அக்னிப்புரட்சி இன்றைய (18.12.2022) முக்கிய செய்திகள்.
* பீகாரில் விஷ சாராயத்திற்கு பலி 82 ஆக உயர்வு; மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க முடிவு
பீகாரில் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் நுகர்வுக்கு எதிராக கடுமையான கொள்கையை அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் முதல் அமல்படுத்தி அதனை கடைப்பிடித்து வருகிறது.
இந்த நிலையில், பீகாரில் விஷ சாராயம் குடித்ததில் பலர் பலியானார்கள். இந்த பலி எண்ணிக்கை 82 ஆக உயர்ந்து உள்ளது. இவற்றில் சரண் மாவட்டத்தில் அதிக அளவாக 74 பேர் உயிரிழந்து உள்ளனர். சிவான் மாவட்டத்தில் 5 பேரும், பெகுசராய் மாவட்டத்தில் 2 பேரும் உயிரிழந்து உள்ளனர்.
இந்த விஷ சாராய பலியானது தொடர்ந்து பீகாரின் பல பகுதிகளுக்கும் பரவி வருகிறது. 25 பேருக்கு பார்வை பறிபோயுள்ளது.இந்த நிலையில், பீகாரில் விஷ சாராயம் குடித்ததில் பலர் பலியானார்கள். இந்த பலி எண்ணிக்கை 82 ஆக உயர்ந்து உள்ளது. இவற்றில் சரண் மாவட்டத்தில் அதிக அளவாக 74 பேர் உயிரிழந்து உள்ளனர். சிவான் மாவட்டத்தில் 5 பேரும், பெகுசராய் மாவட்டத்தில் 2 பேரும் உயிரிழந்து உள்ளனர்.
30 பேர் வரை பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 12 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. இதனால், உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
இதனை தொடர்ந்து அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள, பறிமுதல் செய்யப்பட்ட 🍻 மதுபானங்களை பற்றி விசாரணை மேற்கொள்ள மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.
அதிக அளவில் பலர் பலியான நிலையில், இந்த விவகாரம் பற்றி தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
விரிவான அறிக்கையை அளிக்கும்படி அரசையும் கேட்டு கொண்டுள்ளது. போலீசாரின் எப்.ஐ.ஆர். பதிவு, பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை, ஏதேனும் இழப்பீடுவழங்கப்பட்டால் அதுபற்றிய தகவல்களை அளிக்கும்படியும் ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.
TELEGRAM: t.me/agnipuratchi1
* டெல்லி: சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமணி குற்றமற்றவர் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமணி. இவர் சென்னையில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாகவும், தமிழக அமைச்சர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், சிலை திருட்டு தொடர்பான சிறப்பு பெஞ்சை கலைத்ததாகவும், தஹில் ரமணி மீது சிபிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டார்.
சிபிஐ விசாரணையில், நீதிபதி🌧️ தஹில் ரமணி மீது எந்த குற்றமும் இல்லை என தெரிய வந்திருப்பதாக மத்திய அரசு தற்போது நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது பில்கிஸ் பனோ குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியவர் நீதிபதி தஹில் ரமணி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
TELEGRAM: t.me/agnipuratchi1
* சிலி நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ 7 ஆயிரம் ஹெக்டேர் காடுகளை எரித்து நாசமாக்கியுள்ளது.
சிலி நாட்டின் வால்பரைசோ பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஏற்பட்ட காட்டுத்தீ பாதிப்பு கட்டுக்கடங்காமல் வளர்ந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மரங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
காட்டுத்தீ பாதிப்பால் அப்பகுதி புகை மண்டலமாக மாறியுள்ளது. வெப்ப அலைகளின் காரணமாக இந்தக் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள மீட்புப் படை அதிகாரிகள் இதுவரை 7 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் தீயில் எரிந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
காட்டுத்தீ பாதிப்பு காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
* தரிசு நிலங்களை மட்டுமே தொழிற்பூங்காவுக்கு எடுப்போம் என்ற அரசின் முடிவுக்கு தமிழக பாஜக தலைவர் வரவேற்பு!..
விவசாய நிலங்களை அழிக்காத தொழிற்சாலைகள் வேண்டும். தரிசு நிலங்களை மட்டுமே தொழிற்பூங்காவுக்கு எடுப்போம் என்ற தமிழக அரசின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தென் தமிழகத்துக்கு நிறைய தொழிற்சாலைகள் வரவேண்டும், ஆனால் அதேநேரம் விவசாயிகள் பாதிக்க கூடாது எனவும் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
* அரசியல் : பாஜக - திமுக கூட்டணி ஏற்படும் என்ற சி.வி.சண்முகம் பேச்சுக்கு பாஜக கண்டனம்!..
பாஜக - திமுக கூட்டணி ஏற்படும் என்ற சி.வி.சண்முகம் பேச்சுக்கு பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் அதிருப்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற சி.வி.சண்முகத்தின் அறிவுரை, ஆலோசனை பாஜகவுக்கு தேவையில்லை என பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
காவி துண்டு போட்டவன் பாஜக தொண்டன் என சி.வி.சண்முகம் பேசியது அவரது பொறுப்பற்றத் தன்மையை காட்டுகிறது எனவும் நாராயணன் தெரிவித்துள்ளார்.
* வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிாிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி.
சட்டோகிராமில் நடைபெற்ற போட்டியில் வங்கதேச அணியை இந்திய அணி வீழ்த்தியது.
2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடாில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி: வங்காளதேசத்தை 188 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி...!
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 404 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. வங்காளதேசம் சார்பில் மெஹதி மற்றும் இஸ்லாம் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி தொடர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது. அந்த அணி, 55.5 ஓவர்களில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டையும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 258 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கில் மற்றும் புஜாரா சதமடித்து அசத்தினர். இதனால் முன்னிலை ரன்களுடன் சேர்த்து வங்காளதேச அணிக்கு 513 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
TELEGRAM: t.me/agnipuratchi1
இதனை தொடர்ந்து 2வது இன்னிங்க்சில் விளையாடிய வங்காளதேச அணி 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் அக்சர் படேல் 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ், அஸ்வின், குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இந்நிலையில், வங்காளதேச அணி வெற்றி பெற கடைசி நாளில் 241 ரன்கள் தேவைப்பட்டது. இந்திய அணியின் வெற்றிக்கு 4 விக்கெட் வீழ்த்தினால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இன்று 5ம் நாள் ஆட்டம் தொடங்கியது. இன்று ஆட்டம் தொடங்கிய 1 மணி நேரத்தில் இந்திய அணி வங்கதேச அணியின் எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது.
இதன் மூலம் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அக்சர் பட்டேல் 4 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
* இந்தியாவில் 'அவதார் 2' முதல் நாளில் ₨41 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் சாதனை
'அவெஞ்சர்ஸ்' படத்திற்கு பின் இந்தியாவில் பெரிய ஓபனர் என்ற இடத்தையும் ’அவதார் 2’ பிடித்தது
படம் எப்படி இருக்கிறது? Watch: https://youtu.be/G8zx-R2gUB0
* திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் நாளை ரோப் கார் சேவை இயங்காது
மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப் கார் இயங்காது என கோவில் நிர்வாகம் அறிவிப்பு
* எச்சரிக்கை மணி: 12 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம்.
மத்தியப் பிரதேச மாநிலம் பிந்து பகுதியில், நான்காம் வகுப்பு படித்து வந்த 12 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பள்ளிச் சென்றுவிட்டு பள்ளிக்குச் சொந்தமான பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, திடிரென அவர் மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் கருதினர்.
மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு செய்யும் முதலுதவி சிகிச்சைகளை செய்த போதும் மாணவரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
நான்காம் வகுப்பு படித்து வந்த மணீஷ் ஜாதவ் தனது சகோதரனுடன், வியாழக்கிழமை மதியம் பள்ளிப் பேருந்தில் ஏறியுள்ளார், சிறிது நேரத்தில் சுயநினைவு இழந்து விழுந்துள்ளார்.
அவருக்கு மருத்துவமனையில் சிபிஆர் சிகிச்சை அளித்தும் அவர் உயிர்பிழைக்கவில்லை. மரணம் அடைந்த அறிகுறிகளைப் பார்க்கும் போது மாரடைப்பாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.
எனினும் உடல் கூறாய்வு செய்ய பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை. தங்களது மகனுக்கு இதற்கு முன்பு எந்த உடல்நலப் பாதிப்பும் இல்லை என்று அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
TELEGRAM: t.me/agnipuratchi1
* GST புதிய வரி விதிப்பு இல்லை – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!..
48-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் புதிதாக எந்த பொருட்களுக்கும் வரிகள் விதிக்கப்படவோ அல்லது உயர்த்தப்படவோ இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்..
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 48-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.
இதில் மாநில நிதியமைச்சர்கள், துறைசார்ந்த உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட நிலையில், தமிழ்நாட்டின் சார்பில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக பங்கேற்றார்.
இக்கூட்டத்தில் பருப்பு, தோல் வகைகள் மீதான ஜிஎஸ்டி 5 சதவீதத்தில் இருந்து பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டது. அதேபோல், எத்தனால் கலந்து பெட்ரோல் தயாரிக்கும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்படும் பயோ எரிபொருளுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கூட்டத்தில் 15 தலைப்புகள் விவாதிக்க பட்டியலிடப்பட்ட நிலையில், 8 அம்சங்கள் மட்டும் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் எந்த பொருளுக்கும் வரிகள் விதிக்கப்படவோ, உயர்த்தப்படவோ இல்லை என்றும் தெரிவித்தார்.
* தும்மினால் கூட அதில் குறை கண்டுபிடித்து விமர்சிக்க ஒரு கூட்டம் தயாராக உள்ளது.- சென்னை அடுத்த திருவேற்காட்டில் அமைச்சர் நாசர் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு
பால்வளத்துறை அமைச்சரானதும் பால் விலையை குறைத்தார் நாசர்.
ஆவினில் பால் பொருட்கள் விற்பனை கடந்த ஆட்சியை விட அதிகமாக உள்ளதற்கு காரணம் நாசர் தான்.
ஆவின் மூலம் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் பெற்றுள்ளனர்.
* குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகரத் தொடங்கியது. மேலும் டிசம்பர் 21 முதல் சென்னை உட்பட தமிழக கடலோர பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம்.
21ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது
கூட்டத்திற்கு பின் ஏற்படும் மாற்றங்கள் குறித்து முன்கூட்டியே சொல்ல இயலாது"
* சென்னை விமான நிலையத்தில் ஓபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், முதல்வர் ரங்கசாமிக்கு துணை நிற்போம் என்று திமுக தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் மாநில அந்தஸ்து பெறமுடியவில்லை என்றால் முதல்வர் பதவி விலக வேண்டும் என அதிமுக கூறி இருப்பதால் புதுச்சேரி அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
தம்மால் முடியவில்லை என்றால் முதல்வர் பதவியை ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் மாநில அந்தஸ்து விவகாரத்தில் முதலமைச்சர் ரங்கசாமிக்கு திமுக பக்கபலமாக இருக்கும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தெரிவித்துள்ளார். முதல்வர் டெல்லி சென்று மாநில அந்தஸ்து விவகாரம் தொடர்பாக பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் வலியுறுத்த வேண்டும் என்று முன்னாள் எம்பி ராமதாஸ் கூறியுள்ளார்.
30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. எனினும், இரு கட்சிகளுக்கு இடையே அவ்வப்போது கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.
தங்களுக்கு மரியாதை இல்லை என்ற நிலை உருவாகியுள்ளதாகவும், அதிகாரம் இல்லாததால் தினமும் மன உளைச்சல் ஏற்படுவதாகவும் அவர் கூறி இருக்கிறார். தங்களால் மக்களுக்கு எதுவுமே செய்து கொடுக்க முடியவில்லை என்று கூறியுள்ள ரங்கசாமி, மத்திய அரசு முழு ஒத்துழைப்பைத் தருவதில்லை என்று வேதனையுடன் கூறி உள்ளார்.
TELEGRAM: t.me/agnipuratchi1
இந்நிலையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரும் குழுவை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்த கருத்துக்கள் புதிய புயலை கிளப்பியுள்ளது.யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமென இதுவரை 16 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனினும், இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படாததால், இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
* மேகாலயா ஷில்லாங்கில் ரூ.2,450 கோடியில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த அனைத்துக்கும் ரெட்கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநில கவுன்சிலின் 50-வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார். நாட்டின் ஊழல், பாரபட்சம், உறவுமுறை, வன்முறை ஆகியவற்றை களைய போராடி வருகிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
* எந்த முடிவும் எடுக்காமல் இருந்துவிடக் கூடாது, இல்லை எனில் நீங்கள் தகுதியற்றவராகி விடுவீா்கள் என ஆளுநர் கூறியுள்ளார்.
இந்திய குடிமைப பணி தோ்வுக்கு தயாராகி வரும் இளைஞா்களோடு ஆளுநா் ரவி கலந்து உரையாடினார். குடிமைப் பணியாளா்கள் சிலநேரத்தில் தவறான முடிவு எடுக்க நேரலாம், நானும் சிலதவறான முடிவுகளை எடுத்துள்ளேன், மாறிவரும் உலகிற்கு ஏற்றவாறு அனைத்தையும் எதிர்கொள்ள பழைய பாடத்திட்டத்தை மாற்றுவது அவசியம் என ஆளுநர் கூறியுள்ளார்.
* தமிழ்நாட்டில் அக். 1 முதல் இதுவரை வடகிழக்கு பருவமழை 2% கூடுதலாக பொழிந்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 61% கூடுதலாக வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது. ஈரோடு மாவட்டத்தை அடுத்து அதிகபட்சமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 55 மி.மீ. அளவுக்கு பருவமழை பொழிவு, நாமக்கல் 42%, கோவை 41%, குமாி 39%, கிரிஷ்ணகிாி 34%, திருப்பூர் 26%, திருவள்ளூர் 17%, இயல்பை விட கூடுதலாக மழை பெய்துள்ளது.
காஞ்சி 39%, திண்டுக்கல் 19%, மதுரை 17%, சென்னை 16%, தருமபுாி 13%, ராணிப்பேட்டை 11%, தி.மலை 10%, சேலம் 8% மழை பெய்துள்ளது.
* சீனாவில் குவியும் பிணங்கள்?
கொரோனா காட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் எதிரொலியால் கொரோனா தொடர்பான மரணங்கள் அதிகரித்து வருவதாகவும், தலைநகர் பீஜிங் உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள மயானங்களில் தினந்தோறும் 100-க்கும் அதிகமான பிணங்கள் குவிந்து வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
* உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி
அர்ஜென்டினா - பிரான்ஸ் மோதல் தொடங்கியது!
பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அர்ஜென்டினா ஒரு கோல் அடித்து முன்னிலை
நட்சத்திர வீரர் மெஸ்ஸி கோல் அடித்தார்
அர்ஜென்டினா அசத்தலான இரண்டாவது கோல்...
டி மரியா அபாரமாக கோல் அடித்து அசத்தல்...
அர்ஜென்டினா முன்னிலை :
உலக கோப்பை கால்பந்து 2022 இறுதிப் போட்டி: முதல் பாதி ஆட்டத்தில் அர்ஜென்டினா முன்னிலை.
பிரான்சுக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் உள்ளது.
* பிரான்ஸ் ஒரு கோல் அடித்தது - எம்பாப்வே கோல் அடித்து அசத்தல்
எம்பாப்வே இரண்டாவது கோல் அடித்து அபாரம்...
அர்ஜென்டினா - பிரான்ஸ் தலா 2 கோல்கள் அடித்து சமன்
பெனால்டி ஷூட் அவுட் முறையில் முடிவு:
கத்தார் கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டி: 90 நிமிடங்கள் முடிவடைந்த நிலையில், பிரான்ஸ் - அர்ஜெண்டினா அணிகள் 2-2 என சமனில் இருந்ததால் கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது.
அதில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்ததால் இரு அணிகளுக்கும் தலா 5 பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்டது.
* உலக கோப்பை சாம்பியன் அர்ஜென்டினா:
உலக கோப்பை கால்பந்து 2022 இறுதிப்போட்டி: அர்ஜென்டினா அணி கோப்பையை வென்றது.
நடப்பு சாம்பியன் பிரான்சுக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஜென்டினா4-2 என்ற பெனால்டி ஷூட் அவுட் முறையில் உலக கோப்பையை வென்றது அர்ஜென்டினா
FIFA World Cup wins:
TELEGRAM: t.me/agnipuratchi1
🇧🇷Brazil: 🏆1958 🏆1962 🏆1970 🏆1994 🏆2002
🇩🇪Germany: 🏆1954 🏆1974 🏆1990 🏆2014
🇮🇹Italy: 🏆1934 🏆1938 🏆1982 🏆2006
🇫🇷France: 🏆1998 🏆2018
🇺🇾Uruguay: 🏆1930 🏆1950
🏴England: 🏆1966
🇪🇸Spain: 🏆2010
🇦🇷 Argentine: 🏆1978 🏆1986 🏆2022
* உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் வென்ற அர்ஜென்டினா அணிக்கு ரூ.342 கோடி பரிசு.
TELEGRAM: t.me/agnipuratchi1
22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது.
லீக், நாக்-அவுட் முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பேராவலுடன் உற்றுநோக்கிய உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா வென்றது.
மெஸ்சியின் கடைசி உலகக் கோப்பை போட்டி இது என்பதால் தனது நீண்ட கால ஏக்கத்தை தணிக்கும் வகையில் கோப்பையை கையில் ஏந்தி அர்ஜென்டினா ரசிகர்களுக்கு ஆனந்தத்தை அள்ளிக் கொடுத்தார்.
வெற்றி வாகை சூடிய அர்ஜென்டினா அணிக்கு ரூ.342 கோடி பரிசுத்தொகை கிடைத்தது.
No comments:
Post a Comment