அக்னிப்புரட்சி இன்றைய (18.11.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (18.11.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (18.11.2022) முக்கிய செய்திகள்.

* காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் நேற்றிரவு மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் படுகொலை

பெட்ரோல் குண்டு வீசியும், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியும் படுகொலை அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு போலீசார் குவிப்பு

* தமிழ்நாட்டில் இருந்து 200 நபர்களை ராமேஸ்வரம் கோயிலில் இருந்து காசி விஸ்வநாத சாமி கோயில் வரை ஆன்மிகப் பயணமாக அழைத்து செல்ல இந்து சமய அறநிலையத்துறை முடிவு.

20 மண்டலங்களில் இருந்து தலா 10 நபர்களை தேர்ந்தெடுத்து விபரங்களை அனுப்புமாறு ஆணையர் குமரகுருபரன் உத்தரவு.

* 254 உதவி பேராசிரியர்கள் நியமனம் ரத்து

பச்சையப்பன் கல்வி அறக்கட்டளையின் கீழ் நியமிக்கப்பட்ட 254 உதவி பேராசிரியர்களின் நியமனம் ரத்து

152 உதவி பேராசிரியர்கள் உரிய தகுதி பெறவில்லை என்ற வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

2013 - 2015ம் ஆண்டுகளில் நியமனத்துக்கு பின்பற்றிய நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளது - உயர்நீதிமன்றம்

* பிரியா மருத்துவ அறிக்கை வெளியீடு:
கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்தில் மருத்துவ அறிக்கை வெளியீடு

மருத்துவர்களின் அலட்சியத்தால் மாணவி மரணம் - விசாரணை அறிக்கையில் தகவல்

மருத்துவர்கள் பால்ராம் சங்கர், சோமசுந்தரம் மீது குற்றச்சாட்டு
விரைவில் 2 மருத்துவர்கள் கைது செய்யப்படுவார்கள் என தகவல்

* இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

விண்வெளித்துறை தந்தை விக்ரம் சாராபாய் பெயர் சூட்டப்பட்ட ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து தனியார் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியா மரண வழக்கு:

மருத்துவர்கள் பால் ராம்சங்கர், சோமசுந்தர் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு.
பல அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம்.

மருத்துவக் குழு விசாரணைக்கு ஆஜராக வேண்டி உள்ளதால் முன் ஜாமின் வழங்க வேண்டும் - மனுவில் கோரிக்கை. சாட்சிகளை கலைக்கப் போவதில்லை என மனுவில் உத்தரவாதம்.

* தீவிரவாதத்தை அடியோடு வேரறுக்கும் வர ஓய மாட்டோம்.

தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை
தனிமைப்படுத்த வேண்டும்.

தீவிரவாதத்தை எதிர்த்து இந்தியா எப்போதும் வீரத்துடன் போரிட்டு வருகிறது- டெல்லியில் பயங்கரவாத நிதியுதவி தடுப்பு மாநாட்டில் பிரதமர் மோடி உரை

* 1920ல் பல்வேறு தொழில் அமைப்புகள் உருவானது- முதலமைச்சர் ஸ்டாலின்.

தொழிலாளர்களுடன் சுமுகமான உறவுவை ஏற்படுத்த வேலை அளிப்போர் கூட்டமைப்பு உருவானது.

தொழில் வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறது வேலை அளிப்போர் கூட்டமைப்பு.

திமுக அரசு பொறுப்பேற்ற 15 மாதங்களில் தமிழகத்தில் ஏராளமான தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன.

தென்னிந்திய வேலை அளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு விழாவில் முதல்வர் சிறப்புரை.

* கோடிகளை அள்ளிக் கொடுக்கும் கால்பந்து உலகக்கோப்பை

கத்தாரில் இந்தாண்டு நடைபெறும் கால்பந்து உலகக்கோப்பையில் மொத்த பரிசுத்தொகை ₹3,587 கோடி. இதில் கோப்பை வெல்லும் அணிக்கு மட்டும் ₹320 கோடி கிடைக்கும்.

உலகில் அதிக தொகையை பரிசாக கொடுக்கும் போட்டி இதுதான்.

இதனை அடுத்து, யுஎஸ் ஓபன் டென்னிஸில் ₹498 கோடி

விம்பிள்டனில் ₹399 கோடி

பிரெஞ்சு ஓபனில் ₹380 கோடி

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ₹45 கோடி மொத்த பரிசுத்தொகை ஆகும்.

TELEGRAM: t.me/Agnipuratchi1

* கொரோனா கட்டுப்பாட்டில் சீனா

உலகின் பல்வேறு நாடுகளை கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்துவிட்டாலும், சீனாவில் பாதிப்பு இன்னமும் குறையவில்லை.

இதனால் நாட்டின் பல நகரங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் ஜீரோ கோவிட் பாலிசி கட்டுப்பாடு அமலில் உள்ள நிலையில், சமீபத்தில் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தை உயிரிழந்துள்ளது. இதற்கு, உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததே காரணம் என தெரியவந்துள்ளது.

மகளிருக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

தமிழக அரசு, கல்லூரிக் கல்வி இயக்ககம் இணைந்து மகளிருக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ் இலவச பயிற்சி வகுப்புகளை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றன.

இந்தாண்டுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில் ராணி மேரி மற்றும் ஸ்ரீ மீனாட்சி கல்லூரிகளின் இணையதளத்தில் விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி www.queenmaryscollege.edu.in, www.smgacw.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நவ.,20-க்குள் அனுப்பவும்.

* கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது.

இயல்-இசை-நாடக மன்றம் முறையாக செயல்படுவதில்லை. இதே நிலை நீடித்தால் தமிழ்நாடு இயல்-இசை-நாடக மன்றத்தை கலைக்க நேரிடும்- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வேதனை.

விருதுகளுக்கான மரியாதையே இல்லாமல் போய்விட்டது.
2019 - 2020ம் ஆண்டில் தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கிய கலைமாமணி விருதுகளை திரும்ப பெற கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வேதனை.

2021ம் ஆண்டு வழங்கப்பட்ட கலைமாமணி விருது குறித்தும், தற்போது வழங்கப்பட உள்ள கலைமாமணி விருதுகள் குறித்தும் தமிழ்நாடு சுற்றுலா & கலைத்துறை செயலாளர், தமிழ்நாடு இயல் -இசை-நாடக மன்ற தலைவர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

* சபரிமலையில் இளம்பெண்களுக்கு அனுமதி இல்லை.

பெண்களுக்கு அனுமதி என்ற உத்தரவை வாபஸ் பெற்றது கேரள அரசு. சபரிமலையில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

சபரிமலையில் மண்டல பூஜை காலம் கார்த்திகை 1ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது.

* முதல் டி20 கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டது.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

போட்டி நடைபெற இருந்த, நியூசிலாந்தின் வெல்லிங்டன் மைதானத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், டாஸ் கூட போடாமல் கைவிடப்பட்டது.

* அதிமுக பொதுக்குழு விரைவில் நடைபெறும்.

நிர்வாகிகள் நியமனத்திற்கு பிறகு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும்.

பிரதமர், மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தபோது அரசியல் குறித்து பேசவில்லை - சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி.

உறுதியாக அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். ஆதரவு நிர்வாகிகளை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளேன்.

வாய்ப்பு கிடைத்தால் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்திப்பேன்- முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

* ஆதார்  எண்ணை இணைப்பதால் 100 யூனிட் மானியம் மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று வரும் தகவல் வதந்தி.

மின் நுகர்வோர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் போது ஒரு நுகர்வோர் 3 முதல் 5 வீடுகள் வைத்திருந்தால் கூட ஆதார் எண்ணை இணைக்கும் போது 100 யூனிட் மானியம் மின்சாரம் தொடரும்.

ஆதார எண்ணை இணைப்பதால் 100 யூனிட் மானியம் மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று வரும் தகவல் வதந்தி- அமைச்சர் செந்தில் பாலாஜி.

* அதிமுக ஒரு செயல்படாத கட்சியாக உள்ளது என்று டி.டி.வி. தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,

எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் தொண்டர் இல்லை. அதிமுக தலையில்லாத முண்டம் போல உள்ளது.

அதிமுக ஒரு செயல்படாத கட்சியாக உள்ளது. பழனிசாமி விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். அதிமுக செயல்படாத நிலையில் உள்ளதால்தான் மெகா கூட்டணி என்று சொல்கிறார்கள்.

நாளையே தேர்தல் வந்தாலும் வேட்பாளர்களுக்கு படிவங்கள் கூட வழங்க முடியாத நிலையில் அதிமுக உள்ளது. எடப்பாடி பழனிசாமியுடன் சேர்த்து செயல்பட அரைக்கால் சதவீதம் கூட வாய்ப்பில்லை.

* இதுவரை அ.தி.மு.க., தான் எதிரி என இருந்தது. ஆனால் இப்போது பா.ஜ., ராட்சசன் போல வளர்ந்து வருகிறது. பண பலம், அதிகார பலத்துடன் பா.ஜ., பிசாசு மாதிரி உருவெடுத்து சம பலத்துடன் போராடுவார்கள். இதனால் அவர்களையும் சேர்த்து எதிர்க்க வேண்டிய நிலை உள்ளது"
- அமைச்சர் துரைமுருகன்

* கொள்கை மற்றும் வரலாற்று ரீதியாக கூட்டுறவுத் துறை சிறப்பாக உள்ளது. ஆனால், தினமும் கடத்தல் அதிகரிப்பதாகவும், ரெய்டுகள் நடத்தப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன. நிதியமைச்சராக கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகளில் எனக்கு திருப்தி இல்லை" - அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

* ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் - இந்தியாவுக்கு 2 வெள்ளி!

உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றது!

ஆடவர் பிரிவில் மனன் சந்திராவும், பெண்கள் பிரிவில் வித்யாவும் பதக்கங்கள் வென்று அசத்தல்!

* TNPSC: கால்நடை மருத்துவர்களுக்கான 731 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு…..

* கல்லூரி பேராசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி பேராசிரியர்களும் ஓவர் கோட் அணிய வேண்டும்

அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கும் உயர்கல்வித்துறை கடிதம்

பேராசிரியர்களுக்கு இடையே வேறுபாடுகள் ஏற்படாதவாறு சீருடை போன்ற ஆடைகள் அணிய வேண்டும்

தங்கள் உடலமைப்பை வெளிக்காட்டாதவாறு மேலங்கியை அணிய வேண்டும் - உயர்கல்வித்துறை

* சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் நாளை நடைபெற இருந்த நிலையில் வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

குரூப் 1 தேர்வு நடைபெறுவதால் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் வேறு  தேதிக்கு மாற்றப்படுவதாக பல்கலை. துணைவேந்தர் கௌரி தெரிவித்துள்ளார்.

🔴 நவம்பர் 15ஆம் தேதிக்குள் சம்பா நெற்பயிரை காப்பீடு செய்திடாத விடுபட்ட விவசாயிகள் நவம்பர் 21 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்யும் வகையில், கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால், இக்காலத்தில் பயிர் காப்பீடு செய்ய வேளாண்மை - உழவர் நலத் துறை வேண்டுகோள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், வடகிழக்குப் பருவமழையினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட போது, விவசாயிகள் எழுப்பிய கோரிக்கையின் அடிப்படையில், பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நவம்பர் 30 வரை நீட்டிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள்.

இயற்கை இடர்பாடுகள் ஏற்படக்கூடிய காலங்களில் காப்பீடு செய்திட வழிவகை இல்லாத போதும், விடுபட்ட விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, ஒன்றிய அரசு சம்பா/ தாளடி/ பிசானம் நெற்பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நவம்பர் 21 வரை நீட்டிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, சனி (19.11.2022) மற்றும் ஞாயிற்று கிழமையில் (20.11.2022) பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வங்கிகள் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, திருவள்ளூர், அரியலூர், காஞ்சிபுரம்,

TELEGRAM: t.me/Agnipuratchi1

சிவகங்கை, திருப்பத்தூர், கரூர், தருமபுரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், மதுரை, சேலம், திருப்பூர், செங்கல்பட்டு. இராமநாதபுரம், தேனி. திருச்சி. வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, ஈரோடு. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் ஆகிய 27 மாவட்டங்களில் கடந்த நவம்பர் 15 ஆம் தேதிக்குள் சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் எதிர்வரும் காப்பீட்டுத்திட்டத்தில் உரிய பயனடையுமாறு வேளாண்மை கொள்கிறது. நவம்பர் 21ஆம் ஆவணங்களுடன் தேதிக்குள் பயிர்க் காப்பீடு பதிவு செய்து பயனடையுமாறு வேளாண்மை - உழவர் நலத் துறை செய்து கேட்டுக் கொள்கிறது.

* மாமல்லபுரம் - நாளை கட்டணமின்றி பார்வையிடலாம்

மாமல்லபுரம் புராதன சின்னங்களை நாளை ஒரு நாள் கட்டணமின்றி கண்டுகளிக்கலாம் உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு தொல்லியல் துறை அறிவிப்பு

* இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு முற்றிலுமாக கலைப்பு.

டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் செயல்பாடு திருப்தி அளிக்காததால் தேர்வு குழுவின் தலைவர் சேட்டன் சர்மா உட்பட ஒட்டுமொத்த தேர்வு குழுவையும் பிசிசிஐ கலைத்துள்ளதாக தகவல்.

* திருமலை நாயக்கர் மஹால் - கட்டணமின்றி பார்வையிடலாம்

மதுரை, திருமலை நாயக்கர் மஹாலை ஒரு வார காலம் கட்டணமின்றி பார்வையிடலாம்

நாளை முதல் நவ.25ம் தேதி வரை கட்டணமில்லாமல் பார்வையிட அனுமதி  உலக மரபு தினத்தை முன்னிட்டு தொல்லியல் துறை அறிவிப்பு.

* துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பதவிக்கு நாளை குரூப் 1 முதல்நிலை தேர்வு: தேர்வு மையங்களுக்கு செல்போன், வாட்ச், மோதிரம் அணிந்து செல்ல தடை..

சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) ஒவ்வொரு ஆண்டும் குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் உயர் பதவி தேர்வுகளான குரூப் 1 பதவியில் காலியாக உள்ள துணை கலெக்டர் 18 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர்(டிஎஸ்பி)-26, வணிகவரித்துறை உதவி ஆணையர்-25, கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 13, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்- 7, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி 3 பதவிகள் என 92 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூலை 21ம் தேதி வெளியிட்டது.

அறிவிப்பு வெளியானது முதல் தேர்வுக்கு டிஎன்பிஎஸ்சியின் www.tnpsc.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏராளமான பட்டதாரிகள் போட்டி போட்டு கொண்டு தேர்வுக்கு விண்ணப்பித்தனர். மொத்தத்தில் குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்தனர். முதல்நிலை தேர்வு அக்டோபர் 30ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களுக்காக தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்ட முதல்நிலை தேர்வு நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மோதிரம் அணிந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெறும் அனைத்து இடங்களிலும் தேர்வு எழுதுபவர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்து வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

TELEGRAM: t.me/Agnipuratchi1

* ஜகார்தா: இந்தோனோஷியாவின் மேற்கு பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு மாகாணத்தில் இன்று (நவ.18) இரவு நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.9 ஆக பதிவானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டடங்கள் குலுங்கின. பாதிப்புகள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

* உத்தரகண்டில் நடந்த மிகப்பெரிய விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்

15க்கும் மேற்பட்டோர் சென்ற மினி பஸ்  பல்லா ஜாகோல் கிராமத்தில் சாலையில் இருந்து 500-700 மீட்டர் தொலைவில் உள்ள ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது. இதில் 2 பெண்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். உடல்களை மீட்கும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages