அக்னிப்புரட்சி இன்றைய (21.12.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (21.12.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (21.12.2022) முக்கிய செய்திகள்.

* பூமியை போன்ற 7 கோள்களை படம்பிடித்தது நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி.

புத்தாண்டு அன்று பிரத்தியேக தகவல் வெளியிடப்போவதாக அறிவிப்பு.

* இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியிலும் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றி

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது ஆஸ்திரேலியா!

* ஆம்புலன்சை வழியில் நிறுத்திவிட்டு நோயாளியுடன் மது அருந்திய ஓட்டுனர்

ஜகத்சிங்பூர்: ஒடிசாவில், விபத்தில் அடிபட்ட நபரை ஆம்புலன்சில் ஏற்றி சென்ற ஓட்டுனர், வாகனத்தை நிறுத்தி மது அருந்தியது மட்டுமின்றி, நோயாளிக்கும் ஊற்றிக் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசாவில், சாலை விபத்தில் காயம் அடைந்த நபரை ஏற்றிக் கொண்டு, ஜகத்சிங்பூரின், திர்தால் என்ற பகுதியில் உள்ள நெடுஞ்சாலை வழியாக தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருந்தது. வழியில் மதுக்கடை அருகே ஆம்புலன்ஸ் நின்றது.

அதில் இருந்து இறங்கி வந்த ஓட்டுனர் மது வாங்கி சென்றார். ஆம்புலன்சில் ஏறியதும் பாட்டிலை திறந்து மது அருந்தினார். காலில் காயத்துடன் கட்டுப்போட்டு படுத்திருந்த நபருக்கு ஒரு, 'பெக்' ஊற்றிக் கொடுத்தார். இந்த காட்சியை சுற்றி இருந்தவர்கள், மொபைல் போனில்' படம் பிடித்தனர். இது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

ஆம்புலன்சில் காயம் அடைந்த நபருடன், ஒரு பெண்ணும், குழந்தையும் இருந்தனர். ஆம்புலன்ஸ் ஓட்டுனரை பொது மக்கள் கண்டித்தபோது, நோயாளி தான் மது கேட்டதாக அவர் தெரிவித்தார்.

''இது தனியார் ஆம்புலன்ஸ் என்பதால், மண்டல போக்குவரத்து அதிகாரியும், போலீசாரும் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, ஜகத்சிங்பூர் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி ஒதுங்கிக் கொண்டார்.

''இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை. வழக்கு பதிவு செய்யாமல் விசாரிக்க முடியாது,'' என, போலீசாரும் நழுவினர்.

TELEGRAM: t.me/agnipuratchi1

* பதவிக்கேற்ற ஒரு முட்டாளை விரைவில் கண்டறிந்தபின், ட்விட்டர் CEO பதவியிலிருந்து, நான் ராஜினாமா செய்கிறேன்" - எலன் மஸ்க் ட்வீட்!

* தமிழக பாடத்திட்டத்துக்குப் பதிலாக சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலாக்க புதுச்சேரி அரசு முடிவு.

புதுச்சேரி அரசுப்பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டு முதல் தமிழக பாடத்திட்டத்துக்குப் பதிலாக சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலாக்க அரசு முடிவு எடுத்துள்ளது.

சிபிஎஸ்இ இணைப்புக்கு அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் விண்ணப்பிக்க கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

* கிறிஸ்துமஸ்: நாளை முதல் சிறப்பு ரயில்கள்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தாம்பரத்திலிருந்து திருநெல்வேலி, நாகா்கோவிலுக்கு சிறப்பு கட்டண ரயில்கள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் (டிச.22, 23) முதல் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தாம்பரத்திலிருந்து வியாழக்கிழமை (டிச.22) இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில் (வண்டி எண்.06021) வெள்ளிக்கிழமை (டிச.23) காலை 9 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். மறுமாா்க்கமாக திருநெல்வேலியில் இருந்து வெள்ளிக்கிழமை (டிச.23) பகல் 1 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில் (வண்டி எண்.06022) சனிக்கிழமை (டிச.24) காலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூா் சென்றடையும்.
இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி வழியாக இயக்கப்படுகிறது.

தாம்பரத்தில் இருந்து வெள்ளிக்கிழமை (டிச.23) இரவு 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில் (வண்டி எண்.06041) சனிக்கிழமை (டிச.24) காலை 7.10 மணிக்கு நாகா்கோவில் சென்றடையும். இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா் வழியாக இயக்கப்படுகிறது.

TELEGRAM: t.me/agnipuratchi1

எா்ணாகுளம் - சென்னை சென்ட்ரல்:
கேரள மாநிலம் எா்ணாகுளத்தில் இருந்து வியாழக்கிழமை (டிச.22) 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில் (வண்டி எண்.06046) வெள்ளிக்கிழமை (டிச.23) காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.

மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து வெள்ளிக்கிழமை (டிச.23) பகல் 2.50 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில் (வண்டி எண்.06045) சனிக்கிழமை (டிச.24) காலை 3.10 மணிக்கு எா்ணாகுளம் சென்றடையும்.

இந்த ரயில் கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இங்கிலாந்தில் மறைந்த  ராணிக்கு பதிலாக மன்னர் சார்லஸ் படம் பதித்த கரன்சியை அச்சிட தொடங்கியுள்ளது அந்நாட்டு வங்கி.

* ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற மத்திய அரசு அறிவுறுத்தல்

ராகுல் காந்தி மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடிதம்.

ஒற்றுமை யாத்திரையில் முகக்கவசம், சானிடைசர் பயன்படுத்த வேண்டும்

கொரோனா நெறிமுறையை பின்பற்றுவது சாத்தியமில்லை என்றால் தேசிய நலன் கருதி ஒற்றுமை யாத்திரையை ஒத்திவைக்க வேண்டும்

* ஓ.பி.எஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்

88 மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம்

* ஐரோப்பாவில் இருந்து ஏவப்பட்ட VEGA-C ராக்கெட் தோல்வியடைந்ததாக ஏரியன் ஸ்பேஸ் நிறுவனம் அறிவிப்பு

பிளையட் 5 மற்றும் 6 என்ற இரு செயற்கைகோள்களை சுமந்து சென்ற ராக்கெட் ஏவல் தோல்வியடைந்தது

எஞ்சினில் ஏற்பட்ட குறைந்த அழுத்தமே காரணம் என ஏரியன் ஸ்பேஸ் நிறுவன சி.இ.ஓ ஸ்டீபன் இஸ்ரேல் தகவல்

* திருப்பதி தேவஸ்தான நிர்வாகி தர்மான ரெட்டியின் மகன் சந்திரமௌலி ரெட்டி மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

சந்திரமௌலி ரெட்டிக்கு கடந்த 18ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எக்மோ உள்ளிட்ட உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 8.20 மணியளவில் உயிர் பிரிந்ததாக காவேரி மருத்துவமனை தெரிவித்திருக்கிறது.

இவருக்கும் சேகர் ரெட்டி மகளுக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டிருந்தது குறுப்பிடத்தக்கது.

* 8 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி ரூ.1 கோடி நூல் உரிமைத்தொகை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.

விடுதலை ராஜேந்திரன், நெல்லை செ.திவான், நா.மம்மது உட்பட 8 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி உரிமைத்தொகை வழங்கப்பட்டது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நூல் உரிமைத் தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மறைந்த நெல்லை கண்ணன், கந்தர்வன், சோமலே, விருதுநகர் ராசய்யா, தஞ்சை பிரகாஷ் நூல்களும் நாட்டுடைமையாக்கப்பட்டது.

தமிழ் மொழி வளர்ச்சி, சமூக முன்னேற்றத்துக்கு பாடப்பட்டதற்காக 8 அறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி ரூ.1 கோடி நூல் உரிமைத் தொகையை முதலமைச்சர் வழங்கினார்.

* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.40,920-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ. 5,115-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.2.20 விலை உயர்ந்து ரூ.74.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒருகிலோ வெள்ளியின் விலை ரூ.74,700 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

* AIADMK-வின் வரவு - செலவு குறித்து எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தாக்கல் செய்த 29.09.2022 தேதியிட்ட, 03.10.2022 அன்று File செய்யப்பட்ட, "Audited Annual Accounts FY 2021-22", தேர்தல் ஆணைய பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக கையெழுத்திட்டு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்  தாக்கல் செய்ததை தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளது!

* தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் சென்னையில் மட்டும் 30 இடங்களில் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்

* திமுக அனைத்து அணிகளின் நிர்வாகிகள், குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் டிசம்பர் 24ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 24ம் தேதி காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளதாக துரைமுருகன் அறிவித்துள்ளார்.

* மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி 

அடிப்படை ஆதரமற்ற முறையில் மனுத்தாக்கல் என கூறி தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

"திரிபுராவில் பிரதமர் நடத்திய பேரணியில் கொரோனா நடைமுறைகள் பின்பற்றவில்லை"

"மத்திய அமைச்சர் ஏன் பிரதமருக்கு கடிதம் எழுதவில்லை?"

"ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரைக்கு மக்கள் ஆதரவு பெருகுவதை கண்டு பாஜக பயந்துவிட்டது"

ஒற்றுமை யாத்திரையை சீர்குலைக்கவே மத்திய அமைச்சர் கடிதம் - அசோக் கெலாட்

* "எம்.ஜி.ஆரை நேரில் பார்த்து ஈபிஎஸ் பேசியது உண்டா?" - ஓ பன்னீர்செல்வம் வினா?

"அதிமுகவை கபளீகரம் செய்ய நினைத்தால் அது நடக்காது"

"தைரியம் இருந்தால் தனிக்கட்சியை நடத்தி பாருங்கள்"-ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஓபிஎஸ் பேச்சு.

நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் தலைமையில் தான் கூட்டணி அமையும்.

தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் எங்களுக்கு தான் இரட்டை இலை சின்னத்தை வழங்கும்.

"ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டிய தருணம் இது"

"நாடாளுமன்ற தேர்தலில் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முடிவெடுக்கப்படும்"-மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி.

வாரந்தோறும் புதன்கிழமை, பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்த வேண்டும்

காவல் ஆணையர்கள், ஐ.ஜி.க்கள், எஸ்.பி-க்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

* சீனாவில் கொரோனா பரவல் அதிகரிப்பதற்கு காரணமான BF7 வகை கொரோனா மாறுபாடு இந்தியாவில் மூன்று பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்.

குஜராத்தில் இருவருக்கும், ஒடிசாவில் ஒருவருக்கும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்.

* கும்பகோணத்தில் அம்பேத்கர் நினைவு தினத்தின் போது, அம்பேத்கருக்கு விபூதி பட்டை, காவி உடை போஸ்டர் அடித்து ஒட்டிய, இந்து மக்கள் கட்சி நிர்வாகி குருமூர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கும்பகோணம் கிளைச்சிறையில் உள்ள குருமூர்த்தி, திருச்சி மத்திய சிறைக்கு மாற்றம்.

* சீனாவில் கொரோனா அதிகரிப்பு: இந்தியாவில் முகக்கவசம் - பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் - மத்திய சுகாதாரத்துறை!

கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமையில் இன்று மதியம் உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது.

டெல்லியில் நடந்த கூட்டத்தில் உயர் அதிகாரிகள், நிபுணர்களுடன் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார்.மந்திரி, அதிகாரிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்து கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் 6 முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இதில் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் தொற்று பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டுக்காக வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் பயணிகள் இந்தியாவுக்கு வருவார்கள் என்பதால் விமான நிலையத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர். சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கை, வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கான வழிகாட்டுதல்களை வகுத்தல், கொரோனாவின் புதிய மாறுபாடு குறித்து நிபுணர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.

(சீனாவில் எப்படி உள்ளது நிலைமை? Watch: https://youtu.be/4G5DMTiV3-o )

அதன்பின்னர் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியதாவது:-

"சில நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினேன். கொரோனா தொற்று இன்னும் முடிவடையவில்லை. விழிப்புடன் இருக்கவும், கண்காணிப்பை பலப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்தச் சூழலையும் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

விமானப் போக்குவரத்துக்கு தற்போதைய கட்டுப்பாடுகள் தொடரும். எந்த மாற்றமும் இல்லை. மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்.27-28 சதவிகிதம் மக்கள் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

மூத்த குடிமக்கள் உள்பட அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும். அதற்கான வழிமுறைகள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

TELEGRAM: t.me/agnipuratchi1

* கமிஷன் இல்லாமல் எந்த வேலையும் நடைபெறாது - அண்ணாமலை

“திமுகவினரின் ஊழல் குறித்து எதுவும் கேட்காமல் விட்டதன் விளைவு, இன்றைக்கு இந்தியாவில் ஊழலில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு மாறி உள்ளது. தமிழ்நாட்டில் 30 சதவீத கமிஷன் இல்லாமல் எந்த வேலையும் நடைபெறாது என்ற நிலை உள்ளது” என திமுக அரசு குறித்து தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார்.

* “பாஜகவுக்கு உரிய மரியாதையை வழங்குகிறோம்” - ஒபிஎஸ்

“அதிமுக பொதுக்குழு விரைவில் முறையாக நடைபெறும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் எங்களுடன் உள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பு எங்களுக்குச் சாதகமாக அமையும்; இரட்டை இலையும் கட்சியும் எங்களிடம்தான் இருக்கும். பாஜக எங்களுக்கு உரிய மரியாதை வழங்குகிறது; நாங்களும் அதையே செய்கிறோம்” என, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஒபிஎஸ் கூறியுள்ளார்.

* கர்நாடக எல்லைக்குள் நுழைவோம் - சஞ்சய் ராவத் சர்ச்சை கருத்து

கர்நாடகா - மகாராஷ்டிரா இடையே எல்லைப் பிரச்சனை வெகு நாட்களாக நிலவி வருகிறது. இந்நிலையில், “இந்தியாவுக்குள் சீனா நுழைந்ததைப் போல நாங்களும் கர்நாடகாவுக்குள் நுழைவோம். இந்தப் பிரச்சனையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவே நினைக்கிறோம். ஆனால், கர்நாடக முதல்வர் நெருப்பை பற்றவைத்துள்ளார்” என சிவசேனா தலைவர்களுள் ஒருவரான சஞ்சய் ராவத் கூறியதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

* மக்கள் பேசுவதை கேட்கத்தேவையில்லை என நினைக்கின்றனர்: ராகுல்

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் இன்று (டிசம்பர் 21) 105வது நாளை எட்டியுள்ளது. அவரது பயணம் இன்று அரியானா மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. இந்நிலையில் அவர், "இந்திய ஒற்றுமை யாத்திரை மூலம் வெறுப்பு சந்தையில் அன்பு கடையை திறக்கிறேன். மக்கள் பேசுவதை கேட்கத்தேவையில்லை என்று தலைவர்கள் நினைக்கின்றனர். இந்த பயணத்தில் நாங்கள் அதை மாற்ற நினைக்கிறோம்" என்றார்.

* கேப்டன் பொறுப்பில் இருந்து விலக முடிவா? பாபர் அசாம்

''இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததற்கான பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். கேப்டன் பொறுப்பு எனது பேட்டிங்கை பாதிக்கவில்லை. ஆகவே ஒரு கேப்டனாக எனது நாட்டுக்காக சிறந்த செயல்பாட்டை அளிக்க நினைக்கிறேன். டெஸ்ட் அணியை கட்டமைக்க சிறிது காலம் தேவை'' என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages