அக்னிப்புரட்சி இன்றைய (12.12.2022) முக்கிய செய்திகள்.
* நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
இனிய நண்பர், தமிழ்த் திரையுலக சூப்பர்ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்> நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் - முதல்வர்
* முருங்கைக்காய் கிலோ 100க்கு விற்பனை!
சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று கிலோ ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய் இன்று ஒரே நாளில் ரூ.100ஆக குறைவு.
* ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்தியா வெற்றிவாகை சூடியது.
சூப்பர் ஓவரில் 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி!
* குஜராத்தில் காங்கிரஸ் வெற்றியை தடுத்தது ஆம் ஆத்மி கட்சியே என ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
இமாச்சல், டெல்லியில் பாஜக அதிகாரத்தை இழந்ததை மறைக்க முடியாது என விமர்சனம்!
* சென்னையில் காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது
தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவிப்பு. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை.
* திருவள்ளூர் அருகே 17 வயது சிறுவனை தாக்கி ரூ.1,000 பறித்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
பேரம்பாக்கத்தில் சிறுவனை தாக்கி பணம் பறித்த அபிமன்யூ, ஹரி ஆகியோர் கைது செய்யப்பட்டு தலைமறைவாக உள்ள வினோத்குமாருக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.
* சென்னையில் ஆர்.ஏ.புரத்தில் 7 பழங்கால சாமி சிலைகளை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினர் மீட்டனர்.
7 சிலைகளில் 3 சிலைகள் உளுந்தூர்ப்பேட்டை ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் இருந்து 2011-ல் திருப்பட்டவை என தெரிவந்துள்ளது.
300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் ரூ.5 கோடி மதிப்பிலானவையாகும்.
* கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 513 ஏரிகள் நிரம்பின.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 528 பொதுப்பணித்துறை ஏரிகளில் 220 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது.
அனுமந்தபுரத்தில் உள்ள கொப்பளான் ஏரியின் மதகு உடைந்ததால் நீர் முழுவதும் விவசாய நிலங்களில் புகுந்தது.
* சென்னை மெரினாவில் நள்ளிரவில் பெண்ணின் கழுத்தை அறுத்து நகை, பணம் பறிப்பு; கடலுக்குள் ஓடிய குற்றவாளியை துரத்தி பிடித்த போலீசார்...! பரபரப்பு சம்பவம்
சென்னை மெரினா கடற்கரை அருகே பட்டினபாக்கம் வரை செல்லக்கூடிய சர்வீஸ் சாலையில் நள்ளிரவு 1.30 மணியளவில் ஒரு பெண் ஆட்டோவில் இருந்துள்ளார்.
அப்போது, அங்கு மதுபோதையில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் மழை பெய்வதால் தாங்களும் இங்கு சற்று நேரம் இருந்துவிட்டு செல்கிறோம் என்று கூறி அங்கு நின்றுள்ளனர்.
அப்போது, திடீரென அந்த பெண்ணை தாக்கிய அந்த 4 பேர் கொண்ட கும்பல், அந்த பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு காதில் இருந்த தங்க கம்மல், கையில் இருந்த 10 ஆயிரம் ரூபாய் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.
அப்போது, அந்த வழியாக போலீசார் எதிர்சாலையில் வந்துள்ளனர். அந்த பெண் கூச்சலிடவே 4 பேர் கொண்ட கும்பல் வேகமாக ஓடியதையடுத்து சந்தேகமடைந்த போலீசார் அந்த கும்பலை துரத்தி சென்றனர்.
கொள்ளையில் ஈடுபட்டவர்களில் 3 பேர் தப்பியோடிய நிலையில் ஒரு நபர் மெரினா கடற்கரையில் இறங்கி கடலுக்குள் குதித்தார். அந்த நபரை துரத்தி சென்ற போலீசார் கடலுக்குள் குதித்த அந்த நபரை அதிரடியாக பிடித்தனர்.
பிடிபட்ட நபர் ஐனாவரத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பது தெரியவந்தது. பிடிபட்ட சந்தோஷ்குமார் மீது ஏற்கனவே கொலைமுயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது. தப்பியோடிய எஞ்சிய 3 பேரும் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. தப்பியோடிய 3 பேரையும் பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மதுபோதையில் 4 பேர் கொண்ட கும்பல் தாக்கி கழுத்தறுத்ததில் பாதிக்கப்பட்ட பெண் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
TELEGRAM: t.me/Agnipuratchi1
* புதுச்சேரி மாநிலத்தில் மீண்டும் திமுக ஆட்சி மலரும்-புதுச்சேரி திமுக அவைத்தலைவர் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
புதுச்சேரிக்கும் திராவிட இயக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு; புதுச்சேரி மீது எனக்கு தனி பாசமே உண்டு.
திராவிட இலக்கியத்தின் தலைநகரம் புதுச்சேரி - முதல்வர் ஸ்டாலின்.
திராவிட மாடல் ஆட்சி புதுச்சேரிக்கும் தேவைப்படுகிறது; புதுவையில் திமுக ஆட்சி விரைவில் அமையும்.
புதுச்சேரியில் தற்போது உள்ள ஆட்சியால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை - முதல்வர் ஸ்டாலின்.
* சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 40,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ. 5,045-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 200 குறைந்து ரூ.72,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
* சென்னையில் காலையில் இருந்து விடாது பெய்யும் மழை
சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் இடைவிடாது மழை பெய்து வருகிறது.
* கடலூர் அருகே நாய்க்குட்டிகளை பாதுகாத்த நல்ல பாம்பு
கடலூர் அருகே பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத். இவர் அதே பகுதியில் புதியதாக வீடு கட்டி வருகிறார். இந்த புதிய வீட்டிற்காக பள்ளம் தோண்டி வைத்துள்ளார். இந்நிலையில் அந்த பள்ளத்தில் திடீரென்று நாய் ஒன்று 3 குட்டிகளை பாதுகாப்பாக வைத்துவிட்டு சென்றுள்ளது.
அப்போது அங்கு நல்ல பாம்பு ஒன்று வந்தது.அந்த நல்ல பாம்பு நாய் குட்டிகளை பாதுகாத்து வருகிறது. பொதுமக்கள் யாரையும் குட்டிகளிடம் நெருங்க விடாமல் கம்பீரமாக நாய்க்குட்டிகளின் முன்னால் நின்றது.
அப்போது அங்கு வந்த தாய் நாய் தனது குட்டிகளின் பக்கத்தில் பாம்பு இருப்பதை பார்த்து குட்டிகளை பாதுகாக்க வேகமாக சென்றது. ஆனால் அந்த நல்ல பாம்பு தாய் நாயையும் குட்டிகளிடம் விடவில்லை. இதனால் தாய் நாய் நீண்ட நேரமாக குரைத்துக் கொண்டிருந்தது.
நீண்ட நேரமாக நாய் குரைத்துகொண்டு இருந்ததால் அருகில் இருந்த பொதுமக்கள் அங்கு வந்து பார்த்தனர். அப்போது நல்ல பாம்பு குட்டிகளை பாதுகாத்துக்கொண்டு இருப்பதை பிரமிப்புடன் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
மேலும் இது குறித்து தகவல் அறிந்த கடலூர் வன அலுவலர் செல்லா சம்பவ இடத்திற்கு சென்று அந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்து கொண்டு பாதுகாப்பாக காட்டில் விட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
TELEGRAM: t.me/Agnipuratchi1
* தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் பெருங்களத்தூரில் போக்குவரத்து பாதிப்பு
சென்னை வரும் வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நிற்கின்றன!
* செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று அரை நாள் விடுமுறை
கனமழை தொடர்வதால் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அறிவிப்பு
* செங்கல்பட்டு: மதுராந்தகத்தில் அரசு பேருந்து மீது பின்னால் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
* சென்னை: மழையில் யாரும் காத்திருக்க வேண்டாம்; ரஜினிகாந்த் இங்கு இல்லை என லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ரஜினி வீட்டின் முன்பு கூடிய ரசிகர்களிடம் லதா ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஜினிகாந்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற போயஸ் தோட்டத்தில் ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்தனர்.
* அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும்-வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்.
வடகடலோரம், உள் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வரும் தினங்களில் மழை படிப்படியாக குறையும்
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை-பாலச்சந்திரன்.
* குஜராத்தின் 18வது முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவியேற்றார்
ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்பு
* அம்பேத்கரை இந்து அமைப்புகளை சேர்ந்தோர் அவமதித்ததாக கூறி விசிக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்றார்.
* 24 வயது பெண் போலீஸ் ஒருவர் மருத்துவக் கல்லூரி மாணவியாக மாறுவேடத்தில் சென்று குற்றவாளிகளை அடையாளம் காட்டியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியான மகாத்மா காந்தி நினைவு மருத்துவக் கல்லூரியில் ராகிங் நடப்பதாக பல்கலைக்கழக மானியக் குழுவின் உதவி எண்ணுக்கு புகார் வந்தது.
இதன் அடிப்படையில், கடந்த ஜூலை 24ஆம் தேதி வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ராகிங் நடந்தது பற்றி விரிவாகப் புகாரில் இருந்ததே தவிர, செய்தவர்கள் யார் என்பது குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை.
எத்தனை பேர் இதில் ஈடுபட்டார்கள் என்றும் தெரியவரவில்லை.
இதையடுத்து, பெண் போலீஸ் ஒருவர் கல்லூரிக்கு மாணவி போல அனுப்பிவைக்கப்பட்டார்.
அனைத்து மாணவர்களுடனும் நன்கு பேசிப் பழகி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரின் விவரங்களையும் அவர் திரட்டியுள்ளார்.
அது மட்டுமல்லாமல், ஒரு பெண் போலீஸ் செவிலியர் போலவும், இரண்டு தலைமைக் காவலர்கள் உணவக ஊழியர்கள் போலவும் பணியில் சேர்ந்து, இந்த ராகிங் கொடுமையில் ஈடுபட்ட நபர்களைக் கண்டறிந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
போலீஸார் மாறுவேடத்தில் கல்லூரிக்குள் நுழைந்து, ராகிங் நடந்ததா என்பதை உறுதி செய்ததோடு, முக்கியமாக இந்த சம்பவத்தில் தொடர்புடைய 11 மாணவர்களையும் அடையாளம் காண உதவியிருக்கிறது.
மூத்த மருத்துவ மாணவர்கள், இளநிலை மாணவர்களை தவறாக நடந்துகொள்வது போல செய்ய வற்புறுத்தி ராகிங் கொடுமை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் விசாரணைக்கு ஆஜராகி, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் பட்டியல் கல்லூரி நிர்வாகத்துக்கு கிடைக்கப்பெற்றதும், அவர்கள் அனைவரும் கடந்த வாரம் மூன்று மாதங்களுக்கு கல்லூரியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.
TELEGRAM: t.me/Agnipuratchi1
* ஓடிபி எல்லாம் வேண்டாம்.. பிளாங்க் கால் போதும்: அச்சுறுத்தும் புதிய மோசடி.
புது தில்லி: தெற்கு தில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பாதுகாப்பு சேவை மையத்தின் இயக்குநர் ஒருவருக்கு வந்த பிளாங் கால் மூலம் அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.50 லட்சம் திருடப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
செல்லிடப்பேசிக்கு தொடர்ந்து கால் செய்து, அவர் அழைப்பை எடுத்த பிறகும், மற்றொரு பக்கத்திலிருந்து எந்த பதிலும் வரவில்லை. இப்படியே தொடர்ந்து பிளாங்க் கால் கொடுத்து 50 லட்சம் வரை அவரது வங்கிக் கணக்கிலிருந்து மோசடி செய்யப்பட்டுள்ளது.
அதிர்ச்சி தரும் தகவல் என்னவென்றால், அவரிடம் எந்த ஓடிபியும் பெறவில்லை.
முதற்கட்ட விசாரணையில், சிம் ஸ்வாப் முறையில், சைபர் குற்றவாளிகள் பணத்தை மோசடி செய்திருக்கலாம் என்றும், இரண்டு முறை நிரூபிக்கும் அல்லது இரண்டு முறை உறுதிப்படுத்தும் வங்கிக் கணக்கைத் திறக்கும் வாய்ப்புகளில் இருக்கும் சில தொழில்நுட்ப நுணுக்கங்களைப் பயன்படுத்தி மோசடியாளர்கள், ஒரு நபருக்கு அழைப்பு விடுத்து, அந்த சிம் கார்டை ஆக்டிவேட் செய்து அதன் மூலம் வங்கியிலிருந்து பணத்தை மோசடி செய்யும் புதிய யுக்தியை கையாண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதுபோல இந்த ஆண்டு துவக்கத்தில் இரண்டு தொழிலதிபர்களின் வங்கிக் கணக்கிலிருந்து வெறும் மிஸ்டு கால் கொடுத்து பணத்தை மோசடி செய்த தகவல்களும் வெளியாகியுள்ளது.
TELEGRAM: t.me/Agnipuratchi1
* பொன்னோி அருகே கொசஸ்தலை ஆற்றில் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பள்ளிபுரம் தரைப்பாலம் துண்டிக்கப்படுள்ளது.
தரைப்பாலம் நீாில் மூழ்கியதால் சுப்பாரட்ப்பாளையம், பள்ளிபுரம், கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்படுள்ளது, தரைப்பாலத்தில் ஓடும தண்ணீாின் வேகம் அதிகாித்துள்ளதால் தடுப்புகள் அமைத்து போக்கவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
* தொடர் மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (டிசம்பர் 13) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!
கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (13.12.2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* நாளை மறுநாள் காலை 9:30 மணிக்கு அமைச்சராக பதவி ஏற்கிறார் உதயநிதி ஸ்டாலின் - ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இளைஞர் நலன் விளையாட்டு துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் துறை அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்....
No comments:
Post a Comment