டாஸ்மாக் கடை மூடப்பட்டதால், தெருவுக்கு பாமக அருள் எம்.எல்.ஏ. பெயரை சூட்டிய பொதுமக்கள் - Agnipuratchi

டாஸ்மாக் கடை மூடப்பட்டதால், தெருவுக்கு பாமக அருள் எம்.எல்.ஏ. பெயரை சூட்டிய பொதுமக்கள்

Share This

டாஸ்மாக் கடை மூடப்பட்டதால், தெருவுக்கு பாமக அருள் எம்.எல்.ஏ. பெயரை சூட்டிய பொதுமக்கள்

சேலம் மாவட்டம், முத்துநாயக்கன்பட்டி பஸ் நிலையம் அருகே கடந்த 2017-ம் ஆண்டு முதல் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இந்த கடையால் இப்பகுதி பொது மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். இதையடுத்து பாமக அருள் எம்.எல்.ஏ.வின் பல கட்ட போராட்டத்தால் கடந்த 7-ந் தேதி, இந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இதனால் முத்துநாயக்கன்பட்டி மட்டுமல்லாமல் அதனைச் சுற்றியுள்ள ஊராட்சிகளில் வாழும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவருக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

முத்துநாயக்கன்பட்டி, செல்லப்பிள்ளைக்குட்டை, பாகல்பட்டி, நல்லாகவுண்டம்பட்டி, செம்மண்கூடல், மாங்குப்பை, பச்சனம்பட்டி, கோட்டை மாரியம்மன் கோவில் ஊராட்சி, கீரைபாப்பம்பாடி, கருக்கல்வாடி உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்சி பாகுபாடின்றி ஒன்றிணைந்து முத்துநாயக்கன்பட்டியில் பாராட்டு விழா நடத்தினர். இதில் கலந்துகொண்ட பாமக அருள் எம்.எல்.ஏ.வுக்கு சால்வை, மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் சார்பில் வீரவாள் வழங்கப்பட்டது. பின்னர் அருள் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி செலுத்தும், அங்காளம்மன் நகர் பகுதி பொதுமக்கள் தங்களது தெருக்களுக்கு இரா.அருள் தெரு என்று பெயர் பலகை வைத்து திறந்தனர். இந்நிகழ்ச்சியில் முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சாரதா ராஜா, செல்லபிள்ளைக்குட்டை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாஜலம், கே.சி.ஆறுமுகம், சரவணகந்தன், ஒன்றிய செயலாளர் காமராஜ், பாகல்பட்டி தங்கராஜ், ஒன்றிய தலைவர் சம்பத், சக்தி, வெங்கடேஷ், வக்கீல் பாப்பா கணேசன், சமூக ஊடக பேரவை பிரகாஷ், சின்னதம்பி, லட்சுமணன், அருள், கரிசல் குணா, களர்பட்டி ஜெயவேல், மோகன்ராஜ், சுகவனம், பார்த்திபன் மற்றும் அங்காளம்மன் நகர் பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

TELEGRAM: t.me/Agnipuratchi1

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages