அக்னிப்புரட்சி இன்றைய (05.12.2022) முக்கிய செய்திகள்.
* உலகக்கோப்பை கால்பந்து 2022: போலந்து அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ் அணி.
நாக் அவுட் சுற்றில் போலந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ் அணி.
* உலகக் கோப்பை கால்பந்து போட்டி: செனகல் அணியை 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து.
தென்காசி: குற்றால அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மெயின் அருவியில் குளிக்கத் தடை; ஐந்தருவியில் மட்டும் குளிக்க அனுமதி.
* சொகுசு பேருந்தும் லாரியும் மோதி விபத்து - 3 பேர் பலி
பொன்னேரி அருகே தச்சூர் கூட்டுச்சாலையில் தனியார் சொகுசு பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!
4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பு; சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்
* வங்கக் கடலில் 8ம் தேதி உருவாகிறது மாண்டஸ் புயல்: தமிழகத்தில் மழை கொட்டும்
சென்னை: வடகிழக்கு பருவமழை தற்போது குறைந்துள்ள நிலையில் 8ம் தேதி வங்கக் கடலில் புயல் (மாண்டஸ்) உருவாகும், அதன் காரணமாக தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என்றும், அந்த புயல் வலுவிழந்த நிலையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தரைப்பகுதியில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதியில் நீடிக்கும் மெல்லிய காற்று சுழற்சி மற்றும் தென்சீனக் கடல் பகுதியில் இருந்து அந்தமான் கடல் பகுதிக்கு வந்துள்ள காற்றுசுழற்சி, இவை இரண்டையும் ஒன்றிணைத்த இணைப்பு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
நேற்று முன்தினம் தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே நல்ல மழையை கொடுத்தது. மேலும் கோவை, ஈரோடு மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் கடலூர், புதுச்சேரியிலும் நல்ல மழை பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வந்தது.
இந்நிலையில், நேற்று மதியம் மற்றும் மாலையில் அதிக மழை பெய்தது. தரைப்பகுதியில் நிலவும் வெப்ப நிலை காரணமாகவும், கடல் பகுதியில் இருந்து வீசும் காற்று காரணமாக வட மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது கடலூர், விழுப்புரம், புதுச்சேரியில் பெய்து கொண்டு இருக்கின்ற மழை படிப்படியாக வடக்கு நோக்கி நகர்ந்து வட கடலோர மாவட்டங்களில் பெய்யத் தொடங்கும். பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டதால் நேற்று மாலையில் இருந்தே மழை பெய்யத் தொடங்கியது.
TELEGRAM: t.me/Agnipuratchi1
இன்று வடகடலோர மாவட்டங்களில் மழை குறைவாக இருக்கும். டெல்டா மாவட்டங்களிலும் மழை குறையும், கன்னியாகுமரி திருநெல்வேலி, மாவட்டங்களில் இன்று இரவு வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் மழை குறைந்தாலும், அதற்கு பிறகு தமிழகத்தில் அதிக மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்தமான் பகுதிக்கு வந்துள்ள காற்று சுழற்சி, இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். 6ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 7ம் தேதி ஆழ்ந்த காற்றழுத் தாழ்வு மண்டலமாகவும் மாறும் பின்னர் அது மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி புயலாக மாறினால் அந்த புயலுக்கு ‘மாண்டஸ் ’என்று பெயரிடப்பட்டுள்ளது.
இது முதலில் மேற்கு நோக்கி நகர்ந்து வந்து வடஇலங்கையை நெருங்கி வந்து தரைக்காற்றை கடல் பகுதியை நோக்கி இழுக்கும். இந்த புயல் கரையைக் கடக்காது, தரைப் பகுதியில் இருக்கும் காற்றை இழுக்கும் நிலையில் வலுவிழந்து, நன்கமைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி கரையைக் கடக்கும். அதற்கு முன்னதாக கடலில் இரண்டு நாட்கள் அந்த புயல் நிலை கொண்டு தமிழகத்துக்கு மிக கனமழையை கொடுக்கும்.
7ம் தேதி வடஇலங்கை பகுதியில் மிக கனமழை பெய்யும். தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, ஆகிய பகுதிகளில் 8ம் தேதி கனமழை முதல் மிக கனமழை பெய்யும். அதே நேரத்தில் கடலில் மாண்டஸ் புயல் நிலை கொண்டு இருந்தாலும் வலுவிழக்கும், தரைக் காற்றின் காரணமாக தரைப் பகுதிக்கு நெருங்கி வந்து செயலிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும்.
அதற்கு பிறகுதான் கரையைக் கடக்கும், அதனால் தரைப் பகுதியில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. மயிலாடு துறை - திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இடையில் கரையைக் கடக்கும். நீலகிரி, திருப்பூர், ஈரோடு கரூர், திருச்சி, திண்டுக்கல் நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை கொடைக்கானல் வால்பாறை பகுதிகளில் வலுவான மழை பெய்யும்.
இந்த புயல் கரையைக் கடப்பதற்கு முன் தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களின் வடக்குப் பகுதியில் வலுவான மழையை கொடுக்கும் வாய்ப்புள்ளது. வலுவிழந்து தரைப் பகுதிக்கு வந்த பிறகு தெற்கு கர்நாடகா, தமிழகத்தின் வட மாவட்டங்கள், தெற்கு ஆந்திரா பகுதி, வழியாக அரபிக் கடல் பகுதிக்கு மெல்ல கடந்து செல்லும், அதனால் உள் மாவட்டங்களில் தரைக் காற்று அதிகம் இருக்காது. கடலூர் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் மட்டுமே தரைக்காற்று அதிகம் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
* மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தால் சூறையாடப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளி 145 நாட்களுக்கு பின் திறப்பு.
9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடக்கம்.
பள்ளி முகப்பில் தோரணம், வாழைமரம் கட்டி மாணவர்களுக்கு வரவேற்பு.
* உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.
வங்கக்கடல் பகுதிகளில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.
அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் - இந்திய வானிலை ஆய்வு மையம்.
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வங்கக் கடலில் டிச.8ம் தேதி புயலாக உருவாக வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்
வங்கக் கடலில் புதிதாக உருவாகும் புயலுக்கு மாண்டஸ் என பெயர்.
வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த பெயர் வைப்பு.
* திருவள்ளூர்: பொன்னேரி அருகே தச்சூர் கூட்டுசாலையில் தனியார் சொகுசு பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு.
* டெல்லியில் மாநகராட்சி தேர்தலில் மந்தமான வாக்குப்பதிவு, சுமார் 50% வாக்குகளே பதிவானது
* மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, 164 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி
* குஜராத் சட்டப்பேரவை தேர்தல்: அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார்.
* ஜெயலலிதா நினைவு தினம் - தமிழிசை அஞ்சலி
"பணிந்து நின்றுதான் பணிசெய்ய வேண்டும் என்பதில்லை துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதை நிரூபித்த பெண் ஆளுமை"
- தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் நினைவஞ்சலி
* சச்சின் சாதனையை நெருங்கிய கோலி
வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி சூப்பரான ஒரு கேட்ச் பிடித்தார். இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஃபீல்டராக விராட் கோலியின் 139-வது கேட்ச். தற்போது அதிக கேட்ச் பிடித்த இந்திய ஃபீல்டர்களில் 3-வது இடத்தில் உள்ளார்.
கோலி இன்னும் 2 கேட்ச் பிடித்தால் சச்சின் (140) சாதனையை முறியடிப்பார். உலக அளவில் கோலி 5-வது இடத்தில் உள்ளார். ஜெயவர்த்தனே முதலிடத்தில் (218) உள்ளார்.
* சென்னையில் 04.12.2022 அன்று காலமான மறைந்த தொழிலதிபர் டெல்டா நாராயணசாமி அவர்களின் துணைவியார் நா.தனலட்சுமி அம்மையாரின் உடலுக்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நேரில் சென்று மலர் மரியாதை செலுத்தினர். அப்போது அவரது புதல்வர் இளமாறன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். உடன் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ கே மூர்த்தி ஜெகத்ரட்சகன் தேர்தல் பணிக்குழு தலைவர் மு ஜெயராமன் சென்னை மாவட்ட அமைப்பு செயலாளர் ஏகதையாளன் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஜிவி சுப்பிரமணியம் முத்துக்குமார் ஏழுமலை மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
* கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தெற்கு ரயில்வே 6-12-2022 மற்றும் 7-12-2022 இரண்டு தினங்கள் திருவாரூரில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்
காலை 5 மணிக்கு திருவாரூரில் புறப்படும். இந்த சிறப்பு ரயிலுக்கு நிறுத்தங்கள்:- நன்னிலம், பூந்தோட்டம், பேரளம், மயிலாடுதுறை, விழுப்புரம், திருஅண்ணாமலை
TELEGRAM: t.me/Agnipuratchi1
* இது காந்தியோட கட்சி: ராகுல் காந்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் தற்போது ராஜஸ்தானில் நுழைந்துள்ளார்.
இந்நிலையில், தங்களது கட்சி காந்தியின் கட்சி. சாவர்க்கர் அல்லது கோட்சேவின் கட்சி அல்ல என்று கூறியுள்ளார்.
மேலும், எங்களுக்கு எப்படி கடினமாக உழைப்பதென்பது தெரியும் என்றும் கூறியுள்ளார். இந்நிகழ்வில், மாநில முதல்வர் அஷோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோர் உடனிருந்தனர்.
* 20,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அமேசான்?
ட்விட்டர், மெட்டா நிறுவனங்களை தொடர்ந்து அமேசானும் மிகப்பெரிய அளவில் ஆட்குறைப்பு அறிவிப்பை வெளியிட்டது.
லாபம் இல்லாததால் செலவினங்களைக் குறைக்க இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை அமேசான் செய்ய உள்ளதாக கூறப்பட்டது.
அந்தவகையில் சில தினங்களுக்கு முன் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது 20,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அந்நிறுவனம் தயாராகி வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.
* மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையிலுள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து அஞ்சலி.
* தமிழ்நாட்டில் சத்துணவுத் திட்ட சீரமைப்பு என்ற பெயரில் சுமார் 28 ஆயிரம் சத்துணவு மையங்களை மூடுவதற்கு அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன - பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி.
சத்துணவு திட்டத்தை வலுப்படுத்த வேண்டிய தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சத்துணவு மையங்களை மூடுவதோ அல்லது ஒருங்கிணைப்பதோ சத்துணவுத் திட்டத்தை வலுவிழக்கவே செய்யும்
சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் இருந்தால் அதை சமூகநலத்துறை கைவிட வேண்டும்; சத்துணவுத் திட்டம் இப்போதுள்ள நிலையிலேயே தொடரும் என்று அரசு அறிவிக்க வேண்டும்.
காலை உணவுத் திட்டத்தை அதிக எண்ணிக்கையிலான பள்ளிகளுக்கு நீட்டிக்க வேண்டும்
* குஜராத் தேர்தல் : அகமதாபாத்தின் நாரன்புராவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தன் குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்
* ஜி20 மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க, டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இன்று மாலை, பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் கலந்து கொண்டு, இன்று இரவே சென்னை திரும்புகிறார்
* உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முதல் பெண் சோப்தாராக லலிதா என்பவர் நியமனம்.
* ஜி 20 நாடுகளின் மாநாடு டெல்லி மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் இரண்டு இடங்கள், புதுச்சேரியில் ஒரு இடத்திலும் நடைபெறுகின்றது. - மத்திய அமைச்சர் எல்.முருகன்
* மதுரையில் விஏஓ தேர்வுக்கான ஆங்கில திறனறி தேர்வு விடைத்தாள் லீக் ஆன விவகாரத்தில் வட்டாச்சியர் பணியிட மற்றம் செய்துள்ளனர்.
கவனக்குறைவாக இருந்ததாக மதுரை தெற்கு வட்டாச்சியர் கல்யாணசுந்தரம் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
* குஜராத் தேர்தலில் பிரதமர் மோடியின் தயார் ஹீரா பென் சக்கர நாற்காலியில் சென்று வாக்களித்தார்.
காந்தி நகரில் ஹீரா பென் சக்கர நாற்காலியில் உறவினர்கள் உதவியுடன் வந்து வாக்களித்து சென்றார். முன்னதாக அகமதாபாத் நகரின் ரணிப் பகுதியில் பிரதமர் மோடி தனது வாக்கை செலுத்தினர்.
* விமான போக்குவரத்தின் வளர்ச்சி நிலைகளை ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு நிபந்தனை விதித்துள்ளது. 4,970 ஏக்கர் பரப்பில் புதிய விமான நிலையம் பரந்தூரில் அமைகிறது. பரந்தூர் விமான நிலையத்துக்காக 13 கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்து வருகிறது.
* சென்னை உள்பட 13 மாவட்டங்களில் வரும் 8ம் தேதி ரெட் அலர்ட்.
கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் அதி கனமழைக்கு வாய்ப்பு.
* கடலூர் மாவட்டம் பன்ருட்டி திருத்துறையூர் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல்; அவ்வழியாக சென்ற மஞ்சு (22) என்ற பெண் தந்த தகவலால் விபத்து தவிர்ப்பு
விரிசலை ரயில்வே ஊழியர்கள் சரி செய்தனர்; மஞ்சுவுக்கு ரயில்வே போலீசார் பாராட்டு.
* பணம், பரிசுப் பொருட்களை வழங்கி மதமாற்றம் செய்வது அரசமைப்பு சாசனத்திற்கு எதிரானது.
மாநிலங்களிடம் விளக்கம் பெற்று மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
மதமாற்றம் தான் அறப்பணியின் நோக்கமா? - நீதிமன்றம் வேதனை.
பாஜகவை சேர்ந்த அஸ்வினி உபாத்தியா தாக்கல் செய்த மனுவில் உச்சநீதிமன்றம் உத்தரவு.
* டெல்லியில் ஜி20 மாநாடு குறித்து அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
பிரதமர் மோடி தலைமையில் குடியரசு தலைவர் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்பு.
* குஜராத்தில் மீண்டும் பாஜகவே ஆட்சியை கைப்பற்றும் கருத்துக் கணிப்பில் தகவல்.
182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் பெரும்பான்மை பலம் பெற 92 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.
குஜராத்தில் பாஜக: 117 - 140, காங்கிரஸ்: 34 - 51, ஆம் ஆத்மி: 6 - 3 தொகுதிகளை கைப்பற்றும் என நியூஸ் எக்ஸ் கருத்துக்கணிப்பு.
குஜராத்தில் பாஜக: 125 - 130, காங்கிரஸ்: 40 - 50, ஆம் ஆத்மி: 3 - 5, மற்றவை 3 - 7 தொகுதிகளை கைப்பற்றும் என டிவி 9 கருத்துக்கணிப்பு.
68 தொகுதிகளை கொண்ட இமாச்சலப்பிரதேசத்தில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடையாது என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல்.
இமாச்சலப்பிரதேசத்தில் பாஜக: 34 - 39, காங்கிரஸ் 28 - 33, ஆம் ஆத்மி 1, மற்றவை 1 தொகுதியை கைப்பற்றும் என கருத்துகணிப்பு.
* ஜி 20 ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை:
காலநிலை மாற்றத்தை தடுக்க இந்திய அரசின் இலக்குகளை எட்ட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இயற்கை பாதுகாப்பு காலநிலை மாற்றத்தை கையாள தமிழ்நாடு ‘பசுமை காலநிலை நிறுவனத்தை’ உருவாக்கி உள்ளோம்.
உலகளவில் இந்தியா அளித்துள்ள உத்தரவாதங்களைக் காப்பாற்றத் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும்.
இந்தியாவின் பெருமையை உலகிற்கு பறைசாற்றுவோம்.
இந்தியா ஜி 20-க்கு தலைமை ஏற்றுள்ள நிலையில், தமிழ்நாடு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்கும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* 2001-02ம் கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு ஜன.2ம் தேதி முதல் தேர்வு: அண்ணா பல்கலைக்கழகம்
இளநிலை, முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கு அரியர் தேர்வு அட்டவணை வெளியீடு.
* திருவண்ணாமலை மகா தீபத்தையொட்டி விழுப்புரத்தில் நாளை குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
செஞ்சி, மேல்மலையனுர், அவலூர்பேட்டை, மேல்பாப்பம்பாடி, ஆலம்பூண்டியில் அரசு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
நாளை விடுமுறை விடும் பள்ளிகளுக்கு வரும் சனிக்கிழமை (10.12.2022) பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment