அக்னிப்புரட்சி இன்றைய (29.11.2022) முக்கிய செய்திகள்.
* தேனியில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் அறிவிப்பு!
விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (29.11.2022) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிப்பு!
* உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் G பிரிவில், 1 - 0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது பிரேசில் அணி!
* உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் H பிரிவில், 2 - 0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை வீழ்த்தி போர்ச்சுகல் அணி ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது!
* WhatsApp Update: புதிய வகையான ஸ்டேட்டஸ் உட்பட 3 அப்டேட்கள் வருகிறது!
வாட்ஸ்அப்பில் புதிதாக 3 அம்சங்கள் பீட்டா வெர்ஷனில் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் ‘வாய்ஸ் ஆடியோ’வை ஸ்டேட்டஸாக வைக்கலாம்
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப்பில் புதுப்புது அப்டேட்டுகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், தற்போது மூன்று வகையான அம்சங்கள் பீட்டா 2.224.6.4.0 வெர்ஷனில் வந்துள்ளது. அவை: 1. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வாய்ஸ் மெசேஜ் வைப்பது, 2. வாட்ஸ்அப் என்ற பெயரில் அதிகாரப்பூர்வ Chat, 3. வாட்ஸ்அப் டெக்ஸ்க்டாப்பில் ‘Call’க்கு என்று பிரத்யேகமான மெனு ஆகும்.
1.வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வாய்ஸ் மெசேஜ்
வாட்ஸ்அப் ஸ்டேடஸில் இதுவரையில் வீடியோ, படங்கள், எழுத்துக்கள், எமோஜிகள் என பலவற்றை வைக்கும் வகையில் இருந்தது. இனி அதோடு வாய்ஸ் ஆடியோவையும் ஸ்டேட்டஸாக வைக்கலாம். ஸ்டேட்டஸ் கிளிக் செய்தவுடன், எந்த எழுத்துக்களும் டைப் செய்யாத போது, ‘மைக்’ ஐகான் ஒன்று இருக்கும். அதை கிளிக் செய்து, உங்கள் குரலை பதிவு செய்து, ஸ்டேடஸாக வைக்கலாம். மேலும், அதை யாரெல்லாம் பார்க்கலாம், கேட்கலாம் என்பதையும் நீங்களே தேர்வுசெய்யலாம்.
2. WhatsApp என்ற பெயரில் அதிகாரப்பூர்வ Chat
TELEGRAM: t.me/Agnipuratchi1
வாட்ஸ்அப் நிறுவனம் தரப்பிலேயே ஒரு WhatsApp என்ற பெயரில் சேட் கொண்டு வரப்படுகிறது. இதில் வாட்ஸ்அப் சம்பந்தமான அப்டேட்டுகள், முக்கிய அறிவிப்புகள் போன்றவை பயனர்களுக்கு அனுப்பப்படும். இதன் மூலம் பயனர்கள் நேரடியாகவே வாட்ஸ்அப் தொடர்பான சமீபத்திய விவரங்களை தெரிந்துகொள்ளலாம். மேலும், தேவைப்படவில்லை எனில் அதை டெலிட் அல்லது மறைக்கவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
3. வாட்ஸ்அப் டெக்ஸ்க்டாப்பில் ‘Call’க்கு என்று பிரத்யேகமான மெனு
வாட்ஸ்அப் செயலியைப் போலவே, கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் சாப்ட்வேர் மேம்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் டெஸ்க்டாப் சாப்ட்வேரில், கால் ஹிஸ்டரி என்ற ஆப்ஷன் கொண்டு வரப்படுகிறது. அதில், நீங்கள் அழைப்புகள் மட்டும் தனியாக பட்டியலிட்டு காட்டப்படும்.
இந்த மூன்று அம்சங்களும் தற்போதைக்கு பீட்டா பதிப்பு வைத்திருக்கும் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. விரைவில் எல்லா பயனர்களுக்கும் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்அப்பில் சமீபகாலமாக மேம்படுத்தப்பட்டு வரும் அம்சங்கள் பெரும்பாலும், டெலகிராம் செயலியில் ஏற்கெனவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
* மின் எண்ணுடன் ஆதாரை இணைக்க பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
சிறப்பு முகாம்களுக்கு வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்
அமைச்சர் செந்தில்பாலாஜியின் உத்தரவுப்படி அதிகாரிகளுக்கு மின்வாரியம் எச்சரிக்கை
* பராமரிப்பு பணி காரணமாக சென்னை-கோவை இடையே 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்தது.
சென்னை எழும்பூர் - சேலம் (22153) இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில், சேலம் - எழும்பூர் (22154) இடையே இரவு 9.30 மணிக்கு இயக்கப்படும் ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது.
* ராமேஸ்வரம்: மண்டபம் அடுத்துள்ள வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2000 கிலோ மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டது.
கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு நாட்டுப்படகு, 5 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார்.
* அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பாக சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு தடைகோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
டிசம்பர் 6ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது இருதரப்பு வாதங்களை கூற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
* அரியலூரில் 74 முடிவுற்ற திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அரியலூர் விழாவில் 57 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினர்.
ரூ.78 கோடி மதிப்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இன்று அரியலூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
* சென்னை ஸ்டான்லி மருத்துவமனை லிப்டில் சிக்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
திட்டங்கள் துவக்க விழாவிற்கு வருகை தந்த போது லிப்டில் சிக்கிய அமைச்சர்.
அறுவை சிகிச்சை துறை கட்டடத்தில் லிப்டின் இயக்கம் தடைபட்டதால் பரபரப்பு.
லிப்டின் ஆபத்துக்கால கதவின் வழியே வெளியேறினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
* தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அரசு அனுப்பும் கோப்புகளுக்கு கையெழுத்து போடாமல், காலம் தாழ்த்தி வருவதாக சுட்டிக்காட்டி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த கண்ணதாசன் என்பவர் மனு.
* கங்கை கொண்ட சோழபுரம் என்ற பெருமையை கொண்ட மாவட்டம் அரியலூர்- முதல்வர் மு.க.ஸ்டாலின்.
டால்மியாபுரம் என்ற பெயரை கல்லக்குடி என்று மற்ற ரயில் மறியல் போராட்டம் நடத்தி தலைவராக கலைஞர் உயர்ந்த மாவட்டம் அரியலூர்.
எங்கு திரும்பினாலும் பொக்கிஷமாக காணப்படும் மாவட்டம் அரியலூர்.
பெரம்பலூர் மாவட்டத்தை பிரித்து அரியலூர் மாவட்டத்தை உருவாக்கியவர் கலைஞர்.
தொல்லியல்துறையில் ஒரு மறுமலர்ச்சியையே உருவாக்கி உள்ளோம்.
கங்கை கொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
அரியலூர் மாவட்டத்தில் சிமெண்ட் காரிடார் திட்டம் செயல்படுத்தப்படும்.
அரியலூர் - செந்துறை வரை ரூ.129 கோடி செலவில் 4 வழிச்சாலை அமைக்கப்படும்.
அரியலூர் மாவட்டத்தில் ரூ.10 கோடி மதிப்பில் புதை படிம பூங்கா அமைக்கப்படும்.
போட்டி போட்டு கொண்டு தொழில் நிறுவனங்கள் இன்று தமிழகத்துக்கு வருகின்றது.
தமிழகத்தில் வேளாண் உற்பத்தி, பாசன பரப்பு அதிகரித்துள்ளது.
கட்டணமில்லாமல் பேருந்து வசதி அளித்தன் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ.900 சேமிப்பு என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.
ஒரு முதலமைச்சர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் கடந்த 10 ஆண்டாக இருந்த அதிமுக ஆட்சி.
கையில் அதிகாரம் இருந்தும் எதுவும் செய்யாமல் கைகட்டி வேடிக்கை பார்த்ததுதான் கடந்த கால அதிமுக ஆட்சி.
கடந்த 10 ஆண்டுகள் கால ஆட்சியின் சீரழிவை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார்கள் கொடுக்கின்றனர்.
விமர்சனங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல; அவற்றை வரவேற்கிறோம், ஆனால் விஷமத்தனம் கூடாது-
அரியலூர் கொல்லாபுரத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை.
* ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டது
ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டத்திற்கு அரசாணை கூட பிறப்பிக்கப்படவில்லை
சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி
* திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வரும் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை
தீப திருவிழாவையொட்டி, உள்ளூர் விடுமுறை அறிவித்தது மாவட்ட நிர்வாகம்
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா - டிசம்பர் 6ம் தேதி அதிகாலை பரணி தீபத்திற்கு 3000 முதல் 4000 பக்தர்கள் அனுமதி.
மாலை மகா தீபத்திற்கு 5000 முதல் 6000 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர்.
* கொலீஜியம் நடைமுறை இந்த மண்ணின் சட்டம்: மத்திய அரசு பின்பற்ற உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்
புதுடெல்லி: கொலீஜியம் நடைமுறை இந்த மண்ணின் சட்டம் என்றும் இதை மத்திய அரசு பின்பற்றித்தான் ஆக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான குழு (கொலீஜியம்) நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி களை நியமிப்பதற்கான பரிந் துரையை மத்திய அரசுக்கு வழங்குகிறது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக..
இதைப் பரிசீலித்து மத்திய அரசு ஒப்புதல் வழங்கும். இந்தக் குழுவில் தலைமை நீதிபதியுடன் 4 மூத்த நீதிபதிகள் இடம்பெற்றிருப்பர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
கடந்த ஆண்டு 11 நீதிபதிகள் நியமனம் தொடர்பாக கொலீஜியம் வழங்கிய பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இதை எதிர்த்து பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்தசூழலில் கொலீஜியம் நடைமுறையை மாற்ற வேண்டும் என மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு சமீபத்தில் கூறியிருந்தார்.
மத்திய அரசுக்கு எதிரான அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் ஏ.எஸ்.ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான விகாஸ் சிங் ஆஜராகி, கொலீஜியம் நடைமுறைக்கு எதிரான மத்திய சட்ட அமைச்சரின் கருத்தை நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
இதைக்கேட்ட நீதிபதி எஸ்.கே.கவுல், மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் ஆர்.வெங்கட் ரமணியிடம், “கொலீஜியம் நடைமுறை குறித்து சிலருக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம். ஆனால், அது இந்த மண்ணின் சட்டம். அதை மத்திய அரசு பின்பற்றித்தான் ஆக வேண்டும். இந்தத் தகவலை மத்திய அரசிடம் எடுத்துக் கூறுங்கள். கொலீஜியம் பரிந்துரையை நீண்டகாலம் கிடப்பில் வைத்திருக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் எடுத்துச் சொல்லுங்கள்.
பொதுவாக நீதித் துறை தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் விமர்சன அறிக்கைகளை நாங்கள் புறக்கணித்து விடுகிறோம். ஆனால், உயர் பொறுப்பில் இருப்பவர் விமர்சனம் செய்துள்ளார். இது நடந்திருக்கக் கூடாது.
மத்திய அரசு கொண்டுவந்த தேசிய நீதித் துறை நியமன ஆணைய மசோதா நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள மத்திய அரசு கொலீஜியம் பரிந்துரையை கிடப்பில் வைத்திருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.
கொலீஜியம் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்குவதற்கான காலக் கெடுவை மத்திய அரசு மதிக்க வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணுங்கள். கடுமையான முடிவு எடுக்கும் நிலைக்கு நீதித் துறையை ஆளாக்க வேண்டாம்” என்றார்.
TELEGRAM: t.me/Agnipuratchi1
கொலீஜியம் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்குவதற்கான காலக்கெடுவை மத்திய அரசு மதிக்க வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணுங்கள்.
* சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 15 முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 48 நாடுகளைச் சேர்ந்த 107 படங்கள் திரையிடப்பட உள்ளன.
* தமிழ்நாடு முதலமைச்சர், காவல்துறை குறித்து அவதூறு கருத்து பதிவு; சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த அரவிந்த் குற்றவாளி என எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு; 17 நாள் சிறை தண்டனை, ₹6500 அபராதம் விதிப்பு
48 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை வழங்கப்பட்டுள்ளது
கைதாகி நீதிமன்ற காவலில் சிறையில் இருந்ததை கணக்கில் எடுத்துக்கொண்டு அபராதம் மட்டும் செலுத்துமாறு நீதிமன்றம் தீர்ப்பு.
சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்த 48 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து மிக விரைவில் தண்டனை வழங்கிய வழக்கு இதுவாகும்.
* சில்லறை பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாயை டிசம்பர் 1-ம் தேதி அறிமுகம் செய்கிறது ரிசர்வ் வங்கி.
தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களின் மதிப்பிலேயே டிஜிட்டல் ரூபாய், பைசா வெளியிடப்படும் - ரிசர்வ் வங்கி.
* பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது முக்கியமானது -சென்னை உயர்நீதிமன்றம்.
பாலியல் துன்புறுத்தல் என்பது குழந்தையின் கண்ணியம் மற்றும் ஆளுமை மீது தாக்குதலை ஏற்படுத்தி அவர்களின் ஒட்டு மொத்த வளர்ச்சியையும் பாதிக்கின்றது.
பள்ளிகளில் மொபைல் மனநல ஆலோசனை மையங்களை அமைத்து மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க உத்தரவிட கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து.
* ஊழல் வழக்கு - விரைந்து முடிக்க உத்தரவு.
ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
கடந்த 1983ம் ஆண்டு முதல் 2021 வரை நிலுவையில் உள்ள 1,635 ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவு.
ஊழல் வழக்கு காரணமாக வழங்கப்படாத ஓய்வு கால பலன்களை வழங்க கோரிய வழக்கில் உத்தரவு.
ஊழல் வழக்குகள் பல ஆண்டுகள் நிலுவையில் இருந்தால் குற்றவாளிகள் தப்பி விடுவர் - உயர் நீதிமன்றம் எச்சரிக்கை.
* ஏர் இந்தியா, விஸ்தாரா ஆகிய விமான நிறுவனங்கள் 2024 மார்ச் மாதத்திற்குள் ஒருங்கிணைக்கப்படும் என டாடா குழுமம் அறிவிப்பு
* திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு சம்மன்:
திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன்.
ஆ.ராசா உட்பட 3 பேர் ஜனவரி 10ல் நேரில் ஆஜராக உத்தரவு.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2015ம் ஆண்டு சிபிஐ வழக்கு. கடந்த மாதம் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் சம்மன்.
* குஜராத் சட்டப்பேரவை தேர்தல் - முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான பரப்புரை முடிவுக்கு வந்தது
19 மாவட்டங்களில் டிசம்பர் 1ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது
* டெண்டர் முறைகேடு, சொத்துக்குவிப்பு வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்ந்த வழக்குகளில் நாளை சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
* ஹார்ட் அட்டாக் வருவதை கண்டறிய உதவும் AI தொழில்நுட்பம்.
மகாராஷ்டிரா அரசால் நிறுவப்பட்ட, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் கருவி மூலம் சுமார் 3,000 நோயாளிகளுக்கு மாரடைப்பு அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
ST-Elevation Myocardial Infarction (STEMI) எனப்படும் மிக ஆபத்தான மாரடைப்பை இந்த தொழில்நுட்பம் எளிதில் கண்டறிந்துள்ளதாகவும், இதனால் மாரடைப்பால் ஏற்படும் இறப்புகளைக் குறைக்க முடிவதாகவும் மருத்துவ நிபுணர்கள் கருத்து.
* ரூ.5,069 கோடி மதிப்பிலான மும்பை தாராவி மேம்பாட்டுத் திட்டத்துக்கு ஒப்பந்தத்தை அதானி குழுமம் கைப்பற்றியது.
உலகின் மாபெரும் குடிசைப் பகுதிகளில் ஒன்றான தாராவியில் 58,000 குடும்பங்களும், 12,000 நிறுவனங்களும் உள்ளன. அதானி குழுமம் முதல் கட்டமாக தாராவி மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.5,069 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. மொத்தம் ரூ.20,000 கோடியில் தாராவி பகுதி மேம்படுத்தப்பட உள்ளதாகவும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
* அந்தமான் நிகோபார் தீவு பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது.
இந்திய ராணுவத்தின் மேற்கு படைப்பிரிவு ஏவிய பிரமோஸ் ஏவுகணை துல்லியமாக இலக்கைத் தாக்கியது.
* ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பு என்ற திறனற்ற திமுக அரசின் நாடகத்தை அம்பலப்படுத்த பாஜக கடமைப்பட்டுள்ளது: அண்ணாமலை
செப்டம்பர் 26: ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு முதல்வர் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
அக்டோபர் 3: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அவசர சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றியது. அதனுடன் ஆன்லைன் விளையாட்டிற்கான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது.
அக்டோபர் 7: தமிழக அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.
அக்டோபர் 19: ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
நவம்பர் 17: அவசர சட்டத்திற்கு இன்னும் அரசாணை வெளியிடாததால் அந்த சட்டம் நடைமுறைக்கு வரவில்லை என்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசுக்கு நமது கேள்விகள்.
1. அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கிய பிறகு, தமிழக அரசு அரசாணை ஏன் பிறப்பிக்கவில்லை?
2. அவசர சட்டத்தை நடைமுறைப்படுத்த, “தமிழ்நாடு கேமிங் அதாரிட்டி” உருவாக்கப்பட வேண்டும். இன்றுவரை உருவானதா?
3. அக்டோபர் 8ஆம் தேதி முதல் நவம்பர் 27ஆம் தேதி வரை ஆன்லைன் சூதாட்டத்தினால் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
அதாவது, மாநில அரசு அரசாணையை அறிவிக்கத் தவறியதாலும், அது காலாவதியாகும் வரை காத்திருந்ததாலும், ஆன்லைன் சூதாட்டம் தமிழகத்தில் இன்றும் தொடர்கிறது. - மாநில தலைவர் திரு.K. அண்ணாமலை.
* உக்ரைன் பற்றிய புது டெல்லியின் நிலைபாட்டை மேற்கத்திய நாடுகள் சகித்துக் கொண்டே ஆக வேண்டும்.
எப்படியென்றால்..
இந்தியா எவ்வாறு பாக்கிஸ்தான் பற்றிய மேற்கு உலகின் பாலிஸிகளை சகித்துக் கொள்கிறதோ அதே போல்தான்..! - இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர்
No comments:
Post a Comment