அக்னிப்புரட்சி இன்றைய (20.12.2022) முக்கிய செய்திகள்.
* கால்பந்து உலகக்கோப்பை வெற்றியை கொண்டாட அர்ஜென்டினா தலைநகர் புவெனோ ஐரெஸில் குவிந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள்.
வெற்றியை கொண்டாட இன்று பொது விடுமுறை அறிவித்த அர்ஜென்டினா அரசு.
* "தமிழக பெண் காவலருக்கு தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் விருது"
தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் விருது பெற்ற தமிழக பெண் தலைமை காவலரை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டிய டிஜிபி சைலேந்திர பாபு.
திருநெல்வேலி மாவட்டம் குற்ற ஆவண காப்பகத்தில் பணிபுரியும் பெண் தலைமை காவலர் தங்கமலர் மதிக்கு, கடந்த 15ம் தேதி டெல்லியில் நடைபெற்ற தேசிய குற்ற ஆவணக் காப்பக விழாவில் விருது வழங்கப்பட்டது.
* ஜம்மு காஷ்மீர் : ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டர்
என்கவுண்டரில் லஷ்கர்- இ-தொய்பா அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
* கர்நாடகா, கதக் மாவட்டத்தில் 4ம் வகுப்பு மாணவன் சேட்டை செய்ததால் இரும்பு கம்பியால் ஆசிரியர் அடித்த கொடூரம்
தடுக்க வந்த சிறுவனின் தாயும், ஆசிரியருமான கீதா மீதும் ஆசிரியர் தாக்குதல்
சிறுவனை முதல் தளத்தில் இருந்து கீழே தள்ளிவிட்டதில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
மாணவனை தாக்கிய ஒப்பந்த ஆசிரியர் முத்தப்பா மீது போலீசார் வழக்குப்பதிவு
* பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 3 -0 என முழுமையாக வென்றது இங்கிலாந்து அணி
* டாஸ்மாக் மதுபானக் கடைகள், பார்கள் மூடப்பட்ட பிறகு பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்கக் கோரி வழக்கு
தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
* சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து பிரான்ஸ் வீரர் பென்ஜிமா ஓய்வு
பிரான்ஸ் கால்பந்து அணியின் முன்கள வீரர்களில் ஒருவரான கரீம் பென்ஜிமா சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயதான பென்ஜிமா கத்தாரில் நடந்த உலகக் கோப்பை போட்டிக்கான பிரான்ஸ் அணியில் இடம் பெற்று இருந்தார். ஆனால் காயம் காரணமாக அவர் கடைசி நேரத்தில் அணியின் இருந்து விலகினார். அவர் இந்த ஆண்டின் உலகின் சிறந்த வீரர் விருது பெற்றிருந்தார்.
* உக்ரைன் - ரஷ்யா போர் அடுத்தாண்டு முடிவுக்கு வரும்: ஐநா பொதுச்செயலாளர்
"உக்ரைனில் எதிர்காலத்தில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பைதான் காணவில்லை. ஏற்கனவே அதிகரித்து வரும் ராணுவ மோதல்கள் தொடரும். ஆனால் 2023 இறுதிக்குள் உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அனைத்தையும் செய்யவேண்டும். இது நடக்கும் என உறுதியாக நம்புகிறேன்” என ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்தார்.
* எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பை ராணுவம் அனுமதிக்காது: ஜெய்சங்கர்
”சீன எல்லையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக அளவிலான ராணுவத்தை குவித்திருக்கிறோம். 2020 முதல் சீனா குவித்து வரும் படைகளுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன. எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பை அனுமதிக்க முடியாது. எல்லையில் அத்துமீற எந்த நாட்டையும் அனுமதிக்க மாட்டோம்” என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
* ட்விட்டர் அரசாங்க அதிகாரிகளுக்கு சாம்பல் நிற டிக் மற்றும் வணிகத்திற்கான சதுர பேட்ஜ்களை வெளியிடுகிறது.
* டிச.27-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிச்சாமி தலைமையில் டிச.27-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் அதிமுக அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் கூட்டம் நடைபெறவுள்ளது.
* குண்டர் தடுப்பு சட்டத்தை காவல்துறையினர் இயந்திரத்தனமாக செயல்படுத்தியுள்ளனர்- திண்டுக்கல்லில் கொலை வழக்கில் கைதான 5 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து.
போலீசார் முறையாக விசாரிக்காமல் குண்டர் தடுப்பு காவல் விதிகளை மனதில் கொள்ளாமல் குண்டர் தடுப்பு சட்டத்தை பயன்படுத்தியுள்ளதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.
* அண்ணாமலை பல்கலைக்கழக உத்தரவுக்கு இடைக்காலத் தடை.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஸ்பெஷல் ஆபிஸராக பணியாற்றியவர்களை பதவி இறக்கம் செய்து பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவு.
இதனால் பாதிக்கப்பட்ட ஸ்பெஷல் ஆபிசர்கள் மதுரை மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதனை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றம் ஸ்பெஷல் ஆபீஸர்களை பதவி இறக்கம் செய்ததற்கு தடைவிதித்து உத்தரவு.
இந்த வழக்கு விசாரணை ஜனவரி 10 தேதிக்கு ஒத்திவைப்பு.
* 2023 ஜனவரி 4ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது
* இனி இஷ்டத்துக்கு Google Pay, Paytm-ஐ யூஸ் பண்ண முடியாது!
Watch: https://youtu.be/2HH7ZOh68No
2 புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு.
* அரசு பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 % இட ஒதுக்கீடு தொடர்பாக உயர்மட்ட குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மனிதவள மேம்பாட்டுத்துறையின் செயலாளரை தலைவராக கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 4 % இடஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
* உலக நாடுகளில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; பரிசோதனையை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்!.
அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் ஜப்பான், அமெரிக்கா, சீனா, கொரியா, பிரேசில் போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மேலும் தீவிரம் காட்டுமாறு வலியுறுத்தி உள்ளார்.
தொடர்ந்து கொரோனா பாதித்தவரின் ரத்த மாதிரிகளை மாநிலங்கள் மரபணு ஆய்வகத்திற்கு தினசரி அனுப்ப வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீனாவை கதிகலங்க வைக்கும் கொரோனா: https://youtu.be/4G5DMTiV3-o
* சீனாவில் நிரம்பி வழியும் பிணவறைகள் - அமெரிக்க ஊடகம் வெளியிட்ட புதிய வீடியோ!
Watch: https://youtu.be/4G5DMTiV3-o
கொரோனாவால் அடுத்த 90 நாட்களில் லட்சக்கணக்கானோர் உயிரிழக்க வாய்ப்பு!
No comments:
Post a Comment