அக்னிப்புரட்சி இன்றைய (12.10.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (12.10.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (12.10.2022) முக்கிய செய்திகள்.

* அரசியலமைப்பில் உள்ள அனைத்து தேசிய மொழிகளையும் மத்திய அரசு ஊக்குவிக்க வேண்டும். உயர்கல்வியில் இந்தியை மட்டுமே பிரதான மொழியாக திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்தி திணிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும்- கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்.

* சென்னை: உயர்நீதிமன்ற வளாகத்தில் சாதி சான்றிதழ் கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம்.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இளைஞர் வேல்முருகன் உயிரிழப்பு.

* இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் ரவிக்குமார் ராஜினாமா.

நிறுவனத்தின் 2ம் காலாண்டு முடிவுகள் 13ம் தேதி வெளியிடவுள்ள நிலையில் ரவிக்குமார் ராஜினாமா.

* முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம்(74) மாரடைப்பு காரணமாக காலமானார்

வால்பாறை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கோவை தங்கம்

* ஆஸ்கருக்கு தேர்வாகியுள்ள ’செல்லோ ஷோ’ படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமான ராகுல் கோலி(17) புற்றுநோயால் உயிரிழப்பு.

அக்.14ம் தேதி சிறுவனின் குடும்பத்தினர், அவன் நடித்த செல்லோ ஷோ திரைபடத்தை பார்த்துவிட்டு இறுதிச்சடங்கை நடத்தவிருக்கின்றனர்.

* இந்திய பொருளாதாரம் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது - மத்திய நிதியமைச்சர்

எரிபொருள், மின்சாரம், உரத்தின் விலை உயர்வு மட்டுமின்றி, அவை கிடைப்பதிலும் சிரமம் உள்ளது

நாட்டில் சில பகுதிகளில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

* நாகப்பட்டினம் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் இரவு உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

மாணவிகள் சாப்பிட்ட உணவில் பூரான் கிடந்ததாக புகார்.

* ஆளுநர் என்பவர் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இணைப்பு பாலம் மட்டுமே - காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசு.

தமிழ், திருக்குறள், இந்தி, சமஸ்கிருதம் போன்றவை குறித்து ஆளுநராக பேசுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கும், அவருக்கும் நல்லதல்ல.

* ஆளுநருக்கென ஒரு எல்லை இருக்கிறது, அதற்குள் தான் அவர் செயல்பட வேண்டும் - திருச்சியில் திருநாவுக்கரசர் எம்.பி பேட்டி -

* சினிமாவை அடியோடி ஒழிக்க வேண்டிய நேரம் இது - கிருஷ்ணசாமி

சினிமாவை அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது என புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது பேட்டியில், “பள்ளி மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவன் தாலி கட்டும் ஹீரோயிசம். திருமணமான 4 மாதங்களில் குழந்தை பிறந்ததாக அறிவிக்கும் சூப்பர் ஹீரோயின். தமிழ் சினிமாதனத்தால் இளைஞர்கள், கலாசாரம், பண்பாடு சீர்கெடுகிறது” என்றார்.

* எடப்பாடி பழனிசாமியின் தவறான நிர்வாகத்தால்தான் மக்கள் திமுகவிற்கு வாக்களித்தனர்

சென்னையில் அமமுக கண்டன ஆர்பாட்ட கூட்டத்தில் டிடிவி தினகரன் பேச்சு

அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் சர்ச்சையாக பேசியிருந்தால் அன்றே பதவி பறிபோயிருக்கும்

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அமைச்சர்களுக்குதான் தூக்கம் இல்லாமல் இருந்தது - டிடிவி தினகரன்

* அசாமில் கன மழை; வெள்ளத்தில் மிதக்கும் மாவட்டங்கள்!

அசாமில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் பல மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. ஏராளமானோர் வீடுகளை விட்டு வெளியேறி, பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். பல ஹெக்டேர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. தலைநகர் கவுகாத்தியிலும் தொடர் மழையால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நகரில் எங்கு பார்த்தாலும் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

* காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தொடர் மழை எதிரொலியாக கர்நாடகாவிலிருந்து காவிரியில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 30,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 25,000 கன‍அடி நீர் திறக்கப்படுவதால் மேட்டூர் காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உபரிநீர் போக்கி கால்வாய் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரி்க்கை விடுக்கப்பட்டுள்ளது.

* உலகளவில் 100 கோடி பேருக்கு மனக்கோளாறு பிரச்சனை உள்ளது! – ஐநா தகவல்

உலக மனநல தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில், ஐநா பொதுச் செயலர் குட்டெரெஸ் கூறுகையில், ‘உலகளவில் மனநலத்தால் பாதிக்கப்பட்ட மக்களை முன்னுரிமை அடிப்படையில் பாதுகாக்க வேண்டும். உலகம் முழுவதும் 1 பில்லியன் (100 கோடி) மக்கள் மனநலக் கோளாறுடன் வாழ்கின்றனர். மனநலம் என்பது மக்களின் சுகாதாரப் பாதுகாப்பில் இருந்து புறக்கணிக்கப்பட்ட பகுதியாக உள்ளது’ என்றார்.

* சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் கிரிக்கெட்டை தொடர்ந்து திரைப்பட துறையிலும் கால்பதித்துள்ளார். பாலிவுட்டில் உருவாகி வரும் 'Double XL' என்ற திரைப்படத்தில் கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளார். முன்னணி நடிகைகளான ஹூமா குரேஷி, சோனாக்‌ஷி சின்ஹா ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

* 22% சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தி உள்ளோம்.

ஒப்புதல் பெறுவதற்காக துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் டெல்லி செல்ல உள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேட்டி.

* தமிழ்நாட்டில் தேவாங்கு சரணாலயம்:

இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 11,806 ஹெக்டேரில் அமைகிறது.

அழிந்து வரும் தேவாங்கு இனத்தை பாதுகாக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டு நடவடிக்கை.

* எனது தொகுதி வளர்ச்சி நிதியை கடலூர் மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டாம்: கடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.ஐயப்பன் பரபரப்பு பேச்சு.

திமுகவைச் சேர்ந்தவர் மேயராக இருக்கும் நிலையில் அவரது நிர்வாகத்தை திமுக எம்எல்ஏவே நம்பாமல் இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

* சென்னை அடுத்த பள்ளிக்கரணையில் 3000 போதை மாத்திரை, ஊசிகள் பறிமுதல் - 5 இளைஞர்களை கைது செய்தது மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு

தனியார் கல்லூரி எதிரில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார்

போதை மாத்திரை விற்பனை செய்ததும், ஆன்லைனில் கொள்முதல் செய்ததும் விசாரணையில் அம்பலம்

* கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம்

நரபலி கொடுக்கப்பட்ட பெண்களின் உடல் சதைகளை வெட்டி சாப்பிட்டதாக விசாரணையில் தகவல்

ஷாபியின் அறிவுறுத்தலின்படி, தம்பதிகள் நர மாமிசத்தை சமைத்து சாப்பிட்டதாக கைதான லைலா அதிர்ச்சி வாக்குமூலம்

* 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை,கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு -  சென்னை வானிலை ஆய்வு மையம்

* தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும், மின்கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வைக் கண்டித்தும் திமுக அரசுக்கு எதிராக திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் அமமுகவினர் ஆர்ப்பாட்டம்.

* கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மாதம் ஒரு முறை மின் கட்டணத்தை  கணக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம். அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பங்கேற்பு.

* 2023ம் ஆண்டு அரசு விடுமுறை தினங்களுக்கான அரசாணை வெளியீடு.

24 நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 8 விடுமுறை நாட்கள் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அமைந்துள்ளது.

* அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 2,849 முதுகலை ஆசிரியர் பதவிகளை நிரப்புவதற்கான தேர்வு நடத்தப்பட்டு தெரிவுப்பட்டியல் வெளியிடு

இப்பணி நியமனத்துக்கான கலந்தாய்வு அக்டோபர் 13ம் தேதி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

* ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

* உயர் நீதிமன்ற முழு அமர்வு உத்தரவுப்படி பணப்பலன் வழங்காததை எதிர்த்து ஆசிரியர் தொடர்ந்த வழக்கு.

தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நாளை நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

ஒரே மாதிரியான ஊதியம் நிர்ணயம் செய்து, 1993 ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில், பணப்பலன்கள் வழங்க உயர் நீதிமன்ற முழு அமர்வு உத்தரவு.

முழு அமர்வு உத்தரவுப்படி தமக்கு பண பலன்கள் வழங்கவில்லை எனக்கூறி ஹரிஹரன் என்ற ஆசிரியர்  வழக்கு.

2013ம் ஆண்டிலிருந்து வழக்கு தொடர்ந்துள்ளதால், எப்போது நிவாரணம் வழங்கப்படும் என விளக்கமளிக்க வேண்டும் - நீதிபதிகள்.

பலமுறை அவகாசம் அளித்தும் விளக்கம் அளிக்காததால் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு.

* யுக்ரைன் மீதான ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல், சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் மாபெரும் அச்சுறுத்தலாக உருவெடுக்கும் :  ஜி7 நாடுகள் எச்சரிக்கை.

அணு ஆயுதங்களை யுக்ரைனுக்கு எதிராக ரஷ்யா பயன்படுத்தும் அணுகுமுறை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை.

* ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பங்களா தொட்டி பகுதியில் இரவு நேரங்களில் மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை

குடியிருப்புகளில் நடமாடும் புலிகளால் வனத்துறை எச்சரிக்கை

* ஆப்பிரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாத அமைப்புகளை ஐநா பாதுகாப்பு கவுன்சில் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்...

ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி  ருசிரா கம்போஜ்.

* ஆண்மை சக்தியை அதிகரிக்குமா கழுதை இறைச்சி?

விவரம்: https://youtu.be/xlzrPCEd2dk

ஆந்திராவில் சட்டவிரோத விற்பனை அமோகம் - அதிரடி ரெய்டு, கைது

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages