அக்னிப்புரட்சி இன்றைய (15.11.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (15.11.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (15.11.2022) முக்கிய செய்திகள்.

* நடிகர் கிருஷ்ணா காலமானார்
நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையும், தெலுங்கு சினிமாவின் சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படுபவருமானநடிகர் கிருஷ்ணா காலமானார்.

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்த அவர் அதிகாலையில் உயிரிழந்தார்.

சுமார் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தயாரிப்பாளர், இயக்குநர் என பல்வேறு தளங்களில் கடந்த 50 வருடங்களாகவே தெலுங்கு சினிமாவில் தடம் பதித்தவர்.

* தவறான சிகிச்சை காரணமாக கால்களை இழந்த கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் காவல்துறையினர் குவிப்பு

* கோவை கார் வெடிப்பை தொடர்ந்து சென்னையின் பல்வேறு இடங்களில் காவல் துறை அதிரடி சோதனை

சென்னை மண்ணடி, கொடுங்கையூர், ஏழுகிணறு, முத்தியால் பேட்டை பகுதியில் சிலரது வீடுகளில் சோதனை

பயங்கரவாத அமைப்பான ஐஎஸ் அமைப்புடன் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சோதனை

சென்னையில் சிகிச்சையின் போது கால் அகற்றப்பட்ட கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்தார்.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி கால்பந்து வீராங்கனை கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதன் காரணமாக ஒரு கால் அகற்றப்பட்டது.

நவ. 08 அன்று உள் நோயாளியாக ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருடைய உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு சிறுநீரகம், ஈரல் மற்றும் இதயம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாமல் இன்று உயிரிழப்பு.

* இந்தோனேசியாவின் பாலி நகரில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு தொடங்கியது நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்தார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் அணு ஆயுதங்களை பயன்படுத்த இருவரும் எதிர்ப்பு

இந்தோனேசியாவின் பாலியில் ஜி20 உச்சிமாநாடு இன்று துவங்க உள்ள நிலையில் இருவரும் பேச்சுவார்த்தை

* கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்த 2 மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தவறான சிகிச்சையால் உயிரிழந்த வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.

பிரியாவின் சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

* கொரோனா பேரிடருக்கு பின் புதிய உலக ஒழுங்கை உருவாக்கும் பொறுப்பு நம் தோள்களில் உள்ளது

இந்தோனேசியாவின் ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

* இரு நாடுகள் இடையே அதிக விமானங்களை இயக்க, இந்தியாவுடன் ஒப்பந்தம்- கனடா பிரதமர் தகவல்

சரக்கு போக்குவரத்து மற்றும் மக்களின் பயணத்தை எளிதாக மாற்ற நடவடிக்கை. இரு நாடுகள் இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க இது வழிவகுக்கும்.

* நாட்டில் நடைபெறும் கட்டாய மதமாற்றம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு கவலை தெரிவித்துள்ளது. கட்டாய மதமாற்றம் தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது.

சூனியம், மூடநம்பிக்கை மற்றும் வலுக்கட்டாய மத மாற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வழக்கறிஞரும், பாஜக தலைவருமான அஸ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கட்டாய மதமாற்றம் மிகவும் தீவிரமான பிரச்சினை என்றும், இது நாட்டின் பாதுகாப்பு மற்றும் மத சுதந்திரத்தை பாதிக்கிறது என்றும் கூறியது.

கட்டாய மதமாற்றம் நிறுத்தப்படாவிட்டால் மிகவும் கடினமான சூழ்நிலை உருவாகும் என்று எச்சரித்துள்ள நீதிபதிகள், மத சுதந்திரம் இருக்கலாம், ஆனால் கட்டாய மதமாற்ற சுதந்திரம் இல்லை. இது நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும்.இது தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

மேலும், கட்டாய மதமாற்ற விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் நவம்பர் 22ஆம் தேதிக்குள் இந்த விவகாரத்தில் எதிர் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய கோர்ட்டு கூறியுள்ளது.

பல மாநிலங்கள் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக சட்டங்களை இயற்றியுள்ளன.இவற்றில் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், அரியானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் இதற்கான சட்டங்களை இயற்றியுள்ளன. இவை அனைத்தும் பாஜக ஆளும் மாநிலங்கள்.இந்த வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 28-ம் தேதி நடைபெறும்.

TELEGRAM: t.me/Agnipuratchi1

* 5ஜி தொழில்நுட்பத்தில் இணைந்து செயல்பட இந்தியா-பின்லாந்து மந்திரிகள் பேச்சுவார்த்தை

தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் கல்வியில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு. சர்வதேச நலன் சார்ந்த விஷயங்களில் இணைந்து பணியாற்றவும் ஒப்புதல்.

* அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கணை பிரியா மரணத்திற்கு காரணமாக இந்த திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

இழைக்கப்பட்ட அநீதிக்கு பொறுப்பேற்று பிரியா குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்- எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் ட்வீட்.

* இந்திய அணிக்கு அனில் கும்ப்ளே ஆலோசனை!

எதிர்காலத்தில் இந்திய அணி சிறப்பாக செயல்பட டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20க்கு என தனித் தனி அணிகள் தேவை; அணியில் அதிகமான ஆல் ரவுண்டர்களை இடம் பெறச் செய்ய வேண்டும்" - கும்ப்ளே

* கேரள அரசு நியமித்த மீன்வள பல்கலை துணை வேந்தர் நியமனம் செல்லாது என்றும் , புதிய துணை வேந்தரை ஆளுநரே நியமிக்க வேண்டும் என்றும் அம்மாநில உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல்கலை மானிய விதி முறைகளை மீறி இந்த நியமனங்கள் நடைபெற்றுள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

* அண்ணன், அம்மா, அப்பா... ஒரே ஆண்டில் மூன்று பேரை இழந்த மகேஷ்பாபு : ரசிகர்கள் ஆறுதல் ...

கடந்த ஜன., 8ம் தேதி மகேஷ்பாபுவின் சகோதரரும், நடிகரும், தயாரிப்பாளருமான ரமேஷ்பாபு (56) உடல்நலபிரச்னையால் காலமானார்.

கடந்த செப்., 28ம் தேதி, மகேஷ்பாபுவின் தாயார் இந்திரா தேவி(70) வயது மூப்பு காரணமாக காலமானார்.

இன்று நவ., 15ம் தேதி மகேஷ்பாபுவின் தந்தையான கிருஷ்ணா(79) உடல்நல பிரச்னையால் காலமானார்.

இப்படி ஒரே ஆண்டில் மகேஷ்பாபு வீட்டில் மூன்று சோக நிகழ்வுகள் நடந்துள்ளன. இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

StaystrongAnna என்ற ஹேஷ்டாக்கில் ரசிகர்கள் பலரும் மகேஷ்பாபுவிற்கு ஆறுதல் தெரிவித்து டிரெண்ட் செய்தனர்.

* கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளியில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்கலாம் - பள்ளி நிர்வாகத்திற்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஒரு மாதத்திற்கு பின்னர் மற்ற வகுப்புகளையும் தொடங்குவது குறித்து முடிவு - நீதிபதி.

மாணவி ஸ்ரீமதி மரணத்தை அடுத்து, கடந்த ஜூலை 17ம் தேதி பள்ளி சூறையாடப்பட்டு மூடப்பட்ட நிலையில் மீண்டும் அனுமதி.

பள்ளிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு உத்தரவு.

கூடுதல் பாதுகாப்பு தேவைப்பட்டால் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் - நீதிமன்றம்.

* பயிர் காப்பீடு - காலவரம்பை நீட்டிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை.

டெல்டா மாவட்ட விவசாயிகளின் பயிர் காப்பீட்டுக்கான காலவரம்பினை நீட்டிக்க வேண்டும் மத்திய வேளாண்மை துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

* அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகளுக்கான நவம்பர் / டிசம்பர் செமஸ்டர் தேர்வு டிசம்பர் 8ம் தேதி முதல் தொடங்குகிறது.

3வது, 5வது, 7வது செமஸ்டர் தேர்வுகளுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

* மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நாளை பார்வையிடுகிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.

மழையால் பாதிக்கப்பட்ட கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை பகுதிகளில் நேரில் ஆய்வு.

* கோவில் நிலங்களை மீட்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரிக்கை.

தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான திருச்சி உஜ்ஜீவநாதர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டது குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்- உரிய அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

கோவில் நிலங்களை மீட்க ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும் - நீதிபதிகள் எச்சரிக்கை

* மயிலாடுதுறை மாவத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

நாளை நடைபெறும் கடை முக தீர்த்த வாரியை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 19ம் தேதி பணிநாளாக அறிவிப்பு - ஆட்சியர்

* கரூர் அருகே கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

விஷ வாயு தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழப்பு

* தமிழ்நாடு ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி டிசம்பர் 29ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் -இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிவிப்பு.

* அடுத்த ஆண்டு நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபனில் விளையாட நோவக் ஜோகோவிச்சிற்கு விசா வழங்கியது ஆஸ்திரேலிய அரசு

கொரோனா தடுப்பூசி செலுத்தாததால் ஜோகோவிச்சிற்கு கடந்த தொடரில் பங்கேற்க விசா மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* வீட்டுக் கடன் வட்டி விகிதங்களைக் குறைத்தது பரோடா வங்கி.

இந்தியாவின் முன்னணி பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பரோடா வங்கி (பிஓபி), தாங்கள் அளிக்கும் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை 0.25 சதவீதம் குறைத்துள்ளது.

மேலும், வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை அந்த வங்கி 1 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 8.25 சதவீதம் ஆக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரிவில் முன்னிலை வகிக்கும் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), ஹெச்டிஎஃப்சி-யைவிட இந்த வட்டி விகிதம் குறைவாகும்.

வீட்டுக் கடன்களுக்கு அந்த வங்கிகள் தற்போது 8.40 சதவீதம் வட்டி வசூலித்து வருகின்றன. இது தவிர, வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை பரோடா வங்கி 1 சதவீதம் வரை உயா்த்தியுள்ளது.

அதன்படி, 46 முதல் 180 நாள்கள் வரையிலான வைப்பு நிதிகளுக்கு 4 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் 4.5 சதவீதமாக உயா்கிறது.

ஒராண்டுக்கான வைப்பு நிதிகளுக்கு 5.5 சதவீதத்திலிருந்து 6.1 சதவீதமாகவும் 3 ஆண்டுகள் வரையிலான வைப்பு நிதிகளுக்கு 6.25 சதவீதமாகவும் வட்டி விகிதம் உயா்த்தப்படுகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மாண்புமிகு இந்திய குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜக்தீப் தன்கர் அவர்களை தில்லியில் நேற்று மரியாதை நிமித்தமாக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP, சந்தித்து பேசினர். அப்போது அவரது துணைவியார் சுதேஷ் தன்கர் உடன் இருந்தார்.

* அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.

அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள்.

பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்துக்கொண்டு அவர்கள் ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.

அவ்வகையில் 2022 -ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

www.tn.gov.in/ta/forms/Deptname/1 என்ற இணையதளத்திலிருந்து இவ்விருதுக்கான விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

ஆதிதிராவிடர் நல இயக்குநர்  அலுவலகம் சென்னை-5 அல்லது சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த அம்பத்தி ராயுடு மற்றும் டிவெயின் பிராவோ உள்ளிட்ட 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சி.எஸ்.கே.வின் கேப்டனாக தோனி தொடருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகேந்திரசிங் தோனி, ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, டெவோன் கான்வே, ருதுராஜ் உள்ளிட்டோர் சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர். கெய்க்வாட், ஷிவம் துபே, அம்பதி ராயுடு, மகேஷ், பிரசாந்த் சோலங்கி ஆகியோரையும் சிஎஸ்கே அணி தக்கவைத்துள்ளது.

* உலக மக்கள் தொகை 800 கோடியை எட்டியது

சீனா - 142.6 கோடி
இந்தியா- 141.1 கோடி
அமெரிக்கா - 33.7 கோடி
பாகிஸ்தான் - 23.4 கோடி

பிரேசில் - 21.5 கோடி
இந்தோனேஷியா- 27.5 கோடி
நைஜீரியா - 21.6 கோடி

சீனா, இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளில் உலகின் பாதி மக்கள் வாழ்கின்றனர்:

எஞ்சிய நாடுகளின் மக்கள் தொகை- 388.5 கோடி

TELEGRAM: t.me/Agnipuratchi1

* சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இடையே ஏற்ப்பட்ட கடும் மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages