எச்சரிக்கை.. வருத்தம்... ஊக்கம்... திமுக பொதுக்குழுவில் கர்ஜித்த மு.க.ஸ்டாலின்! - Agnipuratchi

எச்சரிக்கை.. வருத்தம்... ஊக்கம்... திமுக பொதுக்குழுவில் கர்ஜித்த மு.க.ஸ்டாலின்!

Share This

எச்சரிக்கை.. வருத்தம்... ஊக்கம்... திமுக பொதுக்குழுவில் கர்ஜித்த மு.க.ஸ்டாலின்!

சென்னையில் இன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் திமுகவின் 15வது பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக் கப்பட்ட ஒன்றிய, நகர, நகரிய , பேரூர், பகுதிக் கழகச் செயலாளர்கள், மாவட்ட, மாநகரக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இதில், திமுகவின் தலைவராக 2-வது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தொடர்ந்து மேடையில் பேசிய அவர், இந்த வாய்ப்பை வழங்கியவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகவும், என்றும் உங்களுக்கு உண்மையாக இருப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்தபோது செயலாற்றிவர்கள் தற்போதும் தொடரட்டும் என்றே முடிவெடுத்திருக்கிறோம், இரக்கத்தால் மட்டுமே சிலருக்கு பொறுப்புகள் நீட்டித்து இருக்கலாம். வாய்ப்பு பெற முடியாதவர்கள் வருந்த வேண்டாம் வாய்ப்பு அவர்களுக்கு மறுக்கப்படவில்லை, அவர்கள் மறக்கப்படவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், மழை பெய்யவில்லை என்றாலும், மழை அதிகம் பெய்தாலும் என்னைதான் குறை சொல்வார்கள். வெவ்வேறு பக்கங்களில் இருந்து வரக்கூடிய பல்முனை தாக்குதலுக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்தில் நான் இருக்கிறேன். 

வீடியோ: https://youtu.be/SJNBCg-pjiU

ஒரு பக்கம் திமுக தலைவர், ஒரு பக்கம் முதல்வர், இத்தகை சுழலில் இருக்கும் என்னை மேலும் துன்பப்படுத்தும் வகையில் உறுப்பினர்களோ, மூத்த நிர்வாகிகளோ, அமைச்சர்களோ நடந்து கொண்டால் என்ன சொல்வது?, எந்த பொறுப்பாக இருந்தாலும் அதனை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள்என்பதை பொறுத்து தான் அந்த பொறுப்பு நிலைத்து நிற்கும் என்பதை கவனமாக வைத்து கொள்ளுங்கள் என எச்சரித்துள்ளார்.

நாள்தோறும் நம்மவர்கள் யாரும் பிரச்சனையை உருவாக்கியிருக்க கூடாது என்று தான் கண்விழிக்கிறேன். இது சில நேரங்களில் என்னை தூங்க விடாமல் கூட ஆக்குகிறது. என் உடம்பை பார்த்தாலே உங்களுக்கு தெரியும் என வேதனையாக பேசினார். மேலும்,  நாம் பயன்படுத்த வேண்டிய சொற்கள் மிக மிக முக்கியமானவை, ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்; இதனால் அடுத்தவர்களிடம் பேசும் போது மிக மிக எச்சரிகையாக பேசுங்கள் என கேட்டுக்கொண்டார்.

JOIN US: https://t.me/Agnipuratchi1

திமுக பொதுக்குழு கூட்டம் - ஹைலைட்ஸ்

நேருவிற்கு நிகர் நேரு

திண்டுக்கல் வீரர்; கழகத்தின் தீரர் ஐ.பி.

கலைஞரால் அறிவுமுடி என போற்றப்பட்ட பொன்முடி

கலைஞரால் தகத்தாய சூரியன் எனப்பட்ட ஆ.ராசா

அடித்தள மக்களுக்காக அயராது உழைக்கும் அந்தியூர் செல்வராஜ்

டெல்லியில் ஒலிக்கும் கர்ஜனை மொழி கனிமொழி!

- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

அண்ணா, அப்பா இல்லாத இடத்திலேயே உங்களை வைத்துப் பார்க்கிறேன்

அத்தனையிலும் உங்கள் பின்னால் அணிவகுக்க தயாராக இருக்கிறேன்

- கனிமொழி

திமுக முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்ட கே.என்.நேரு, துணை பொதுச் செயலாளர்களாக அறிவிக்கப்பட்ட ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் முதல் வரிசையில் அமர்ந்திருந்த முரசொலி செல்வத்திடம் வாழ்த்து பெற்றனர்.

மேடையில் பேசிய ஸ்டாலின், திமுகவினரின் செயல்பாடுகளால் தூக்கம் இல்லை என்று வேதனைப்பட்டார். அப்போது மேடையில் இருந்த பொன்முடி சிரித்தவாறே இருந்தார்.

வீடியோ: https://youtu.be/SJNBCg-pjiU

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages