2024 லோக்சபா தேர்தலில் சர்வதேச சதி? - Agnipuratchi

2024 லோக்சபா தேர்தலில் சர்வதேச சதி?

Share This

2024 லோக்சபா தேர்தலில் சர்வதேச சதி?

2024 லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்த... ஆளுமைமிக்க நாடாக உருவாவதால் கலக்கம்...

குஜராத், ஹிமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தல்களில் மட்டுமின்றி, 2024 லோக்சபா தேர்தலிலும் பா.ஜ.,வை தோற்கடித்து, பிரதமர் பதவியில் நரேந்திர மோடியை மீண்டும் அமரவிடாமல் தடுக்க, பல்வேறு நாடுகளும் சேர்ந்து மிகப்பெரிய சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணியின் எட்டாண்டு கால ஆட்சியில், நம் நாடு பல்வேறு துறைகளிலும் முன்னேறி உள்ளது.

உலக அரங்கில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக மிகப் பெரிய ஆளுமையாக உருவாகி வருகிறது.

ஐ.எம்.எப்., எனப்படும், சர்வதேச நிதியத்தின் மதிப்பீட்டில், நம் நாடு, பொருளாதார வளர்ச்சியில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

'ஜி -20' நாடுகளுக்கான மாநாட்டை, புதுடில்லியில் 2023ல் நாம் தலைமை ஏற்று நடத்தவுள்ளோம். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டுக்கும் அடுத்த ஆண்டு இந்தியா தலைமை ஏற்கிறது.

நடவடிக்கை

நம் நாடு ராணுவ பலத்திலும் மிகப் பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது. விமானந்தாங்கி கப்பல்கள், போர் விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க துவங்கிவிட்டது. 'டிஜிட்டல்' துறையின் மையமாகவும் இந்தியா உள்ளது.

மொத்தத்தில், நாம் சுயசார்பு உடைய நாடாக உருவெடுத்துள்ளோம். இந்த வளர்ச்சி, பல்வேறு வளர்ந்த நாடுகளின் கண்களை

உறுத்துவதால், பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதில் அவை மிக தீவிரமாக உள்ளன.

குறிப்பாக, ராணுவ தளவாட உற்பத்தியில் நாம் சுயசார்பு அடைந்து வருகிறோம். இது, பல்வேறு நாடுகளை சேர்ந்த ராணுவ தளவாட உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களை எரிச்சல் அடைய செய்துள்ளது.

இந்த பெருநிறுவனங்கள் அனைத்தும் மோடி அரசுக்கு எதிராக அணி திரண்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமரின் சுயசார்பு கொள்கை, சர்வதேச மருந்து உற்பத்தியாளர்களையும் கோபம் அடைய செய்துள்ளதாக தெரிகிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு, நாம் உள்நாட்டிலேயே தடுப்பூசி தயாரித்ததுடன், அதை 85 நாடுகளுக்கு இலவசமாக வினியோகித்தோம்.

கொரோனா தடுப்பூசியில் பல்லாயிரம் கோடி ரூபாய் கொழிக்க நினைத்த வெளிநாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு இது மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்தது.

எனவே, சர்வதேச மருந்து உற்பத்தி நிறுவனங்களும் மோடிக்கு எதிரான சதி வலையில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

நம் நாட்டில், '5ஜி' தொழில்நுட்பத்தை பிரதமர் மோடி சமீபத்தில் அறிமுகப்படுத்தினார். அதற்கு தேவையான உபகரணங்களை நமக்கு விற்பனை செய்ய, சீனாவின், 'ஹுவாய்' உள்ளிட்ட பல நிறுவனங்கள் தயாராக இருந்தன.

ஆனால், அந்த உபகரணங்கள் அனைத்தும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் என, பிரதமர் தெரிவித்தார். இதனால், 10க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பெரு நிறுவனங்கள் ஏமாற்றம் அடைந்தன.

இதையடுத்து மோடிக்கு எதிரான கோஷங்கள் சர்வதேச அளவில் தீவிரமடைந்து வருவதாக கூறப்படுகிறது.

பா.ஜ., அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன், ஜாதி, மத ரீதியிலான அரசுசாரா அமைப்புகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு பல்வேறு நாடுகள் நேரடியாக நிதி உதவி அளித்து வந்தன.

இதன் வாயிலாக, இந்த நாடுகள் தங்களுக்கு சாதகமான பல்வேறு நடவடிக்கைகளை இங்கு எடுத்து வந்தன.

பா.ஜ., ஆட்சியில் வெளிநாட்டு நன்கொடைக்கு பல்வேறு சட்டதிட்டங்கள் வகுக்கப்பட்டதால், இந்த நிதி உதவிகள் முற்றிலுமாக நின்றுபோயின.

TELEGRAM: t.me/Agnipuratchi1

தகவல்

தற்போது, பல்வேறு பிராந்திய கட்சிகள் மற்றும் தனியார் பல்கலைகளுக்கு மறைமுக நிதி உதவி அளிக்க சில நாடுகள் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

எனவே, குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வை தோற்கடித்து, மக்கள் மத்தியில் அதன் செல்வாக்கு குறைந்துவிட்டதை போன்ற மாய தோற்றத்தை உருவாக்க பல வளர்ந்த நாடுகள் முற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

இதையே தொடக்கமாக வைத்து, 2024 லோக்சபா தேர்தலிலும் பா.ஜ.,வை தோற்கடித்து, மோடியை மீண்டும் பிரதமர் ஆகாமல் பார்த்துக் கொள்ள மிகப் பெரிய சதி வலை பின்னப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நம் நாட்டுக்கு எதிரான இந்த சர்வதேச சதியை, 2024 தேர்தல் வெற்றி வாயிலாக மட்டுமே முறியடிக்க முடியும் என்பதை நன்கு உணர்ந்தே பா.ஜ., செயல்பட்டு வருகிறது.

நன்றி: தினமலர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages