அக்னிப்புரட்சி இன்றைய (11.12.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (11.12.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (11.12.2022) முக்கிய செய்திகள்.

* அரையிறுதியில் மொராக்கோ

உலக கோப்பை கால்பந்து போட்டி: காலிறுதி போட்டியில் போர்ச்சுகல் அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது மொராக்கோ அணி

* உலக கோப்பை கால்பந்து போட்டி: காலிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ் அணி

* ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் ஓட்டெடுப்பு: இந்தியா புறக்கணிப்பு!

நியூயார்க்: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து தாக்கல் செய்த தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பில் தற்போது தலைமை பொறுப்பில் உள்ள இந்தியா ஓட்டளிக்காமல் புறக்கணித்தது.

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், 15 உறுப்பு நாடுகள் உள்ளன. கவுன்சிலின் தற்போதைய தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது.இந்நிலையில், அமெரிக்கா மற்றும் அயர்லாந்து ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தன.

குறிப்பிட்ட சில நாடுகளின் மீது பொருளாதார தடைகள் உள்ளன. மனிதநேய அடிப்படையிலான பணிகள் மேற்கொள்வதற்கு, இந்தத் தடையில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் இந்த தீர்மானம் இருந்தது.

இதன் மீதான ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணித்தது.அதே நேரத்தில் மற்ற 14 நாடுகள் ஆதரவாக ஓட்டளித்தன.

ஓட்டுப்பதிவுக்கு முன், கவுன்சிலின் தலைவராக உள்ள இந்தியாவின் துாதர் ருசிரா காம்போஜ் பேசியதாவது:இந்தத் தீர்மானம், பயங்கரவாத அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு எதிராக உள்ளது.

இந்த தடை விலக்கை தவறாகப் பயன்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளன.
குறிப்பாக எங்களுடைய அண்டை நாட்டில் உள்ள பல பயங்கரவாத அமைப்புகள், தொண்டு நிறுவனங்களாக அங்கு பதிவு செய்து இயங்குகின்றன. இந்த தடை விலக்கலால் அந்த பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டிக் கொள்ளவும், ஆயுதங்களை வாங்குவதற்குமான வாய்ப்பை பாதுகாப்பு கவுன்சிலே வழங்குவது போல அமைந்துவிடும். இவ்வாறு அவர் பேசினார்.

TELEGRAM: t.me/Agnipuratchi1

* தமிழக அமைச்சரவை விரிவாக்கம்; உதயநிதிக்கு எந்த துறை? ஆலோசனை தீவிரம்!

தமிழ்நாட்டின் அமைச்சராக டிசம்பர் 14ம் தேதி உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஸ்டாலின் 2021ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றார். ஆட்சி பொறுப்பேற்று 18 மாதங்களை கடந்துள்ள நிலையில் அமைச்சரவையில் ஒரு முறை மட்டும் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் ராஜகண்ணப்பன், சிவசங்கர் ஆகிய 2 அமைச்சர்களின் துறைகள் மட்டும் மாற்றப்பட்டது. இந்நிலையில், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதிக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க முடிவு செய்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

டிசம்பர் 14ம் தேதி அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. அமைச்சர் மெய்யநாதனிடம் உள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையும், முதலமைச்சர் ஸ்டாலின் கவனித்து வந்த சிறப்பு முயற்சிகள், சிறப்புத்திட்ட செயலாக்கம், ஊரக வளர்ச்சி & ஊராட்சித் துறை அமைச்சர் கவனித்து வந்த வறுமை ஒழிப்பு மற்றும் வாழ்வாதார இயக்கங்கள் ஆகியவை உதயநிதிக்கு அளிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டுறவுத் துறை அமைச்சராக உள்ள ஐ.பெரியசாமி வசம் ஊரக வளர்ச்சி & ஊராட்சித் துறை, ஊரக வளர்ச்சி & ஊராட்சித் துறை அமைச்சராகவுள்ள பெரியகருப்பனிடம் கூட்டுறவுத் துறையும் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் உள்ள மனிதவள மேலாண்மைத் துறையை வேறு அமைச்சருக்கு வழங்கவும், அமைச்சர் ராமச்சந்திரனிடம் உள்ள வனத்துறையை வேறு அமைச்சருக்கு வழங்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டின் அமைச்சராக டிசம்பர் 14ம் தேதி உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

TELEGRAM: t.me/Agnipuratchi1

* இந்தோனேசியாவில் நடைபெற்ற உலக ஜூனியர் விஷு சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா 8 பதக்கங்களை வென்றது.

உலக ஜூனியர் விஷு சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா 3 தங்கம், 3 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

உலக இளையோர் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா வெண்கல பதக்கம் வென்றுள்ளது.

19 வயதிற்குட்பட்டோருக்கான மகளிர் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி வெண்கல பதக்கம் வென்றது. இந்திய வீராங்கனைகள் சஹானா, யஷ்வினி ஜோடி வெண்கல பதக்கம் வென்றது.

* மதுராந்தகம் அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்து -  10க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்

சென்னை,
சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் கருங்குழி அருகே வந்த போது நிலை தடுமாறி சாலை தடுப்பின் மீது மோதியது.

சாலை தடுப்பின் மீது மோதிய அரசுப் பஸ் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த பயணிகளில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்துள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

* காஞ்சிபுரத்தில்183 ஏரிகள் 100 சதவிகிதம் நிரம்பின : பொதுப்பணித் துறை

காஞ்சிபுரத்தில் 111 ஏரிகள் 75 சதவிகிதம் நிரம்பியுள்ளதாகவும், 62 ஏரிகள் 50 சதவிகிதத்துக்கும் மேலாக நிரம்பியுள்ளதாகவும் பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல செங்கல்பட்டு மாவட்டத்திலும் 220 ஏரிகள் 100 சதவிகிதம் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* செய்வதை துணிந்து செய் என்று சொல்கிறார் # பாரதி

டிசம்பர் 11 பிறந்த நாள்

• எந்தவொரு செயலை எடுத்தாலும். துணிந்து செய்.
• திறமை உள்ளவரிடம் பணியாளராக இருந்தாவது தொழிலை கற்றுக் கொள்
• கடவுள் எல்லா உயிர்களிலும் இருக்கிறார்.
• அறியாமை என்பது விஷப்பூச்சி. அது மனதில் புகுந்து விட்டால் இன்பம் மறைந்து விடும்.
• அகங்காரம் என்னும் அசுரனிடம் சிக்கி விட்டால், நரக துன்பத்தை அனுபவிக்கும்நிலை உண்டாகும்.
• துன்பம் வரும் போது, கட்டுப்பாடு எனும் கடிவாளத்தால் மனதை இழுத்துப் பிடித்துக் கொள்.
• பெரிய கஷ்டங்களை அனுபவித்த பிறகே, சிறிய உண்மைகள் புலப்படுகின்றன.
• அதர்மம் இருந்தால் தான் தர்மத்தின் அருமை புரியும். தர்மம் இருக்கும் வரை அதர்மமும் இருந்தே தீரும்.
• ஒன்றை ஆக்குவதும் அழிப்பதும் அவரவர் கையில் தான் இருக்கிறது.
• வைரம் போல உடலை உறுதியாக மாற்று. உடல் வசப்படாவிட்டால் வாழ்வு நரகமாகி விடும்.
• ஒரு செயலை துவங்கும் போது அதன் பயன் இன்னதென்று தெரிந்தே செய்ய வேண்டும்.
• பிறர் பொருளை அபகரிக்க வேண்டும் என மனதால் நினைத்தாலும் பாவம்.
• நல்லவரின் நட்பு, ஒருவனை அறியாமையில் இருந்து அறிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.
• கடவுள் அறிவுக் கடலாக இருக்கிறார். அக்கடலில் நாம் ஒரு நீர்த்துளியாக இருக்கிறோம்.

TELEGRAM: t.me/Agnipuratchi1

அச்சம் தவிர்-நய்யப் புடை
மானம் போற்று-ரவுத்திரம் பழகு
ஆண்மை தவறேல்- தாழ்ந்து நடவேல்
சூரரை போற்று- தீயோர்க்கு அஞ்சேல்
ஓய்தல் ஒழி-நேர்படப் பேசு
தாழ்ந்து நடவேல் -சாவதற்கு அஞ்சேல்
காலம் அழியேல்- கீழோர்க்கு அஞ்சேல்
போர் தொழில் பழகு -தோல்வியில் கலங்கேல் புதியன விரும்பு - வீரியம் பெருக்கு
கெடுப்பது சோர்வு- உண்மைக்கு அஞ்சேல்
வெடிப்பற பேசு - நன்று கருது
வவ்வுதல் நீக்கு -தவத்தினை நிரப்பு நீ
கற்றது ஒழுகு -கைத்தொழில் போற்று
சேர்க்கை அழியேல்-பேய்களுக்கு அஞ்சேல்
ஞாயிறு போற்று-மந்திரம் வலிமை
சவுரியம் தகுமே -எல்லாம் மெய் செய்
நாள் எல்லாம் மெய் செய்

* நாக்பூரில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்து கண்காட்சியை பார்வையிட்டார்.

நாக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் மகாராஷ்டிர முதல்வர் ஏக் நாத் ஷிண்டேவும் கலந்து கொண்டார்.

* சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய இன்று முதல் இரவு 11.30 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி.

தினசரி ஒரு லட்சம் பக்தர்கள் திரள்வதால் சாமி தரிசனம் செய்ய 10 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருப்பதை அடுத்து நடவடிக்கை.

* ஹிமாச்சல் மாநில முதலமைச்சராக சுக்விந்தர் சிங் பதவியேற்பு

முகேஷ் அக்னிஹோத்ரி துணை முதல்வராக பதவியேற்பு

விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பங்கேற்பு

* மகாராஷ்டிரா, நாக்பூர் ரயில் நிலையத்தில் நாக்பூர் - பிலாஸ்பூர் இடையேயான ’வந்தே பாரத்’ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

நாக்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

கோவாவில் 2,870 கோடி செலவில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் மோபா விமான நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

* நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஓரியன் விண்கலம் இன்று பூமிக்கு திரும்புகிறது!

நிலவை ஆய்வு செய்வதற்காக நாசாவின் ஆர்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம் கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் நவம்பர் 25ம் தேதி முதல் சந்திரனை சுற்றி ஆய்வு செய்தது. மிக அருகில் நிலவின் புகைப்படங்களையும் எடுத்து அனுப்பியது.

இந்த நிலையில் ஆர்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம் நிலவில் தனது பணிகளை முடித்துக் கொண்டு அதன் சுற்றுப்பாதையில் இருந்து வெளியேறி கடந்த வாரம் பூமிக்கு திரும்ப தொடங்கியது. இன்று இரவு 11.10 மணிக்கு இந்த விண்கலம் பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள குவாடாலூப் தீவு அருகே தரை இறங்கும்படி திட்டமிடப்பட்டுள்ளது.

சேவைத் தொகுதியில் இருந்து பிரிந்த பிறகு ஓரியன் குழு தொகுதி விண்கலம் தரை இறங்க 'ஸ்கிப் என்ட்ரி' நுட்பத்தை பயன்படுத்தும். இது வருங்கால ஆர்டெமிஸ் திட்டத்துக்கு உதவியாக இருக்கும் என்று நாசா கூறுகிறது. விண்கலம் பாராசூட் உதவியுடன் தரை இறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்கலம் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பும் ஏற்பாடுகளை நாசா செய்து வருகிறது. ஓரியன் விண்கலம் பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்பு அதன் சேவை தொகுதியில் இருந்து குழு தொகுதி பிரிக்கப்படும்.

சேவை தொகுதி பூமியின் வளிமண்டலத்தில் எரிந்துவிடும். விண்கலத்தின் மீதமுள்ள பாகங்கள் நிலம், மக்கள் மற்றும் கப்பல் வழித்தடங்களுக்கு எந்தவித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாத வகையில் அது பூமிக்கு திரும்ப நாசா திட்டமிட்டுள்ளது.

TELEGRAM: t.me/Agnipuratchi1

* காவல் துறையில் பணியாற்றிய டோனி என்ற டாபர்மேன்

(மோப்ப நாய்) உடல்நலக்குறைவு காரணமாக இறந்தது. ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அஞ்சலி செலுத்தினார்.

டோனி 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி பிறந்து 45 நாள்கள் ஆன நிலையில் மோப்ப நாய் பிரிவில் சேர்க்கப்பட்டு, ஒரு சிறந்த துப்பறிவாளராக பணியாற்றியது.

மேலும், கொலை, கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகள் உள்பட 35 வழக்குகளில் விசாரணைக்கு உதவியாக பணியாற்றியது டோனி.

2017 ஆம் ஆண்டு மாநில அளவிலான காவல் துறையின் திறன் போட்டியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றது. 2020 இல் அடையாற்றில் நடைபெற்ற கெனல்கிளப் மீட்டில் இரண்டாம் இடத்தை பிடித்தது.

சென்னை மாநகர காவல் மோப்ப நாய் பிரிவில் மூத்த உறுப்பினர்கலில் ஒன்றான டோனி, சென்னை மாநகர காவலில் இருந்து பிரித்து கடந்த மே மாதம் ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள மோப்ப நாய் பிரிவில் சேர்க்கப்பட்டது.

இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணாக டோனி ஞாயிற்றுக்கிழமை இறந்தது. காவல் துறையில் சுமார் 8 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி உடல்நலக் குறைவால் இறந்த டோனிக்கு ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

மேலும், ஆவடி காவல் ஆணையரக அதிகாரிகள், டோனியின் பயிற்சியாளர் தனசேகர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இறந்த டோனியின் உடல் முழு அரசு மரியாதையுடன், 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

TELEGRAM: t.me/Agnipuratchi1

* கரும்புக்கு ரூ.195 ஊக்கத் தொகை - விரைவில் அறிவிப்பு!

கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவது குறித்து தமிழ்நாடு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில், கரும்பு சாகுபடிப் பரப்பு குறைந்து சர்க்கரை ஆலைகள் நலிவடைந்து வந்த சூழ்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைக்கிணங்க கடந்த இரண்டு ஆண்டுகளாக, கரும்பு விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும், சர்க்கரை ஆலைகளின் திறனை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு, அதிக கரும்பு மகசூலுடன், அதிக சர்க்கரை கட்டுமானமும் தரக்கூடிய கரும்பு இரகங்களை பிரபலப்படுத்துதல், கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை, சொட்டு நீர் பாசனம், கரும்பு அறுவடை இயந்திரங்கள், சர்க்கரை ஆலைகளில் புனரமைப்பு, இணைமின் திட்டம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழக கரும்பு விவசாயிகளுக்கு 2021-22 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய அனைத்து விவசாயிகளுக்கும் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.195 வழங்கும் சிறப்பு ஊக்கத் தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 7 ஆம் தேதி 2021-22 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, 2021-22 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்து, கரும்பு வழங்கிய தகுதி வாய்ந்த விவசாயிகளின் விபரத்தை சேகரித்து, கூர்ந்தாய்வு செய்து, சிறப்பு ஊக்கத்தொகையினை விரைவில் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்க சர்க்கரைத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

TELEGRAM: t.me/Agnipuratchi1

* முதல் டெஸ்ட் கிரிக்கெட் - ரோகித் சர்மா விலகல்

வங்கதேசம் - இந்திய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா போட்டியில் இருந்து விலகல்

கையில் ஏற்பட்ட காயத்தால் பங்கேற்க முடியவில்லை என தகவல்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages