அக்னிப்புரட்சி இன்றைய (28.10.2022) முக்கிய செய்திகள்.
* ஈரோடு மாவட்டம் தாளவாடி கும்டாபுரம் கிராமத்தில் நடந்த சாணியடி திருவிழா
ட்விட்டர் சிஇஓ பராக் அக்ரவால் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்.
ட்விட்டர் நிறுவனத்தை அதிகாரபூர்வமாக வாங்கினார் எலான் மஸ்க்.
இதை தொடர்ந்து 44 பில்லியன் டாலர் ஒப்பந்தம் நேற்று முறையாக நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து பராக் அக்ரவால் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்.
* டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: காலை 9.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகள் மோதல்; பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா பலப்பரீட்சை!
* மாநகராட்சி டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை!
* சென்னையில் மனநலசிகிச்சை to காதல் திருமணம்
கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தின் 225 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக, அங்கேயே சிகிச்சை பெற்று குணமடைந்த மகேந்திரன் தீபா ஆகியோரின் திருமணம் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கோவிலில் நடைபெற்றது.
* சென்னை-மைசூரு இடையே வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்: 11-ந்தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
தென்இந்தியாவின் முதல் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பிரதமர் மோடி வருகிற 11-ந்தேதி பெங்களூருவில் தொடங்கி வைப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்
பிரதமர் மோடி வருகிற 11-ந்தேதி பெங்களூரு வருகிறார். அவர் அன்றைய தினம் காலை 10 மணிக்கு பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலம் வருகிறார். சர்வதேச விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2-வது முனையத்தை திறந்து வைக்கிறார். அதே விழாவில் கெம்பேகவுடாவின் 108 அடி உயர வெண்கல சிலையையும் திறந்து வைக்க இருக்கிறார். அதன் பிறகு பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். மேலும் அன்றைய தினம் பிரதமர் மோடி இந்தியாவின் 5-வது மற்றும் தென்இந்தியாவின் முதல் அதிவேகமாக செல்லும் சென்னை - மைசூரு இடையே வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் சேவையை பெங்களூருவில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
JOIN US TELEGRAM: t.me/Agnipuratchi1
* திண்டுக்கல் வருகிறார் பிரதமர் மோடி
திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா, வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
விழாவில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
இதற்கிடையே திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் காந்திகிராம பல்கலைக்கழகத்துக்கு வந்து பட்டமளிப்பு விழா மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
* கோவை கார் வெடிப்பு வழக்கில் தமிழக அரசை கண்டித்து வருகின்ற 31-ம் தேதி கோவை மாநகர பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என பாஜக அறிவிப்பு
கோவையில் பாஜக மேற்கொள்ள உள்ள பந்த் சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு
* வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தலுக்கான சிறப்பு முகாம் நவம்பர் 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
* தமிழ்நாட்டில் உள்ள பள்ளி நிறுவனங்கள் குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோக்கள் மற்றும் ரிக்சாக்கள் மூலம் அழைத்துச் செல்வதை நீதிமன்றம் ஏற்காது
-மதுரை உயர்நீதிமன்ற கிளை.
அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரே மாதிரியான வாகன விதிமுறைகள் இருக்க வேண்டும்-மதுரை உயர்நீதிமன்ற கிளை.
* டி20 உலகக்கோப்பை சூப்பர்12 சுற்றில் அயர்லாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே நடைபெறவிருந்த போட்டி மழை காரணமாக ரத்து
மெல்போர்ன் மைதானத்தில் இடைவிடாது பெய்த மழையால் டாஸ் கூட போடப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது
* கிராம சபை கூட்டங்களைபோல, தமிழ்நாட்டில் முதல்முறையாக மாநகர சபை கூட்டம்
பல்லாவரம் அருகே பம்மல் 6வது வார்டில் நவம்பர் 1ம் தேதி மாநகர சபை கூட்டம் நடைபெறுகிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மக்கள் குறை கேட்கிறார்
* மகளிருக்கான இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியுள்ள நிலையில், டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என அறிவிப்பு.
இது தொடர்பாக வெளியாகும் ஆதாரமற்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் எனவும், அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு tnpsc.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்துமாறும் டி.என்.பி.எஸ்.சி. வேண்டுகோள்.
* கோவையில் முழு அடைப்புக்கு பாஜக தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுக்கவில்லை - சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்ணாமலை தரப்பில் பதில்.
செய்தியாளர் சந்திப்பில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி ராதாகிருஷ்ணன் அறிவித்ததை மாநில தலைமை அங்கீகரிக்கவில்லை - அண்ணாமலை.
இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்காமல் விசாரணையை நவம்பர் 1ம் தேதிக்கு தள்ளி வைப்பு
அக்டோபர் 31ம் தேதி பந்த் நடத்தினால் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் - நீதிபதிகள்
* டி20 உலகக்கோப்பை சூப்பர்12 சுற்றில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெறவிருந்த போட்டி மழை காரணமாக ரத்து
மெல்போர்ன் மைதானத்தில் இடைவிடாது பெய்த மழையால் டாஸ் கூட போடப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது
* விவசாயிகள் 22% ஈரப்பதம் வரை நெல் கொள்முதலுக்கு அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் நடப்பாண்டில் 19% ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி
கடந்த ஆண்டை விட 2.5 % லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு்ளளதாக மாநில உணவுத்துறை தகவல்
* நவம்பர் 1ல் மத்திய அரசை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்
விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து, மொழிவழி தேசிய உரிமை நாளான நவம்பர் 1ல் சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில், விசிகவினர் மட்டுமின்றி தமிழ்நாடு நலனில் அக்கறை கொண்ட அனைவரும் பங்கேற்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
* ஆன்லைன் Ph.D படித்தால் செல்லாது: யுஜிசி
அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் Ph.D பட்டங்களை வழங்குவதற்கு விதிமுறைகளை பின்பற்றுவது கட்டாயம் என யுஜிசி வலியுறுத்தியுள்ளது. மேலும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் இணைந்து எட்டெக் நிறுவனங்கள் வழங்கும் ஆன்லைன் Ph.D திட்டங்களுக்கான விளம்பரங்களால் மாணவர்களும் பொதுமக்களும் ஏமாற வேண்டாம். இத்தகைய ஆன்லைன் Ph.D திட்டங்கள் யுஜிசியால் அங்கீகரிக்கப்படாது என கூறியுள்ளது.
* மும்பை தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இதனால் எதிர்காலத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தலாம் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிலிங்கன் தெரிவித்துள்ளார்.
* சட்டம் மற்றும் ஒழுங்கு என்பது மாநிலங்களின் பொறுப்பு"
சட்டம், ஒழுங்கு தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளன - பிரதமர் மோடி
பல்வேறு சவால்களுக்கு மத்தியில், பண்டிகைகளின் போது நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்துவது மாநிலங்களின் கடமை - பிரதமர் மோடி
* மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது அமெரிக்கா
ஒலியைவிட 5 மடங்கு கூடுதல் வேகத்துடன் செல்லும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை இரண்டாவது தடவையாக பென்டகன் நடத்தியுள்ளது.
முதல் சோதனை அக்.2021ல் நடந்தது. ஆராய்ச்சிக்குத் தேவையான தரவுகளை சேகரிக்க 11 வகையான சோதனைகளை நடத்தியதாக கடற்படை தெரிவித்துள்ளது.
அணு ஆயுதப் போர் ஒத்திகையில் ரஷ்யா இரு தினங்களுக்கு முன்பு ஈடுபட்டிருந்தது ஞாபகம் இருக்கலாம்.
* துப்பாக்கிச்சுடுதலில் இந்தியா 34 பதக்கங்கள்
கெய்ரோவில் நடைபெற்ற உலக துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா 34 பதக்கங்களை வென்றுள்ளது.
12 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் வென்று பதக்க பட்டியலில் இந்தியா 2வது இடத்தை பிடித்துள்ளது.
27 தங்கம், 16 வெள்ளி, 15 வெண்கலம் என மொத்தம் 58 பதக்கங்கள் வென்று சீனா முதலிடத்தையும் பிடித்துள்ளது
* திருப்பதியில் காத்திருக்க வேண்டாம்: புதிய சட்டம்
திருப்பதியில் வழக்கமாக இரவு 12 மணிக்கு நடை சாத்தப்படும்.
அப்போது வரிசையில் நிற்பவர்கள் அடுத்த நாள் காலை 10 மணி வரை நிற்க வேண்டும்.
இதற்கு தீர்வு காண காலை 6 மணிக்கு இருக்கும் விஐபி தரிசன நேரத்தை மாற்றிவிட்டு பக்தர்களை அந்த நேரத்தில் தரிசிக்க அனுமதிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறை டிசம்பர் முதல் செயல்பாட்டுக்கு வரும்.
* புதுச்சேரியில் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க அரசு அனுமதி; இந்த நடைமுறை 3 ஆண்டுகள் அமலில் இருக்கும்
10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருக்கும் நிறுவனங்களுக்கு மட்டும் இது பொருந்தும் என்று உத்தரவில் தெரிவிக்கபட்டுள்ளது
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழக்கமான முதுகுவலி மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டார்.
- ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை
No comments:
Post a Comment