அக்னிப்புரட்சி இன்றைய (31.10.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (31.10.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (31.10.2022) முக்கிய செய்திகள்.

* ராமஜெயம் கொலை வழக்கு; உண்மை கண்டறியும் சோதனையில் 12 பேர்

திமுகவின் முதன்மைச் செயலாளரும், தற்போதைய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி விடியற்காலை நடைபயிற்சி சென்ற போது மர்ம நபர்களால் கடத்திக் கொலை செய்யப்பட்டார்

அவரது உடல் திருவளர்ச்சோலை பகுதியில் ஆடு மேய்ப்பவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களுக்கு வலை வீசி தேடி வந்தனர். இந்த வழக்கு உள்ளூர் காவல்துறையில் தொடங்கி சிபிசிஐடி, சிபிஐ என்று பலரது கைமாறிச் சென்றும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் நிலுவையிலேயே இருந்தது

தற்போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நீதிமன்றம் இதற்கென சிறப்புப் புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் எஸ்.பி ஜெயக்குமார், டி.எஸ்.பி மதன், இன்ஸ்பெக்டர் ஞானவேல் ஆகியோர்  அடங்கிய சிறப்பு தனிப்படை புலனாய்வு குழுவினர் இவ்வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும், ராமஜெயம் கொலை தொடர்பாக சிறையில் உள்ள விசாரணைக் கைதிகள், குற்ற வழக்குகளில் ஈடுபட்டு சிறைக்குள் உள்ளவர்கள், ராமஜெயம் கடத்தப்பட்ட இடத்தில் இருந்து அந்த சமயத்தில் செல்போனில் பேசியவர்கள் என 1400-க்கும் மேற்பட்ட நபர்களை அழைத்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இவ்வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 12 ரவுடிகளின் பட்டியலை சிறப்பு புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

இதன்படி, தமிழகத்தின் பிரபல ரவுடிகள் திண்டுக்கல் மோகன்ராம், சாமி ரவி, நரைமுடி கணேசன், சீர்காழி சத்தியராஜ், மாரிமுத்து, தினேஷ்,  திலீப் என்கிற லட்சுமி நாராயணன், தென்கோவன் என்கிற சண்முகம், ராஜ்குமார், சிவகுணசேகரன், சுரேந்தர், கலைவாணன் ஆகிய 12 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

TELEGRAM: t.me/Agnipuratchi1

* ஆளுநர் ஆர்.என்.ரவி மூக்கணாங் கயிறு போல செயல்படுகிறார். அவர் இல்லை என்றால் திமுகவின் அராஜகம் அதிகரித்து விடும் - டிடிவி தினகரன்

* குஜராத் கேபிள் பாலம் அறுந்த விபத்தில் பல அப்பாவி உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்; காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய விரும்புகிறேன்

ஆற்றில் விழுந்து காணாமல் போனவர்களை விரைந்து மீட்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

* நவ.8 இல் முழு சந்திர கிரகணம்!
நவம்பர் 8 ஆம் தேதி பிற்பகல் 2.30க்கு தொடங்கி மாலை 6.19 மணிக்கு முடியவுள்ள முழு சந்திரகிரகணத்தை, தொலை நோக்கி இல்லாமல் வெறும் கண்களால் காணலாம்.

* அடுத்த முழு சந்திர கிரகணம், 2023 ஆம் ஆண்டு அக்.28 ஆம் தேதி தோன்றும் என தகவல்.

* எம்பிபிஎஸ், பிடிஎஸ் இட ஒதுக்கீடு பெற்ற 7,036 பேர் 13 ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்: மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வில் தற்காலிக இட ஒதுக்கீட்டு ஆணை பெற்ற 7,036 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு 13 ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

மருத்துவக் கல்வி இயக்ககம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆன்லைனில் நடந்த பொதுப் பிரிவு கலந்தாய்வில் தற்காலிக இட ஒதுக்கீட்டு ஆணை பெற்றவர்களுக்குச் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெறவுள்ளது. தற்காலிக இட ஒதுக்கீட்டு ஆணை, நீட் தேர்வு அனுமதி அட்டை, நீட் மதிப்பெண் அட்டை, 10, 11, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் (தகுதியானவர்கள் மட்டும்),தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் தகுதிச் சான்றிதழ் (தகுதியானவர்கள் மட்டும்), ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (10) ஆகிய 13 ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பின்னர், இறுதி இட ஒதுக்கீட்டு ஆணை பெறுபவர்களின் விவரங்கள் சுகாதாரத் துறை இணையதளத்தில் வெளியிடப்படும். முதல் சுற்றுகலந்தாய்வில் இட ஒதுக்கீட்டு ஆணை பெற்றவர்கள் நவம்பர் 4-க்குள் கல்லூரிகளில் சேர வேண்டும். அப்போது, அசல் மற்றும் சான்றிதழ்களின் நகல்களைக் கல்லூரிகளில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

TELEGRAM: t.me/Agnipuratchi1

* நீட்' தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக்கல்லூரியில் இடம் பிடித்த அண்ணன்- தங்கை

வேதாரண்யத்தில், ஏழ்மையான சூழ்நிலையில் பெற்றோரின் மருத்துவ கனவை அண்ணன்-தங்கை இருவரும் நனவாக்கினர். நீட்' தேர்வில் வெற்றி பெற்ற அவர்கள் இருவருக்கும் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தது.

ஏழ்மையான குடும்பம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகாவுக்கு உட்பட்ட நெய்விளக்கு வடகாடு பகுதியை சேர்ந்தவர் வீராசாமி. இவருடைய மனைவி ராணி. இவர்களுடைய மகன் ஸ்ரீபரன்(வயது 21), மகள் சுபஸ்ரீ (18).பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள வீராசாமி விவசாய கூலி வேலை பார்த்து வந்்தார். இவர் சுமை தூக்கும்போது முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு முதல் வீட்டிலேயே இருந்து வருகிறார். அதன்பிறகு தையல் வேலை செய்தும், ஆடுகள் வளர்த்தும் ராணி குடும்பத்தை நடத்தி வருகிறார்.எவ்வளவு துன்பங்களை சந்தித்தாலும் மகன், மகளை மருத்துவம் படிக்க வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இதற்காக இரவு-பகல் பாராது தையல் தொழில் செய்தும், ஆடுகள் வளா்த்தும் தங்களது பிள்ளைகளை ராணி படிக்க வைத்தார். மனைவிக்கு தேவையான உதவிகளை வீராசாமியும் செய்து கொடுத்தார்.

மருத்துவக் கல்லூரியில் இடம்

பெற்றோரின் கனவை நனவாக்கும் வகையில் ஏழ்மையான சூழ்நிலையில் ஸ்ரீபரனும் அவருடைய தங்கை சுபஸ்ரீயும் நன்றாக படித்தனர். அவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அங்குள்ள அரசு உதவிபெறும் பள்ளியிலும், பின்பு தேத்தாகுடி தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியிலும் படித்தனர். தொடர்ந்து ஆயக்காரன்புலம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுபஸ்ரீயும், பட்டுக்கோட்டை தனியார் பள்ளியில் ஸ்ரீபரனும் பிளஸ்-2 படித்து முடித்தனர். பின்னர் இருவரும் தஞ்சாவூரில் உள்ள ஒரு மையத்தில் நீட்' தேர்வுக்கான பயிற்சி பெற்றனர். அதனைத்தொடர்ந்து நடந்த நீட்' தேர்வில் ஸ்ரீபரன் 438 மதிப்பெண்ணும், சுபஸ்ரீ 319 மதிப்பெண்ணும் பெற்று தேர்ச்சி பெற்றனர்.மருத்துவ கலந்தாய்வில் சுபஸ்ரீக்கு தஞ்சை மருத்துவக் கல்லூரியிலும், ஸ்ரீபரனுக்கு கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரியிலும் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது. அவர்களையும், அவர்களை நன்றாக படிக்க வைத்த பெற்றோரையும் அப்பகுதி மக்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டுகிறார்கள்.

மட்டற்ற மகிழ்ச்சி

இதுகுறித்து வீராசாமி கூறியதாவது:-

எங்களது பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை கொடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் நாங்கள் இருவரும் கடுமையாக உழைத்ேதாம். சுமை ஒன்றை தூக்கும்போது எனக்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கியபோது எனது மனைவி மனஉறுதியோடு இரவு-பகலாக தையல் தொழில் செய்தும், ஆடு வளர்த்தும் பிள்ளைகளை படிக்க வைத்தார். அவருக்கு உறுதுணையாக நான் இருந்தேன். பள்ளி ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கமும் எங்களை உற்சாகப்படுத்தியது. ஏழ்மையான சூழ்நிலையிலும் பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்தோம்.அவர்களும் நன்றாக படித்து மருத்துவ கல்விக்கான `நீட்' தேர்வில் வெற்றி பெற்றனர்.தற்போது இருவருக்குமே மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்க இடம் கிடைத்தது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. நாங்கள் கண்ட கனவு நனவாகப்போகிறது.

கல்லூரி கட்டணம்

அரசு கட்டிக்கொடுத்த தொகுப்பு வீட்டில் தற்போது வசித்து வருகிறோம். எங்களுக்கான சிறிய வீட்டில் கீற்று கூட போட முடியாமல் பிளாஸ்டிக் தார்பாய் கொண்டு மூடி வைத்துள்ளோம். மழை பெய்யும்போது மிகவும் சிரமமாக உள்ளது.மருத்துவக்கல்லூரியில் இருவருக்கும் இடம் கிடைத்தாலும் அதற்கான கல்லூரி கட்டணத்தை எப்படி செலுத்தப்போகிறோம் என்று தெரியவில்லை.எங்கள் பிள்ளைகளுக்கான கல்லூரி கட்டணத்தை அரசோ அல்லது கல்வி ஆர்வலர்களோ ஏற்றால் நன்றாக இருக்கும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

TELEGRAM: t.me/Agnipuratchi1

* குஜராத்: சுதந்திர போராட்ட வீரரும் இந்தியாவின் முதல் துணை பிரதமருமான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

குஜராத் மாநிலம் கெவாடியால் உள்ள  சர்தார் வல்லபாய் படேலின் சிலைக்கு மலர்த்தூவி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினர்.

* பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இரட்டையர் பிரிவில் 39 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா சாம்பியன் பட்டம் வென்று சாதனை பிடித்துள்ளது.

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. இறுதி போட்டியில் தைவான் இணையை வீழ்த்தியது சாத்விக் இந்தியாவின் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றனர்.

* இந்தியாவில் கொரோனா வைரஸ், ஒமிக்ரான் உருமாற்றத்திற்குப் பிறகு பரவல் குறைந்த நிலையில், தற்போது XBB என்ற புதிய வகையில் உருமாற்றம் அடைந்து பரவி வருவதாக தகவல்

வைரஸின் மாற்றங்களை கண்காணிக்கும் GISIAD என்ற சர்வதேச ஆராய்ச்சி அமைப்பு, இந்தியாவில் 9 மாநிலங்களில் 380 XXB பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

வைரஸ்களில் உருமாற்றம் என்பது பொதுவானதே, எனினும் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது; வைரஸ்களின் உருமாற்றம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது என தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல்

* குஜராத் : மோர்பி பாலம் அறுந்து விழுந்த விபத்தின் காட்சி…

பாலத்தில் சென்று கொண்டிருந்த போது இளைஞர்கள் சிலர் வேண்டும் என்றே பாலத்தை பிடித்து இழுத்து அசைத்தனர்

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே ஒரு தொங்கு பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த பாலம் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. சில மாதங்களுக்கு முன்பு அப்பாலம் மறுசீரமைக்கப்பட்டது. அப்பணி முடிந்த நிலையில், 5 நாட்களுக்கு முன்பு மீண்டும் திறந்து வைக்கப்பட்டது. இந்தநிலையில், நேற்று இரவு 'சத்' பூஜைக்காக ஏராளமானோர் அந்த பாலத்தின் மீது குவிந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது அவர்களின் எடையை தாங்க முடியாமல், பாலம் திடீரென அறுந்து விழுந்தது. இதையடுத்து, பாலத்தில் நின்று கொண்டிருந்த ஏராளமானோர் ஆற்றுக்குள் பொத பொதவென விழுந்தனர். தகவல் அறிந்து விரைந்த பேரிடர் மீட்புப்படை வீரர்களும், மாநில பேரிடர் மீட்புப்படையினரும் உடனடியாக விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். பாலம் இத்தனைக்கும் சீரமைக்கும் பணிகள் முடிந்து சில நாட்களில் இந்த கோர விபத்து நடைபெற்றது தான் பெரும் துயரம். இந்த விபத்து குறித்து பல்வேறு புதுப்புது தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இந்த பாலம் அறுந்து விழுந்தது தொடர்பாக நேரில் பார்த்த விஜய் கோஸ்வாமி என்பவர் பரபரப்பு தகவலை வெளியிட்டு இருக்கிறார். இது தொடர்பாக அகமதாபாத்தை சேர்ந்த விஜய் கோஸ்வாமி கூறியதாவது:-

நேற்று பிற்பகலில் எனது குடும்பத்தினருடன் மச்சு ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தொங்கு பாலத்திற்கு சென்றேன். பாலத்தில் சென்று கொண்டிருந்த போது இளைஞர்கள் சிலர் வேண்டும் என்றே பாலத்தை பிடித்து இழுத்து அசைத்தனர். இதனால், பாலத்தில் நடந்து செல்ல மிகவும் சிரமமாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் பக்கவாட்டில் எதையும் பிடிக்காமல் பாலத்தில் நிற்க முடியாத அளவுக்கு பாலத்தை இளைஞர்கள் குலுக்கி கொண்டிருந்தனர். இதனால் எதுவும் விபரீதம் நடந்து விடும் என்ற அச்சத்தில் நான் எனது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு பாலத்தின் பாதி வழியிலேயே திரும்பி விட்டேன். ஆனால், அச்சப்பட்டது போலவே பெரும் விபத்து நடைபெற்றுவிட்டது. விபத்துக்கு முன்பாக இது குறித்து அதிகாரிகளிடமும் நான் எச்சரித்தேன். ஆனால் டிக்கெட்டுகள் விற்பதில் மட்டுமே குறியாக இருந்த அதிகாரிகள் நான் கூறிய தகவலை காதில் போட்டுக்கொள்ளாமல் எனது பேச்சை அலட்சியம் செய்தனர். பாலத்தில் கூடிய கூட்டத்தை கட்டுப்படுத்த அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நான் பாலத்தில் இருந்து திரும்பிய சில மணி நேரத்தில் இந்த பெரும் துயரம் நடந்து விட்டது" என்றார். இதற்கிடையே, பாலத்தின் கயிறை இளைஞர்கள் சில எட்டி உதைப்பதும் பாலத்தை பிடித்து ஆட்டும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

TELEGRAM: t.me/Agnipuratchi1

* நவம்பர் 6ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி.

சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, அனுமதி அளிக்குமாறு அந்தந்த மாவட்ட காவல்துறைக்கு டிஜிபி அறிவுறுத்தல்.

அக். 2ம் தேதி பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவின்பேரில் தற்போது அனுமதி.

* தமிழ்நாடு அரசு அலட்சியமாக இருந்துவிட்டதாக பாஜக காண்பிக்க முயற்சி செய்கின்றது. அரசியலை அரசியலாக எதிர்கொள்ள வேண்டும்.

தனிநபர் பெயர் உச்சரித்து விமர்சனம் செய்வது அரசியல் அநாகரீகமானது - பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம்.

* செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பத்திரிகைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 10,000 ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஆணைகளை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

* குஜராத், மோர்பி தொங்கு பாலம் விபத்து நடந்த இடத்தில் பிரதமர் மோடி நாளை நேரில் ஆய்வு

ஆற்றில் மூழ்கி 140 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மீட்பு பணிகளை பார்வையிடுகிறார்

* கோவை சம்பவத்தில் எந்தவித மத சாயத்தையும் பூசவில்லை பாஜக எந்த மதத்திற்கும் எதிரான கட்சி அல்ல

எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் வன்முறையை கையில் எடுக்க கூடாது - கோவையில்  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

கோவை மாநகர காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். பாஜகவின் கருத்து யாருக்கும் எதிரானது அல்ல

* பழனி தண்டாயுதபாணி கோயிலில் விமரிசையாக நடைபெறும் திருக்கல்யாண விழா.

கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளையொட்டி, நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சி

பழனி மலைக்கோயிலில் சண்முகர், வள்ளி, தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

* சுவாதி கொலை வழக்கு - மீண்டும் விசாரணைக்கு உத்தரவு:

ராம்குமார் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க  மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

சுதந்திரமான விசாரணை நடத்த தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரை

* ஃபார்முலா ஒன் கார் பந்தயம் ஒரே சீசனில் அதிக வெற்றிபெற்று மேக்ஸ் வெர்ஸ்டப்பென் சாதனை

மெக்சிகோ: ஃபார்முலா ஒன் கார் பந்தயம் ஒரே சீசனில் அதிக வெற்றிகளை பெற்ற வீரர் என்ற சாதனையை மேக்ஸ் வெர்ஸ்டப்பென் படைத்தார். மெக்சிகோ கிராண்ட் பிரி போட்டியை வென்றதன் மூலம் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் சாதனை படைத்துள்ளார். ஒரே சீசனில் 14 வெற்றிகளை குவித்து வெர்ஸ்டப்பென் சாதனை படைத்தார்.

* குஜராத் தொங்கு பாலம் விபத்தில் பா.ஜ.க. எம்.பி. உறவினர்கள் 12 பேர் உயிரிழப்பு

குஜராத்: குஜராத் மாநிலம் மோர்பி தொங்கு பாலம் விபத்தில் பா.ஜ.க. எம்.பி. மோகன்பாய் கல்யாண்ஜியின் உறவினர்கள் 12 பேர் உயிரிழந்தனர். மோர்பி பாலம் விபத்தில் இதுவரை 142 பேர் உயிரிழந்துள்ளனர்.

* ட்விட்டரில் ப்ளூ டிக்கிற்கான தொகை அதிகரிப்பு.

அதிகார கணக்கு என்பதற்கான ப்ளூ டிக்கிற்கு மாதந்தோறும் ரூ.1,600 வசூலிக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ப்ளூ டிக் கணக்குகளுக்கு மாதம் ரூ.400 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் அதை ரூ.1600 ஆக உயர்த்த எலான் மாஸ்க் திட்டமிட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக பிரபலமான நபர்கள், புகழ்பெற்றவர்கள் உள்ளிட்டோரின் ட்விட்டர் பக்கம் அவர்களின் அதிகாரபூர்வ பக்கம் என்பதை உறுதி செய்யும் வகையில்  ப்ளூ டிக் வசதி அமைந்துள்ளது. 

குறிப்பிட்ட நபருடைய அதிகாரபூர்வ கணக்கு எனில் அதன் அடையாளமாக ப்ளூ டிக் இருக்கும்.

* தீபாவளி பண்டிகையின் போது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மிகச்சிறப்பாக இயங்கி மக்களின் பாராட்டுகளை பெற்றுள்ளது - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.

தீபாவளி பண்டிகையின் போது அயராது உழைத்த போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி - அரியலூரில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேச்சு.

* பிரேசிலில் மீண்டும் இடதுசாரி
பிரேசில் தேர்தலில் தற்போதைய அதிபரும், தீவிர வலதுசாரியுமான ஜேர் போல்சோனரோவை வீழ்த்தி, இடதுசாரியான முன்னாள் அதிபர் லுலு டா சில்வா வெற்றி பெற்றுள்ளார். கொரோனா, மனித உரிமை, பாலியல் வன்கொடுமை எனப் பல விவகாரங்களில் போல்சோனரோ கூறிய கருத்துக்கள் சர்வதேச அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன.

* உலக ஜூனியர் பேட்மிண்டன்: தமிழ்நாடு வீரருக்கு வெள்ளிப் பதக்கம்

ஸ்பெயின் நாட்டின் சாண்டேன்டர் நகரில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் இந்திய வீரர் சங்கர் முத்துசாமி, தைபே வீரர் குவோ குவான் லின்னை எதிர்கொண்டார். இப்போட்டியின் இறுதியில் 21-14, 22-20 என்ற கணக்கில் தோற்றாலும் வெள்ளிப்பதக்கம் வென்றார் சென்னையை சேர்ந்த சங்கர் முத்துசாமி.

* குஜராத், மோர்பி தொங்கு பாலம் விபத்து தொடர்பாக 9 பேர் கைது.

மோர்பி பாலம் விபத்தில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.
பாலத்தை புதுப்பித்த கட்டுமான நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கைது.

* கோவை சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.

காவலர்களை நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கூறி அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்ந்த மூன்று வழக்குகள் தள்ளுபடி.

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் - மத்திய குற்றப்பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

* இரு விரல் சோதனைக்கு தடை - நீதிமன்றம் அதிரடி.

பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரு விரல் சோதனை நடத்தக் கூடாது.

இந்த சோதனை ஆணாதிக்க மனோபாவம் கொண்டது.
இதில் எந்த அறிவியல் தன்மையும் இல்லை.

உத்தரவு பின்பற்றப்படுகிறதா என சுகாதாரத்துறையினர் உறுதி செய்ய வேண்டும் -உச்சநீதிமன்றம்.

* கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி  தண்டனைக்குரிய குற்றம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

மாநில அரசுகளின் சட்டங்கள், நன்கொடை வசூலிப்பதை தடுப்பதில்லை என நீதிபதிகள் அதிருப்தி.

மத்திய, மாநில அரசுகள் நன்கொடை வசூலிப்பதை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்கொடை வசூலிக்கும் கல்லூரிகளின் விவரங்களை தெரிவிக்க இணையதளத்தை உருவாக்க வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம்.

* சீனாவில் லாக்டவுனுக்கு பயந்து தொழிற்சாலை வேலியை தாண்டி குதித்து சொந்த ஊர்களுக்கு தப்பியோடிய ஊழியர்கள்

செங்சோவ் பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஐ-போன் தொழிற்சாலையில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
பீஜிங்,

சீனாவின் செங்க்சோவ் பகுதியில் ஆப்பிள் நிறுவத்தின் மின்னணு சாதனங்களை தயாரிக்கும் பாக்ஸ்கான் நிறுவத்தின் மிகப்பெரிய ஐ-போன் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அங்கு 3 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.

சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அந்தந்த மாவட்ட, நகர நிர்வாகங்கள் தீவிர கொரோன தடுப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அரசு முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. அதன் படி கடுமையான ஊரடங்கு அவ்வப்போது அமல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், ஐ-போன் தொழிற்சாலையில் உள்ள பல ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அங்கு பணியாற்றும் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவர்.செங்க்சோவ் பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஐ-போன் தொழிற்சாலையில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, லாக்டவுனுக்கு பயந்த ஊழியர்கள், தொழிற்சாலை வேலியை தாண்டி குதித்து சொந்த ஊர்களுக்கு தப்பிச்சென்ற வீடியோ அங்குள்ள சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

லாக்டவுன் காரணமாக போக்குவரத்து வசதி இல்லாததால், ஊழியர்கள் நடைபயணமாகவே சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். அவர்களுக்கு அந்தந்த பகுதி மக்கள், சாலையோரங்களில் உணவு போன்றவற்றை அளித்து உதவுகின்றனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

TELEGRAM: t.me/Agnipuratchi1

* மருத்துவ படிப்புகளுக்கான பாட புத்தகங்கள் தமிழில் மொழி பெயர்க்கும் பணி தீவிரமாக நடக்கிறது; டி.என்.டி.இ.எஸ்.சி அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான பாட புத்தகங்களை தமிழில் மொழி பெயர்க்கும் பணிகளில் டி.என்.டி.இ.எஸ்.சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் முதல் முறையாக மருத்துவப் படிப்புக்கான பாடங்கள், மத்திய பிரதேசத்தில் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு 3 புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இதேபோல், உத்தரபிரதேச மாநிலத்திலும் மருத்துவம், இன்ஜினியரிங் பாடப்புத்தகங்கள் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், தற்போது தமிழ்நாட்டில் முதல் முறையாக தமிழ் வழி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளுக்கான பாடப் புத்தகங்களை தமிழில் மொழி பெயர்க்கும் பணிகள் நடக்கின்றன.

முதற்கட்டமாக ‘கிரேஸ் அனாடமி பார் ஸ்டூடன்ஸ்’, ‘கைடன் அன்ட் ஹால் டெக்ஸ்ட்புக் ஆப் மெடிக்கல் பிசியாலஜி’, ‘பெய்லி அன்ட் லவ்ஸ் சாட் பிராக்டீஸ் ஆப் சர்ஜரி(பாகம்-1)’, ‘முதலியார் அன்ட் மேனன்ஸ் கிளீனிகல் ஆப்ஸ்டெட்ரைக்ஸ்’ ஆகிய 4 மருத்துவ பாடப்புத்தகங்கள் மொழி பெயர்க்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இதற்கான பணிகளை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகம் (டி.என்.டி.இ.எஸ்.சி.) தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வருகிற டிசம்பர் மாதத்துக்கு முன்பு இதை இந்த ஆண்டு கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு வழங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொழி பெயர்க்கும் பணிகளில் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் 30 பேரும், பயிற்சி டாக்டர்களும் ஈடுபட்டு இருக்கின்றனர். மொத்தம் 25 மருத்துவ பாடப் புத்தகங்களை மொழி பெயர்க்க திட்டமிட்டு இருப்பதாகவும், அதில் 13 பாடப் புத்தகங்கள் முக்கியமான பாடங்களாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

TELEGRAM: t.me/Agnipuratchi1

எம்.பி.பி.எஸ். படிப்புகள் ஆங்கிலத்தில் இருந்தபோது மாணவர்கள் சிலரால் அதை புரிந்து கொள்ள முடியாத நிலை இருக்கிறது என்றும், தற்போது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு இருப்பதால், இதை எளிதில் மாணவர்கள் புரிந்து கொள்ள முடியும், சிறந்த தத்துவார்த்த அறிவுடன், சிறந்த டாக்டர்களாக மாறுவார்கள் என்றும் மொழி பெயர்ப்பாளர்கள் கூறுகின்றனர். மேலும் அவர்கள், ‘பெரும்பாலான மருத்துவச் சொற்கள் கிரேக்கம், லத்தீனில் இடம்பெற்று இருந்ததாகவும், அதை மொழி பெயர்ப்பது சவால் நிறைந்த பணியாக இருந்ததாகவும்’ தெரிவித்தனர். தமிழில் பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட்டு படிக்க முடியும் என்றாலும், ஏற்கனவே உள்ள விதிகளின்படி, தேர்வை ஆங்கிலத்தில் மட்டுமே எழுத முடியும் என்பது குறிப்பிடத்தக்கது....

* வலிமையான மற்றும் ஒற்றுமையான இந்தியா என்ற கனவை நிறைவேற்றியவர் சர்தார் வல்லபாய் படேல்

சுதந்திரத்தின் போது சில சக்திகள் இந்தியாவை கூறுபோட முயன்றன; ஆனால், சர்தார் அதனை முறியடித்தார்
வல்லபாய் படேல் பிறந்தநாளை ஒட்டி - உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்வீட்

* சிபிசிஐடியின் ஏ.டி.ஜி.பியாக அபய்குமார் சிங் பணியிட மாற்றம்.  சிறைத்துறை டி.ஜி.பியாக அமரேஷ் புஜாரி பணியிடமாற்றம்.

* ஆசிரியர் தகுதி தேர்வு - கல்வித்துறை புதிய விளக்கம்:

2010ம் ஆண்டு ஆக.23ம் தேதிக்கு முன் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு, பட்டதாரி ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்கள், டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் இல்லை - தொடக்கக்கல்வித்துறை தற்போது புது விளக்கம்.

* தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சைபர் கிரைம் டிஜிபி அமரேஷ் புஜாரி, சிறைச்சாலை மற்றும் சீர்த்திருத்த நிர்வாக டிஜிபியாக மாற்றப்பட்டு உள்ளார்.

ஆயுதப்படை ஏடிஜிபியாக இருந்த அபாய் குமார் சிங், சிபிசிஐடி கிரைம் பிராஞ்ச் ஏடிஜிபியாக மாற்றப்பட்டு உள்ளார்.

காவல்துறை நவீனமயமாக்கல் ஏடிஜிபியாக இருந்த சஞ்சய் குமார், சைபர் கிரைம் பிரிவு ஏடிஜிபியாக மாற்றப்பட்டு உள்ளார்.

சென்னை தலைமையக ஏடிஜிபியாக இருந்த வெங்கடராமன் நவீனமயமாக்கல் துறை கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

சென்னை ஐஜி ராதிகா சென்னை ஆயுதப்படை ஐஜியாக மாற்றப்பட்டு உள்ளார்.

ஏற்கனவே சிறைச்சாலை மற்றும் சீர்த்திருத்த நிர்வாகத்தில் பணிபுரிந்த சுனில் குமார் சிங், கிரைம் பிராஞ்ச் ஏடிஜிபி ஷகில் அக்தர் ஆகியோர் பணி ஓய்வு பெறுகின்றனர்.

* இந்தியாவின் டிஜிட்டல் கரன்சி: நாளை வெளியீடு

e₹ என்று சொல்லப்படும் இந்தியாவின் டிஜிட்டல் கரன்சி நாளை முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. RBI வெளியிட்டுள்ள அறிக்கையில் Wholesale பரிவர்த்தனைகளுக்காக சோதனை முயற்சியில் நாளை முதல் டிஜிட்டல் ரூபாய் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் நாணயம் 9 வங்கிகள் மூலம் டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து ஒரு மாதத்தில் Retail பரிவர்த்தனைகளுக்கும் டிஜிட்டல் பணம் நடைமுறைக்கு வரும்.

* நவ. 2ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி

* சென்னை நகரின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இன்று இரவு நகரம் முழுவதும் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

🔴  4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் கன மழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு  விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள்.

* நியூசிலாந்து சுற்றுப்பயணம் சென்று 3 டி20, 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு.

பங்களாதேஷ் சுற்றுப்பயணம் சென்று 3 ஒரு நாள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages