”சானிட்டரி நாப்கின்களில் ஆபத்தான ரசாயன பொருள்” : ஆய்வில் அதிர்ச்சி தகவல்.
இந்தியாவில் விற்பனையாகும் சானிட்டரி நாப்கின்களில், இதய பாதிப்பு, நீரிழிவு, புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்த கூடிய அபாயகரமான ரசாயன பொருட்கள் அதிகளவில் இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய சந்தையில் விற்பனையாகும் முன்னணி சானிட்டரி நாப்கின்கள் தரம் குறித்து டில்லியை சேர்ந்த டாக்சிஸ் லிங் என்ற என்.ஜி.ஓ அமைப்பு ஆய்வு நடத்தியது.
அதன் முடிவுகளை 'மாதவிடாய் கழிவு - 2022' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
சந்தையில் கிடைக்கும் 4 ஆர்கானிக் சானிட்டரி உட்பட மொத்தம் 10 நாப்கின்களை மாதிரியாக எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தினோம். அதில் பென்சென்டிகார்பாக்சிலிக் அமில எஸ்டர்கள் எனப்படும் பித்தலேட்டுகள் மற்றும் ஆவியாகும் ஆர்கானிக் சேர்மங்கள் இருந்தன.
எண்டோகிரைன் சீர்குலைவு, இதயம் மற்றும் இனப்பெருக்க அமைப்புகளில் ஏற்படும் பாதிப்புகள், நீரிழிவு, சில புற்றுநோய்கள் மற்றும் பிறப்பு குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கும் பித்தலேட்டுகளும் தொடர்புள்ளது.
ஆவியாகும் ஆர்கானிக் சேர்மங்கள், மூளைக் குறைபாடு, ஆஸ்துமா, உடல் குறைபாடுகள், சில புற்றுநோய்கள் மற்றும் இனப்பெருக்க அமைப்பின் சரியான செயல்பாடு பாதிக்கக்கூடிய அபாயத்தை அதிகரிக்கிறது.
முற்றிலும் இயற்கையானதாக அறியப்படும் ஆர்கானிக் சானிட்டரி நாப்கின்களில் அதிக அளவு பித்தலேட்டுகள் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வின்படி, அனைத்து வகையான சானிட்டரி நாப்கின்களிலும், ஆர்கானிக் மற்றும் கனிமங்கள், பித்தலேட்டுகள் உள்ளதா என்று சோதிக்கப்பட்டது. டி.ஐ.டி.பி எனப்படும் ஒரு வகை
பித்தலேட்டுகளில் கிலோவுக்கு, 19,460 மைக்ரோகிராம் அளவுக்கு இருந்தது.
பித்தலேட்டுகளின் கலவையின் செறிவு முறையே ஒரு கரிம மற்றும் கனிம மாதிரியில் 0.0321 மற்றும் 0.0224 கிராம் இருப்பது கண்டறியப்பட்டது.
இது ஐரோப்பிய யூனியனில் உள்ள கட்டாயப்படுத்தப்பட்ட உற்பத்தியின் எடையில் 0.1 சதவீதத்திற்கும் அதிகமானதாகும்.
அனைத்து ஆர்கானிக் மாதிரிகளிலும் அதிக அளவு ஆவியாகும் ஆர்கானிக் சேர்மங்கள் இருப்பதுஅதிர்ச்சியளிக்கிறது. இதனால் ஆர்கானிக் நாப்கின்கள் பாதுகாப்பானது என்பதையே உடைத்தெறிந்து விட்டது.
TELEGRAM: t.me/Agnipuratchi1
No comments:
Post a Comment