அக்னிப்புரட்சி இன்றைய (08.12.2022) முக்கிய செய்திகள்.
* குஜராத், இமாச்சல் சட்டப்பேரவைத் தேர்தலில் வெல்லப்போவது யார்? இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
உத்தரபிரதேசம், பீகார் உள்பட 6 மாநிலங்களில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
* வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, 'மாண்டஸ்' புயலாக வலுப்பெற்றது.
காரைக்காலில் இருந்து 560 கி.மீ. தூரத்திலும், சென்னையில் இருந்து 640 கி.மீ. தூரத்திலும் புயல் மையம்.
புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிக்கோட்டாவுக்கும் இடையே நாளை புயல் கரையை கடக்க வாய்ப்பு - வானிலை மையம்.
* 8 டிசம்பர் 2021 அன்று, இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் CDS ராவத் சார் உடன் இணைந்து, 12 துணிச்சலான ஆன்மாக்களை இழந்தோம்,
அவர்களின் முதல் ஆண்டு நினைவு தினத்தில் அவர்களை நினைவு கூர்ந்தோம்.
1.ஜெனரல் பிபின் ராவத்
2. திருமதி மதுலிகா ராவத்
3.பிரிக் எல்எஸ் லிடர் லெப்டினன்ட் 4.கர்னல் எச் சிங்
5.Wg Cdr PS சௌஹான்
6.Sqn Ldr K சிங்
7.JWO தாஸ்
8.JWO பிரதீப்
9.ஏ ஹவ் சத்பால்
10.என்.கே.குர்சேவக் சிங்
11.என்கே ஜிதேந்தர்
12.எல்/என்கே விவேக்
13.எல்/என்கே எஸ் தேஜா அவர்களின் துணிச்சலான நெஞ்சங்களுக்கு நாடு என்றும் கடன்பட்டிருக்கும்.
* சென்னை அண்ணாசாலை அருகே ரிச்சி தெருவில் 90 கடைகளுக்கும், பாரிமுனை நயினியப்பன் தெருவில் 30 கடைகளுக்கும் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்!
நீண்ட காலமாக தொழில்வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்ததால் அதிகாரிகள் நடவடிக்கை!
* தென்காசி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை:
இயற்கைக்கும், வீரத்துக்கும், அன்மிகத்துக்கும், வேளாண்மைக்கும் புகழ்பெற்ற தென்காசிக்கு வந்ததில் பெருமை கொள்கிறேன்.
19 மாதங்களில் பல்வேறு சாதனைகள்; இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் 50,390 மாணவர்கள் பலன் பெற்றுள்ளனர்.
உங்கள் முதல்வர் திட்டத்தின் கீழ் 11,490 மனுக்கள் பெறப்பட்டு 11,400 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
தென்காசி மக்களின் பிரதான கோரிக்கையான ஜம்பு நதி திட்டம் கடந்த ஆட்சியில் முறையாக அனுமதி வழங்கப்படாததால் திட்டம் தாமதமானது.
தற்போது வனத்துறையிடமிருந்து அனுமதி பெறப்பட்டு விட்டது. முறையாக பணிகள் விரைவில் வழங்கும்.
* சென்னை மாநகராட்சி புயல் எச்சரிக்கை
மெரினா, பெசன்ட் நகர் போன்ற கடற்கரை பகுதிகளுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்
காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், மரங்களின் அருகாமையில் நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்
மாண்டஸ் புயல் - சென்னை மக்களின் அவசர தேவைக்கான உதவி எண்கள் அறிவிப்பு!
1913, 044-2561 9206, 044-2561 9207, 044-2561 9208, 9445477205 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு
* குஜராத் தேர்தல் முடிவுகள்: மோர்பி தொகுதியில் பாஜக வேட்பாளர் 62,079 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
சமீபத்தில் இந்நகரில்தான் தொங்கு பாலம் அறுந்து விழுந்து 140 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது
🔴 வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவு புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே, மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
* அரசு பேருந்துகள் இரவில் இயங்காது.
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று இரவு அரசு பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிப்பு.
* 6 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்:
சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 6 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.
கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம், காரைக்கால் துறைமுகங்களில் 5 ம் எண். புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.
* திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் நாளை நடைபெறவிருந்த பாமகவின் 7 மாவட்டங்களின் கலந்தாய்வு கூட்டங்கள்
புயல் எச்சரிக்கை காரணமாக ஒத்திவைப்பு - பா.ம.க. தலைமை நிலையம் அறிவிப்பு.
பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்களுடனான கலந்தாய்வு தைலாபுரத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கத்தில் நாளை 09.12.2022 வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
வடமாவட்டங்களை நாளை தாக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டிருப்பதால் நாளை நடைபெறவிருந்த கலந்தாய்வுக் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. கூட்டம் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
🔴🔴 LATEST RESULT
குஜராத், இமாச்சல் சட்டப்பேரவைத் தேர்தலில் முடிவுகள் விவரம்...
குஜராத்
மொத்த தொகுதி: 182
பெரும்பான்மைக்கு தேவை: 92
பாஜக: 148 தொகுதிகளில் வெற்றி; 8ல் முன்னிலை
காங்கிரஸ்: 16ல் வெற்றி; 1ல் முன்னிலை
ஆம் ஆத்மி: 5 தொகுதிகளில் வெற்றி
மற்றவை- 04
ஹிமாச்சலப் பிரதேசம்
மொத்த தொகுதி: 68
பெரும்பான்மைக்கு தேவை: 35
பாஜக: 25
காங்: 40
ஆம் ஆத்மி-00
மற்றவை-03
UPDATE: 07:20PM
TELEGRAM: t.me/Agnipuratchi1
* தேசிய கட்சியாகிறது ஆம் ஆத்மி
டெல்லி, பஞ்சாப், கோவாவை தொடர்ந்து குஜராத்தில் தடம் பதித்தது ஆம் ஆத்மி
தேர்தல் ஆணைய விதிகளின் படி ஆம் ஆத்மி தேசிய கட்சி அங்கீகாரத்தை பெற தகுதிப்பெற்றது
4 மாநிலங்களில் தடம் பதித்து, தேர்தல் ஆணைய விதிகளின் படி ஆம் ஆத்மி தேசிய கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது.
* பாஜக நிர்வாகிகளுக்கு அண்ணாமலை எச்சரிக்கை
எந்த ஒரு தவறு செய்தாலும், பிரச்சினைகளில் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக நிர்வாகிகளுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை
கட்சி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும், நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டும் - அண்ணாமலை
* ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணை நிறைவடைந்து தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்
இவ்வழக்கில் கடந்த மாதம் 24ம் தேதி (24/11/2022) விசாரணை தொடங்கியது. இன்றுடன் சேர்த்து மொத்தம் 7 நாட்கள் விசாரணை நடைபெற்றுள்ளது
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஏதுவாக தமிழக அரசு 2017ம் ஆண்டு கொண்டுவந்த சட்டத்திற்க்கு எதிராக பிராணிகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன
இதனையடுத்து ஜல்லிக்கட்டு கலாச்சார உரிமையா? என்பதை முடிவு செய்ய 5 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணை இன்று நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது
* மாண்டஸ் புயலை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்கள் நாளை காலை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
* மாண்டஸ் புயலை ஒட்டி தமிழகத்தில் நாளை (9.12.2022) பள்ளி, கல்லூரி விடுமுறை மற்றும் தேர்வுகள் மாற்றம் குறித்த விவரம்...
UPDATE: 08:40PM
1) சென்னை
2) திருவள்ளூர்
3) செங்கல்பட்டு
4) காஞ்சிபுரம்
5) விழுப்புரம்
6) வேலூர்
7) ராணிப்பேட்டை
8) கள்ளக்குறிச்சி
9) தஞ்சை
10) திருவாரூர்
11) நாகை
12) மயிலாடுதுறை
13) அரியலூர்
14) பெரம்பலூர்
15) புதுக்கோட்டை
16) சேலம்
17) கடலூர்
18) நாமக்கல்
19) திருப்பத்தூர்
20) திருவண்ணாமலை
21) தருமபுரி
புதுவை மற்றும் காரைக்கால்
தேர்வுகள் ஒத்திவைப்பு
நாளை (09-12-2022) நடைபெறவிருந்த அண்ணா, அண்ணாமலை, சென்னை, திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு.
நாளை (09.12.2022) நடைபெற இருந்த பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு - தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு.
TELEGRAM: t.me/Agnipuratchi1
* ஹிமாச்சல் பிரதேசத்தில் ஆட்சியை பிடித்தது காங்கிரஸ்.
68 தொகுதிகளில் 40 இடங்களை கைப்பற்றியது காங்கிரஸ்.
காங்கிரஸ் -40 , பாஜக-25 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 3 இடங்களிலும் வெற்றி.
காங்கிரஸ் 43.9% வாக்குகளையும், பாஜக 43% வாக்குகளையும் பெற்றுள்ளது.
* கடலூர்: மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக மாவட்ட ஆட்சித் தலைவர் பாலசுப்ரமணியம் அறிவிப்பு.
மழை மற்றும் புயல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் அவசரக்கால கட்டுப்பாட்டு அறை
கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 04142-221383, 04142-233933, 04142-221113 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம்.
மேலும் கடலோர பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பழுதடைந்த பலவீனமான வீடுகள் நீர் சூழக்கூடிய மற்றும் நீர் போகும் சாத்தியக்கூறு உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாவட்ட நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்.
TELEGRAM: t.me/Agnipuratchi1
* மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருச்சி மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (09.12.2022) ஒரு நாள் விடுமுறை - மாவட்ட ஆட்சித் தலைவர்.
No comments:
Post a Comment