அக்னிப்புரட்சி இன்றைய (27.11.2022) முக்கிய செய்திகள்.
* உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நடக்கும் கத்தாருக்கு WHO எச்சரிக்கை.
உலகக் கோப்பை கால்பந்து தொடரைக் காண உலகெங்கிலும் இருந்து லட்சக் கணக்கான மக்கள் கத்தாரில் குவிந்து வருவதால், அங்கு கொரோனா வைரஸ், குரங்கு அம்மை மற்றும் 'ஒட்டகக் காய்ச்சல்' போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை.
* திருவண்ணாமலையில் கார்த்திகை தீப கொடியேற்றம்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இன்று தொடங்கிய திருவிழா டிச.6ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
* உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது நடப்பு சாம்பியனான பிரான்ஸ்
டென்மார்க் அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது!
* பிரேசிலில் ராணுவ உடையில் புகுந்து 2 பள்ளிகளில் தாக்குதல்: 3 பேர் பலி; அதிபர் இரங்கல்
பிரேசில் நாட்டில் ராணுவ உடையில் ஆயுதமேந்திய நபர் 2 பள்ளி கூடங்களில் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர்.
* குஜராத்தில் தேர்தல் பணியில் இருந்த சக துணை ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 வீரர்கள் உயிரிழந்தனர்.
போர்பந்தர்: குஜராத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளின் தீவிர ஓட்டு வேட்டை நடந்து வருகிறது. தேர்தலில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காக துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
* 3552 பணியிடங்களுக்கான தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 2-ம் நிலை காவலர், சிறைத்துறை மற்றும் தீயணைப்பு மீட்பு துறைக்கான எழுத்துத் தேர்வு துவங்கியது.
* சென்னை: கத்திப்பாரா மேம்பாலம் பாணியில் ஓஎம்ஆர் - இசிஆர் சாலைகளை இணைக்க சுழற்சாலை வகை மேம்பாலம் கட்ட சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது.
இசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சென்னையின் மிக முக்கிய நெஞ்சாலைகள் ஆகும். இந்த சாலைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இந்நிலையில், இந்த இரண்டு சாலைகளையும் இணைக்கும் வகையில் சுழற்சாலை வகை மேம்பாலம் கட்ட சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகி நகருக்கும், ஈஞ்சம்பாக்கத்திற்கும் இடையில் ரூ.180 கோடி செலவில் சுழற்சாலை வகை மேம்பாலம் கட்ட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை எல் அண்ட் டி நிறுவனம் தயார் செய்யவுள்ளது.
முன்னதாக, இந்த இரண்டு சாலைகளையும் இணைக்கும் வகையில் 6 பாலங்களை கட்ட கடந்த 2019-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இளங்கோ நகர் - வெங்கடேசபுரம், வெங்கடேசபுரம் - காந்தி சாலை, வீரமணி சாலை - மணியம்மை சாலை, மணியம்மை சாலை - அம்பேத்கர் சாலை, அண்ணா நகர் - பாண்டியன் சாலை, காந்தி நகர் - பல்லவன் சாலை ஆகிய 6 இடங்களில் ரூ.30 கோடியில் பாலம் கட்ட சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. ஆனால், அந்தத் திட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
* திருநெல்வேலியில் நடந்த ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில் ஆர்எஸ் பாரதி பேசியதாவது:-
"கவர்னர் ரவியும் அண்ணாமலையும் மென்டல்" என்கிறார் ஆர்எஸ் பாரதி!
பாஜ., தமிழகத்தில் இனி ஆர்ப்பாட்டம் செய்தால் அவர்களை சிறையில் அடைக்க வேண்டும். ஒரு நாள் சிறையில் இருந்தால் , அதன் பிறகு கட்சியே வேண்டாம் என ஓடிவிடுவார்கள். ஒரு அறையில் இருப்பதற்கு கூட முடியாத கட்சி தான் பா.ஜ.,
இனிமேல் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினால், 2 நாள் சென்ட்ரல் சிறையில் அடையுங்கள். ஒருவனும் இருக்க மாட்டான். அடுத்து ஒரு போராட்டம் நடத்தினால் உங்கள் அதிகாரம் தான். அடுத்த நாள் காலை வரையில் சிறையில் வைத்தால், ஒரு நாள் இரவு கூட தங்க மாட்டார்கள்.
கவர்னருக்கு சம்பளம் கொடுக்கிறது நமது வரிப்பணத்தில். அவர் டீ குடிப்பது முதல் அவரது வீட்டில் சட்டையை தூய்மைபடுததும் வரை நடப்பது நமது வரிப்பணத்தில் தான். நமது வரிப்பணத்தில், நமது செலவில் அமர்ந்து இருக்கும் கவர்னர், ராஜ்பவனில் கூட்டம் நடத்தி திராவிடம் என்ற நாடே இல்லை இல்லை என்கிறார். அவரும் ஐபிஎஸ்., என்பதால். (அப்போது கவர்னரை அவன், என்கிறான் என குறிப்பிட்டு ஒருமையில் பேசினார்.)
ஐபிஎஸ் படித்தவர்களில் பலர் இப்படி மெண்டலாக இருப்பார்கள் என நினைக்கிறேன். ஒருவர் அண்ணாமலை. ஐபிஎஸ் அதிகாரிகள் அனைவரையும் கூறவில்லை. ஐபிஎஸ் வேலையை விட்டு விட்டு அரசியலுக்கு வருபவர்கள் மெண்டலாக உள்ளனர்.
இது மோசமான கட்சி. தி.மு.க.,வுக்கு யாரேனும் துரோகம் செய்தால் விளைவு வேறு மாதிரி இருக்கும். அவர்கள் ஒன்று நீதிமன்றத்திற்கு போக வேண்டும் அல்லது கை, கால் இல்லாமல் போக வேண்டும்.
அதிமுக ஆட்சி காலத்தில் கிராம பஞ்சாயத்துகளில் போடப்பட்ட எல்இடி பல்புகளில் ஊழல் நடந்துள்ளது. 20 வாட்ஸ் பல்லை 5 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி உள்ளனர். அதில் 800 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளது.
தமிழகத்தில் போதை பொருட்களை விற்பதே பா.ஜ.,வினர் தான். அண்ணாமலை தலைவரான பிறகு, அனைத்து சமூக விரோதிகளும் பா.ஜ.,வில் உறுப்பினர்களாகி விட்டனர். முதல்வர் ஸ்டாலினை, பொம்மை முதல்வர் என்கிறார்.(என்கிறான் என ஒருமையில் பாரதி பேசினார்) இனி மேல் இப்படி பேசினால் வேறு வகையான ரியாக்சனை பழனிசாமி சந்திக்க வேண்டியிருக்கும். இவ்வாறு ஆர்எஸ் பாரதி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
* சபரிமலை ஐயப்பன் கோயிலில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்
4 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
சபரிமலையில் நேற்று வரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம். இன்று ஞாயிற்று கிழமை என்பதால் அதிகரித்துள்ள பக்தர்கள் கூட்டம்
* வெளிநாட்டில் இருந்து சென்னை வரும் விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை.
காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்களுக்கு மட்டும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
எவ்வித அறிகுறியும் இல்லாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டிய அவசியமில்லை - சுகாதாரம் இயக்ககம் தெரிவித்துள்ளது.
* IND vs NZ: மழையால் போட்டி ரத்து
இந்தியா - நியூசிலாந்து 2-வது ஒருநாள் போட்டி மழையால் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது.
மழை காரணமாக ஆட்டம் 29 ஓவர்களாக குறைக்கப்பட்டு போட்டி தொடங்கியது. 12.5 ஓவர்கள் (இந்தியா 89/1 ரன்கள்) வீசப்பட்ட நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. சிறிது நேரம் காத்திருந்தும் மழை நிற்காததால் போட்டி முடிவில்லை என அறிவிக்கப்பட்டது.
* டெல்லி: ஜி20 தலைமை பதவி நமக்கு ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது என பிரதமர் மோடி பேசினார்.
இந்த வாய்ப்பை நாம் முழுமையாக பயன்படுத்தி உலக நலனில் கவனம் செலுத்த வேண்டும். ராக்கெட் தொழில்நிட்பம் வளர்ச்சி அடைவதை போல் ட்ரோன் தொழில்நுட்பமும் வளர்ச்சி யடைந்து வருகிறது என்றார் பிரதமர்.
ஜி-20 தலைமைத்துவம் நமக்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பம்; உலகளாவிய நலன் சார்ந்த விசயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.! பிரதமர் மோடி உரை
டெல்லி: அமைதி, ஒற்றுமை அல்லது நீடித்த வளர்ச்சி போன்ற உலகளாவிய நலன் சார்ந்த சவாலான விசயங்களுக்கு இந்தியாவிடம் தீர்வு உள்ளது என பிரதமர் மோடி உரையில் பேசியுள்ளார். பிரதமர் மோடி ஒவ்வொரு மாத கடைசி ஞாயிற்று கிழமைகளில் வானொலி வழியே மன் கி பாத் நிகழ்ச்சியில் மக்களுடன் உரையாற்றி வருகிறார். அதில், பல நல்ல விசயங்களை பகிர்ந்து வருகிறார்.
இதன்படி இந்த மாதத்திற்கான மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று காலை கலந்து கொண்டு பேசி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 100-வது மன் கி பாத் நிகழ்ச்சியை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். நாட்டு மக்களுடன் தொடர்பு கொள்வதற்கான முக்கிய நிகழ்ச்சியாக இது உள்ளது என கூறியுள்ளார்.
இந்தியா ஜி-20 தலைமைத்துவம் பெற்றதனால், நாடு முழுவதிலும் இருந்து மக்கள், அவர்கள் அடைந்த பெருமையை பற்றி எனக்கு கடிதம் எழுதுகின்றனர். அம்ரித் கால் திட்டத்தின் கீழ் இந்த வாய்ப்பை இந்தியா பெற்றது. இது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஜி-20 தலைமைத்துவம் நமக்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பம். உலகளாவிய நலன் சார்ந்த விசயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அது அமைதி, ஒற்றுமை அல்லது நீடித்த வளர்ச்சியாக இருக்கட்டும். அதனுடன் தொடர்புடைய விசயங்களுக்கு இந்தியாவிடம் தீர்வு உள்ளது.
நாம் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே வருங்காலம் என்ற கருப்பொருளை கொண்டிருக்கிறோம் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
TELEGRAM: t.me/Agnipuratchi1
* சென்னையில் நெரிசல் மிகுந்த நேரங்களில் வண்ணாரப்பேட்டை - ஆலந்தூர் வழித்தடத்தில் 3 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும்.
விம்கோ நகர் - விமான நிலையம் இடையே 6 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், சென்ட்ரல் - பரங்கிமலை இடையே 12 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
* சென்னை மெரினா கடற்கரையில், மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயணித்து அலைகளை ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, நிரந்தர சிறப்பு பாதையை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்!
* தி.மு.க-வில் விளையாட்டு மேம்பாட்டு அணி என்ற புதிய அமைப்பு ஏற்படுத்தி அதற்கு இந்த அணியின் செயலாளராக தயாநிதி மாறன் எம்.பி அவர்களின் நியமனம் செய்துள்ளார் கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன்
* மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதாவை அமல்படுத்த வேண்டும். அதனை மீறுவோருக்கு அரசு சலுகைகளையும் ஓட்டுரிமையையும் வழங்கக்கூடாது" - மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
* அதிமுகவை பொறுத்தவரை ஓபிஎஸ் மற்றும் சசிகலாவின் கதை, முடிந்த கதை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் அதிமுகவினரால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், வரும் டிசம்பர் 5ம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
அதற்கு பாதுகாப்பு வழங்கக்கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை வேப்பேரியில் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளன்று, அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் நடைபெறும் அஞ்சலி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவை பொறுத்தவரை ஓபிஎஸ் மற்றும் சசிகலாவின் கதை முடிந்த கதை. அதனை பற்றி எதுவும் கூறமுடியாது. ஆன்லைன் விளையாட்டுகளைப் பொறுத்தவரை திமுக அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. ஆன்லைன் விளையாட்டுகளை வளர்த்து விடுகின்ற வேலையை திமுக அரசு மேற்கொள்கிறது” என்றும் தெரிவித்தார்.
* மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் உண்மையான பிறந்த தினமான இன்று (கார்த்திகை மாதம், மூல நட்சத்திரம்) தமிழக ஆளுநர் மகாகவியின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார்.
* ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் வனப்பகுதியில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்த முயன்ற 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
12 தமிழ்நாடு கூலித் தொழிலாளர்கள் உள்பட 16 பேரை ஆந்திர போலீஸ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செம்மரம் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்கள், ஒரு லாரி மற்றும் ஒரு டன் எடையுள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
* திமுக உயர்நிலை செயல் திட்டக்குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, சு.பொன்முடி ஆகியோர் திட்டக்குழு உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டது.
திமுகவில் அமைப்பு சாரா ஓட்டுனர் அணி தலைவராக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் அறிவிப்பு.
No comments:
Post a Comment