அக்னிப்புரட்சி இன்றைய (13.10.2022) முக்கிய செய்திகள்.
* ஓசி பேருந்து என பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் பொன்முடி.
நான் கலோக்கியலாக பேசிய வார்த்தையை வைத்துக் கொண்டு அரசியல் செய்து வருகிறார்கள்.
உண்மையிலையே யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் வருந்துகிறேன் - அமைச்சர் பொன்முடி
பெண்கள் அரசு பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்வது தொடர்பாக அண்மையில் ஓசி என அமைச்சர் பேசியது சர்ச்சையான நிலையில் விளக்கம்.
* வரும் 15ல் திமுக இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - உதயநிதி ஸ்டாலின்.
தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் வரும் 15ம் தேதி இந்தி திணிப்பை கண்டித்து திமுக இளைஞரணி, மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
இந்தி திணிப்பையும், இந்தியா முழுவதும் ஒரே பொதுத் தேர்வு திட்டத்தையும் பாஜக அரசு கைவிட வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் அறிக்கை.
* சிதம்பரம் கோயில் கனக சபை மீது நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதில் இடையூறு, ஏற்படாத வண்ணம் கண்காணிக்க சிறப்பு அலுவலர்கள் நியமனம்
* 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
ஆளுநர் ஆர்.என் ரவி ஒவ்வொரு மாதமும் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் உட்பட பல்வேறு மத்திய அமைச்சர்களை அரசு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சந்தித்து வருகிறார்.
இன்று டெல்லி செல்லும் ஆளுநர், 3 நாட்கள் டெல்லியில் தங்கி இருப்பார் என தகவல்.
* சிவகாசி மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, பட்டாசு விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
* தூத்துக்குடி: திருநங்கையின் தலைமுடியை பிளேடால் வெட்டியும், தாக்கியும் வீடியோ வெளியிட்ட இருவர் கைது.
சங்கரன் கோவிலை சேர்ந்த விஜய், கழுகுமலையை சேர்ந்த நோவா யுவன் ஆகியோரை கைது செய்து கழுகுமலை போலீஸ் நடவடிக்கை.
* உக்ரைன் பிராந்தியங்களை ரஷ்யா இணைத்துக் கொண்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் ஐ.நா.சபையில் நிறைவேறியது.
தீர்மானத்திற்கு ஆதரவாக 143 நாடுகளும், எதிராக 5 நாடுகளும் வாக்களிப்பு; இந்தியா உள்பட 35 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணிப்பு.
* கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதித்த தடைக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு.
ஹிஜாப் மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்சு துலியா இருவரும் மாறுபட்ட தீர்ப்பு.
ஹிஜாப்புக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என ஹேமந்த் குப்தாவும், தடை செல்லாது என சுதான்சு துலியாவும் தீர்ப்பு.
* மின் நுகர்வோரின், 'ஆதார்' எண்ணுடன், மின் இணைப்பு எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து அரசிதழ் வெளியீடு
* இந்தியர்களின் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு ஆபத்தா?
இந்தியா, திறன் வாய்ந்த தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது இங்கிலாந்து - இந்தியா இடையே விசா நடைமுறையில் பிரச்சனை உருவாகும் சாத்தியக்கூறுகள் இருப்பதால், இனி இங்கிலாந்துக்கு இந்திய தொழிலாளர்கள் பணிக்கு செல்வதில் சிக்கல் உருவாகலாம் என்று கூறப்படுகிறது.
* பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு வந்த வெளிநாட்டு பறவைகள்!
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வேளச்சேரி முதல் மேடவாக்கம் வரை 1,730 ஏக்கரில் பரவியுள்ளது. இங்கு அரிய வகை பறவைகளும், நீர்வாழ் உயிரினங்களும் உள்ளன. தற்போது அக்டோபர் சீஸனை ஒட்டி மத்திய ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 20-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகள் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு வந்துள்ளன. இதனால் இப்பகுதி வண்ண நிறமாக மனதைக் கவர்கிறது.
* வாட்ஸ் ஆப் பயனாளிகளும் சுய விபரங்களை வழங்கும் வகையில் புதிய தொலை தொடர்பு சட்டடத்தில் மாற்றம் கொண்டுவரத் திட்டம்.
மசோதாவை பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுவருகிறது.
* கேரளத்தில் மேலும் 12 பெண்கள் நரபலியா?- திடுக்கிடும் தகவல்.
கேரளம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காணாமல் போன மேலும் 12 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கேரள சாலைகளில் லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த தமிழகத்தை சேர்ந்த பத்மா, கலடி பகுதிகளைச் சோ்ந்த ரோஸிலின் ஆகியோர் கடந்த ஜூன் மாதத்திலும், செப்டம்பரிலும் காணாமல் போனதாக வந்த புகாா்கள் மீது போலீஸாா் விசாரணை நடத்தியபோது, அவா்கள் இருவரும் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரம் தெரியவந்தது.
செல்வம் பெருக நரபலி கொடுக்க வேண்டும் என்று பெரம்பவூரைச் சோ்ந்த முகமது சஃபி என்பவா் கூறியதைக் கேட்டு, திருவல்லாவைச் சோ்ந்த பகவல் சிங் - லைலா தம்பதி, அவா்களின் வீட்டில் வைத்து அந்த இரு பெண்களையும் கொலை செய்து, எலந்தூா் கிராமத்தில் புதைத்துள்ளனா்.
இந்நிலையில், சஃபி மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் இருப்பதால், வேறு யாரையாவது நரபலி கொடுத்துள்ளாரா என்ற கோணத்தில் காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணையை முடுக்கியுள்ளனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பத்தினம்திட்டா மாவட்டத்தில் மட்டும் 15 பெண்கள் மாயமாகியுள்ளனர்.
அவர்களில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், பத்மாவும், ரோஸிலினும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 12 பேரின் நிலை இதுவரை மர்மமாகவே இருக்கிறது.
நாடு முழுவதும் நரபலி விவகாரத்தை கவனித்து வரும் நிலையில், மேலும் 12 பெண்கள் குறித்த மர்மம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
* மகளிர் ஆசியக் கோப்பை: 8-வது முறையாக இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்த இந்தியா
மகளிர் ஆசியக் கோப்பை அரையிறுதிச் சுற்றில் தாய்லாந்தை எளிதாக வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளது இந்திய அணி.
சில்ஹட்டில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை அரையிறுதிச் சுற்றில் இந்தியா - தாய்லாந்து ஆகிய அணிகள் மோதின. டாஸ் வென்ற தாய்லாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய மகளிர் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. ஷெஃபாலி வர்மா 42, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் 36 ரன்கள் எடுத்தார்கள். தாய்லாந்து அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் மட்டுமே எடுத்து 74 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மகளிர் ஆசியக் கோப்பை இறுதிச்சுற்றுக்கு 8-வது முறையாக இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. இன்று நடைபெறும் மற்றொரு அரையிறுதிச் சுற்றில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதவுள்ளன. இறுதிச்சுற்று சனிக்கிழமையன்று நடைபெறவுள்ளது.
* ஜம்மு-காஷ்மீரில் 3 வெடிகுண்டுகள் நிறைந்த பை கண்டுபிடிப்பு!
ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் வனப் பகுதியில் ஒரு பையில் மூன்று சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் அடங்கிய பையை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்ததால் பெரும் குண்டுவெடிப்பு சம்பவம் முறியடிக்கப்பட்டது.
புதன்கிழமை இரவு ராணுவம் மற்றும் காவல்துறையினரின் கூட்டுத் தேடுதல் குழுவினரால் கூல் சப்-டிவிஷனில் உள்ள சங்கல்தான் வனப்பகுதியில் பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சிலர் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கையின் போது எவரும் கைது செய்யப்படவில்லை, வெடிகுண்டு செயலிழக்கும் படை பையில் மூன்று சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் இருப்பதை உறுதி செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, பயங்கரவாதிகள் மாவட்டத்தில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பது தெரிய வந்தது. மேலும் இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
* சூரிய, சந்திர கிரகணம்: ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடல்!
2022 ஆண்டுக்கான சூரிய கிரகணம் அக்டோபர் 25-ம் தேதியும், சந்திர கிரகணம் நவம்பர் 8-ம் தேதியும் வருவதால் அன்றைய நாள்களில் திருப்பதி ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள தகவலில்,
இந்தாண்டுக்கான சூரிய கிரகணம் வரும் 25ம் தேதியும், நவம்பர் 8ம்தேதி சந்திர கிரகணமும் ஏற்படுகிறது. சூரிய கிரகணம் வரும் 25ம்தேதி மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை நிகழும். இதனால், அன்று காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோயில் மூடப்பட்டிருக்கும். அதன்பிறகு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
அதேபோன்று, நவம்பர் 8ம் தேதி பிற்பகல் 2.39 மணி முதல் 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழவுள்ளது. அன்றைய தினமும் கோயில் நுழைவாயில் காலை 8.40 மணி முதல் இரவு 7.20 மணி வரை மூடப்பட்டிருக்கும். அந்த இரண்டு நாள்களிலும் திருப்பதி ஏழுமலையான் கோயில் சுமார் 12 மணி நேரம் மூடப்படும்.
பின்னர், பக்தர்கள் இலவச தரிசனத்தில் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். எனவே விஐபி தரிசனம் மற்றும் கட்டண சேவைகளுக்கான அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், அன்றைய தினங்களில் அன்ன பிரசாதம் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
* இயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா குழந்தைகள் விவகாரம்: விசாரணைக் குழு அமைப்பு
விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதிக்குவாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்ததாக கூறப்படும் நிலையில், அதை விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் கடந்த ஜூன் 9ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன்பின், தம்பதியினர் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்றனர்.
இந்நிலையில், கடந்த 9 ஆம் தேதி விக்னேஷ் சிவன் தங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதை அறிவித்தார்.
மேலும், திருமணம் ஆன 4 மாதத்திற்குள் இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனதால் தம்பதியினர் வாடகைத் தாய் முறை மூலமே குழந்தைகள் பெற்றிருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
அதனால்,இந்த விவகாரத்தில் விதிமீறல் உள்ளதா என்று மருத்துவத் துறை சேவைகள் இயக்குநர் மூலம் விளக்கம் கேட்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று இயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா குழந்தைகள் விவகாரத்தை விசாரிக்க மருத்துவத் துறை சேவைகள் துணை இயக்குநர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு விசாரணையைத் துவங்கியுள்ளது. முதல்கட்டமாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையை விசாரிக்கவும் பின் தேவைப்பட்டால் இயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாராவிடமும் விசாரணையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
வாடகைத் தாய் சட்டத்தின்படி, திருமணமானதம்பதி ஐந்து ஆண்டுகள் கழித்தே வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மனைவி 25-50 வயதுக்குள், கணவன் 26-55 வயதுக்குள் இருந்தால், அந்தத் தம்பதிகள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற தகுதியானவர்கள் என்று சட்டம் கூறுகிறது.
* பப்ஜி, ஃப்ரீ ஃபயர் போன்ற தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவது குழந்தைகளிடையே கடும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது-உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை.
* கேரளாவில் 2 பெண்களை நரபலி கொடுத்த வழக்கில் மந்திரவாதி ஷாஃபி, பகவான் சிங், லைலா ஆகிய 3 பேரை 12 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு.
வேறு யாரையும் நரபலி கொடுத்துள்ளனரா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை.
* உதவி பேராசிரியர்கள் சான்றிதழ் சரிபார்க்கக் கோரி தமிழக கல்லூரி கல்வி இயக்குனருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.
பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களாக உள்ள 254 பேரின் சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் - உயர் நீதிமன்றம்.
* பிரதமர் மோடி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜை விழாவில் கலந்து கொள்ளும் திட்டம் இல்லை
அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய அண்ணாமலை பேட்டி
* நியாய விலை அங்காடிகளில் விறபனையாளர் பணிக்கான காலி பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
மக்கள் நல பணியாளர்களை நிரந்தரமாக பணியமர்த்துவது தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிரந்தரமாக பணியமர்த்தக்கோருவது பற்றி தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? எனவும் உச்சநீதிமன்றம் வினவியுள்ளது.
வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
* பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயிலில் தள்ளிவிட்டு கொலை.
காதல் தகராறில் மாணவி சத்தியாவை,சதீஷ் என்பவர் கொலை செய்ததான்
* போலி இணையதள பண மோசடி குறித்து ஐகோர்ட் கிளை நீதிபதிகள் வேதனை:
தமிழ்நாட்டில் கோயில்கள் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி நடந்துள்ளது குறித்து ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சென்னை கபாலீஸ்வரர், மதுரை மீனாட்சியம்மன், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், திருச்சி ஸ்ரீரங்கம், பழனி முருகன், சென்னை வடபழனி ஆண்டாள் கோயில் பெயரில் போலி இணையதளங்கள் தொடங்கி லட்சக்கணக்கில் பண மோசடி நடப்பதாக நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணன் வேதனை தெரிவித்தனர்.
