அக்னிப்புரட்சி இன்றைய (22.12.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (22.12.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (22.12.2022) முக்கிய செய்திகள்.

* வரும் முன் காப்போம் - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அறிவுரை!

உலகின் பல நாடுகளில் கொரோனா மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரு நாளில் ஜப்பானில் 1.85 லட்சம், கொரியாவில் 87,559, பிரான்சில் 71,212, ஜெர்மனியில் 52,528 உட்பட உலகம் முழுவதும் 5,59,018 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா புதிய அலை கவலையளிக்கிறது.

கடந்த காலங்களில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. அதனால் புதிய அலை இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பரவுவதை தடுக்க உறுதியான நடவடிக்கைகள் தேவை. முதல் நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு  சோதனை நடத்தப்பட வேண்டும்!

தமிழகத்தில் 18 வயதைக் கடந்த 4.30 கோடி பேரில் 87 லட்சம், அதாவது 20.23% மட்டுமே பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதமுள்ள மூன்றரை கோடி பேருக்கு பூஸ்டர் டோஸ் போட சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். அவற்றை மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும்!

பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும். பொதுமக்களும் தங்கள் பங்குக்கு கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும். அதன் மூலம் கொரோனா பரவலையும், அதன் ஆபத்தான விளைவுகளையும் தடுத்து நிறுத்த ஒத்துழைக்க வேண்டும்!

இவ்வாறு அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்!

* மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான CUET நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு

CUET இளங்கலை தேர்வுகள் அடுத்த ஆண்டு  மே 21 - 31ம் தேதிகள் வரை நடைபெறும்

CUET முதுகலை தேர்வுகள் ஜூன் மாதத்தில் நடைபெறும் - பல்கலை. மானிய குழு அறிவிப்பு

தேர்வு முடிவுகள் ஜூலைக்குள் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க திட்டம்

* விமான நிலையங்களில் மீண்டும் கொரோனா பரிசோதனை

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா மாதிரிகளை சேகரிக்கும் பணி மீண்டும் தொடக்கம்.

* இந்தியாவில் BF.7 ஒமிக்ரான் வகை வைரஸ் 7 நபருக்கு கண்டறியப்பட்டதை தொடர்ந்து சர்வதேச விமான பயணிகளுக்கு பரிசோதனை.

உருமாறிய கொரோனா வைரஸ் சீனாவில் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும். இதன்படி மத்திய சுகாதார துறை ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றன.

* மாநிலங்களவை முன்னாள் எம்.பி. மஸ்தான் தஸ்கீர்(66) உடல் நலக்குறைவால் ஊரப்பாக்கத்தில் காலமானார்.

சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது வலிப்பு ஏற்பட்டு மஸ்தான் தஸ்தகீர் உயிரிழந்தார்.

* எந்தவொரு மொழியையும் திணிக்க முயற்சித்தால் அதனை தடுப்பதே நம்மொழிக் கொள்கை

தமிழ் இசை சங்கத்தின் 80வது ஆண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

* உதகை அருகே கூக்கல்தொரை கிராமத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு

இதனால் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது

* அமெரிக்க அதிபர் பைடனுடன் ஜெலன்ஸ்கி சந்திப்பு:

ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின் முதன்முறையாக வெளிநாடு சென்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில், அதிபர் ஜோ பைடனுடன் சந்திப்பு.

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் துணை நிற்கும் என அதிபர் பைடன் உறுதி.

* மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் பல்வேறு புதிய திட்டங்கள் தொடக்கம்

மாணவர்களுக்கு மனநலன் காக்கும் "மனம்" திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் "மனநல நல்லாதரவு மன்றங்கள்" தொடக்கம்

கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் இடைநிலை பராமரிப்பு நிலையம் தொடக்கம்

* நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து பங்கேற்பு

கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், அவையில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்

அவை உறுப்பினர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் - மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர்

முகக்கவசம் அணிந்து மக்களுக்கு உதாரணமாக திகழ ஜெகதீப் தன்கர் வேண்டுகோள்

* தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடலில் சென்னைக்கு 690 கி.மீ. தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது-சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

* சென்னை, தலைமைச் செயலகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்பு

விமான நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்

* இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் - முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 227 ரன்களுக்கு ஆல் அவுட்.

வங்கதேச அணியில் அதிகபட்சமாக மொமினுல் ஹக் 84 ரன்கள் எடுத்தார்.

பந்துவீச்சில் உமேஷ் யாதவ், அஷ்வின் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

* ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தமிழக மாணவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை

2020-21 கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஜேஇஇ தேர்வுக்கு விரைவில் விண்ணப்பிக்கலாம்

தேர்வுக்கு அனைத்து தமிழக மாணவர்களும் விண்ணப்பிக்க முடியும் - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

* பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்:

மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்களிடம் தவறாக நடந்துகொண்ட ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட விவகாரம்.

விவகாரத்தில் தொடர்பில்லாத நபர்களையும் வழக்கில் இணைத்துவிடுவதாக மிரட்டி பள்ளி நிர்வாகத்திடம் பணம் வாங்கியதாக புகார்.

மயிலாடுதுறை மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் சங்கீதாவை சஸ்பெண்ட் செய்து தஞ்சை சரக டிஐஜி கயல்விழி உத்தரவு.

* சென்னை, தூத்துக்குடி, கடலூர், நாகை, புதுவை, உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதை தொடர்ந்து நடவடிக்கை.

* சிறுமிகள் வன்கொடுமை - 7 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை:

புதுச்சேரியில் வாத்து பண்ணையில் சிறுமிகளை அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 7 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்தது புதுச்சேரி நீதிமன்றம்.

பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவருக்கு ரூ.7 லட்சம், மற்ற 4 சிறுமிகளுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவு.

* வெளிநாட்டில் இருந்து தமிழகத்துக்கு வரும் சர்வதேச விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்து கண்காணிக்கப்படுவார்கள்.

சர்வதேச விமான நிலையங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அறிவுரை.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு.

* கொரோனா முன்னெச்சரிக்கை மீண்டும் மாஸ்க் அணிய அறிவுறுத்தல்:

கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணியுமாறு மக்களுக்கு மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும்.

கூட்டம் அதிகமுள்ள இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும்.
புதிய வகை கொரோனா பரவலை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

புதிய கொரோனா வகையை கண்டறிய சோதனைகள் நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் கொரோனா தொற்று விகிதம் குறைந்து வருகிறது.

சீனா கொரோனா பரவல் நிலவரத்தை இந்தியா கவனித்து வருகிறது- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா.

* என்எல்சி யில் விபத்து - 5 தொழிலாளர்கள் படுகாயம்:

கடலூர்: நெய்வேலி என்எல்சி புதிய அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 5 தொழிலாளர்கள் படுகாயம்.

உடல்முழுவதும் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட 5 தொழிலாளர்களில் ஒருவர் கவலைக்கிடம்.

விபத்திற்கான - காரணம் குறித்து போலீசார் விசாரணை.

* ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு வழக்கு: போலீசார் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு.

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை சுற்றுச்சுவருக்குள் நடத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு வழக்கில் தமிழக அரசு, காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அணி வகுப்புக்கு அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். தரப்பில் விண்ணப்பித்தால் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை ஜனவரி 5-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

* பொங்கல் பரிசு ரூ.1000-தமிழக அரசு.

பொங்கல் பரிசு தொகுப்பாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 ரொக்கதுடன் பச்சரிசி, சர்க்கரை வழங்க முதலமைச்சர் உத்தரவு.

வரும் ஜனவரி 2ம் தேதி இந்த திட்டம் முதல்வரால் துவக்கி வைக்கப்பட உள்ளது.

* உலகெங்கும் கொரோனா அச்சம் அதிகரித்து வரும் நிலையில், கர்நாடகாவில் மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு

ஏசி ஹால் மற்றும் உள்ளரங்கு நிகழ்வுகள் போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என உத்தரவு

பொதுமக்கள் அனைவரும் விரைவில் பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தல்

* தமிழ்நாட்டில் உருமாறிய புதிய வகை கொரோனா இதுவரை இல்லை; மக்கள் அச்சப்படத் தேவையில்லை.

எத்தகைய பாதிப்பையும் எதிர்கொண்டு மக்களை பாதுகாக்க அரசு தயார் நிலையில் உள்ளது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பொது இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதனை செய்ய அறிவுரை - சென்னையில் நடைபெற்ற கொரோனா தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

* “காலாபாணி” நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது:

எழுத்தாளர் மு.ராஜேந்திரனின் ‘'காலா பாணி" நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு.

தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ராஜேந்திரன்.

டான்சிறீ சோமா விருது, புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

* ஆ ராசாவிற்கு சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை முடக்கியது அமலாக்கத்துறை

2004-07 காலகட்டத்தில் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ராசா முறைகேடாக சுற்றுசூழல் அனுமதி வழங்க லஞ்சமாக பெற்ற பணத்தில் பினாமி நிறுவனத்தின் பெயரில் ரூ.55 கோடி மதிப்பீட்டில் நிலம்  வாங்கப்பட்டது: அமலாக்கத்துறை

* பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். உருமாறிய கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பான உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தல்

பொது இடங்களில் முகக்கவசம் அணிய நடவடிக்கை எடுங்கள்.

பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்; முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசியை மூத்த குடிமக்கள் எடுத்துக்கொள்ள நடவடிக்கை .

கூட்டம் மிகுந்த பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்

கொரோளா பரிசோதனையை மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும்

ஆக்சிஜன் கையிருப்பு, வெண்டிலேட்டர் உள்ளிட்டவற்றின் இருப்பு பற்றி மாநிலங்கள் கண்காணிக்க வேண்டும்

முதியோர் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

அத்தியாவசிய மருந்துகளின் இருப்பு மற்றும் விலையை தொடர்ந்து அதிகாரிகள் வேண்டும் கண்காணிக்க வேண்டும் - இந்தியாவில் புதிய BF.7 வகை கொரோனா தொற்று பரவல் தொடர்பாக உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்திய பின் பிரதமர் மோடி அறிவுறுத்தல்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages