அக்னிப்புரட்சி இன்றைய (13.12.2022) முக்கிய செய்திகள்.
* மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (13.12.2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் மோகன்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கட்டிடங்களின் உறுதித் தன்மையை அறிய தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் இன்று பள்ளிகளுக்கு சென்று கட்டிடத்தின் நிலைத்தன்மை, வளாக தூய்மை, கழிப்பிட வசதி குறித்து சோதனை செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
* கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
* திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் 15 மாவட்டங்களில் ஒத்திவைப்பு
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அதிமுகவின் ஆர்ப்பாட்டம் வரும் 21ம் தேதிக்கு மாற்றம்
கனமழை காரணமாக நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டங்கள் ஒத்திவைப்பு - அதிமுக தலைமை அறிவிப்பு
மற்ற மாவட்டங்களில் வழக்கம் போல் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் அறிவிப்பு
* சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
டிசம்பர் 9-ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் வரும் 24-ம் தேதி நடைபெறும். டிசம்பர் 10-ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் வரும் 31-ம் தேதி தேதி நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
* மேலும் ஒரு வைரஸ்: WHO எச்சரிக்கை
MERS எனப்படும் மற்றொரு வைரஸ் கொரோனா அளவில் வேகமாக வளர்ந்து வருவதாக WHO எச்சரித்துள்ளது.
இதனால் பல நாடுகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. MERS சவூதி அரேபியாவில் உருவானது என்றும் ஒட்டகத்திலிருந்து மனிதர்களுக்கு பரவியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், கத்தார் சென்றுள்ள கால்பந்து ரசிகர்கள், ஒட்டகங்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
* இறுதி சுற்றுக்கு போகுமா அர்ஜென்டினா?
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணி அரையிறுதியில் குரோஷியாவுடன் மோதுகிறது.
இரு அணிகளுமே சம பலத்துடன் இருப்பதால், இன்றைய போட்டி அனல் பறக்கும். அதேசமயம் அர்ஜென்டினா வீரர் மெஸ்சிக்கு இது கடைசி WC என்பதால், வெற்றிக்காக அந்த அணி வீரர்கள் கடுமையாக போராடுவார்கள். போட்டி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறுகிறது.
* பொங்கல் பரிசு தொகுப்புகளை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய உத்தரவிட கோரி வழக்கு
ஐகோர்ட்டு மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்களான அரிசி, வெல்லம், முந்திரி, ஏலம் உள்ளிட்ட 20 வகையான விவசாய பொருட்களை தமிழக விவசாயிகளிடமிருந்தே வாங்கினால் விவசாயிகளும் பலனடைவர்.ஆகவே பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படக் கூடிய, பொருட்களை தமிழக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரியிருந்தார்.
இந்த வழக்கானது நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு குறித்து தமிழக கூட்டுறவுத்துறை செயலர், தமிழக வேளாண்துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 19-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
* அரசு பள்ளியில் வகுப்பறைகள் இல்லாததால் மரத்தடியில் அமர்ந்து பாடம் படிக்கும மாணவர்கள்!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புங்கனூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.
இந்த பள்ளி கடந்த 130 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.இந்த பள்ளியில் புங்கனூர், காடாக்குடி, கீழவரவுகுடி, மல்லுக்குடி, ரெட்டிகோடங்குடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் ஏராளமாேனார் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 6 வகுப்பறை கட்டிடங்கள் இருந்தன.
இந்த நிலையில் 5 வகுப்பறை கட்டிடங்கள் சேதமடைந்தது. இதனால் இந்த கட்டிடங்கள் இடித்து அப்புறப்படுத்தப்படடது.மேலும் ஒரு கட்டிடமும் ஆபத்தான நிலையில் இருந்து வருகிறது.வகுப்பறைகள் இல்லாததால் தினமும் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படித்து வருகின்றனர். இதன் காரணமாக ஆசிரியர்கள், மாணவர்கள் தினமும் வெயில் மற்றும் மழையால் பாதிக்கப்படுகின்றனர்.
தொடர்ந்து மழை பெய்தால் மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் போதிய அடிப்படை வசதிகளுடன் கூடிய வகுப்பறையில் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், புங்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கிராமப்புறங்களை சேர்ந்த ஏழை, எளிய மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இங்கு போதிய வகுப்பறை இல்லாததால் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படித்து வருகின்றனர். தரையில் அமர்ந்து படிப்பதால் வெயில், மழை காலங்களில் மாணவர்களுக்கு அடிக்கடி உடல் நல குறைவு ஏற்படுகிறது.மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் போது பள்ளி வளாகத்திற்குள் ஆடுகள் உள்ளே புகுந்து படுத்து கொள்கின்றன.
எனவே சம்பந்தப்பட்ட துறையினர் புங்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் போதிய அடிப்படை வசதியுடன் கூடிய புதிய வகுப்பறை கட்டிடத்தை கட்டித்தர வேண்டும் இல்லையென்றால் பெற்றோர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
TELEGRAM: t.me/Agnipuratchi1
* அருணாச்சலபிரதேசம் அருகே தவாங் பகுதியில் சீன ராணுவத்தின் அத்துமீறல் முயற்சியை இந்தியா முறியடித்தது!
லடாக் எல்லை உள்ளிட்ட இந்திய எல்லைகளில் சீனா தொடர்ந்து வாலாட்டி வருகிறது. இந்திய எல்லைப் பகுதிகளில் சீனா கிராமங்களை நவீன வசதிகளுடன் கட்டமைத்து குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் இத்தகைய நடவடிக்கைகளால் எல்லைகளில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.இந்தப் பதற்றத்தை தணிக்க பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளை இருதரப்பும் மேற்கொண்டு வருகிறது.
இந்தியா- சீனா ராணுவ தளபதிகளுக்கிடையே இதுவரை 16 சுற்றுக்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. பேச்சுவார்த்தையின் போது பிரச்சினைகளுக்கு பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை உருவாக்கவும் இருதரப்பும் அவ்வபோதும் ஒப்புக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் அருணாச்சலபிரதேசம் தவாங் பகுதியில் சீன ராணுவம் மீண்டும் தனது வாலை நுழைத்தது. சீன ராணுவத்தின் அத்துமீறலை இந்திய ராணுவம் விரட்டி அடித்து முறியடித்தது. இருதரப்புக்கும் இடையே நடந்த சிறுமோதலில் இரு தரப்பிலும் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும், மோதலுக்கு பிறகு இரு தரப்பு ராணுவத்தினரும் தங்கள் நிலைகளுக்கு திரும்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
TELEGRAM: t.me/Agnipuratchi1
* நீலகிரி : உதகை அருகே ஆனிக்கல் ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம்
வெள்ளத்தில் சிக்கி 4 பெண்கள் மாயமான நிலையில் 3 பேர் சடலமாக மீட்பு
மாயமான மேலும் ஒரு பெண்ணை தேடும் பணி தீவிரம்
* குடும்பத்தில் உள்ளவர்களை வெட்டிக்கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட விவசாயி.
திருவண்ணாமலை அருகே ஒரந்தவாடியில் குடும்பத் தகராறில், தனது மனைவி மற்றும் 4 குழந்தைகளை கோடாரியால் வெட்டிக் கொன்றுவிட்டு பழனி என்ற விவசாயி தற்கொலை - போலீசார் விசாரணை.
* 4 ஆண்டு ஹானர்ஸ் பட்டம் அறிமுகம்; இளங்கலை படிப்பில் அதிரடி மாற்றங்கள்-பல்கலை. மானிய குழு அறிவிப்பு.
தேசிய கல்வி திட்டத்தின் கீழ் இளங்கலைப் படிப்புகளில் அதிரடி மாற்றங்களை பல்கலைக் கழக மானிய குழு அறிவித்துள்ளது.
அனைத்து பாடப்பிரிவுகளிலும் 4 ஆண்டு ஹானர்ஸ் பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதில் 160 மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ஹானர்ஸ் பட்டம் மற்றும் ஆராய்ச்சியுடன் கூடிய ஹானர்ஸ் பட்டம் வழங்கப்படும்.
முதல் 6 செமஸ்டர்களில் 75 சதவீத மதிப்பெண் எடுத்திருக்கும் மாணவர்கள் ஆய்வு படிப்பை மேற்கொள்ள விரும்பினால், 4வது ஆண்டில் சேரலாம்.
அவர்களுக்கு இளங்கலை ஹானர்ஸ் பட்டம் வழங்கப்படும்.
இளங்கலை படிப்பில் 40 மதிப்பெண்களுடன் முதலாம் ஆண்டில் படிப்பை நிறுத்த விரும்பும் மாணவர்கள் முதலாமாண்டு கோடை விடுமுறையில் கூடுதலாக 4 மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு தொழிற்கல்வி படிப்பை முடித்திருந்தால், அவர்கள் 3 ஆண்டிற்குள் மீண்டும் சேர்ந்து, 7 ஆண்டுகளுக்குள் படிப்பை முடிக்க வேண்டும்.
அதே போல், 80 மதிப்பெண்களுடன் 2வது ஆண்டில் படிப்பை நிறுத்த விரும்பும் மாணவர்கள் 2வது ஆண்டு கோடை விடுமுறையில் கூடுதலாக 4 மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு தொழிற்கல்வி படிப்பை முடித்திருந்தால், அவர்கள் 3 ஆண்டிற்குள் மீண்டும் சேர்ந்து, 7 ஆண்டுகளுக்குள் படிப்பை முடிக்க வேண்டும்.
* "ஆன்லைன் ரம்மி விளையாட்டு அறிவுப்பூர்வமானது: உலகம் முழுவதும் ஆன்லைன் ரம்மி விளையாடப்படுகிறது"
கிரிக்கெட் விளையாட்டில் கூட சூதாட்டம் இருக்கிறது - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்
* அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.
தற்கொலைக்கான வாய்ப்பை குறைக்கும் வகையில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்கள் தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அசிபேட், மோனோக்ரோடோபோஸ், க்ளோர்பைரிபோஸ் உள்ளிட்ட 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
* காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் அமைச்சருமான ராஜா பட்டேரியா கைது
'மோடியை கொல்லுங்கள்' என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் கைது
* மதுராந்தகம் அருகே ஏரியின் கரை உடைந்து வெளியேறும் நீரால் விவசாயிகள் கவலை
புதுப்பட்டு கிராமத்தில் உள்ள ஏரி முழு கொள்ளளவை எட்டிய நிலையில் கரையில் உடைப்பு
ஏரியின் கரை உடைந்து விளைநிலங்களில் தேங்கும் நீரால் விவசாயிகள் கவலை
உடைப்பை சரிசெய்யும் பணியில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் தீவிரம்
* கர்நாடகாவில் ராய்ச்சூரை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு 'ஜிகா வைரஸ்' பாதிப்பு உறுதி
கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் முதல்முறையாக கர்நாடகாவில் பாதிப்பு
* உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு
ஆளுநர் மாளிகையில் நாளை அமைச்சராக பதவியேற்கிறார் உதயநிதி ஸ்டாலின்
* இந்திய - சீன படையினர் இடையேயான மோதல் குறித்து மக்களவையில் ராஜ்நாத் சிங் விளக்கம்
"கடந்த 9ஆம் தேதி அருணாச்சல பிரதேசம் தவாங் பகுதியில் சீன படையினர் எல்லையை தாண்டி உள்ளே நுழைய முயன்றனர்"
"இந்திய எல்லையை ஆக்கிரமிக்கும் சீனாவின் முயற்சியை இந்திய வீரர்கள் முறியடித்தனர்"
"மோதலில் இந்திய வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை, வீரர்கள் யாருக்கும் தீவிர காயமும் ஏற்படவில்லை"
சீன வீரர்களின் முயற்சியை நமது ராணுவத்தினர் திறமையுடன் எதிர்கொண்டனர் - ராஜ்நாத் சிங்
* எனக்கு ஓட்டு போட சொல்றேன் கேக்குறாங்களா?
ரம்மி மட்டும் நான் சொல்லி விளையாடறாங்களா?’ -நடிகர் சரத்குமார் கேள்வி.
* நீலகிரி மாவட்டத்தில் படுகரின மக்களின் பாரம்பரிய ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி O4 -01-2023 அன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவிப்பு
* கேரள - கர்நாடக கடலோரப்பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு
- சென்னை வானிலை ஆய்வு மையம்
* கேபிள் டிவி செயல்பாடு குறித்து முதல்வர் ஆய்வு
தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம்
சென்னை, தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
* அரசு நிருபர் தேர்வு - ஹால் டிக்கெட் வெளியீடு
தமிழ்நாடு சட்டப்பேரவை தலைமைச்செயலகத்தில் தமிழ், ஆங்கில நிருபர் பதவிக்கான கணினி வழித் தேர்வு
tnpsc.gov.in, tnpscexams.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்
* எதிர்க்கட்சி சொல்வதெல்லாம் கேட்கக்கூடாது. 30 வருடம் கழித்து அமைச்சர் பதவி கொடுத்தாலும் விமர்சிக்க தான் செய்வார்கள்
உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுப்பது குறித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்
* ஆளுநர் ஆர்.என்.ரவி தமது அத்துமீறிய, ஆதாரமற்ற அவதூறு பேச்சுகளை உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும்; அப்படி நிறுத்தவில்லை என்றால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்”
- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி காட்டம்!
* அனைத்து விஷயங்களுக்கும், மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டியதால், திட்டங்களை செயல்படுத்த காலதாமதம் ஏற்படுகிறது”
மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, துணை நிலை ஆளுநர் தமிழிசை முன்பாக, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி குற்றம்சாட்டி பேசியதால் பரபரப்பு.
* ட்ரோன் மூலம் படப்பிடிப்பு - 3 பேர் கைது
சென்னை, உயர்நீதிமன்றம் மற்றும் பார் கவுன்சில் வளாகத்தை ட்ரோன் மூலம் படம் பிடித்ததாக 3 பேர் கைது
பிச்சைக்காரன்-2 திரைப்படத்திற்காக அனுமதியின்றி படம் பிடித்ததாக போலீசார் நடவடிக்கை
* அரவிந்தரின் தபால்தலை - நாணயம் வெளியீடு
ஆரோவில் நிறுவனர் அரவிந்தரின் 150வது பிறந்த தினம்
அரவிந்தரின் தபால் தலை மற்றும் நாணயம் வெளியீடு
காணொளி வாயிலாக வெளியிட்டார் பிரதமர் மோடி
No comments:
Post a Comment