அக்னிப்புரட்சி இன்றைய (19.12.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (19.12.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (19.12.2022) முக்கிய செய்திகள்.

* மும்பை: ஐஎன்எஸ் மர்மகோவா போர்க்கப்பல், இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இந்த கப்பலை, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்!..

இந்த கப்பலில் பயன்படுத்தப்பட்டு உள்ள 75 சதவீத உபகரணங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை. இந்த கப்பல் 163 மீ., உயரமும், 17 மீ., அகலமும் உடையது.7,400 டன் எடையை தாங்கி செல்லும் திறன் உடையது. இந்த கப்பலின் அதிகபட்ச வேகம் 30 கடல் நாட்டிகல் மைல் ஆகும்.

இந்திய கடற்படையின் உள் நிறுவனமான 'வார்ஷிப் டிசைன் பீரோ'வால் வடிவமைக்கப்பட்டு, 'மாஷாகான் டாக்' என்னும் கப்பல் கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்டது. ஐஎன்எஸ் மர்ம கோவா போர்க்கப்பல், இந்தியாவிலேயே முழுமையாக வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது.

இந்த கப்பலில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் ஆயுதங்களும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை. தரையில் இருந்து வானில் இருக்கும் இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள், தரையில் இருந்து சென்று தரையில் இருக்கும் இலக்குகளை அழிக்கும் 'பிரமோஸ் ' ரக ஏவுகணைகள், டியூப் லாஞ்சசர்கள், உள்ளிட்ட உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன போர்க்கருவிகளும் இந்த கப்பலில் பொருத்தப்பட்டுள்ளது.
அணுஆயுதங்கள், ரசாயன ஆயுதங்கள் போன்ற ஆபத்தான ஆயுதங்களை போன்ற நிலைமைகளை சமாளிக்கும் வகையில் உள்ள இந்த கப்பலில், அதி நவீன ரேடார்களும் பொருத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டிலேயே கட்டப்பட்ட போர்க்கப்பல்களில் சக்தி வாய்ந்தவைகளில் ஒன்றாக ஐஎன்எஸ் மர்ம கோவா கப்பல் உள்ளது. நாட்டின் கடலோர பாதுகாப்பு மற்றும் தே நலன்களை பாதுகாப்பதை உறுதி செய்யும். நவீன தொழில்நுடபங்களுடன் கூடிய ஏவுகணைகளை தாங்கும் வசதியும் உள்ளது. நாட்டின் தற்போது எதிர்கால பிரச்னைகள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள நட்பு நாடுகளின் சவால்களை இந்த போர்க்கப்பல் சமாளிக்கும்.
TELEGRAM: t.me/agnipuratchi1

* ஆணவக் கொலையால் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான இளம் வயதினர் உயிரிழக்கின்றனர்" - சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வேதனை!..

மும்பை பார் கவுன்சில் சார்பில் நடைபெற்ற ‘சட்டமும் நன்நெறியும்’ என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

“நாட்டில் ஆணவக் கொலைகளால் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான இளம் வயதினர் உயிரிழக்கின்றனர். சாதி மாறி மலரும் நேசத்திற்காகவே பல உயிர்கள் பறிபோகின்றன.

நாட்டில் இன்றும் ஒடுக்கப்பட்ட நலிந்த மக்கள், பெரும்பான்மை சமூகத்தினரின் அடக்குமுறையால் தங்கள் விருப்பம்போல் வாழ இயலாத நிலையில் உள்ளனர்.

ஆண்டுதோறும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்வதாலேயே நூற்றுக் கணக்கானோர் உயிரிழப்பதாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

எனக்கு எது நன்னெறியாக இருக்கிறதோ அது உங்களுக்கும் நன்னெறியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லையே?

உத்தரப் பிரதேசத்தில் 1991-ல் 15 வயது சிறுமி ஒருவர் கொல்லப்பட்டார். அதை நியாயப்படுத்தி ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. அந்த கட்டுரையில், கிராம மக்கள் 15 வயது சிறுமியின் படுகொலையை ஏற்றுக் கொண்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

சமூகத்தின் நடத்தை விதிகளின்படி சரியென்று அவர்கள் ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பகுத்தறிவாளர்களுக்கு அது நிச்சயமாக நடத்தை விதிகளாக இருக்காது. ஆண்டுதோறும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்வதாலேயே நூற்றுக் கணக்கானோர் உயிரிழக்கின்றனர். முற்போக்கு அரசியல் சாசனம் தான் நம்மை வழி நடத்திச் செல்லும் சக்தி”
இவ்வாறு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி  தெரிவித்தார்.

TELEGRAM: t.me/agnipuratchi1

* FIFA உலகக் கோப்பை-2022 சாம்பியன் அர்ஜென்டினா கோப்பையை பெறும்போது மைதானம் முழுவதும் சூழ்ந்திருந்த ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதேபோல் அணியினரும் குழந்தையை தாங்குவது போல கோப்பையை வைத்து கொஞ்சியபடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

* Kylian Mbappe!

Age: 23
World Cup goals: 12
2022 World Cup goals: 8
2022 World Cup assists: 2

A deserved Golden Boot, but a World Cup win was just beyond him...

* Messi - Total Stats

1️⃣0️⃣0️⃣3️⃣ games
7️⃣9️⃣3️⃣ goals💥
3️⃣5️⃣0️⃣ assists
4️⃣2️⃣ trophies💥
6️⃣0️⃣ freekicks
5️⃣6️⃣ hattricks
8️⃣ Pichichi
7️⃣ Ballon d'Or
6️⃣ Golden Boot
6️⃣ FIFA Best Player
3️⃣ UEFA Best Player

TELEGRAM: t.me/agnipuratchi1

* காஞ்சிபுரம், ஏகனாபுரம் கிராமத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்ற பேரணி தடுத்து நிறுத்தம்

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க திட்டம்

பேரணியாக வந்த கிராம மக்களுடன் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவண கண்ணன் பேச்சுவார்த்தை

* 21 ஆண்டுகளுக்கு பின் Mrs. World பட்டத்தை வென்ற இந்தியர்!

திருமணமான பெண்களில் சிறந்த அழகிக்கான ‘திருமதி உலக அழகி’ பட்டத்தை வென்றார் இந்தியாவின் சர்கம் கவுசல் (32)

கடந்த 2001ல் இந்தியாவின் அதிதி கவுரிகர் அழகி பட்டத்தை வென்று இருந்தார்.

* 2வது முறையாக மீண்டும் அயர்லாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த லியோ வரத்கர் தேர்வு செய்யப்பட்டார்.

149 உறுப்பினர்களில் 87 எம்.பி.க்களின் ஆதரவைப்பெற்று பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 2017ல் தனது 38வயதில் முதல்முறையாக பிரதமரானார். அயர்லாந்தில் மருத்துவர் பட்டம் பெற்ற லியோ, சிறிது காலம் மருத்துவராக பணியாற்றினார்.

* எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி இவ்வையகமும் உயர பேராசிரியர் க.அன்பழகனின் 101வது பிறந்த நாளில் உறுதி ஏற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திராவிடவியல் கோட்பாட்டுக்கு விளக்கவுரை தீட்டியவர் மட்டுமல்ல; விளக்காகவும் இருந்தவர் பேராசிரியர்.

மாநில சுயாட்சி, மாநில உரிமைகள் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் ஓங்கிக் குரல் கொடுத்தவர் பேராசிரியர்.

நூற்றாண்டு விழா காணும் பேராசிரியரின் பெரும்பாலான கனவுகள், பெரும்பாலானவர்களின் கனவாக விரிவடைந்து வருகின்றன என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

* பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

தலைமைச் செயலகத்தில்  அமைச்சர் துரைமுருகன், கே.என்.நேரு உடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 பணத்துடன் என்னென்ன பொருட்கள் வழங்கலாம் என முதல்வர் ஆலோசனை

* அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாகனம் மீது தாக்குதல்

திண்டுக்கல் மாவட்டம் நாகம்பட்டி அருகே சென்ற போது காரில் வந்த மர்ம நபர்கள் தாக்குதல்

4 கார்களில் வந்த மர்ம நபர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் காரின் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு

திண்டுக்கல்லில் இருந்து கரூருக்கு சென்ற போது கார் மீது தாக்குதல்

கரூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்தல் தொடர்பான விவகாரத்தில் தாக்குதல் என தகவல்

* மருந்தகத்தில் மீண்டும் கருக்கலைப்பு சர்ச்சை

கடலூர்: திட்டக்குடி அருகே மீண்டும் மருந்தகத்தில் கருக்கலைப்பு மாத்திரை சர்ச்சை 

கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

அதே பகுதியில் மருந்தகம் நடத்திய மருத்துவம் பார்த்த சுரேஷ் என்கிற போலி மருத்துவர் கைது.

இவர் ஒருவாரத்திற்கு முன்புதான் ஜாமினில் வெளியில் வந்தது குறிப்பிடத்தக்கது.

* புலம்பெயர் தமிழர் நல வாரியத்தின் தலைவராக கார்த்திகேய சிவசேனாபதியை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் என திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் தொடங்கப்பட்டது.

மொரிஷியஸ், லண்டன், அமீரகம், அமெரிக்கா, சிங்கப்பூர், மும்பையை சேர்ந்த தமிழர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுளனர்.

* தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் 'நம்ம ஸ்கூல்' என்னும் புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அரசு பள்ளியை தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தும் முன்னோடி திட்டம் தான் நம்ம ஸ்கூல் திட்டம்.

பள்ளிக்காலம் அனைவரின் வாழ்க்கையின் மறக்க முடியாத காலம்.
தரமான கல்வி வழங்குவதில் தமிழ்நாடு இந்தியாவில் தற்போது 2ம் மாநிலமாக உள்ளது.

* ரூ.7,500 கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது - நம்ம ஸ்கூல் என்னும் புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேச்சு.

* காஷ்மீரில் கடுமையான குளிர்நிலவுவதால், குளிரிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள ஏராளமான மக்கள் சந்தைகளில் போர்வைகளை வாங்க குவிந்து வருகிறார்கள்.

வழக்கமாக, குளிர்காலத்தில் காஷ்மீரில் வெப்பநிலை பூஜ்ஜியம் டிகிரிக்கும் கீழே குறைவது வழக்கம். திங்கள்கிழமையன்று பகல்காமில் 4.8 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குறைந்துவிட்டது.

கடும் பனி மற்றும் குளிரிலிருந்து காத்துக் கொள்ள, ஏராளமான மக்கள் போர்வைகள், தலையை மூடும் குல்லா, கம்பளி ஆடைகளை வாங்குவதற்கு சந்தைகளில் குவிந்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனை முன்னிட்டு, சந்தைகளிலும் விதவிதமான போர்வைகளும் கம்பளி ஆடைகளும் வந்து குவிந்துள்ளன. பலரும் தங்களுக்கு ஏற்ற வகைகளில் பொருள்களை வாங்கிச் செல்கின்றனர்.

பொதுவாக வெப்ப நிலை குறையும் போது பலருக்கும் தலைவலி ஏற்படும். அதனைப் போக்க தலைக்கு கம்பளி குல்லா அணிவது வழக்கம். கழுத்தைச் சுற்றிப் போடும் மப்ளர்கள், கையுறை, காலுறை போன்றவற்றையும் மக்கள் வாங்கிச் செல்கிறார்கள்.

TELEGRAM: t.me/agnipuratchi1

* சேலம் உருக்காலை பங்குகள் விற்பனை: மத்திய அமைச்சர் விளக்கம்!..

திமுக எம்.பி வில்சன் இன்று மாநிலங்களவையில் சேலம் உருக்காலை தொடர்பாக கேள்வி ஒன்றை எழுப்பினார்.

”சேலம் உருக்காலையின் பங்குகளை விற்கும் நடவடிக்கைகள் நடைபெற்றுவரும் நிலையில் அந்த ஆலையின் தற்போதைய நிலை என்ன? அங்கு ஏற்கனவே பணியாற்றும் ஊழியர்களின் பணி பாதுகாப்பில் மத்திய அரசு அக்கறை காட்டுமா” என வில்சன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த மத்திய இரும்பு எஃகு துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, சேலம் உருக்காலையின் பங்குகளை விற்பனை செய்ய வேண்டும் என்கிற முடிவில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்டார். மத்திய நிதி அமைச்சகமும் தமது அமைச்சகமும் இணைந்து அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்காக முதலீட்டாளர்கள் சேலம் உருக்காலையில் ஆய்வு செய்யவும், வர்த்தக விசாரணைகளில் ஈடுபடவும் மத்திய அரசு முயற்சித்ததாக கூறிய அவர், எனினும் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தகுந்த பாதுகாப்பான சூழலை தமிழக அரசு  ஏற்படுத்தவில்லை என்பதை வருதத்துடன் அவையில் தெரிவித்துக்கொள்வதாக கூறினார். எனினும், சேலம் உருக்காலையின் பங்குகளை விற்பதற்கான ஏலம் வரும் ஜனவரி மாதம்  நடைபெறும் என தாம் நம்புவதாகவும் ஜோதிர் ஆதித்ய சிந்தியா கூறினார்.

TELEGRAM: t.me/agnipuratchi1

* வாட்ஸ்அப்பில் புதிய பயனுள்ள அப்டேட்!

Watch: https://youtu.be/7U6dMJijsY0
இனி வாட்ஸ்அப்பில் அவசரத்தில் செய்யும் தவறுகளை திருத்தலாம்!

* பல மாநிலங்களும் தடை செய்ய கோருவதால் ஆன்லைன் விளையாட்டை தடுக்க புது சட்டம்: மத்திய அமைச்சர் பரபரப்பு பேட்டி!

பெங்களூரு: ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு புதிய  கொள்கைகள் வகுக்கப்படும் அல்லது நாடாளுமன்றம் மூலம் புதிய சட்டம் கொண்டு  வரப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

இந்தியாவில் இளம் வயதினர் தொடங்கி பலரும் ஆன்லைன் விளையாட்டை விரும்பி விளையாடி வருகின்றனர். ‘ஃபேண்டஸி கேமிங்’ என்று வகைபடுத்தபடும் பல விளையாட்டுக்கள் சூதாட்டம் போல இருப்பதால், அதில் பண இழப்பிற்கான அபாயம் அதிகரித்துள்ளது. இதனால் தினமும் தற்கொலை போன்ற சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

நாடு முழுவதும் 322 மாவட்டங்களில் ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் பாதிப்பு குறித்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் 65 சதவீதம் பேர் ஆன்லைன் விளையாட்டை சூதாட்டம் என்றும், அதனை தடை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரு வந்த மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அனைத்து மாநிலங்களின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினேன். ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் பாதிப்புகள், தற்கொலைகள் குறித்து மாநில அமைச்சர்கள் கவலை தெரிவித்தனர். ஆன்லைன் விளையாட்டால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.

விசித்தரமான இந்த விளையாட்டை ஏன் மக்கள் விளையாடுகிறார்கள்? இதுபோன்ற விளையாட்டுகள் சமூகத்தின் நல்லிணக்கத்தை பாதிக்கிறது. அனைத்து தரப்பிடமும் ஆலோசனை நடத்த உள்ளோம்.

எனவே ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு புதிய கொள்கைகள் வகுக்கப்படும் அல்லது நாடாளுமன்றம் மூலம் விரைவில் புதிய சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள தகவல் தொழில்நுட்ப மசோதாவை பொருத்தமட்டில், இந்தியாவின் டிஜிட்டல் மசோதா உலகிற்கே முன்மாதிரியாக இருக்கும்’ என்றார்.

* சிறுநீர் கழிக்க இறங்கிய வாலிபரிடம் கத்தி முனையில் மெர்சிடிஸ் காரை அபகரித்த கும்பல்!..

குருகிராமில் சிறுநீர் கழிக்க இறங்கிய வாலிபரிடம் இருந்து கத்தி முனையில் மெர்சிடிஸ் காரை கும்பல் ஒன்று கடத்தி சென்றுள்ளது.

டெல்லியை சேர்ந்த நபர் அனுஜ் பேடி. இவர் அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மதுபான கடையில் இருந்து, தனது வெள்ளை நிற மெர்சிடிஸ் ரக காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்துள்ளார்.

அவர் வரும் வழியில், தீயணைப்பு நிலையம் மற்றும் ஆடி கார் ஷோரூம் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதியில் சென்றபோது, காரை சற்று ஓரத்தில் நிறுத்தி உள்ளார்.அதன்பின்னர், கீழே இறங்கி சாலையோரத்தில் சிறுநீர் கழிப்பதற்காக அவர் சென்றுள்ளார். திடீரென அவரது காரை மறித்தபடி ஹுண்டாய் கார் ஒன்று வந்து நின்றுள்ளது.

அதில் இருந்து இறங்கியவர்கள் நேராக அனுஜிடம் சென்றுள்ளனர்.அவரை கத்தியை காட்டி மிரட்டிய அந்த கும்பல், பின்பு அவரது மெர்சிடிஸ் காரை கடத்தி சென்றுள்ளது.. News update..இதனால் அதிர்ச்சி அடைந்த அனுஜ், குருகிராம் போலீசில் புகார் அளித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து புகாரை பெற்று கொண்ட போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். விசாரணை அதிகாரியான உதவி காவல் ஆய்வாளர் சந்தீப் குமார் கூறும்போது, சம்பவம் நடந்த பகுதியை சுற்றியுள்ள இடத்தில் சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். அவர்களை கைது செய்வோம் என கூறியுள்ளார்.

* தமிழகத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது: ஒரு மாணவர் கூட விடுபடக் கூடாது என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்..!!

நடப்பு கல்வியாண்டில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிய தமிழ்நாடு முழுவதும் வீடு  வீடாக சென்று கணக்கெடுக்கும் பணி  தொடங்கியுள்ளது.

கொரோனா பெருந்தொற்றால் பள்ளிகள் மூடபட்டபோது லட்சக்கணக்கான குழந்தைகள் பள்ளி படிப்பை கைவிடும் சூழல் உருவானது. இதனை தடுப்பதற்காக கடந்த கல்வியாண்டில் இடைநிற்றல் மாணவர்களை கணக்கெடுக்கும் பணியை  பள்ளி கல்வித்துறை மேற்கொண்டது. அப்போது 80,000 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்களை மீண்டும் கல்வி கற்க வைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் பள்ளி படிப்பை நிறுத்துவதற்கான சாத்தியமுள்ள மாணவர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது.

ஜனவரி 11 ஆம் தேதிவரை நடைபெறும் இந்த பணியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் விடு வீடாக சென்று மொபைல் செயலி மூலம் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது.

15 நாட்கள் வரை பள்ளி செல்லா குழந்தைகள் இடைநிற்றளுக்கான வாய்ப்புள்ளவர்களாக கருதப்படுவர்.

அதே போல் ஒரு மாதமாக பள்ளி செல்லாதவர்கள், 8ம் வகுப்பு வரை முடிக்காதவர்கள் இடைநிற்றல் மாணவர்களாக கணக்கிடப்பட்டு அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்துவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும் கல்விகற்பதற்கான உதவி தேவைப்படுவோரின் விவரமும் கணக்கிடப்பட்டு அவர்களின் தேவையை பூர்த்தி செய்யவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்த பணியில் ஒரு மாணவர்கூட விடுபடக்கூடாதென்றும், இடைநிற்றல் மாணவர்கள் குழந்தை தொழிலாளர்களாக ஈடுபடுத்த படுகிறார்களா என ரயில்நிலையம், சந்தைகள், உணவகங்களில் கண்காணிக்கவும் அறிவுறுத்தபட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages