அக்னிப்புரட்சி இன்றைய (03.12.2022) முக்கிய செய்திகள்.
* கால்பந்தாட்ட உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் பலம் வாய்ந்த போர்ச்சுகல் அணியை, தென்கொரியா வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
* செர்பியா அணியை 2-3 என்ற கோல் கணக்கில் வென்றது சுவிச்சர்லாந்து
* பிரேசில் அணியை 0- 1 என்ற கோல் கணக்கில் வென்றது கேமரூன் அணி
* திருவண்ணாமலையில் மகாரத தேரோட்டம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகாரத தேரோட்டம் 2 ஆண்டுகளுக்கு பின் உற்சாகத்துடன் தொடங்கியது
முதலாவதாக விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
* ஈரோடு: பெருந்துறை அருகே பட்டியலின மாணவர்களை, கழிவறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியை கீதாராணி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது.
* பாகிஸ்தான் கேப்டனை அகற்ற கோரிக்கை!
இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸ்ஸாம் மீது கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாபர் அஸ்ஸாம் கேப்டன் பொறுப்புக்கு தகுதியானவர் கிடையாது. அவரை பொறுப்பிலிருந்து விடுவியுங்கள் என்று முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கூறியுள்ளார். 4 இங்கிலாந்து வீரர்கள் சதமடித்ததை சுட்டிக்காட்டியவர், பாபரை நீக்கிவிட்டு வேறொருவரை நியமிக்கவும் வலியுறுத்தியுள்ளார்
* தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.
டிசம்பர் 7ம் தேதி வடகடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு.
* திருவள்ளூர்: ஊத்துக்கோட்டையில் ராக்கெட் லாஞ்சர் !
ஊத்துக்கோட்டை அடுத்த மாளந்தூர் கிராமத்தில் 100 நாள் வேலையில், குளம் வெட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது இரும்பு குண்டு ஒன்று இருந்ததை கண்டு மக்கள் அதிர்ச்சியில் அலறி அடித்து ஓடினர்.
அங்கு பெரியபாளையம் போலீசார் வந்து பார்த்த போது ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்திய ராக்கெட் லாஞ்சர் குண்டு என்பது தெரிய வந்தது. போலீசார் அதனை கைப்பற்றி சென்னைக்கு அனுப்பினர்.
* HIV தடுப்பூசி சோதனையில் முன்னேற்றம்
உலகத்துக்கே சவாலாக உள்ள HIV-யை எதிர்த்து போராட eOD-GT8 60mer என்ற தடுப்பூசியை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.
மனித பரிசோதனையில் சிறந்த முடிவுகள் கிடைத்துள்ளதாக அறிவியல் இதழில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 8 வாரங்களுக்குள் 2 முறை தடுப்பூசி செலுத்தி கொண்ட 97% தன்னார்வலர்களுக்கு இது பாதுகாப்பானது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
* டெல்டா மாவட்ட பயணிகளின் கோரிக்கையை ஏற்று அண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக திருவண்ணாமலைக்கு ரெயில் இயக்கப்படவுள்ளது.
திருச்சி வேலூர் இடையே இயக்கப்படும் இந்த சிறப்பு ரெயில் டிசம்பர் 6 மற்றும் ஏழாம் தேதிகளில் காலையில் 05.40 மணிக்கு திருச்சியில் புறப்படும். தொடர்ச்சியாக
1️⃣ தஞ்சை - 06.35
2️⃣ பாபநாசம் - 06.56
3️⃣ கும்பகோணம் - 07.10
4️⃣ மயிலாடுதுறை - 08.02
5️⃣ திருவண்ணாமலை - 11.50
மறு மார்க்கத்தில் அதே தினங்களில் வேலூரில் இரவு ஒன்பது மணிக்கு புறப்பட்டு,
1️⃣ திருவண்ணாமலை - 10.20 இரவு
2️⃣ மயிலாடுதுறை - 02.40 இரவு
3️⃣ கும்பகோணம் - 03.15 இரவு
4️⃣ பாபநாசம் - 03.30 இரவு
5️⃣ தஞ்சை - 04.00 இரவு வந்து, திருச்சிக்கு அதிகாலை 05 மணி அளவில் வரும். மக்கள் இந்த சிறப்பு ரயிலை பயன்படுத்தி கொள்ளவும்!
TELEGRAM: t.me/Agnipuratchi1
* டிசம்பர் 2021 லூதியானா நீதிமன்ற கட்டிட குண்டுவெடிப்பு சதித் திட்டம் தீட்டிய பயங்கரவாதி ஹர்ப்ரீத் சிங், கோலாலம்பூரில் இருந்து வந்தவுடன் டெல்லி விமான நிலையத்தில் இருந்த தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அவனை கைது செய்துள்ளது.
* கத்தாரில் நடைபெறும் உலக கால்பந்து போட்டி களத்தில், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி இராமதாஸ் ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும் என்று மயிலாடுதுறையை சேர்ந்த கார்த்திக், அன்புமணி4சிஎம் என்ற பேனரை உயர்த்தி பிடித்து காட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
* தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி, பழைய அருவியில் குளிக்க தடை
வெள்ளப்பெருக்கு காரணமாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
* நடிகர் 'ஹரி வைரவன்' உயிரிழப்பு
வெண்ணிலா கபடி குழு திரைப்படப் புகழ் நடிகர் 'ஹரி வைரவன்' உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்
அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் கடச்ச நேந்தலில் இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.
* LIC வாட்ஸ்அப் சேவை துவக்கம்
எல்ஐசி வாடிக்கையாளர்கள் இனி ஏஜெண்டுகளுக்கு காத்திருக்க தேவையில்லை மற்றும் ஒவ்வொரு சிறிய வேலைக்கும் அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை.
பழைய மற்றும் புதிய பாலிசி விவரங்கள், பிரீமியம், போனஸ் மற்றும் பிற சேவைகள் பற்றிய முழுமையான தகவல்களை வழங்க, LIC WhatsApp சேவையை அறிமுகம் செய்துள்ளது.
வாடிக்கையாளர்கள் 89768 62090 என்ற எண்ணுக்கு Hi என்று வாட்ஸ்அப் செய்து அனைத்து தகவலையும் பெறலாம்.
சந்தேகத்தை தீர்க்க உதவி எண் அறிவிப்பு
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை ஒற்றைச் சாளர இணையம் மூலம் கட்டிடம், மனைப்பிரிவு வரைப்படங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இதுதொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு தொலைபேசி உதவி எண் - 044 29585247 மற்றும் மின் அஞ்சல் முகவரி Support_swp.dtcp@tn.gov.in அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர்கள் இச்சேவையை அலுவலக நேரங்களில் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* வாஷிங்டன்: கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இந்திய தூதர் தரன்சித், சுந்தர் பிச்சைக்கு பத்ம விபூஷன் விருதை வழங்கினார்.
* ஈரோடு: பெருந்துறை அருகே பட்டியலின மாணவர்களை, கழிவறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியை கீதாராணி கைது செய்யப்பட்டார்.
தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கல்வித்துறைக்கும், காவல்துறைக்கும் மாணவர்களின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் கடந்த 30ம் தேதி மாணவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் உண்மை நிரூபிக்கப்பட்டதால் பள்ளி தலைமை ஆசிரியை கீதாராணி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
* ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் உடன் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சந்திப்பு மேற்கொண்டார்.
ட்விட்டர் வெளிப்படை தன்மையுடன் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என எலானிடம் மேக்ரான் வலியுறுத்தியுள்ளார்.
* மலேசியாவில் இருந்து 44,000 மெட்ரிக் டன் யூரியா உரம் காரைக்கால் துறைமுகம் வந்தது.
காரைக்கால் தனியார் துறைமுகத்தில் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
டிசம்பர் மாதத்துக்கு 27,140 மெட்ரி டன் யூரியா தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண் மாவட்டங்களுக்கு தேவைக்கேற்ப ரயில் மூலமாகவும் சாலை மார்க்கமாவும் யூரியா உரம் அனுப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
* மல்லிகைப்பூ விலை ₹ 5000
கன்னியாகுமரி, தோவாளை சந்தையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு.
நேற்று ₹ 1500க்கு விற்பனையான மல்லிகைப்பூ இன்று ₹ 3500ஆக விலை உயர்வு.
தேனியில் ₹ 5,000க்கும், மதுரையில் ₹ 3,000க்கும் மல்லிகைப்பூ விற்பனை.
பனிப்பொழிவால் பூக்கள் உற்பத்தி குறைந்த நிலையில் விலை கடும் உயர்வு.
* உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாற்றுத்திறனாளிகள் தயாரித்த கைவினைப் பொருட்கள், நவீன உபகரண கண்காட்சி தொடங்கி வைப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கான விருதுகளை முதல்வர் வழங்கினார்
6 மாவட்டங்களுக்கு நடமாடும் மறுவாழ்வு சிகிச்சை வாகனங்கள் தொடங்கி வைப்பு
"நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு மடிக்கணினி
வேலை வாய்ப்புடன் கூடிய மென்பொருள் திறன் பயிற்சியையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.
மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ₹1500 ஆக அதிகரிப்பு.
ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்றவர்கள் உள்பட அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ஓய்வூதியம் ₹1500 ஆக அதிகரிப்பு - உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
ஒரு மாற்றுத்திறனாளி கூட வருத்தப்படக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகள் அமைத்து தர வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் துறைகளில் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே பணியாற்ற திட்டங்கள் தொடங்கப்படும்.
* திருச்சியில் பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சி, புதுக்கோட்டையில் பாஜக போராட்டம் நடத்தியது.
திருச்சியில் 11 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட பாஜகவினரை கைது செய்துள்ளனர்.
புத்தூர் அருகே மது விடுதி அமைப்பதை எதிர்த்து போராடிய 9 பாஜக நிர்வாகிகள் கைது செய்து கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
* ஆன்லைன் ரம்மி' அவசர சட்டத்திற்கு அரசாணை வெளியிடாததில் எந்த தவறும் இல்லை - அமைச்சர் ரகுபதி.
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் நேரில் வலியுறுத்தினோம்.
ஆளுநர் தரப்பில் இருந்து எத்தனை கேள்விகள் கேட்டாலும் பதிலளிக்க தயாராக உள்ளோம் - அமைச்சர் ரகுபதி.
இந்தியாவுக்கே முன் மாதிரி சட்டத்தை இயற்றியுள்ளோம்.
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை மட்டுமின்றி ஒழுங்கு முறைகளையும் கொண்டு வர உள்ளோம்.
அவசர சட்டத்திற்கு அரசாணை வெளியிடாததற்கான காரணத்தை ஆளுநரிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளோம்.
* திமுக சார்பில் டிச.16ல் பொதுக்கூட்டம்
திமுக சார்பில் டிச.16ம் தேதி தமிழகம் முழுவதும் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவுப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
* பள்ளியில் என்னதான் நடக்கிறது? 39 மாணவிகளுக்கு இந்த நோயா?
டெஹ்ராடூன்: உத்தரகண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் 39 மாணவிகளுக்கு ஹிஸ்டீரியா எனப்படும் வெறிபிடிக்கும் நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் தகவல் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பள்ளியில் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும் போல சில மாணவிகள் தலை முடியைப் பிடித்துக் கொண்டு பயங்கரமாக கத்திக் கொண்டும் அழுதுகொண்டும் வகுப்பறையிலிருந்து வெளியே தலைதெறிக்க ஓடுகிறார்கள்.
கூட்டாக இத்தனைப் பேருக்கு வெறிபிடிக்கும் நோய் ஏற்படுமா என்று கலக்கத்தோடு விசாரணை நடத்தி வருகிறது பள்ளிக்கல்வித் துறை. மாணவிகளின் பெற்றோர்களோ, ஏதோ தெய்வக் குத்தம் நேர்ந்துவிட்டதாகக் கலக்கம் அடைந்துள்ளனர்.
ராமக் அரசுப் பள்ளியில் 82 மாணவிகளும் 69 மாணவர்களும் பயில்கிறார்கள். இது பற்றி பள்ளி நிர்வாகம் கூறுகையில், திடீர் திடீரென மாணவிகள் இவ்வாறு செய்கிறார்கள். ஆரம்பத்தில் தலைவலிக்கிறது என்கிறார்கள். பிறகு இவ்வாறு கத்திக் கொண்டே ஓடுகிறார்கள். நாள்தோறும் பள்ளித் தொடங்கியதும் குறைந்தது 5 மாணவிகளுக்காவது இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்று என்ன நடக்கிறது என புரியாமல் கூறுகிறார்கள் ஆசிரியைகள்.
மருத்துவர்கள் அடங்கிய குழு பள்ளிக்குச் சென்று மாணவிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறது. இப்படி பல மாணவிகளுக்கு ஒரே பிரச்னை வந்திருப்பது குறித்தும் ஆராய்ந்து வருகிறார்கள். மாணவ, மாணவிகள் தங்களுக்கு இருக்கும் பிரச்னைகள் குறித்து யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதுதான் முக்கிய பிரச்னையாகக் கருதப்படுகிறது.
இவர்களுக்கு ஏற்பட்டிருப்பது மன அழுத்தமாக இருக்கலாம் என்று மனநல மருத்துவர்கள் கருதுகிறார்கள். படிப்பில் அதிகப்படியான அழுத்தமே இதற்கு காரணமாக இருக்கலாம் அல்லது ஒருசிலருக்கு பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். அதனைப் பார்க்கும் பெண்களுக்கு தங்களுக்கும் அதே பாதிப்பு ஏற்படலாம் என்று அச்சம் அல்லது இருப்பதாக நினைப்பது போன்றவையும் காரணங்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
TELEGRAM: t.me/Agnipuratchi1
* மதுரை: போக்குவரத்து விதிகளை மீறி, வாகன எண் பலகை பொருத்திய 1,050 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதில், மொத்தம் ₹7 லட்சம் அபராதம் வசூலாகியுள்ளதாக மாநகர போக்குவரத்து காவல்துறை தகவல்.
உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவின் படி, மதுரை மாநகரில் விதிமுறை மீறி பொருத்தி வாகன எண் பலகையை முறைப்படி மாற்றம் செய்து வாகனங்கள் விடுவிக்கப்பட்டது.
* அவசர சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்காததால் எந்த தவறும் இழைக்கப்படவில்லை என்று திறனற்ற திமுக அரசின் சட்டத்துறை அமைச்சர் பத்திரிகையாளர்களை சந்தித்து இன்று கூறியுள்ளார்.
அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கிய தேதிக்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தேதிக்கும் இடையே 12 நாட்கள் இடைவெளி இருந்தது.
அவசர சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்காததால் அக்டோபர் மாதம் 7ஆம் தேதிக்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழகத்தில் 8 உயிர்கள் பலியாகி உள்ளது.
இதற்கு திறனற்ற திமுக அரசின் சட்டத்துறை அமைச்சரும் @CMOTamilnadu ஆகியோரே பொறுப்பு.
- கே.அண்ணாமலை, மாநில பாஜக தலைவர்
* லிஃப்டில் போக கூட பயமா இருக்கு - தமிழிசை சௌந்தரராஜன்
சென்னையில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான செஸ் போட்டி நிகழ்வில் கலந்து கொண்ட தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “செஸ் விளையாட்டு போன்றுதான் வாழ்க்கையும் முன்னேறச் சற்று பின்னோக்கி செல்ல வேண்டியது அவசியம். விமானத்தில், காரில் சென்றால் பாதுகாப்பு இல்லை என தோன்றும் ஆனால் இப்பொழுது லிஃப்டில் செல்வது கூட பாதுகாப்பு இல்லை. என்ன வாழ்க்கை இது என தோன்றுகிறது” என்றார்.
* கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை: விமான கட்டணம் உயர்வு
கிறிஸ்துமஸ், புத்தாண்டை சொந்த ஊருக்கும், சுற்றுலா நகரங்களுக்கு சென்றும் கொண்டாட மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் விமான பயணத்துக்கான தேவை அதிகரித்து வருவதால், கட்டணமும் பல மடங்கு உயர்ந்து வருகிறது. இதனால் பன்னாட்டு விமான கட்டணம் மட்டுமின்றி உள்நாடுகளுக்கு இடையே இயக்கப்படும் விமானங்களின் கட்டணமும் அதிகரித்துள்ளது.
* ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு
ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியா குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது: அமெரிக்காவின் வலுவான நட்புறவு நாடு இந்தியா. பருவநிலை மாற்றம், எரிசக்தி, உணவு நெருக்கடி ஆகிய சவால்களை எதிர்கொள்ளும் இவ்வேளையில், ஜி20 அமைப்பிற்கு தலைமை பொறுப்பேற்றுள்ள இந்தியாவிற்கும், எனது நண்பர் பிரதமர் மோடிக்கும் எனது ஆதரவை அளிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
* நானும் இனவெறியை எதிர்கொண்டுள்ளேன்: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்
இங்கிலாந்து அரண்மனையில் கடந்தவாரம் இனவெறி சர்ச்சை ஏற்பட்டது. இதுகுறித்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பேசியதாவது: கடந்த காலங்களில் நானும் இனவெறியை எதிர்கொண்டுள்ளேன். நான் சிறுவனாக இருந்தபோதும், இளைஞனாக இருந்தபோதும் அதை அனுபவித்துள்ளேன். ஆனால் இப்போதும் அது நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் இனவெறியை கையாள்வதில் நம்முடைய நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது.
* சென்னை, கேளம்பாக்கத்தில் திரைப்பட படப்பிடிப்பின்போது ரோப் கயிறு அறுந்து சண்டை பயிற்சியாளர் உயிரிழப்பு.
வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நடிப்பில் உருவாகும் 'விடுதலை' படப்பிடிப்பின்போது விபத்து.
ரோப் கயிறு அறுந்ததில் கீழே விழுந்து படுகாயமடைந்த சண்டை பயிற்சியாளர் சுரேஷ் உயிரிழப்பு.
* கொரோனா தொற்றால் பலியான அரசு மருத்துவரின் மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்”-தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவி திவ்யா தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவு.
அரசு உத்தரவாதப்படி வேலை வழங்காவிட்டால் மீண்டும் நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் அனுமதி.
* குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல்: இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது.
14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு வரும் டிசம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது.
* ஓபிஎஸ் அணியில் இருந்து விலகுவதாக அவரது ஆதரவாளர் கோவை செல்வராஜ் அறிவிப்பு
* என் அப்பாவும் அம்மாவும் இது வரை விமானத்தில் பறந்தது இல்லை. ஒரு நாற்பது வீடு உள்ள கிராமம் தான் அவர்களின் உலகம். அவர்களுக்கு நான் டிவியில் வருவது, என்னை சிலர் திட்டுவது எல்லாம் ஒரு cultural ஷாக். இருந்தாலும் என்னால் முடிந்த வரை அவர்களுக்கு புரிய வைக்கிறேன்."
"என் சகோதிரியை அவர்களுக்கு புரிய வைத்து பார்த்துக்க சொல்லி உள்ளேன்".
"என்னை பொருத்தவரை நான் புகழ்ச்சி இகழ்ச்சி இரண்டையும் உள்ளுக்குள் கொண்டு செல்வது இல்லை. இந்த சமூக வலைதள தாக்குதல்களை எல்லாம் எதிர்பார்த்து தான் அரசியலில் உள்ளேன். - K.அண்ணாமலை தலைவர்
பிஜேபி தமிழ்நாடு
* உலகக்கோப்பை கால்பந்து 2022: அமெரிக்கா அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது நெதர்லாந்து அணி.
நாக் அவுட் சுற்றில் அமெரிக்கா அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது நெதர்லாந்து அணி.
No comments:
Post a Comment