மரம் நடும் அறமே, மாபெரும் அறம்
நாள் 241, நடப்பட்ட மரங்கள் 17,431 - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா முகநூல் பதிவு.
தமிழ்நாட்டில் மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், மரம் நடும் அறமே மாபெரும் அறம் இயக்கத்தை செயல்படுத்தி வருகிறேன். பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் பிறந்த நாள் மற்றும் திருமண நாளில் மரம் நட வேண்டும். அவ்வாறு மரம் நட்டு அதன் புகைப்படத்தை அனுப்புபவர்களுடன் நான் தொலைபேசியில் பேசி வாழ்த்து தெரிவிப்பேன் என்று அறிவித்திருந்தேன். அதன்படி 2021 நவம்பர் 30-ஆம் தேதி முதல் அக்டோபர் 1 வரையிலான காலத்தில் மொத்தம் 241 நாட்களில் 2271 பேர் மரக்கன்றுகளை நட்டுள்ளனர். அவர்கள் மொத்தம் 17431 மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.
கடுமையான பல்வலி காரணமாக 12 நாட்களும், கொரோனா மற்றும் அதற்கு பிந்தைய பாதிப்புகள் காரணமாக 53 நாட்களும் பிறந்தநாள், திருமண நாள் உள்ளிட்ட நிகழ்வுகளையொட்டி மரக்கன்று நட்ட பாட்டாளி சொந்தங்களுக்கு என்னால் வாழ்த்து தெரிவிக்க முடியவில்லை. அதன்பின் கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் வழக்கம் போல, மரக்கன்று நடும் பாட்டாளி சொந்தங்களுக்கு நான் தொலைபேசி மூலம் வாழ்த்துக் கூறி வருகிறேன்.
பிறந்த நாள் மற்றும் திருமண நாளில் மரம் நடும் பாட்டாளி சொந்தங்களுக்கு வாழ்த்து கூறுவதை விட மகிழ்ச்சியான விஷயம் வேறு எதுவும் எனக்கு இல்லை
No comments:
Post a Comment