அக்னிப்புரட்சி இன்றைய (14.12.2022) முக்கிய செய்திகள்.
* தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக பொறுப்பேற்கும் உதயநிதி ஸ்டாலின்.
தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின் அவருக்கு
கிண்டி உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
* உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கீடு
அமைச்சராக சற்று முன் பொறுப்பேற்ற நிலையில் துறை ஒதுக்கீடு
அமைச்சர் மெய்யநாதனிடம் கூடுதலாக இருந்த விளையாட்டு மேம்பாட்டுத் துறை உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கீடு
தலைமைச் செயலகத்தில் உள்ள அறைக்கு வெளியே, துறையுடன் அமைச்சர் உதயநிதியின் பெயர் பலகை பொருத்தம்
விமர்சனங்களுக்கு செயல்பாடுகள் மூலம் பதிலளிப்பேன் -அமைச்சர் உதயநிதி
🔴 மாமன்னன் திரைப்படமே கடைசி படம். இனி நடிக்க மாட்டேன்
விமர்சனங்களுக்கு செயல்பாடுகள் மூலம் பதிலளிப்பேன் -அமைச்சர் உதயநிதி
நிச்சயமாக விமர்சனங்கள் வரும், என்னுடைய செயல்பாடுகள் அதற்கு பதிலாக இருக்கும் - அமைச்சர் உதயநிதி
* 10 அமைச்சர்களின் துறைகள் மாற்றம்.
கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கீடு
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கீடு
வனத்துறை அமைச்சராக இருற்த ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கீடு
சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு வனத்துறை ஒதுக்கீடு
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பனுக்கு கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் துறைகள் ஒதுக்கீடு
சி.வி.மெய்யநாதனுக்கு சூற்றுச்சூழல்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாடு இலாகா ஒதுக்கீடு
அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு, அமைச்சர் முத்துசாமி வசம் இருந்த சிஎம்டிஏ துறை கூடுதலாக ஒதுக்கீடு
விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிக்கு கூடுதலாக சிறப்பு திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்பு துறை ஒதுக்கீடு
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு, அமைச்சர் ஐ.பெரியசாமி வசம் இருந்த புள்ளியியல் துறை கூடுதலாக ஒதுக்கீடு
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பனுக்கு கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் துறைகள் ஒதுக்கீடு
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் செயலாளராக அதுல்ய மிஸ்ரா ஐ.ஏ.எஸ் நியமனம்
சொத்து வழக்கில் இருந்து அமைச்சர் கீதாஜீவன் உட்பட 5 பேர் விடுதலை.
அமைச்சர் கீதாஜீவன், அவரது கணவர், சகோதரர்கள், தாய் உள்ளிட்ட 5 பேர் விடுதலை - தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு.
🔴 அரையிறுதியில் தமிழ் தலைவாஸ்!
புரோ கபடி லீக்: யு.பி.யோத்தாஸ் அணியை 6-4க்கு என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது தமிழ் தலைவாஸ். இதன்மூலம் அரையிறுதிக்கு முன்னேறியது.
🔴 இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா!
உலகக் கோப்பை கால்பந்து அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா அபார வெற்றி
குரோஷியா அணியை 3க்கு 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது அர்ஜென்டினா.
* நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி, குன்னூர் தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை-கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
11 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.
இன்று முதல் ஜனவரி 13ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் ஏபரல் 9ம் தேதி போட்டி தேர்வு நடைபெறும் எனவும் அறிவிப்பு.
* சென்னை சென்ட்ரல்-மங்களூரு-சாய்நகர் ஷீரடி செல்லும் ரயில்கள் பராமரிப்பு பணி காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை சென்ட்ரலில் இருந்து வழக்கமாக இரவு 8.10 மணிக்கு புறப்படும் தினசரி ரயில் வண்டி எண்(12601) மறுநாள் மதியம் 12.10 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் சென்றடையும்.
* தாய்மொழி வழிக்கல்வி, மும் மொழிக் கொள்கை தமிழகத்திற்கு தேவை - பட்ஜெட்டில் 30 சத நிதி கல்வித்துறைக்கு ஒதுக்குக - தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு
தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கைக்குழு - உயர்மட்டக் குழு
கருத்துக் கேட்பு கூட்டம் இன்று சென்னையில் நடந்தது அதில்தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் மாநில துணைத் தலைவர் விஜய் மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் பூங்குழலி ஆகியோர் கலந்து கொண்டு தெரிவித்த கருத்துக்களாவது
குறைந்த பட்சம் 5 வது வகுப்பு வரை இயன்றால் 8 ம் வகுப்பு வரை தாய்மொழி வழியில் மட்டுமே கற்பிக்க வேண்டும்
மும்மொழிக் கொள்கை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும்
அண்டை மாநிலங்களில் தமிழ் மொழி கற்பிக்கும் பள்ளிகளை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
வளர்ந்து வரும் துறைகளின் அறிவைப்பெற 9 ம் வகுப்பிலிருந்து தொழிற்கல்வி பாடத்தை அறிமுகம் செய்ய வேண்டும்
மொத்த பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு 30% நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்
போட்டித் தேர்வுகள் இந்திய அளவில் நடைபெறுவதால் NCERT பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி அதில் தமிழக விழுமியங்களை சேர்க்க வேண்டும்
தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகள் தொடக்கக்கல்வி துறையின் கீழ் நடத்த வேண்டும்
மெக்காலே கல்வி முறையை மாற்றி இந்திய கல்வி முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்
விளையாட்டு, நீதி நூல்கள் படித்தல் ஆகியவற்றை தேர்வுடன் கூடிய பாடமாக வைக்க வேண்டும்
ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை மட்டுமே கவனிக்கும் வகையில் பிற பணிகளுக்கு தகுந்த பணியாளர்களை நியமிக்க வேண்டும்
முன்கூட்டியே திட்டமிட்டு ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து காலிப்பணியிடங்களையும் தேவைப்பணியிடங்களையும் உடனுக்குடன் நிரப்ப வேண்டும்
என்பது போன்ற பல கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டது
மு. கந்தசாமி
மாநில பொதுச்செயலாளர்
தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு
TELEGRAM: t.me/Agnipuratchi1
* எல்லையில் பதற்றத்தை தணிக்கும்படி இந்தியா - சீனாவுக்கு ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தியா - சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜுன் 15-ம் தேதி இந்திய - சீன படைகள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மோதலில் தங்கள் தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்ததாக சீனா தெரிவித்துள்ளது. இந்த மோதலுக்கு பின் இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்து வைத்துள்ளன.
லடாக் மோதலுக்கு பின் சற்று தணிந்திருந்த எல்லை பிரச்சினை மீண்டும் எழுந்துள்ளது. அந்த வகையில் அருணாச்சலபிரதேசத்தின் தவாங் செக்டாரில் உள்ள யங்ட்சி பகுதியில் உண்மை கட்டுப்பாட்டு கோடு அருகே கடந்த 9-ம் தேதி இந்திய-சீன படைகள் மோதிக்கொண்டன.
இந்த மோதலில் இரு தரப்பிலும் சில வீரர்கள் காயமடைந்தனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே எல்லையில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், எல்லையில் பதற்றத்தை தணிக்கும்படி இந்தியா - சீனாவுக்கு ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்ரொஸ் செய்தித்தொடர்பாளர் ஸ்டெப்னி டுஜரிக் கூறுகையில், இந்தியா - சீன படைகள் மோதல் குறித்து அறிந்தோம். எல்லையில் பதற்றம் மேலும் அதிகரிக்காமல் பதற்றம் தணிய நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்' என்றார்.
TELEGRAM: t.me/Agnipuratchi1
* நியூசிலாந்தில் இளைஞர்கள் சிகரெட் வாங்குவதற்கும், சிகரெட் புகைப்பதற்கும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புகைப்பிடிக்கும் பழக்கத்தை நாட்டுமக்களிடம் குறைத்து 2025-க்குள் புகைப்பிடிக்காத நாடாக மாற்ற நியூசிலாந்து அரசு திட்டம் வகுத்துள்ளது.
* ரூ.6000... அமைச்சரான உடன்...
உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற உடன் முதல் கையெழுத்திலேயே, விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.3,000இல் இருந்து ரூ.6000ஆக உயர்த்தியும், முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்தும், துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவருக்கு ரூ.4 லட்சம் வழங்கவும் கோப்புகளில் கையெழுத்திட்டார்.
பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்கும் மசோதா கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றம்
மசோதாவுக்கு ஒப்புதல் கோரி ஆளுநருக்கே அனுப்பி வைத்த கேரள அரசு!
* டிடிஎஃப் வாசன் மீது வழக்கு பதிவு:
கடலூரில் யூடியூர் டிடிஎஃப் வாசன் மீது போலீசார் வழக்கு பதிவு.
போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் 3 பேர் மீது வழக்கு பதிவு.
* ஓய்வை அறிவித்தார் மெஸ்ஸி
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி உடன் ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி அறிவித்துள்ளார்.
தனது 17வது வயதில் முதல் போட்டியில் பங்கேற்ற மெஸ்ஸி, லா லிகா தொடரில் அதிக கோல்களை ( 440க்கும் மேல்) அடித்த வீரர், 36 ஹாட்ரிக் கோல் அடித்த வீரர் உள்ளிட்ட பல சாதனைகளை படைத்துள்ளார்.
மேலும் பார்சிலோனா அணிக்காக 722 போட்டிகளில் விளையாடி 629 கோல்களை அடித்துள்ளார். 2022 உலகக் கோப்பையில் 5 கோல் அடித்துள்ளார்.
* நடிகர் விஷால் எடுத்த திடீர் முடிவு!
ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடிக்க தன்னை அனுகியபோது, தான் மறுத்து விட்டதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிகழ்ச்சியில் பேசிய அவர், உழைத்து வரும் வருமானம் மட்டுமே உதவும் என்றும் தவறான வழிகளில் வரும் வருமானம் நிலைக்காது என்றும் கூறினார்.
நடிகர் சரத்குமார் ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், விஷால் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஏற்கனவே இருவருக்கும் நடிகர் சங்க பிரச்சனை உள்ளது.
* செங்கல்லை வைத்து கோட்டையை தகர்த்தவர்’ -ஆர்.எஸ். பாரதி
தமிழ்நாடு முழுவதும் ஒரே செங்கல்லை வைத்து கோட்டையை தகர்த்து காட்டியவர் உதயநிதி என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகழ்ந்துள்ளார்.
தலைமுறை தலைமுறையாக, வாரிசு வாரிசாக இந்த கட்சியில் இருப்பவர்கள் நாங்கள். எவர் எதைப்பற்றி பேசினாலும் அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. உதயநிதி அரசியலில் கால்வைத்த நாள் முதல் வெற்றிகளையே தேடிக்கொடுத்து வருபவர் என்று அவர் கூறினார்.
* வட அமெரிக்காவில் அமைந்துள்ள தீவு நாடான கிரீன்லாந்தில் 20 லட்சம் ஆண்டுகள் பழமையான டிஎன்ஏவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டிஎன்ஏக்களில் இது மிகப் பழமையானது என கூறப்படுகிறது.
கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் கிரீன்லாந்தில் உள்ள ஓர் நீர்நிலையின் அடியில் சில களிமண் படிமங்களை கண்டெடுத்து ஆய்வு செய்துள்ளனர்.
இதில் சுமார் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த உயிரினங்களின் டிஎன்ஏக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பரிணாம சூழலியல் நிபுணர் “10 லட்சம் ஆண்டுகால வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் திறக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக கடந்த கால சுற்றுச்சூழல் அமைப்பை டிஎன்ஏ முலமாக நேரடியாகப் பார்க்க கூடிய இடத்திற்கு வந்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
கிடைத்த டிஎன்ஏவை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தபோது பல ஆச்சரியமான தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த ஆய்வில் வடக்கு கிரீன்லாந்து சுமார் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னதாக பறவைகள், கலைமான்கள், முயல்கள், இதுவரை அறியப்படாத யானை இனமான மாஸ்டோடான்கள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்ந்த ஒர் இடமாக மிக வித்தியாசமாக இருந்திருக்கிறது என தெரிவித்துள்ளனர்.
தற்போது க்ரீன்லாந்து உறைநிலையில் உள்ளது. ஆனால் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் இந்த பகுதியில் 10 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் இருந்திருப்பது டிஎன்ஏ மூலம் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் வடக்கு கிரீன்லாந்து முன்னர் நிச்சயம் பனிப் பிரதேசமாக இருந்திருக்காது என்ற முடிவுக்கு வருகின்றனர்.
இது மட்டுமின்றி அக்கால கட்டங்களில் உலகம் முழுவதும் கார்பன்டை ஆக்ஸைடு அதிகமான அளவில் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இவற்றையெல்லாம் உறுதிப்படுத்த நீண்ட ஆய்வு தேவைப்படுவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும் தற்போது கிடைத்துள்ள டிஎன்ஏக்கள் அதிக அளவு சிதைந்து இருப்பதால் இதிலிருந்து மேலும் அதிகமான தகவல்களை பெறுவது சவாலான பணி என அவர்கள் கூறியுள்ளனர்.
TELEGRAM: t.me/agnipuratchi1
* தண்ணீரில் நீந்த உங்களுக்கு நீச்சல் தெரிந்திருக்க வேண்டும்.
ஆனால் நீச்சலே தெரியாமல் அகன்ற குளத்தில் நீந்தி மகிழ வேண்டும் என்ற கனவு இருந்தால் எகிப்தின் சீவா சோலைவனத்தில் உள்ள உப்பு குளத்திற்கு சென்றால் உங்கள் கனவு நனவாகும்.
இந்த குளத்தில் இறங்குபவர்கள் மூழ்காமல் மிதந்துக்கொண்டே இருப்பார்கள். வியப்பூட்டும் வகையில் உள்ள இந்த குளத்தை இதனால் தான் மாயாஜால குளம் என்கின்றனர்.
ஆனால் மாயாஜாலம் எல்லாம் ஒன்றுமில்லை. இதன் பின்னே இருப்பது அறிவியல் தான்.
எகிப்தின் மேற்கு பாலைவனத்தில் உள்ளது சீவா சோலைவனம்.
இந்த இடத்தில் இருந்து தான் தரமான ஆலிவ் எண்ணெய் மற்றும் பேரிட்சை கிடைக்கிறது. குன்றுகள் மற்றும் சுண்ணாம்பு மலைகளால் சூழப்பட்ட சீவா 33 சதுர மைல் பரப்பளவு கொண்டது. இப்பகுதிக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
இங்கு அலெக்சாண்டர் கோயில், பாரம்பரிய சீவா வீடு, சீவா பாரம்பரியங்களின் அருங்காட்சியகம் என இதுபோன்ற பல சுற்றுலாத் தலங்கள் இருந்தாலும், பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள உப்பு குளங்களில் நீந்தவே விரும்புகின்றனர்.
இப்பகுதி முழுவதும் நூற்றுக்கணக்கான உப்பு ஏரிகள் மற்றும் குளங்கள் உள்ளன. இந்தக் குளங்கள் உப்புத்தன்மை அதிகம் கொண்டவை.
அதிகம் என்றால், கடல் தண்ணீரை விட ஒன்பது மடங்கு உப்பு அதிகம். இதனால் நீர் மூலக்கூறுடன் உப்புக் கலந்து நன்னீரை விட அதன் அடர்த்தியை அதிகமாக்கும்.
இதனால் நாம் தண்ணீரில் இறங்கினால் மூழ்காமல் மிதந்துகொண்டே தான் இருப்போம்.
இப்பகுதியில் உள்ள ஏரிகளில் பெரும்பாலும் உப்பு தண்ணீர் ஓடுவதால் அவற்றை குடிக்கவும் விவசாயத்தில் பயன்படுத்தவும் முடியாது. இதனால் உள்ளூர் மக்கள் அவதிப்பட்டு இருக்கின்றார்கள்.
இங்குள்ள உப்பு குளங்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு எவ்வளவு அதிர்ஷ்டமாக உள்ளதோ, அதே அளவுக்கு உள்ளூர் மக்களுக்கு சாபமாக உள்ளது.
மேலும் இந்த தண்ணீரில் ஒரு கடல்வாழ் உயிரினங்கள் கூட வாழ முடியாது.
No comments:
Post a Comment