கோயில் கோயிலாக இருக்க வேண்டும், வியாபாரதலமாக இருக்கக்கூடாது என்றும் நீதிபதிகள் கூறினர்.
* தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை ஆணையர் நந்தகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்.
ஆசிரியர் ஹரிஹரனிற்கு ஓய்வூதியத்தை கணக்கிட்டு வழங்க உத்தரவு பிறப்பித்தால் போதாது.
தொகையை இரண்டு வாரங்களில் வழங்க வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு.
* ஒகேனக்கலில் மீண்டும் வெள்ளப்பெருக்கு - ஆர்ப்பரித்து ஓடும் தண்ணீர்
காலையில் 35,000 கன அடி நீர் வந்த நிலையில், தற்போது வினாடிக்கு 50,000 கன அடியாக அதிகரிப்பு
* பெட்ரோல் குண்டு வீச்சு - தேசிய பாதுகாப்பு சட்டம்
பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது
கோவை மாவட்ட பாஜக தலைமை அலுவலகம் மீது கடந்த 22ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசியதாக சதாம் உசேன், அகமது சிகாபுதீன் கைது
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான நகல்கள் இருவரிடமும் வழங்கப்பட்டன.
* குவைத் இந்திய தூதரகத்தின் அடுத்த தூதரக அதிகாரியாக டாக்டர். ஆதர்ஷ்
நியமிக்கப்பட்டுள்ளார்
தற்போது வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளராக உள்ளார்.
விரைவில் அவர் இந்திய தூதரக பணியை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* மும்பை: அடுத்த ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
5 அணிகளை கொண்ட போட்டியில் 20 லீக் ஆட்டங்கள் நடைபெறும் எனவும், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் 2 முறை விளையாடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
* பயங்கரவாதிகளுடன் சண்டையிட்ட ராணுவ நாய் உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீர் என்கவுண்ட்டரில் பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு காயமடைந்த ராணுவ நாய் ஜூம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
ஸ்ரீநகரில் உள்ள ராணுவ கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராணுவ நாய் ஜூம் இன்று உயிரிழந்தது. பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டபோது துப்பாக்கிக்குண்டு பாய்ந்த நாய்க்கு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை தரப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ராணுவ நாய் ஜூம் உயிரிழந்தது.
தமிழக ரேஷன் கடை காலிப் பணியிடங்கள்
கோயம்புத்தூர் – 233 பணியிடங்கள்
விழுப்புரம் – 244 பணியிடங்கள்
விருதுநகர் – 164 பணியிடங்கள்
புதுக்கோட்டை – 135 பணியிடங்கள்
நாமக்கல் – 200 பணியிடங்கள்
செங்கல்பட்டு – 178 பணியிடங்கள்
ஈரோடு – 243 பணியிடங்கள்
திருச்சி – 231 பணியிடங்கள்
மதுரை – 164 பணியிடங்கள்
ராணிப்பேட்டை – 118 பணியிடங்கள்
திருவண்ணாமலை – 376 பணியிடங்கள்
அரியலூர் – 75 பணியிடங்கள்
தென்காசி – 83 பணியிடங்கள்
திருநெல்வேலி – 98 பணியிடங்கள்
சேலம் – 276 பணியிடங்கள்
கரூர் – 90 பணியிடங்கள்
தேனி – 85 பணியிடங்கள்
சிவகங்கை – 103 பணியிடங்கள்
தஞ்சாவூர் – 200 பணியிடங்கள்
ராமநாதபுரம் – 114 பணியிடங்கள்
பெரம்பலூர் – 58 பணியிடங்கள்
கன்னியாகுமரி – 134 பணியிடங்கள்
திருவாரூர் – 182 பணியிடங்கள்
வேலூர் – 168 பணியிடங்கள்
மயிலாடுதுறை – 150 பணியிடங்கள்
திருப்பத்தூர் – 240 பணியிடங்கள்
கள்ளக்குறிச்சி – 116 பணியிடங்கள்
திருப்பூர் – 240
விண்ணப்பிக்க கடைசி தேதி 14-11-2022
விண்ணப்பிக்கும் முறை Offline
JOIN US: https://t.me/Agnipuratchi1
No comments:
Post a Comment