அக்னிப்புரட்சி இன்றைய (11.10.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (11.10.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (11.10.2022) முக்கிய செய்திகள்.

* திருப்பத்தூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர்.

* சமூக நல்லிணகத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்.

விசிக, இடதுசாரிகள் சார்பாக இன்று சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்.

மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்க திமுக தொண்டர்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் அழைப்பு.

காங்., மதிமுக, விசிக உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், இயக்கங்கள் பங்கேற்கின்றன.

50 கட்சிகள் இணைந்து இன்று மாலை 4 மணிக்கு மனித சங்கிலி போராட்டம் நடத்துகின்றன.

* தாலி கட்டும் வீடியோ வெளியிட்டவர் கைது:

கடலூர்: சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு மாணவன் தாலி கட்டும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டவர் கைது.

சிதம்பரம் பகுதியை சேர்ந்த பாலாஜி கணேஷ் என்பவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

* சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா உள்ளிட்ட 5 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

₨5.53 கோடிக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் சிபிஐ தகவல்

* ATM-ல் பணம் எடுத்தால்... வெளியான அதிர்ச்சி செய்தி - உண்மை என்ன?

ஏடிஎம்மில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ₹173 பிடிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், இந்த செய்தி முற்றிலும் தவறானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஐபி (Press Information Bureau) சார்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், வங்கி ஏடிஎம்களில் 5 முறை வரை இலவசமாக பணம் எடுக்கலாம்.

அதை தாண்டினால் பரிவர்த்தனை ஒன்றுக்கு அதிகபட்சமாக ₹21 வரை மட்டுமே பிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* சிவசேனா கட்சிக்கு ‘தீபச் சுடர்’ சின்னம் ஒதுக்கீடு

சிவசேனா கட்சி சின்னத்திற்கு ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே ஆகிய இருவரும் உரிமை கோரினர். இதனிடையே சிவசேனாவின் வில், அம்பு சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இந்நிலையில், அந்தேரி (கிழக்கு) இடைத்தேர்தலில் சிவசேனா கட்சிக்கு 'தீபச் சுடர்' சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. உதய சூரியன், திரிசூலம், தீபச் சுடர் ஆகிய 3ல் ஒரு சின்னத்தை உத்தவ் தாக்கரே கோரி இருந்தார்.

* இதை கண்டுபிடிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு!

ஆபத்து இல்லாமல், எளிதாக பனை மரம் ஏறுவதற்கு சிறந்த கருவியை கண்டுபிடிக்கும் நபருக்கு ரூ.1 லட்சம் பரிசு என வேளாண்மை உற்பத்தி ஆணையம் அறிவித்துள்ளது. இந்த போட்டியில் பல்கலைக்கழகங்கள், தனியார் நிறுவனங்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிப்புகளை www.tnhorticulture.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

* கடலூர்: விருத்தாசலம் அருகே ஆதனூரில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து.

10 பள்ளி குழந்தைகள் காயம் அடைந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்.

* சொத்து குவிப்பு வழக்கில் ஆ.ராசா உள்ளிட்ட 5 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்.

1999 ஆண்டு பாஜக அரசில் அமைச்சராக இருந்தது முதல் 2010ஆம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக ரூ 5.53 கோடி வரை சொத்து சேர்த்துள்ளதாக 2015ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்.

* தென்கொரியா மீதான அணு ஆயுத தாக்குதலுக்கு ஒத்திகை: வடகொரியா மிரட்டல்

வடகொரியா அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: நாட்டின் தலைவர் கிம் ஜோங் மேற்பார்வையில் அண்மையில் சோதிக்கப்பட்ட 7 ஏவுகணைகளும் தென்கொரியாவின் ராணுவ தளங்கள் மற்றும் விமான நிலையங்களை தாக்கும் திறனை வெற்றிகரமாக உறுதி செய்தன. அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணை சோதனைகள் தென்கொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் ஒரு வெளிப்படையான எச்சரிக்கை.

* உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா சரமாரியாக ஏவுகணை தாக்குதல்

உக்ரைன் தலைநகரான கீவ் நகரில் உள்ள குடியிருப்பு கட்டடங்கள், வணிக கட்டடங்கள், பொழுதுபோக்கு இடங்கள் என பொதுமக்களை இலக்காக வைத்து 80க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ரஷ்ய படைகள் வீசின. இதில் 50% ஏவுகணைகள் உக்ரைன் படைகளால் நடுவழியில் இடைமறித்து அழிக்கப்பட்டபோதிலும் எஞ்சிய ஏவுகணைகள் கீவ் நகரின் பல பகுதிகளை பற்றி எரிய வைத்தன. இந்த தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

* உக்ரைன் மீதான ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல் மிருகத்தனமானது: ஜோ பைடன் கண்டனம்

உக்ரைன் மீதான ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது: ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர், ஏராளமானோர் காயமடைந்தனர். உக்ரைன் மக்கள் மீது புதின் நடத்தும் சட்ட விரோதப் போரின் முழுமையான மிருகத்தனம், மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. எங்களது நட்பு நாடுகளுடன் சேர்ந்து, ரஷ்யாவிற்கு தொடர்ந்து பாடம் புகட்டுவோம்.

* அமெரிக்க இணையதளங்களை முடக்கிய ரஷ்ய ஹேக்கர்கள்!

அமெரிக்காவின் 13 விமான முன்பதிவு இணையதளங்களை ரஷ்ய ஹேக்கர்கள் முடக்கியிருக்கிறார்கள்.

விமானங்கள் இயக்கப்படுவதில் இதுவரை பிரச்னை ஏதும் இருக்கவில்லை.

'கில்நெட்’ என்ற சங்கேத குறியீடில் இயங்கிவரும் ரஷ்ய ஆதரவு ஹேக்கர்கள் குழு, அமெரிக்க அரசு மற்றும் தனியார் இணையதளங்களைப் பயனர்கள் பயன்படுத்த முடியாதவாறு முடக்கி வைக்கும்.

* டி.ஒய். சந்திராசூட் அடுத்த தலைமை நீதிபதி!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திராசூட் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி பரிந்துரைத்திருக்கிறார்.

யுயு லலித்தின் பதவி நவம்பர் 8ஆம் தேதியோடு முடிவடைவதால், தலைமை நீதிபதி பதவிக்கு உரிய நபரை பரிந்துரைக்கும்படி மத்திய அரசு கேட்டுக்கொண்டிருந்தது. டி.ஒய். சந்திராசூட் 2024 நவம்பர் வரை தலைமை நீதிபதியாக இருப்பார்.

* 10ம் வகுப்பு சான்றிதழ் வரும் 14ல் கிடைக்கும்

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணாக்கர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மட்டும் ஏற்கனவே வழங்கப்பட்டது.

இந்நிலையில் மாணாக்கர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில், வரும் 14ஆம் தேதி தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று கொள்ளலாம் என்றும் தனி தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களில் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

* எம்.எல்.ஏக்களின் 10 முக்கிய கோரிக்கைகளை, செயல்படுத்த 10 குழுக்கள் அமைப்பு;

அந்தந்த ஆட்சியரிடம் எம்.எல்.ஏக்கள் மனுவாக அளித்த கோரிக்கைகளை மதிப்பீடு செய்து அரசுக்கு பரிந்துரைக்க குழுக்கள் அமைப்பு

* பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

பல தலைமுறைகளாக பார்வையாளர்களை மகிழ்வித்து வரும் இந்திய திரையுலகின் சிறந்த ஆளுமை அமிதாப் பச்சன் - பிரதமர் மோடி

* புதுச்சேரியில் குருப் 'பி' மற்றும் 'சி' பிரிவு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

குரூப் 'பி' மற்றும் 'சி' ஊழியர்களுக்கு ₨6,908, முழுநேர தற்காலிக ஊழியர்களுக்கு ₨1,184 போனஸ் - புதுச்சேரி அரசு

* வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2021-2022 ஆம் ஆண்டில் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட சிறப்பு பருவ (சம்பா நெல் உட்பட ) இதர பயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகையினை விவசாயிகளுக்கு முதல்வர் வழங்கினார்.

481 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையினை 4 இலட்சத்து 42 ஆயிரத்து 734 விவசாயிகளுக்கு வழங்கிடும் அடையாளமாக 10 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகைக்கான காசோலைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* தேவர் குருபூஜையில் பங்கேற்க தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி:

ஒரு நாள் பயணமாக அக்டோபர் 30ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறவுள்ள தேவர் ஜெயந்தி குருபூஜை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார்.

* உள்ளாடைகளுக்கு MRP விலையை விட ரூ.18 கூதல் விலைக்கு விற்றதாக ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் மீது வழக்கு.

சென்னை, மயிலாப்பூரில் உள்ள ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் நிறுவனத்திற்கு ரூ.2 லட்சம் அபராதம்.

அபராதத்தை நுகர்வோர் நலநிதி வங்கி கணக்கில் செலுத்த சென்னை, மயிலாப்பூரில் உள்ள ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் நிறுவனத்திற்கு திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு.

