அக்னிப்புரட்சி இன்றைய (23.11.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (23.11.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (23.11.2022) முக்கிய செய்திகள்.

* மேற்கு வங்க மாநிலத்தின்  ஆளுநராக டாக்டர் சி.வி.ஆனந்த போஸ் இன்று பதவியேற்கவுள்ளார்

கேரளாவைச் சேர்ந்த சி.வி.ஆனந்த, தற்போது மேகாலயா மாநில அரசின் ஆலோசகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!

* FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடரில் நடைபெற உள்ள இன்றைய ஆட்டங்கள்

பிற்பகல் 3.30 மணிக்கு மொரோக்கோ - குரோஷியா அணிகள் மோதல்

மாலை 6.30 மணிக்கு ஜெர்மனி - ஜப்பான் அணிகள் மோதல்

* சென்னையில் தண்டையார்பேட்டையில் உள்ள காமாட்சி அண்ட் கோ உள்ளிட்ட பாமாயில், பருப்பு சார்ந்த தொழிற்சாலைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.

பொது விநியோகத் திட்டத்துக்கு சப்ளை செய்யும் 2 குழுமங்களுக்கு சொந்தமான 40 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

* கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

* கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கேக் தயாரிப்பில் ஆவின் நிர்வாகம் இறங்க உள்ளது.

பிளம் கேக், வெண்ணிலா, சாக்லேட் உள்பட 4 வகைகளில் கேக் தயாரிப்பில் ஆவின் நிர்வாகம் இறங்க உள்ளது.

பால், இனிப்பு வகைகளை தொடர்ந்து நடப்பு மாதமே கேக் தயாரிப்பையும் தொடங்க ஆவின் நிர்வாகம் திட்டம்.

* மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்க அரசாணை வெளியீடு.

சீர்காழியில் 99,518 குடும்ப அட்டைதாரர்களுக்கும், தரங்கம்பாடியில் 62,129 குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1000 வழங்க 16 கோடியே 16 லட்சம் ஒதுக்கி அரசாணை வெளியீடு.

* ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் -  உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்தது.

ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் 2016-ல் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில்,  தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதம்.

கடந்த 2017-ஆம் ஆண்டில் தமிழக அரசு சிறப்புச்சட்டம் இயற்றியபோதிலும், மத்திய அரசு காட்சிப்படுத்ததப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து இன்னும் மாடுகளை நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம்

இளைஞர் அணி துணைச் செயலாளர்களாக ஜோயஸ், ரகுபதி, இளையராஜா நியமனம்

திமுக உட்கட்சி தேர்தல் நிறைவடைந்த நிலையில், ஒவ்வொரு அணிக்கான செயலாளர்கள் அறிவிப்பு

* தமிழ்நாட்டில் மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதாரை ஆன்லைன் வழியாக இணைப்பதில் சிக்கல்கள் உள்ளன. - பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்.

ஆதார் எண்ணை இணைக்க முடியாதவர்களால் மின்சார கட்டணத்தை செலுத்த முடியவில்லை.
அதனால் மின் சந்தாதாரர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

மின்வாரிய சீர்திருத்தத்திற்காக ஆதார் இணைப்பு செய்யப்படுவது வரவேற்கத்தக்கது.

ஆனால்,எந்த ஒரு சீர்திருத்தத்தையும் செய்வதற்கு முன் அது குறித்து மக்களிடம் விளக்கி,விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

போதிய அவகாசம் கொடுக்காமல் திணிக்கக் கூடாது. இதற்கு குறைந்தது 2மாதம் அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

அதற்குள்ளாக மின் பயன்பாடு குறித்து ஒவ்வொரு வீட்டுக்கும் மின்வாரிய ஊழியர்கள் கணக்கீடு செய்ய செல்லும் போது,பயனாளிகளின் ஆதார் அட்டையை பெற்று அங்கேயே இணைத்து கொடுக்க நடவடிக்கை வேண்டும்- பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்.

* தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் உள்ள சாலைகளை மேம்படுத்த ரூ. 2,200 கோடி சிறப்பு நிதி ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

* தமிழகத்தில் அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு.

44 இடங்களில் உள்ளரங்க நிகழ்வாக அணிவகுப்பு நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு, அனுமதியளித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு.

செப்டம்பர் மாத உத்தரவின் அடிப்படையில் அணிவகுப்பு அனுமதி அளிக்க உத்தரவிட கோரிக்கை.

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட காலத்தில் மற்ற அரசியல் கட்சியினரின் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது - மனு.

கருத்து சுதந்திரம் உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொள்ளாமல் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை உள்ளரங்க நிகழ்வாக நடத்த தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார் - மனு.

காவல்துறைக்கு எதிராக ஆதாரம் இல்லாமல் பொய் குற்றச்சாட்டுக்களை கூறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு.

* சட்டவிரோதமாக இயங்கிய ஆதரவற்றோர் இல்லத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் 7 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு தள்ளுபடி.

7 போலீசாருக்கு தலா ₹5,000 வீதம்,
₹ 35,000 வழக்கு செலவாக வழங்க மனுதாரர்கள் கலா, முத்துகுமாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

சட்டம் - ஒழுங்கை பராமரிக்கும் போது ஏராளமான பிரச்னைகளை சந்திக்கும் காவல்துறையினர், கடமையை சுதந்திரமாகவும், நியாயமாக செய்ய அனுமதிக்க வேண்டும் - நீதிபதி.

* 10, 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை; அரசுப் பேருந்து நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages