அக்னிப்புரட்சி இன்றைய (20.11.2022) முக்கிய செய்திகள்.
* அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் ட்விட்டர் கணக்கு மீண்டது.
டிரம்ப் டிவிட்டர் கணக்கின் 22 மாத தடையை நீக்கினார் எலான் மஸ்க்.
வன்முறையை தூண்டும் கருத்துக்களை பதிவிட்டதாக டிரம்பின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது.
* வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது- இந்திய வானிலை ஆய்வு மையம்.
* மலேசியாவில் தொங்கு பாராளுமன்றம்
222 தொகுதிகளைக்கொண்ட மலேசிய பாராளுமன்றத்திற்கு நடந்த தேர்தலில் எக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
எதிர்க்கட்சி தலைவரான அன்வரின் கூட்டணிக்கு 82, முன்னாள் பிரதமர் யாசின் கூட்டணிக்கு 73 இடங்களும் மட்டுமே இதுவரை உறுதியாகி உள்ளன. தற்போதைய பிரதமரின் கூட்டணி 30 இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளது.
* பெய்ஜிங்கில் மீண்டும் கட்டுப்பாடுகள்
கோவிட் பெருந்தொற்று சீனாவின் உகான் நகரத்தில் பரவத்தொடங்கி மூன்று வருடங்கள் முடிந்துவிட்டது. ஆனால், சீனாவில் இன்னமும் கொரொனாவின் தாக்கம் சிறியதும் பெரியதுமாக பயமுறுத்துகிறது.
பெய்ஜிங்கில் மட்டும் 24 மணிநேர இடைவெளியில் 515 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. எனவே, மக்கள் அவசர அவசிய காரணமின்றி மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
* தமிழக - கர்நாடகா எல்லையில் பாதுகாப்பு தீவிரம்!
கர்நாடக மாநிலம், மங்களூரில் ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் இருவர் பலத்த காயம்.
சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை. சென்னையிலும் பாதுகாப்பு அதிகரிப்பு.
* கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி அமைச்சர் ஜாலி!
பண மோசடி வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு சிறைக்குள் இருந்தபடியே மசாஜ் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
* கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் வெடித்தது விபத்து அல்ல - கர்நாடக காவல்துறை இயக்குநர் அதிர்ச்சி தகவல்.
பெரிய பாதிப்பை ஏற்படுத்த தீவிரவாதிகள் தயாரானதற்கான அடையாளம் போல் தெரிகிறது.
மத்திய அரசின் விசாரணை ஆணையங்களுடன் கர்நாடக போலீசார் தீவிர விசாரணை - கர்நாடக டிஜிபி.
* சென்னை கோபாலபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் 54 ஜோடிகளுக்கு திருமணம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்து திருமணத்தை நடத்தி வைத்தார்
எனக்கு, என் தங்கைக்கு பெயர் சூட்டியது மட்டுமல்ல, உங்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் என பெயர் சூட்டி கண்ணியத்தை கொடுத்தவர் கலைஞர்தான். அந்த வகையில் நமக்கு பெயர் சூட்டிய தந்தை கலைஞர்தான், அதனால் இது குடும்ப விழா
இலவச பஸ் பாஸ், உலக வங்கி நிதியுதவியுடன் கருவிகள், உதவித்தொகை, ஆவின் பாலகங்கள் அமைக்க முன்னுரிமை என பல திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு கொண்டு வரப்பட்டன
இவையெல்லாம் சலுகைகள் அல்ல, உங்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள்
- முதலமைச்சர் ஸ்டாலின்
* ‘ஸ்மாா்ட் போன்’ சந்தை 3 ஆண்டுகள் காணாத சரிவு.
இந்தியாவின் அறிதிறன்பேசிகளுக்கான (ஸ்மாா்ட் போன்) சந்தை ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில், கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘இன்டா்நேஷனல் டேட்டா காா்ப்பரேஷன்’ தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் இந்தியாவின் அறிதிறன்பேசிகளுக்கான சந்தை 10 சதவீதம் குறைந்து 4.3 கோடியாகியுள்ளது. இது, கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும்.
மதிப்பீட்டு காலாண்டில் அறிதிறன்பேசி சந்தையில் 5ஜி அறிதிறன்பேசிகளின் பங்கு 36 சதவீதத்தை எட்டியுள்ளது. இந்த மாதங்களில் 1.6 கோடி 5ஜி அறிதிறன்பேசிகளின் வா்த்தகம் நடந்துள்ளது.
முந்தைய காலாண்டில் சராசரியாக ரூ.30,600-க்கு விற்பனையான இந்த வகை கைப்பேசிகள், செப்டம்பா் காலாண்டில் சராசரியாக ரூ.32,000-க்கு விற்பனையாகின.
அறிதிறன்பேசிகளுக்கான வாடிக்கையாளா் தேவையில் பணவீக்கம் ஏற்படுத்தும் தாக்கம், சாதாரண கைப்பேசிகளிலிருந்து அறிதிறன் பேசிகளுக்கு மாறுவதில் வாடிக்கையாளா் காட்டும் வேகம் குறைவது, கைப்பேசிகளின் விலை உயா்வது போன்ற காரணங்களால் 2023-ஆம் ஆண்டில் அறிதிறன்பேசிகளுக்கான சந்தை பாதிக்கப்படும்.
எனினும், 4ஜி கைப்பேசிகளில் இருந்து 5ஜி தொழில்நுட்ப கைப்பேசிகளுக்கு ஏராளமான வாடிக்கையாளா்கள் மாறுவது அந்தச் சந்தைக்கு சாதமாக அமையும் என்று அந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
TELEGRAM: t.me/Agnipuratchi1
* உற்சாகம் கரை புரளும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி
கத்தாரில் இன்று தொடங்குகிறது.
சா்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (ஃபிஃபா) 22-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, கத்தாரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.
உலகின் 32 நாடுகள் கலந்துகொள்ள, அடுத்த 29 நாள்களுக்கு பரபரப்பும், விறுவிறுப்புமாக நடைபெற இருக்கும் இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், கத்தாா் - ஈகுவடாா் அணிகள் மோதுகின்றன. போட்டியையொட்டி கோலாகல கலைநிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கின்றன. இந்தப் போட்டியை கத்தாா் நடத்துகிறது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் முதல் அரேபிய நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ள கத்தாா், இந்தப் போட்டியை நடத்துவதற்காகக் கடந்த சில ஆண்டுகளாகவே தயாராகி வந்தது குறிப்பிடத்தக்கது.
TELEGRAM: t.me/Agnipuratchi1
* காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியல் வெளியீடு: பிகார் முன்னிலை
நாட்டில் அதிகம் காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியலை மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
சனிக்கிழமை வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில் பிகார் மாநிலத்தின் தர்பங்கா மற்றும் மோதிஹரி பகுதிகளில் முன்னணியில் உள்ளன. இந்த நகரங்கள் காற்று மாசு தர நிர்ணய மதிப்பில் 394 மற்றும் 377 அலகுகள் பெற்று முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.
இந்த நகரங்களைத் தொடர்ந்து சிவான் (366), பீட்டா (362), கதிஹார் (358), சாப்ரா (330), சஹர்சா (315), சமஸ்திபூர் (309) மற்றும் முசாபர்பூர் (303) ஆகிய நகரங்கள் உள்ளன.
இந்தப் பட்டியலில் சென்னை 108 அலகுகளுடன் 39ஆவது இடத்தில் உள்ளது.
தமிழ்நாடு நகரங்களில் கோயமுத்தூர் 148 அலகுகளுடன் 43ஆவது இடத்திலும், காஞ்சிபுரம் 82 அலகுகளுடன் 85ஆவது இடத்திலும், ஊட்டி 85 அலகுகளுடன் 123ஆவது இடத்திலும், சேலம் 84 அலகுகளுடன் 143ஆவது இடத்திலும் உள்ளன.
TELEGRAM: t.me/Agnipuratchi1
* அரசு பேருந்தில் இருந்து குடிபோதையில் இருந்த பயணியை கீழே தள்ளிவிட்ட விவகாரம்
நடத்துநர் பிரகாஷை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை.
* தமிழகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை தொடர்ந்து புயல் எச்சரிக்கை.
சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.
* உலகக் கோப்பை இன்று தொடங்கவுள்ள நிலையில், சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்!
* சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த காற்று வீசும். கடல் சீற்றமாக இருக்கும் என்பதால் கடலில் குளிக்க வேண்டாம்.
* பே ஓவல்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து. இந்திய அணி தரப்பில் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 51 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து அசத்தினார். பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை 126 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணி தரப்பில் தீபக் ஹூடா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆச்சரியப்படுத்தினார்.
* மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு தொடர்பாக உதகையை சேர்ந்த நபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆட்டோவில் குண்டுவெடித்தபோது காயமடைந்த ஒருவரின் செல்போன் சிம்கார்டு தொடர்பாக போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது. சிம்கார்டு வாங்க தந்த ஆதார் எண், உதகை அருகே குந்தசப்பை கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என தகவல் தெரிவித்துள்ளனர். குந்தசப்பையை சேர்ந்தவரை கோவைக்கு அழைத்து சென்று போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
🔴 வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் கத்தாரில் தொடங்கியது உலக கோப்பை கால்பந்து திருவிழா.
கொரியன் பாப் பாடகர் ஜங் கூக் கலக்கலான இசை நிகழ்ச்சி...
TELEGRAM: t.me/Agnipuratchi1
* மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் 83 ஆயிரத்து 350 ஏக்கர் சம்பா நெற்பயிர் பாதிப்பு; தொடர்ந்து நடக்கும் கணக்கெடுப்பு பணி...
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையால் இது வரை 83 ஆயிரத்து 350 ஏக்கர் சம்பா பாதிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை கணக்கெடுக்கும் பணியில் தெரியவந்துள்ளது. மேலும் வயலில் தண்ணீர் வடிய, வடிய கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியில் தமிழகம் முழுவதும் கடந்த வாரத்தில் தொடர் மழை பெய்தது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 11, 12ம் தேதி வரை இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சீர்காழியில் ஒரே நாளில் 44 சென்டி மீட்டர் மழை பதிவானது. இந்த கனமழையால், மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம், சீர்காழி பகுதி வெள்ளக்காடாக காட்சியளித்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் ஒரு லட்சத்து 73 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி செய்யப்பட்டிருந்தது.
இந்த கனமழையால் சம்பா சாகுபடி தண்ணீரில் மூழ்கியது. மேலும் 15,000 குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து நின்றது.
இந்நிலையில் குடியிருப்புகளை சுற்றி சூழ்ந்திருந்த மழைநீர் வடிய துவங்கியது. மேலும் 80 சதவீத வயல்களில் தேங்கியிருந்த மழைநீர் வடிந்து விட்டது. 20 சதவீத வயல்களில் மழைநீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் வேளாண்மைத்துறை மூலம் வெள்ளத்தில் சேமான சம்பா பயிர் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.
இது வரை கணக்கெடுத்ததில் மயிலாடுதுறை தாலுகாவில் 8 ஆயிரம் ஏக்கர் சம்பா, குத்தாலம் தாலுகாவில் 3,850 ஏக்கர், சீர்காழி தாலுகாவில் 23,750 ஏக்கர், கொள்ளிடம் தாலுகாவில் 24,750 ஏக்கர், செம்பனார்கோவில் தாலுகாவில் 23,000 ஏக்கர் சம்பா பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் இது வரை 83 ஆயிரத்து 350 ஏக்கர் சம்பா பயிர் பாதிக்கபட்டுள்ளதாக கணக்கு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2,120 ஏக்கர் கரும்பு பாதிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் வடிய, வடிய கணக்கெடுப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
TELEGRAM: t.me/Agnipuratchi1
* பெங்காலி நடிகை ஐந்த்ரிலா ஷர்மா தனது 24 வயதில் ஹவுராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு பல முறை மாரடைப்பால் காலமானார்-
* சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சில இடங்களில் லேசான மழை/தூறல் காணப்படுகிறது. நள்ளிரவு அல்லது நாளை காலை முதல் மழை அதிகரிக்கும்.
அடுத்த 36 மணி நேரம்: தெற்கு ஆந்திரா நெல்லூர் கூடூர் முதல் சென்னை திருவள்ளூர் வரை பலத்த மழை எதிர்பார்க்கலாம்
No comments:
Post a Comment