* கேரளாவில் நரபலிக்காக 2 பெண்கள் கடத்தப்பட்டு துண்டு துண்டுகளாக வெட்டி புதைப்பு - 3 பேர் கைது.

குடும்பம் செழிக்கவும், செல்வம் பெருகவும் வேண்டி டாக்டர் தம்பதி நரபலி கொடுத்ததாக தகவல்.

* சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு பாலிடெக்னிக் கல்லூரி மாணவன் தாலி கட்டிய விவகாரம்.

2 நாட்களாக விசாரணை நடைபெற்ற நிலையில் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் மாணவன் கைது.

* மதுவிலக்கு சட்டம் 1937ம் ஆண்டு கொண்டுவந்தாலும், வருவாய் ஆதாரமாக டாஸ்மாக் மதுபான விற்பனை உள்ளதால் தமிழகத்தில் மதுவிலக்கு இதுவரை சாத்தியமாகவில்லை- டாஸ்மாக் பார் டெண்டரை எதிர்த்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து.

மதுபான விற்பனையை ஒழுங்குபடுத்த மட்டுமே பல்வேறு விதிகளையும், உத்தரவுகளையும் அரசு பிறப்பித்து வருகிறது.

பார் அமைக்கும் நிலத்தின் உரிமையாளர்களிடம், டாஸ்மாக் நிர்வாகம் தான் தடையில்லா சான்று பெற வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

* அதிமுக தொண்டர்களுக்கு இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

அதிமுகவின் 51வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு வாழ்த்து

என் உயிர் உள்ளவரை அதிமுகவின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் - ஈபிஎஸ்

அதிமுகவை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வைத்தே தீருவேன்

அரசியல் பயணம் கரடுமுரடானது என்ற ஜெயலலிதாவின் வாக்கை பின்பற்றுவேன் - ஈபிஎஸ்

தங்களுக்கும் தங்களுடைய வாரிசுகளுக்கும் எதிர்பார்த்த பதவி கிடைக்கவில்லை என சிலர் இடம்மாறியுள்ளனர்.

அதிமுகவை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வைத்தே தீருவேன்-அதிமுக ஆண்டுவிழாவையொட்டி இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் தொண்டர்களுக்கு கடிதம்.

* நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தேர்தல் வெற்றியை செல்லாது என மனு தாக்கல் செய்த விவகாரம்.

ரவிந்திரநாத்தின் பதில் மனுவை நிராகரித்து, வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என உயர்நீதிமன்றம் உத்தரவு.

* தமிழகத்தில் கொலை வழக்குகளை விசாரிக்க தனிப்பிரிவை உருவாக்க வேண்டும்- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பரிந்துரை.

சட்டம் ஒழுங்கு காவல்துறையினரே கொலை வழக்குகளை விசாரிப்பதால் அதிக பளு.

தனி விசாரணைப் பிரிவை உருவாக்குவது சட்டம் ஒழுங்கு காவல்துறையினருக்கு சுமையை குறைக்கும் -நீதிபதி தெரிவித்தார். 
காவல் துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு- உயர்நீதிமன்ற மதுரை கிளை .

* சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சட்டம் உதவி மையம் அருகே ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனது மகனுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுத்ததால் அந்த நபர் தீக்குளித்ததாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீக்குளித்த நபர் 90% படுகாயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட நபர் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்த வேல்முருகன் என தெரியவந்துள்ளது.

* 99 ரன்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா அணி ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது.

இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்க சுற்று பயணத்தின் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

தென் ஆப்பிரிக்கா அணி 27.1 ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

அந்த அணியில் அதிகபட்சமாக க்ளாஸென் 34 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும், சுந்தர், சிராஜ், ஷபாஸ் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது.

100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

* டாஸ்மாக் மதுக்கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை சோதனை அடிப்படையில் கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நவம்பர் 15 முதல் அமல்படுத்த வேண்டும்.

நவம்பர் 15 முதல் இரு மாதங்களுக்கு அமல்படுத்தி, அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்-டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

வனபாதுகாப்பு தொடர்பான வழக்குகளில் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு உத்தரவு.

* சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி; சென்னை அண்ணாசாலையில் கை கோர்த்த தலைவர்கள்.

விடுதலை சிறுத்தை, ம.தி.மு.க, காங்கிரஸ், சி.பி.ஐ, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் திராவிடர் கழகம் உட்பட பல்வேறு இயக்கங்கள் இணைந்து நடத்தும் 'சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்'

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

சென்னை அண்ணா சாலையில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் கி.வீரமணி, திருமாவளவன், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு.

* கடைசி ஒரு நாள் போட்டி - இந்தியா அபார வெற்றி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

100 ரன்கள் இலக்குடன் ஆட்டத்தை தொடர்ந்த இந்தியா 19.1 ஓவர்களில் 105 ரன்கள் எடுத்து தொடரை 2-1 என கைப்பற்றியது.

* மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு 'வாள் மற்றும் கேடயம்' சின்னத்தை ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம்

* சென்னை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், சென்னை இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 15.10.2022 அன்று...

சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள நியூ கல்லூரியில் (THE NEW COLLEGE) நடைபெற உள்ளது.

* உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் உடல் இதாவா மாவட்டத்தில் உள்ள சைபை பகுதியில் தகனம்

இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

இறுதி சடங்கில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் சார்பில் கமல்நாத், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பங்கேற்பு

* மருத்துவ துறையில் வேலைவாய்ப்பு...
தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் 1,021 உதவி அறுவை சிகிச்சை நிபுணர்களை நியமிக்க மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியீடு

தகுதியுள்ளவர்கள் mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

* சென்னை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை வரும் பிப்ரவரி மாதம் திறக்க திட்டம்.

தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக ₨400 கோடி செலவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.

'பயங்கரவாத மற்றும் தீவிரவாத' அமைப்புகளின் பட்டியலில் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவை சேர்த்தது ரஷ்யா.

* 🏏இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி தேர்வு

செயலாளராக ஜெய் ஷா, துணை தலைவராக ராஜீவ் சுக்லா, பொருளாளராக அஷிஷ் ஷெலர் தேர்வு

* விரிவுரையாளர்கள் பணி நீக்கம் - உண்மையில்லை:

கௌரவ விரிவுரையாளர்களை பணி நீக்கம் செய்ய எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

கல்லூரி கல்வி இயக்குனர் பிறப்பித்ததாக வெளியான தகவல் பொய்யானது- உயிர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் விளக்கம்.

* இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு மலட்டுத்தன்மை, கருவுறுதல் பிரச்னை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

ஒவ்வொரு ஊரிலும் முளைத்துள்ள செயற்கை கருத்தரிப்பு மையங்களே இதற்கு சாட்சியமாகும்.

அதிக மக்கள்தொகையில் நாடுகளில் இந்தியா தற்போது இரண்டாவது இடத்தில் இருந்தாலும், இளைஞா்கள், இளம்பெண்களிடையே குழந்தைப்பேறு என்பது சவாலாகி விட்டது. இந்தியா்களின் கருவுறுதல் விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் நாடு முழுவதும் கருவுறுதல் பிரச்னைகள் அதிகரித்துள்ளன. பொது கருவுறுதல் (ஜெனரல் ஃபொ்டிலிட்டி ரேட்) விகிதத்தின்படி நாட்டில் பிறப்பு விகிதம் 20% குறைந்துள்ளது.

குறிப்பாக 15 முதல் 49 வயது வரையிலான பெண்களுக்கு பிரச்னைகள் அதிகரித்துள்ளன. இந்திய மக்கள்தொகையில் சுமாா் 15% போ் கருத்தரிக்காமை பிரச்னையை எதிா்கொள்கின்றனா்.

இந்தியாவின் சராசரி கருவுறுதல் விகிதம் 2018-2020-இல் 86.1 % ஆக இருந்தது, அது தற்போது 68.7 % ஆகக் குறைந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் நகரத்தை விட கிராமங்களில் கருவுறுதல் விகிதம் அதிகரித்துள்ளது.

நகா்ப்புறத்தில் 15.6 % என்றால், கிராமப்புறங்களில் 20.2 % ஆக உள்ளது.
இளைஞா்களும், இளம்பெண்களும் கருத்தரிக்க முடியாததற்குப் பல்வேறு காரணிகள் உள்ளன.

உடலியல் சமமின்மை, கருத்தரிக்கும் திறனின்மை, பொருளாதார நிலை, மன அழுத்தம், தாமதமான திருமணம், சுற்றுச்சூழல் மாற்றங்கள், நகரமயமாக்கல், நவீனமயமாக்கல், உயா்கல்வி இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

70 % கருத்தரித்தல் பிரச்னைகள் குணமாக்கக் கூடியவையே.
அண்மையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் கன்னியாகுமரியில் 45.67 %, திருநெல்வேலியில் 44.24 %, திருவனந்தபுரத்தில் 41.91 % என்ற அளவில் குழந்தையின்மை பிரச்னை இருப்பதாகத் தெரியவந்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages