அக்னிப்புரட்சி இன்றைய (13.11.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (13.11.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (13.11.2022) முக்கிய செய்திகள்.

* சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு நகரின் ஒருசில பகுதிகளில் பரவலாக இடி, மின்னலுடன் மழை!

மெரினா, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் விட்டு விட்டு மழை பெய்தது!

* நாகை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது!

சீர்காழியில் 44 செ.மீ. மழை கொட்டித் தீர்த்த நிலையில், தற்போது மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியது!

* கனமழை காரணமாக 8 விமான சேவைகள் ரத்து:

சென்னை, விமான நிலையத்தில் கனமழை காரணமாக 8 விமான சேவைகள் ரத்து.

மதுரை, ஐதராபாத், கர்னூல் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விமான சேவைகள் ரத்து.

* அமெரிக்கா, டல்லாஸ் நகரில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியின்போது 2 விமானங்கள் மோதி கீழே விழுந்து 

இரு விமானங்களிலும் விமானிகள் உட்பட 6 பேர்  உயிரிழப்பு

* உலக அளவில் நச்சுக் கக்கும் கரியமில வாயு வெளிவந்து கொண்டு இருக்கிறது என்பது பாதுகாப்பற்ற விஷயம்

ஐ.நா.வின் 27 ஆவது பருவநிலை மாநாடு எகிப்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 2019 -இல் உலக அளவில் 4900 டன்  கரியமில வாயு வெளி வந்துள்ளது என்ற ஆபத்தான நிலை.  இவ்வாறு தொடர்ந்து வெளிவந்தால் பூமியின் வெப்பநிலை அதிகமாகிவிடும். சீனாவில் 31 சதவீதம், அமெரிக்காவில் 14 சதவீதம், ஐரோப்பாவில் 8 சதவீதம், இந்தியா 7 சதவீதம் என்ற அளவில் இந்த வாயு வெளியேறியுள்ளது.

நிலக்கரி, கச்சா எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது இந்த ஆபத்தான எரிவாயு அதிகமாக வெளியேறுகின்றது. இத்தோடு மீத்தேன் வெளியேற்றத்தைப் பற்றியும் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா போன்ற நாடுகளின் விண்வெளி சோதனையால் மீத்தேன் வாயு வெளியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

TELEGRAM: t.me/Agnipuratchi1

* தமிழ்நாடு குடிநீர் வாரியம், பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளுடன் ஒருங்கிணைந்து வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக செயல்படுகிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கனமழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி, மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட இடங்களில் நாளை பார்வையிடுகிறேன்-   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* சென்னை கிழக்கு தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதை மழைநீரால் சூழ்ந்துள்ளதால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

போக்குவரத்து துண்டிப்பால் 1 கி.மீ தூரம் சுற்றிச் செல்ல வேண்டியதால் வாகன ஓட்டிகள் அவதிபட்டு வருகின்றனர்.

3 மோட்டார்கள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

* திண்டுக்கல்: பழனி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் சண்முகா நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அணைகள் நிரம்பியதால் சண்முகா நதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. சண்முகா ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு பொதுப்பணித்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

* சிறை வாசத்துக்குப் பிறகு விடுவிக்கப்பட்டவர்களை சிறப்பு முகாமில் அடைக்காது மாற்றிடத்தில் தங்க அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி வரும் நிலையில், முதல் நாளே சிறப்பு முகாமில் வைத்து வதைப்பது கடும் கண்டனத்திற்குரியது... - சீமான்

* இங்கிலாந்து அணி வெற்றி:

2022 டி20 உலகக் கோப்பையை வென்று சாம்பியன் ஆனது இங்கிலாந்து அணி.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி சாம்பியன்.

* கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை(14-11-2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

* மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்னையில் இருந்து சீர்காழி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

புதுச்சேரியில் இன்று இரவு தங்கும் முதலமைச்சர், நாளை கடலூர், சீர்காழி, சிதம்பரம் ஆகிய இடங்களில் ஆய்வு செய்கிறார்

* கனமழை காரணமாக குன்றத்தூர் தாலுக்கா பகுதிகளில் உள்ள (மாங்காடு உட்பட) பள்ளிகளுக்கு மட்டும் நாளை (14/11/2022) விடுமுறை அறிவிப்பு

* அரசு பேருந்து தீப்பிடித்து எaரிந்தது

சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி செல்ல இருந்த அரசு பேருந்து, பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட தயாராக இருந்த நிலையில் திடீரென பேருந்தில் மின்கசிவு காரணமாக டீசல் டேங்க் அருகே தீப்பிடித்து, மளமளவென எரியத் தொடங்கியது.

இதையடுத்து பஸ்ஸில் அமர்ந்திருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர். பின்னர் நான்கு புறமும் தீப்பற்றி முழுமையாக எரியத் தொடங்கியது. இதனையடுத்து சிதம்பரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட நிலையில் எந்த ஒரு பயணிக்கும் ஆபத்து இல்லை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages