதியில் உள்ள குட்டையில் மீன் பிடிக்கச் சென்ற போது, தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு - போலீசார் விசாரணை

* முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலினுக்கு ஜெயலலிதா போல 1% துணிச்சல், தைரியம் உள்ளதா?

அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிந்ததா? அதிமுக-வில் இது போன்று பேசினால் பொறுப்பில் நீடிக்க முடியுமா?"

- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

* பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு, TET தேர்வுக்கு விண்ணப்பித்த 4 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு

பெயர், புகைப்படம், கையெழுத்தை சரியாக பதிவு செய்யாத 35 பேரின் விண்ணப்பங்கள் என்று மொத்தமாக 39 விண்ணப்பங்கள் நிராகரிப்பு

🔴 ஆம்னி பேருந்தில் அதிக கட்டணமா? புகாரளிக்கலாம்

தீபாவளி பண்டிகை வரும் 24ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வர். இதைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவ சங்கர், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

இதற்கு 1800 425 6151 , 044-24749002 , 044-26280445 , 044-26281611 ஆகிய கட்டணமில்லா எண்களில் புகாரளிக்கலாம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages