அக்னிப்புரட்சி இன்றைய (30.11.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (30.11.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (30.11.2022) முக்கிய செய்திகள்.

* பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் இந்திய எல்லைக்கு கடத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்களை சிறப்பு அதிரடிப் படையினர் பறிமுதல் செய்தனர்.

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் உள்ள ராம்தாஸ் செக்டாரில், கடந்த 8 நாட்களாக சிறப்பு அதிரடிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, ட்ரோன் மூலம் பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்கள் இந்திய எல்லைக்கு கடத்தப்படுவதை கண்டுபிடித்த அதிரடிப்படையினர், கடத்தல்காரர் பரம்ஜித் சிங் பம்மா என்பவரைக் கைது செய்துள்ளனர். 8 துப்பாக்கிகள், தோட்டாக்கள், சுமார் 2 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களையும் அதிரடிப்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் ஹரியானாவைச் சேர்ந்த குல்தீப் சிங் என்பவர் பாகிஸ்தான் வழியாக இந்திய எல்லைக்கு ஆயுதங்களை அனுப்பியது தெரியவந்துள்ளது. கைதான பம்மாவிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

* திருவள்ளூர்; பொன்னேரி பழவேற்காடு கூனங்குப்பம் கிராம மக்கள் ஊரைவிட்டு வெளியேறும் போராட்டம்

பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்க 9 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் போராட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி 500க்கும் மேற்பட்டோர் ஆவணங்களை ஒப்படைக்க நடை பயணம்

* 48,500 ஆண்டுகள் பழைய வைரஸ்!
ரஷ்யாவின் சைபீரியாவில் 1000 ஆண்டுகளாக பனிக்கு அடியில் இருந்த 24 வைரஸ்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

புதிதாக 13 இனங்கள் கண்டறியப்பட்டு அவற்றுக்கு ஸோம்பி வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் இவை 48,500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்றும், பல ஆண்டுகளாக பனி கட்டிக்கு அடியில் வைரஸ்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பனி உருகும் பட்சத்தில் வைரஸ்கள் வளிமண்டலத்துடன் கலந்து கொடிய ஆபத்தை உருவாக்குமாம்.

* டிஜிட்டல் கரன்சி நாளை அறிமுகம்!

டெல்லி உட்பட 4 முக்கிய நகரங்களில் டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி நாளை அறிமுகம் செய்கிறது. SBI, ICICI, Yes Bank, ITFC, FIRST Bank வங்கிகளில் செயல்பாட்டுக்கு வருகிறது.

டிஜிட்டல் கரன்சியானது, மக்களுக்கு நிதி பரிவர்த்தனைகளுக்காக, மோசடி ஆபத்து இல்லாத மெய்நிகர் கரன்சியாக இருக்கும். இது காகித நாணயத்தை ஒத்தது. சாதாரண ரூபாயின் மதிப்பையே கொண்டிருக்கும். வெளியில் புழங்கும் கரன்சியின் மின்னணு வடிவமே இது.

* கைதிகள் போன் மூலம் பேசும் புதிய வசதி தொடக்கம்

தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் கைதிகள், உறவினர்கள் சந்திப்புக்காக நவீன நேர்காணல் மையம் நடைமுறைக்கு வந்துள்ளது.

முதற்கட்டமாக வேலூர் மத்திய சிறையில் சிறைவாசிகளுடன் உறவினர்கள் இண்டர்காம் போன் மூலம் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

இதுவரை கைதிகள் - உறவினர்கள் கம்பிகளுக்கு இடையே சந்தித்து வந்த நிலையில், கண்ணாடி தடுப்பு அமைத்து போன் மூலம் பேசிக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மயங்கி விழுந்து உயிரிழந்த மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி.

மணக்குள விநாயகர் கோவில் முன்பு வைக்கப்பட்டுள்ளது யானை லட்சுமியின் உடல்.

யானை லட்சுமியின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் ஏராளமான பக்தர்கள்.

யானை லட்சுமி உயிரிழந்த துக்கத்தை அனுசரிக்கும் வகையில் மணக்குள விநாயகர் கோவில் நடை மூடல்.

மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமிக்கு புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அஞ்சலி.

குழந்தை போல விளையாடிய லட்சுமி மரணமடைந்தது அதிர்ச்சியாக உள்ளது - தமிழிசை சவுந்தரராஜன்.

* மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்பு

CCTV காட்சிகள்: https://twitter.com/IndiaNewsDigest/status/1597806682469326848?t=FvryNSpMY_pU6uTyOMLaww&s=19

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது.

* மரக்காணத்தில் கரையில் இருந்து 100 அடி வரை கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்

எப்போதும் சீற்றத்துடன் காணப்படும் கடல் தற்போது அமைதியாக காட்சி அளித்து வருகிறது

கடல் உள்வாங்கியதால் 19 மீனவ கிராமத்தை சேர்ந்த மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

* உலகக்கோப்பை கால்பந்து தொடரில் வேல்ஸ் அணியை வென்றது இங்கிலாந்து

மற்றொரு போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தி அமெரிக்கா வெற்றி!

* அமெரிக்காவில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிமலை 38 ஆண்டுகளுக்கு பின்பு வெடித்தது

பாதுகாப்பாக இருக்குமாறு ஹவாய் தீவில் உள்ள 2 லட்சம் மக்களுக்கு எச்சரிக்கை!

* “சீனாவுடனான பொற்காலம் முடிந்துவிட்டது”

இங்கிலாந்து - சீனா இடையேயான பொற்காலம் முடிந்துவிட்டதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தங்கள் நாட்டின் மதிப்புகள், நலனுக்கு சீனா ஒரு சவாலை முன்வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக சீனா ஹாங்காயில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் போது செய்தி சேகரிக்க சென்ற இங்கிலாந்தைச் சேர்ந்த பத்திரிகையாளரை போலீஸார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

* முடிவுக்கு வந்தது மோதல் போக்கு!

ராஜஸ்தானில் முதல்வர் அஷோக் கெலாட், சச்சின் பைலட் இடையே மோதல் போக்கு நீடித்துவந்த நிலையில், இருவரும் தற்போது ஒன்றாக கைகோர்த்துள்ளனர்.

இருவரும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நாங்கள் இருவருமே கட்சியின் முக்கிய சொத்து என்று ராகுல் கூறியது மகிழ்ச்சியளிக்கிறது.

ராஜஸ்தானில் ராகுலின் பயணத்துக்கு நல்ல வரவேற்பு கொடுக்க இருக்கிறோம் என்றனர். அதன்படி மோதல் போக்கு முடிவுக்கு வந்தது.

* 17 லட்சம் இந்திய யூடியூப் வீடியோக்கள் நீக்கம்!

விதிமுறைகளை மீறியதால் இந்தியாவைச் சேர்ந்த 17 லட்சம் வீடியோக்கள் தங்கள் தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக  யூடியூப் தெரிவித்துள்ளது.

இந்த வீடியோக்கள் ஜூலை - செப் மாதத்துக்கு இடையேயான காலத்தில் நீக்கப்பட்டதாகவும், சர்வதேச அளவில் 56 லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.

இதில் 36% வீடியோக்கள் ஒரு பார்வையாளர் மற்றும் 31% வீடியோக்கள் 10 பார்வையாளர்களை கொண்டவை என்றும் கூறியுள்ளது.

* ஜனநாயகபடுகொலை செய்யும் ஆளுநர்!

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருவது ஜனநாயகப்படுகொலை என சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பான அவரது அறிக்கையில், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு மொத்தமாக தடைவிதிக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் இழித்தடித்து வருவது கண்டனத்திற்கு உரியது.

இது தொடர்பாக அரசு ஆளுநருக்கு அழுத்தம் தரவும் வலியுறுத்தியுள்ளார்.

* பிரதமர் மோடியின் தமிழக வருகையின்போது பாதுகாப்பில் எந்த குளறுபடியும் இல்லை.

தமிழக காவல்துறையினர் பயன்படுத்தும் பாதுகாப்பு உபகரணங்கள் நவீனமாக தான் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு உபகரணங்கள் தணிக்கை செய்யப்படுகிறது. உபயோகமில்லாத உபகரணங்கள் உடனடியாக தவிர்க்கப்படுகிறது. 100 ஆண்டு காலமாக இதே நடைமுறைதான் காவல்துறையில் உள்ளது.

தமிழக காவல்துறை தரமான பாதுகாப்பு உபகரணங்களை கையாளுகிறது அந்தமான், கேரளா போன்ற பிற மாநிலங்களிலும் தமிழக காவல்துறையே பாதுகாப்புக்கு செல்கிறது - டிஜிபி சைலேந்திரபாபு

* நம் புதுவையில் அருள்மிகு மணக்குள விநாயகரை தொழ வருபவர்களின் தோழியான லட்சுமி யானை இன்று இல்லை என்று நினைத்து வருந்துகிறேன்

மணக்குள விநாயகர் திருக்கோவிலுக்கு வருபவர்களிடம் தோழியாக, சகோதரியாக ஆசிர்வாதம் செய்தது இன்னும் மனக்கண்ணில் நிழலாடுகிறது.

மணக்குள விநாயகர் தேர் வரும்போது தேர் போன்றே கம்பீரமாக அந்த பிரகாரத்தில் தேரை வழிநடத்தி செல்வாள். எங்களை எப்படி தேற்றிக் கொள்வதே என்று தெரியவில்லை.

லட்சுமி யானையை இழந்து வாடும் புதுவை மக்களுக்கும், வெளியூரிலிருந்து வந்து அன்போடு அவளிடம் பழகிய அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது - புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்,

* தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது.

உண்மையை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பது தான் முதல்வரின் கடமை.

எதிர்க்கட்சியை பழிவாங்கும் நடவடிக்கையில் முதல்வர் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார் - சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி.

* கோகுல்ராஜ் கொலை வழக்கு இரண்டு வாரத்திற்கு ஒத்திவைப்பு.

உண்மையை கூற சுவாதிக்கு வாய்ப்பளிக்க இரண்டு வாரம் அளிக்கப்படுகிறது - நீதிமன்றம்.

சுவாதி பொய்யான சாட்சியம் அளித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

* கடலூர் அருகே குடிநீர் குழாயை அகற்றாமல் கழிவுநீர் கால்வாய் போடப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம்; குடிநீர் குழாயை பயன்படுத்த முடியாமல் மக்கள் தவிப்பு.

* கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு டிச.5ம் தேதி முதல் நேரடி வகுப்புகளை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி.

* சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் சூட்டப்படும்.

டிபிஐ வளாகம் "பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்'' என்றும் அழைக்கப்படும் என அறிவிப்பு.

பள்ளிக்கல்வித்துறை செயல்படும் டிபிஐ வளாகத்தில் அன்பழகன் உருவ சிலை நிறுவப்படும்.

சிறந்த பள்ளிகளுக்கு  பேராசிரியர்  பெயரில் விருதும் வழங்கப்படும்.
பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

* சட்ட ஒழுங்கு ஏடிஜிபியாக சங்கர் ஐபிஎஸ்-ஐ நியமித்துள்ளது தமிழ்நாடு அரசு

சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில் அறிவிப்பு

* அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்.

வழக்கை ரத்து செய்யக்கோரி அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி.

* புதுச்சேரியில் யானை லெட்சுமியின் இறுதி ஊர்வலம்.

மயங்கி விழுந்து உயிரிழந்த புதுவை யானை லட்சுமியின் இறுதி ஊர்வலம் தொடக்கம்.

இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் பங்கேற்பு.

* நாளை காலை 11 மணிக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளார்

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்குமாறு ஆளுநரிடம் வலியுறுத்த உள்ளார் அமைச்சர் ரகுபதி

* எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு ரத்து ஏன்?“

டெண்டர் ஒதுக்கீட்டில் வேலுமணி செல்வாக்கை செலுத்தினார் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை.

நேரடியாக வழக்கு பதியாமல் தாமாக முன்வந்து லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிந்ததால் ரத்து

வழக்கை தொடர்ந்து விசாரித்து வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் இருந்தால், அவரை வழக்கில் சேர்க்கலாம்

டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் 48 பக்க தீர்ப்பில் தகவல்

* சிறை அலுவலர் (ஆண்கள்/ பெண்கள்) பணியிடங்களுக்கான தேர்வு கணினி வழித்தேர்வாக நடைபெறும் - டிஎன்பிஎஸ்சி.

டிச.26ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் 24 தேர்வு மையங்களில் கணினி வழித் தேர்வாக நடைபெறும்.

22.12.2022 அன்று முற்பகல் மற்றும் பிற்பகலில், ஏழு தேர்வு மையங்களில் எழுத்து / கணினி வழித் தேர்வாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த சிறை அலுவலர் (ஆண்கள்) மற்றும் சிறை அலுவலர் (பெண்கள்) பதவிகளுக்கான தேர்வானது 26.12.2022 முற்பகல் மற்றும் பிற்பகலில் சென்னை, கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம், இராமநாதபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பத்தூர், வேலூர், விருதுநகர், அரியலூர், செங்கல்பட்டு ஆகிய 24 தேர்வு மையங்களில் கணினி வழித் தேர்வாக (CBT Method) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages