அக்னிப்புரட்சி இன்றைய (23.12.2022) முக்கிய செய்திகள்.
* நாகை: உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் கந்தூரி விழாவை முன்னிட்டு முன்னேற்பாடுகள் தீவிரம்
தர்காவில் உள்ள மினாராக்கள், அலங்கார வாசல், கோபுரம், உப்பு கிணறு உள்ளிட்ட இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.
* திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில், வைகுந்த ஏகாகதசி பெருவிழா பகல் பத்து முதல் நாள்: திரு நம்பெருமாள் இரத்தின நீள்முடிகிரீடம், இரத்தின அபயஹஸ்தம், கபாய் சட்டை, நெல்லிக்காய் மாலை, காசு மாலை உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து அருள் பாலித்தார்.
* நாளை முதல் வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்படும்.
தமிழ்நாட்டில் கடந்த 6 மாதமாக கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
* அனுமன் ஜெயந்தி விழா: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மார்கழி மாதம் அமாவாசை மூலநட்சத்திரத்தில், ஆஞ்சநேயர் அவதரித்த நாளான இன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
ஆஞ்சநேய பக்தர்கள் விரதம் இருந்து வடைமாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை சாத்தி அனுமனை வழிபடுவது வழக்கம்.
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல்லில் உள்ள விஷ்வரூப ஆஞ்சநேயர் கோவில் பல்வேறு வண்ணங்களில் 2 டன்கள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டது.
ஒரு லட்சத்து 8 வடைகள் கோர்க்கப்பட்ட மாலை ஆஞ்சநேயருக்கு சாத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அனுமனை தரிசனம் செய்தனர்.
* அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு - 2000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
வாஷிங்டன்: அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் சீரற்ற வானிலை நிலவுகிறது.
கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் பல்வேறு மாகாணங்களில் வரலாறு காணாத அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டுது. சாலைகளில் பல அடி உயரத்துக்கு பனித்துகள் குவிந்துள்ளன. குளிர் வாட்டி வருவதால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர்.
இந்நிலையில், கடும் பனிப்பொழிவு காரணமாக அமெரிக்கா முழுவதும் நேற்று 2,270 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. வெள்ளிக்கிழமை செல்லும் 1000 விமானங்கள் ரத்தாகியுள்ளன.
மேலும் விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக வந்தடைகின்றன. பனிப்பொழிவால் விமான சேவை தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதனால் பயணிகள் பாதிப்புக்கு இலக்காகினர்.
* கூட்டுறவு சங்க விதிகள் திருத்த மசோதாவை திரும்பப்பெறுவதாக கூறி தமிழக ஆளுநருக்கு தமிழக சட்டத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
கூட்டுறவு சங்க விதிகளை திருத்தம் செய்யும் சட்ட மசோதாவை கடந்த ஜனவரி மாதம் தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றியிருந்தது. இதற்கு ஆளுநர் ஒப்புதல் கிடைக்க தாமதம் ஆகி வரும் நிலையில் திரும்ப பெறுவதாக சட்டத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.464 சரிந்துள்ளது.
22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5,066-க்கும் சவரன் ரூ.40,528-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 73.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.
* மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல்
பூஸ்டராக பயன்படுத்தப்பட உள்ள தடுப்பு மருந்து முதற்கட்டமாக தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்பட உள்ளது
* அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
* சீனாவில் உருமாறிய கொரோனா ருத்ர தாண்டவம்!
Watch: https://youtu.be/Om87b5vBYb8
நிரம்பும் மருத்துவமனைகள் - உயிர் பலிகள் குறைத்து காண்பிக்கப்படுவதால் பரபரப்பு
* கடலூரில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்க சென்ற குமாரக்குடியை சேர்ந்த ராஜதுரை என்ற விவசாயி மயங்கி விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது. பட்டியலின சகோதரரான அவர் பாமகவின் நீண்ட நாள் தொண்டர். அவரது குடும்பத்திற்கு இரங்கலையும், அனுதாபங்களையும் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா தெரிவித்துக்கொண்டார்.
* பொங்கல் பரிசு தொகையை ரூ. 5000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்"
"பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்காதது
விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது"-தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்.
* ராகுல்காந்தியின் தேசிய ஒற்றுமை யாத்திரையில் திமுக எம்,பி., கனிமொழி பங்கேற்பு
ஹரியானாவில் ராகுல்காந்தியுடன் சேர்ந்து நடைபயணம் மேற்கொண்டார் கனிமொழி
* 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறைக்கு பிறகு ஜனவரி 5ம் தேதி பள்ளிகள் திறப்பு.
மற்ற மாணவர்களுக்கு ஜனவரி 2ம் தேதி வகுப்புகள் தொடங்கும் - பள்ளிக்கல்வி ஆணையர் அறிவிப்பு.
* போலீசார் ஹெல்மெட் அணியாவிட்டால் கடும் நடவடிக்கை-டிஜிபி சைலேந்திரபாபு.
பொதுமக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டிய போலீசாரில் பெரும்பாலானோர், ஹெல்மெட் அணிவது இல்லை.
ஹெல்மெட் அணியாமல் பணிக்கு வந்த போலீசாரிடம், வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும்.
ஹெல்மெட் வாங்கி வந்து காண்பித்த பின் தான், வாகனத்தை ஒப்படைக்க வேண்டும்.
போலீஸ் என்ற அடையாளத்தை காரணமாக கூறி, வாக்குவாதம் செய்வோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர், ஹெல்மெட் அணிவது கட்டாயம்; மீறினால் ரூ.1000 அபராதம்.
சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில், 90% பேர், ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுகின்றனர்
வாகன சோதனையில் ஈடுபடும், போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசாருக்கு, மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்- டிஜிபி சைலேந்திரபாபு.
* கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி பயன்படுத்திய செல்ஃபோனை காவல்துறைக்கு பதிலாக அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்க அனுமதிக்க முடியாது
மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்
செல்ஃபோனை காவல்துறையிடம் ஒப்படைக்க முடியாது; அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்க தயார் - ஸ்ரீமதியின் பெற்றோர் தரப்பு.
தாமதிக்காமல் செல்ஃபோனை காவல்துறையினரிடம் ஒப்படைக்க பெற்றோர் தரப்புக்கு நீதிபதி உத்தரவு.
* IPL வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போனவர் என்ற சாதனை படைத்தார் இங்கிலாந்து வீரர் சாம் கரண்
ரூ.18.5 கோடி விலைக்கு பஞ்சாப் அணி வாங்கியுள்ளது
இதற்கு முன் 2021ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸை ரூ.16.25 கோடிக்கு ராஜஸ்தான் அணி வாங்கியதே அதிகபட்சமாக இருந்தது
* தொழில்நுட்பம் மூலம் புகார் பதிவு!
தமிழ்நாட்டில் சிலை கடத்தல் தொடர்பாக பொதுமக்கள் ரகசிய தகவல்கள், புகார்கள் தெரிவிக்க பிளாக் செயின் தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி http://complaints.tnidols.com என்ற பிரத்யேக இணையதளத்தை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் உருவாக்கியுள்ளனர்!
சரியான தகவலை அனுப்பும் பொதுமக்களுக்கு டிஜிட்டல் டோக்கன்களில் பரிசு வழங்கப்படும் என அதிகாரிகள் தகவல்!
TELEGRAM: t.me/agnipuratchi1
* 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு - தமிழ்நாடு அரசு உத்தரவு!
1992ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரிகள் 8 பேரை கூடுதல் தலைமை செயலாளர் பொறுப்புக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!
ராதாகிருஷ்ணன், ராஜேந்திரகுமார், நீரஜ் மிட்டல், ராஜேஷ் லக்கானி, மங்கத் ராம் ஷர்மா, பிரதீப் யாதவ், குமார் ஜெயந்த், கே.கோபால் ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.
* சீன எல்லையில் விபத்து: இந்திய வீரர்கள் 16 பேர் பலி!
சிக்கிம் மாநிலத்தில் சீன எல்லை பகுதியான சாட்டன் என்கிற இடத்தில் இருந்து, ராணுவ வாகனம் ஒன்று இந்திய வீரர்களுடன் தாங்கு என்ற பகுதிக்கு சென்றுள்ளது. அப்போது ஜீமா பகுதியில் சென்றுகொண்டிருந்த வாகனம் வளைவில் திரும்ப முயன்றபோது, எதிர்பாராத விதமாக ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் வாகனத்தில் இருந்த ராணுவ வீரர்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், காயம் அடைந்த 4 வீரர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
* ராணுவ வீரர்கள் மரணம் மிகுந்த வேதனை அளிக்கிறது- மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
சிக்கிம் மாநிலம் வடக்கில் இந்தியா-சீனா எல்லைக்கு அருகே ஜெமா என்ற இடத்தில் இருந்து 3 வாகனங்களில் ராணுவ வீரர்கள் பயணம் மேற்கொண்டனர். ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஒன்று ஒரு கொண்டை ஊசி வளைவு போன்ற சாலை திருப்பத்தில் கடந்த போது சாலையை விட்டு விலகி செங்குத்தான பள்ளத்தாக்கில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 3 ராணுவ உயர் அதிகாரிகள் 13 ராணுவ வீரர்கள் பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் வடக்கு வங்காளத்தில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
சிக்கிம் சாலை விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், வடக்கு சிக்கிமில் நடந்த சாலை விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர்களின் சேவை மற்றும் அர்ப்பணிப்புக்காக தேசம் ஆழ்ந்த நன்றியுடன் உள்ளது.
உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பங்களுக்கு எனது அனுதாபங்கள்; காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
TELEGRAM: t.me/agnipuratchi1
No comments:
Post a Comment