அக்னிப்புரட்சி இன்றைய (12.11.2022) முக்கிய செய்திகள்.
* சீர்காழி,மயிலாடுதுறை, சிதம்பரம் ஆகிய டெல்டா பகுதியில் இடியுடன் கூடிய மிககனமழை பெய்து வருகிறது
* சென்னையில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...!! - வானிலை ஆய்வு மையம் தகவல்
* சென்னை விமான நிலையத்திற்கு மிக அருகில் 220 kA மின்னல் தாக்கியது
* தொடர்மழை காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (12.11.2022) விடுமுறை
* டெல்டாவில் வெளுத்து வாங்கிய கனமழை (நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை மழையளவு):
சீர்காழியில் கடந்த 24 மணி நேரத்தில் 43.6 செ.மீ. மழை பொழிவு.
கொள்ளிடத்தில் 31.5 செ.மீ., சிதம்பரத்தில் 30.7 செ.மீ., மழை பதிவு
செம்பனார்கோயில் -24.2 செ.மீ, பொறையார் - 18.3 செ.மீ, மயிலாடுதுறை - 16 செ.மீ மழை பதிவு.
டெல்டா மாவட்டங்களில் நேற்றிரவு முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழை
சம்பா பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம் - விவசாயிகள் அச்சம்
மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
* தொடர்மழை காரணமாக மதுரை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (12.11.2022) விடுமுறை
* சென்னையில் காலை 6.45 சென்னை கோயம்பேடு - கிண்டி ஒலிம்பியா டெக் பார்க் அருகே... தேங்கி நிற்கும் மழை நீர்
* தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் திரும்ப பெறப்பட்டது:
வங்கக்கடலில் தொடர்ந்து
நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் இன்றும் அதிகனமழைக்கு வாய்ப்பு.
16ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை.
* இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
ஒரே கட்டமாக நடைபெறும் வாக்குப்பதிவு, காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது
மொத்தம் உள்ள 68 தொகுதிகளில், 412 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்
* திருவள்ளூா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருமழை பெய்து வருவதால்,மழை வெள்ள பாதிப்புகள் குறித்து உதவி எண்களில் பொதுமக்கள் புகாா் தெரிவிக்க ஏற்பாடு செய்துள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.
24 மணி நேரமும் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து 044-27666746
044-27664177
இலவச தொலைபேசி எண் -18005997626
வாட்ஸ்ஆப்- 9444317862, 9840327626
ஆகிய எண்களில் புகாா் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளாா்.
* மயிலாடுதுறை: சீர்காழி அருகே உப்பனாற்றின் கரை உடைந்ததால் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
சூரக்காடு பகுதியில் 300க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். உடமைகளை வெள்ளம் சூழ்ந்த காரணத்தால் உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு இருப்பதாக சூரக்காடு கிராம மக்கள் கூறியுள்ளனர்.
* சமீபத்திய வறட்சி நிலை 500 ஆண்டுகளில் இல்லாத வகையில் மோசமடைந்து காணப்படுகிறது என ஐரோப்பிய ஆணையமும் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. எனினும் ஐரோப்பிய நாடுகளில் வெப்பநிலை சார்ந்த அனைத்து மரணங்களையும் தடுக்க முடியும் என்றும் ஐரோப்பிய சுற்று சூழல் கழகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
இதன்படி, வெப்ப விளைவால் ஏற்படும் சுகாதார பாதிப்புகளை குறைக்க, சுகாதார செயல் திட்டங்கள், நகரங்களை பசுமை மயமாக்கல், முறையான கட்டட வடிவமைப்பு, கட்டுமானம், பணி நேரம் மற்றும் காலங்களை சற்று மாற்றியமைத்து சரிப்படுத்தி கொள்வது போன்ற பரவலான முடிவுகளை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்து உள்ளது.
ஆனால் பருவகால மாற்றம், அதிகரித்து வரும் நகரமயமாக்கல் உள்ளிட்ட காரணிகளுடன் தொடர்புடைய விசயங்களால் வெப்ப அலைகள் அடிக்கடி நிகழ்ந்து, வருகிற ஆண்டுகளில் இந்த மரண எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும் அறிக்கை எச்சரிக்கை தெரிவிக்கிறது.
* உயிர் பொழச்சா போதும்..’ - மிதக்கும் சீர்காழி; வெளியேறும் மக்கள்
காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் மிகக் கனமழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பல பகுதிகள் நீரில் மூழ்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை 5 மணியிலிருந்து இரவு 12 மணி வரை தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக கிராமம் மற்றும் நகர்ப் பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வெள்ள நீரானது சூழ்ந்தது.
தொடர்ந்து பெய்த மழையில் சீர்காழியில் 44 சென்டிமீட்டர் மழையும், கொள்ளிடத்தில் 31 சென்டிமீட்டர் மழையும், செம்பனார்கோவில் பகுதியில் 24 சென்டிமீட்டர் மழையும், பொறையாறு பகுதியில் 18 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறையில் பல இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி காணப்படுகிறது.
குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்துள்ள சூரக்காடு பகுதியில் கிட்டத்தட்ட 300 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது. இப்பகுதி உப்பனாற்றின் கரையோரம் உள்ள பகுதியாகும். இடுப்பளவு தண்ணீரில் கிடைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். சீர்காழி பகுதியில் மட்டும் 35 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மாவட்ட நிர்வாகம் சார்பில் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நிவாரண முகாம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் நிவாரண மையத்தை நோக்கிச் சென்று வருகின்றனர். இந்த வெள்ளம் காரணமாக அந்தப் பகுதியில் மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது.
TELEGRAM: t.me/Agnipuratchi1
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது
10% இட ஒதுக்கீடு விவகாரத்தில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை
ஏழை மக்களின் வறுமையை போக்க மத்திய அரசு கொண்டு வரும் எந்த திட்டத்தையும் திமுக அரசு ஆதரிக்கும் - முதல்வர்.
மாத வருமானம் ரூ.60,000 பெறுபவர்கள் ஏழைகளா? - முதலமைச்சர் கேள்வி.
இடஒதுக்கீட்டால் தகுதி, திறமை போய்விட்டது என விமர்சனம் செய்தவர்கள் 10% இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறார்கள்
இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை சேர்க்க கூடாது என ஜவஹர்லால் நேரு காலத்தில் பேசப்பட்டது.
ஏழைகளுக்கான எந்ததிட்டத்தையும் திமுக அரசு தடுக்காது - முதல்வர் மு.க. ஸ்டாலின்
திமுக அரசின் பெரும்பாலான திட்டங்கள் ஏழை மக்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது தான்.
சமூக நீதி கொள்கைக்கு தற்போது மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது
மிக மிக அடிப்படையான கொள்கையை நிலைநாட்ட அனைத்து கட்சி கூட்டம் தற்போது கூட்டப்பட்டுள்ளது
சமூகம், கல்வி ரீதியாக பின்தங்கியவர்களுக்கே இடஒதுக்கீடு என்பது சட்ட வரையறையாக உள்ளது - முதல்வர்.
அரசியலமைப்பு சட்டத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இடஒதுக்கீட்டில், பொருளாதார அளவுகோலை புகுத்த நினைக்கிறது மத்திய அரசு - முதல்வர்
* பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பாக நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.
* சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத வகையில் 44 செ.மீ. மழை பதிவாகியுள்ளது
சீர்காழியில் கனமழை கொட்டி தீர்த்ததற்கு மேகவெடிப்பு காரணமில்லை- சென்னை வானிலை ஆய்வு மையம்
* சீர்காழி அருகே கனமழையின் காரணமாக திருமுல்லைவாசல் - பழையார் செல்லக்கூடிய கடற்கரை சாலை பாதிப்பு.
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் கோவிலுக்குள் சூழ்ந்த மழைநீர்
* உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த முருகன் மற்றும் சாந்தன் வேலூர் மத்திய சிறையிலிருந்து விடுதலை;
திருச்சி இலங்கைத் தமிழர் முகாமிற்கு அழைத்து செல்லப்படுகின்றனர்!
உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த நளினி வேலூர் சிறையில் இருந்து விடுதலையானார்!
No comments:
Post a Comment