அக்னிப்புரட்சி இன்றைய (29.12.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (29.12.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (29.12.2022) முக்கிய செய்திகள்.

* 2021 ஆம் ஆண்டு சாலை விபத்தில் 1.53 லட்சம் பேர் உயிரிழப்பு.

இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டில் 4,12,432 சாலை விபத்துகள் நடந்துள்ளன.

இந்த விபத்துகளில் 1,53,972 பேர் உயிரிழந்துள்ளனர்; 3,84,448 பேர் காயமடைந்துள்ளனர்.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம், 'இந்தியாவில் சாலை விபத்துகள் - 2021' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்.

* பொங்கல் சிறப்பு ரயில்கள் - இன்று முன்பதிவு துவங்கியது.

பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு ரயில்களுக்கு காலை 8 மணி முதல் முன்பதிவு தொடங்கியது - தென்னக ரயில்வே.

* இருமல் மருந்து குடித்த 18 குழந்தைகள் பலி:

உஸ்பெகிஸ்தானில் இந்திய இருமல் மருந்து குடித்த 18 குழந்தைகள் இறந்ததாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு.

இந்திய நிறுவனம் தயாரித்த Dok-1 Max இருமல் மருந்து குடித்து 18 குழந்தைகள் உயிரிழந்ததாக உஸ்பெகிஸ்தான் நாட்டின் சுகாதார அமைச்சகம் தகவல்.

உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் இருக்கும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தைக் குடித்ததால் இந்த துயர சம்பவம் நடந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

* எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மயிலாடுதுறையை சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது.

நாகை, கோடியக்கரையில் இருந்து கடந்த 27ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற நிலையில் கைது.

* ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், வைகுந்த  ஏகாகதசி பெருவிழா பகல் பத்து உற்சவ 7ம் நாள்

ஸ்ரீ நம்பெருமாள் கல் இழைத்த நேர் கிரீடம், மகர கர்ண பத்ரம், மகரி,  பங்குனி உத்திர பதக்கம், அதன் மேல், மிக அரிதான இந்திரக்கல் பதக்கம், அடுக்கு பதக்கங்கள், ரத்தின அபயஹஸ்தத்துடன், வெண்பட்டு கச்சத்தின் மேல் தர்பார் அங்கி அணிந்து, நெல்லிக்காய் பொட்டு மாலை, 2 வட பெரிய முத்து சரம் சாற்றி, பின் சேவையாக - சந்திரகலை பதக்கம், புஜ கீர்த்தி, தாயத்து தொங்கல் கைகளில் சாற்றி மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி, அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதித்து வருகிறார்.

* ஒவ்வொரு ஆண்டும் 1 பில்லியன் டன் உணவு வீணடிப்பு!

உலகளவில் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 கோடி டன் உணவை வீணடிப்பதாக, ஐநாவின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) உணவு கழிவு குறியீட்டு அறிக்கையில் தகவல்!

உலகளவில் உற்பத்தியாகும் உணவுகளில், 3ல் ஒரு பங்கு வீணடிக்கப்படும் அவலநிலை, சுற்றுச்சூழல், சமூக, பொருளாதார ரீதியாக மக்களுக்கு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என இயற்கை ஆர்வலர்கள் கருத்து

* வெள்ளத்தில் மூழ்கி 29 பேர் பலி

பிலிப்பைன்சில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. பல நகரங்கள் வெள்ளக்காடாகின. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 12 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

* ஹாக்கி உலகக் கோப்பையை வென்றால் தலா ரூ.25 லட்சம்

ஹாக்கி உலகக் கோப்பையில் விளையாடும் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ஹாக்கி இந்தியா பரிசுத் தொகையை அறிவித்துள்ளது.

கோப்பையை வென்றால், அணியில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும் ரூ.25 லட்சம் ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி வென்றால் ரூ.15 லட்சமும், வெண்கலம் வென்றால் ரூ.10 லட்சமும் வழங்க ஹாக்கி இந்தியா முடிவு செய்துள்ளது.

* ஆன்லைனில் பகுதி நேர வேலை: மக்களே உஷார்...!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஆன்லைன் பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து 30 செல்போன்கள், 20 சிம்கார்டுகள், 26 ஏடிஎம் கார்டுகள், 37 வங்கி காசோலைகள், 56 போலி முத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சுமார் 78 பேர் ரூ.2.45 கோடி பணத்தை இந்த கும்பலிடம் இழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே, மக்களே கவனமாக இருங்கள்.

* எல்லாத்துக்கும் காரணம் OPS டிடிவி தினகரன்

அதிமுகவில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு காரணமே ஓபிஎஸ் தான் என்று டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

தனக்கு பதவி இல்லை என்றதும் தர்மயுத்தம் நடத்தினார். ஓபிஎஸ் தொடங்கியதை இபிஎஸ் கையில் எடுத்து அவருக்கும் சேர்த்து துரோகம் செய்து இருக்கிறார்.

அமமுகவை பலப்படுத்துகிற பணியில் ஈடுபட்டிருக்கிறோம். எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய கட்சியை ஜனநாயக ரீதியாக மீட்டெடுப்போம் என்று அவர் கூறியுள்ளார்.

TELEGRAM: t.me/agnipuratchi1

* புதிய திட்ட பணிகளை தொடங்கி வைத்த முதல்வர்

திருச்சியில் ரூ. 655 கோடியில் 5,639
புதிய திட்ட பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

ரூ. 308 கோடி மதிப்பீட்டில் 5,951 புதிய திட்ட பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்.

22,716 பயனாளிகளுக்கு ரூ. 79 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

* ஆசிரியர் போராட்டம் - பேச்சுவார்த்தைக்கு அழைப்பு.

ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் 3 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுக்கு அரசு அழைப்பு.

* 2வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி?

சீனா உள்ளிட்ட நாடுகளில் bf.7 உருமாறிய கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

நாட்டில் 90%க்கும் மேற்பட்டோர் 2வது டோஸ் தடுப்பூசியும், 27% பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், 2வது டோஸ் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட வேண்டுமா என கேள்வி எழுந்தது. ஆனால், தற்போது தேவையில்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

* 25 கோடி தடுப்பூசி கையிருப்பு

பயோலாஜிக்கல் இ மற்றும் பாரத் பயோடெக்கிடம் 25 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு உள்ளன.

இதில் பயோலாஜிக்கல் இ நிறுவனத்திடம் 20 கோடி டோஸ்களும், பாரத் பயோடெக் நிறுவனத்திடம் 5 கோடி டோஸ்களும் உள்ளன.

30 கோடி கார்ப்வேக்ஸ் டோஸ்களை தயாரித்ததில், 10 கோடி டோஸ்களை மத்திய அரசுக்கு வழங்கியது போக, மீதி 20 கோடி டோஸ்கள் கையிருப்பில் இருப்பதாக பயோலாஜிக்கல் இ நிறுவனம் தெரிவித்துள்ளது.

* 4வது டோஸ் தேவையில்லை’

இந்தியாவுக்கு 4வது டோஸ் தேவையில்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சீன மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் தான் அங்கு கொரோனா கடுமையாக பரவி வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் இந்திய மக்கள் கொரோனா வைரஸின் பல வகைகளில் ஏற்கனவே தப்பிப் பிழைத்துள்ளதால், இயற்கையாகவே வைரஸை எதிர்க்கும் சக்தி அவர்களிடம் உருவாகியுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

* ஆசிரியர்கள் உடனான பேச்சுவார்த்தை தோல்வி:

பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளருடன் ஆசிரியர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

போராட்டம் தொடரும் என இடைநிலை
ஆசிரியர் சங்கத்தினர் அறிவிப்பு

* உலகத் தரம் வாய்ந்த பயிற்சி வழங்கக் கூடிய வகையில் தமிழ்நாட்டில் 4 ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்பட உள்ளன”

- அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

“புதிய புதிய துறைகளில் தமிழ்நாடு முதலீடுகளை ஈர்த்து வருகிறது; மற்ற மாநிலங்களிலிருந்து மட்டுமல்ல பல்வேறு நாடுகளிலிருந்தும் தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வருகின்றன”

“மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு கோடியாவது பயனாளியை சந்திக்க உள்ளேன்; மக்களுக்கு வீட்டுக்கே சென்று சிகிச்சை அளிக்க கூடிய மகத்தான திட்டம்தான் மக்களை தேடி மருத்துவம் திட்டம்”

“விமர்சனத்துக்கு தனது செயல்பாடுகளால் பதில் சொல்லி அனைவரது பாராட்டையும் பெறுபவர் உதயநிதி; விளிம்பு நிலை மக்களை மேம்படுத்தும் துறைகள் உதயநிதியிடம் வழங்கப்பட்டுள்ளது”

“திருச்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும்; ஒலிம்பிக் போன்ற பன்னாட்டு அளவிலான போட்டிகளுக்குத் தமிழ்நாட்டு இளைஞர்கள் தயாராகவே ஒலிம்பிக் அகாடமி”

“பெண்கள் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்க திமுக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளது; தமிழ்நாட்டில் 4,38,000 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் உள்ளன; 50,24,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்”

“மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்க முதல்முறையாக முனைப்பு காட்டியது திமுக அரசுதான்; இந்தியாவில் முதல்முறையாக மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அமைத்தவர் கலைஞர்”

“மகளிர் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதை அரசின் கடமையாகவும், பொறுப்பாகவும் நினைக்கிறோம்; சிறப்பாக செயல்படும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு மணிமேகலை விருது வழங்கப்படுகிறது”

"தமிழ்நாட்டையும், தமிழர்களையும் செழிக்க வைப்பதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம்”

TELEGRAM: t.me/agnipuratchi1

* அழகப்பா பல்கலையில் ரூ.56ஆயிரம் சம்பளத்தில் வேலை.

காரைக்குடி அழகப்பா பல்கலையில் காலியாக உள்ள Project Fellow, Project Scientist பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்
- காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம்

பதவி - Project Fellow, Project Scientist

காலியிடங்கள்- 07

கல்வித்தகுதி - Degree, BE/ B.Tech, Masters Degree, Ph.D

சம்பளம்- 12000-56000

பணியிடம் - காரைக்குடி

தேர்வுமுறை - நேர்காணல்

விண்ணப்பக்கட்டணம் - இல்லை

விண்ணப்பிக்கும் முறை- இ-மெயில்

மின்னஞ்சல் முகவரி
- kgnathan27@rediffmail.com

இணையதள முகவரி
- www.alagappauniversity.ac.in

TELEGRAM: t.me/agnipuratchi1

* விமானத்தில் தலைமுடியை பிடித்து அடித்து கொண்ட இளைஞர்கள்!

WATCH: https://youtu.be/AMcbuVwZD8o

தாய்லாந்து - கொல்கத்தா விமானத்தில் பரபரப்பு

* ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

ரம்மி, ரம்மி கல்சர், ஜங்கிலி ரம்மி, ட்ரீம் 11, லுடோ, பப்ஜி ஆகிய ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது!

ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரிக்க டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டிருந்தார்.

* பெண்கள் பாதுகாப்புக்காக UGC எடுத்த நடவடிக்கை:

உயர்கல்வி நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்.

கல்வி நிறுவனம் சார்பில் மாணவிகள், பெண் ஆசிரியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்க வேண்டும்.

மாணவிகளுக்கு அவசர காலங்களில் தொடர்பு கொள்வதற்கான தொடர்பு எண்கள் வழங்க வேண்டும்.

மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பெண் காவலர்களை பணி அமர்த்த வேண்டும்.

24 மணி நேரமும் தண்ணீர் வசதியுடன் கூடிய சுகாதாரமான கழிப்பறை ஏற்படுத்தித் தர வேண்டும்.

பாலியல் தொந்தரவு குறித்த விசாரணை செய்ய குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

* UGC-NET தேர்வு அறிவிப்பு வெளியீடு:

இந்தியப் பல்கலைக்கழகங்களில் ஜூனியர் ரிசர்ச் பெலோஷிப் மற்றும் உதவிப் பேராசிரியர்களுக்கான தேசிய தகுதித் தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 21ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.

தகுதி உள்ளவர்கள் டிசம்பர் 29 முதல் 17 ஜனவரி 2023 (மாலை 05:00 மணி வரை) ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

* பொங்கல் தொகுப்பில் வழங்குவதற்கான கரும்பு கொள்முதல் செய்ய ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட அளவில் கரும்பு விளைவிக்கும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

வேளாண்மை துறை இணை இயக்குநர், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் உள்ளிட்டோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

* போர்க்கப்பல்களை தாக்கி அழிக்கும் புதிய வகை பிரமோஸ் ஏவுகணையை விமானப்படை வெற்றிகரமாக ஏவி சோதித்தது.

சுகோய் - 30 ரக போர் விமானத்தில் இருந்து ஏவப்பட்ட பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கியது.

புதிய வகை பிரமோஸ் ஏவுகணை 400 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கவல்லது.

* இந்தியா வரும் பயணிகளுக்கு கட்டாய சோதனை சீனா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை கட்டாயம்.

வரும் ஜனவரி 1ம் தேதி முதல் கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவிப்பு.

சோதனை அறிக்கைகளை 'ஏர் சுவிதா' தளத்தில் பதிவேற்றவும் அறிவுறுத்தல்
பயணத்திற்கு 72 மணி நேரம் முன்பாக சோதனை நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

சீனா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை கட்டாயம்.

பயணத்திற்கு 72 மணி நேரத்திற்குள் நடத்தப்பட்டிருக்க வேண்டும் - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா.

* ஒரு கோடியே ஒன்றாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம்.

திருச்சி, சன்னாசிபட்டியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே ஒன்றாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம்.

ஒரு கோடியே ஒன்றாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்.

* லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது:

கடலூர்: விருத்தாசலம் அருகே ரூபநாராயண நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராமதாஸ் என்கிற விவசாயி தன்னுடைய வீட்டுமனை பட்டா மாற்றத்திற்காக கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியிடம் 14 ஆயிரம் கொடுத்த போது கடலூர் லஞ்ச ஒழிப்பு கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையில் போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

* கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்களுக்கு வேலை இல்லை - அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்.

அரசுக்கு கரும்பு கொள்முதல் செய்வதில் இடைத்தரகர்களுக்கு வேலை இல்லை.

மாவட்ட ஆட்சியரின் நேரடி கட்டுப்பாட்டில் கரும்பு கொள்முதல் செய்யப்படும்.

வேளாண் துறை மற்றும் கூட்டுறவு துறை இணைந்து கொள்முதலில் ஈடுபடும். தரமான கரும்பு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் மீறி இடைத்தரகர்களல தலையீடு இருந்தால் காவல்துறை மூலம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார் - வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்.

* ஆசிரியர்களின் ஊதிய பாகுபாடு களையப்பட வேண்டும்'

இடைநிலை ஆசிரியர்களுக்கிடையில் நிலவும் ஊதிய பாகுபாடு களையப்பட வேண்டும்.

ஒருநாள் முன்பின் பணியில் சேர்ந்தவர்களுக்கிடையில் ரூ.15000க்கும் மேல் இடைவெளி இருப்பது வேதனைக்குரியது.

10 ஆண்டு காலமாகப் போராடும் ஆசிரியர்களுக்கு இதனைப் பொங்கல் பரிசாக அறிவிக்க வேண்டும் - விசிக தலைவர் திருமாவளவன்.

* கரும்பு கொள்முதல் - வழிகாட்டு நெறிமுறைகள்:

பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக பன்னீர் கரும்பு மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும்.

கொள்முதல் செய்யப்படும் முழு கரும்பின் விலை அதிகபட்சம் ரூ.33 ஆக இருக்க வேண்டும்.

கொள்முதல் செய்யப்படும் கரும்பின் உயரம் சுமார் 6 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

அந்தந்த மாவட்டங்களில் விளையும் கரும்பினை கொள்முதல் செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இதில் விவசாயிகள் தரப்பிலிருந்து எந்தவிதமான புகார்களுக்கும் இடமளிக்கக்கூடாது.

* மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை.

டிசம்பர் 31ம் தேதி, இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைக்கு பொதுமக்கள் வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தல்-சென்னை பெருநகர காவல்துறை அறிவிப்பு.

* சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது.

10,12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டது.

12-ம் வகுப்பு தேர்வுகள் 2023 பிப்ரவரி 15ல் தொடங்கி ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10-ம் வகுப்பு தேர்வுகள் 2023 பிப்ரவரி 15ல் தொடங்கி மார்ச் 21 வரை நடைபெறும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages