அக்னிப்புரட்சி இன்றைய (17.12.2022) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (17.12.2022) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (17.12.2022) முக்கிய செய்திகள்.

* திருவண்ணாமலை: 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையில் 11 நாட்களாக ஜோதி பிழம்பாய் காட்சியளித்த மகா தீபக் கொப்பரையை இறக்கும் பணி தொடங்கியது!

கோவில் ஊழியர்களால் கொப்பரை, அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு கொண்டு வரப்பட உள்ளது!

* கடந்த வாரம் மாண்டஸ் புயலுக்காக விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்டுவதாக
சென்னையில் இன்று பள்ளிகள் இயங்கும் என அறிவிப்பு

* சென்னை, பெசண்ட் நகர் கடற்கரையில் அனைவரையும் உள்ளடக்கிய வகையில் மாரத்தான் போட்டி

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தொடக்கி வைத்து பங்கேற்பு

* சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு சொகுசு பஸ் - 20 பேர் படுகாயம்!

பெங்களூருவில் இருந்து அரசு சொகுசு பஸ் ஒன்று 49 பயணிகளுடன் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. இன்று அதிகாலை திருச்சி அருகே மஞ்சகோரை பகுதியில் இந்த பஸ் வந்துள்ளது. அப்போது சாலையில் உள்ள ஒரு வளைவில் பஸ்சை டிரைவர் திருப்ப முயன்றுள்ளார்.

இதில் அவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் பஸ்சில் இருந்த 4 சிறுவர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

விபத்துகுறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். அப்போது காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் உதவியுடன் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பாக வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* டிஜிட்டல் ஊடகங்களை முறைப்படுத்துவதற்கென தனிச்சட்டம் கொண்டு வருவதற்கான எந்தவொரு திட்டமும் அரசின் பரிசீலனையில் இல்லை. - தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகர்

* மக்கள் நீதி மய்யத்தின் அவசர நிர்வாக குழு, செயற்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிப்பு.

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்து நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் முக்கிய ஆலோசனை.

* தமிழக பள்ளிகளில் வரும் 24-ம் தேதி முதல் ஜன.1 வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அரையாண்டு விடுமுறை முடிந்து மீண்டும் ஜனவரி 2-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்

* தமிழகத்தில் பால் நெய்யை தொடர்ந்து வெண்ணெய் விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது.

500 கிராம் சமையல் வெண்ணெய் விலை ரூ.250-லிருந்து ரூ.260 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

100 கிராம் சமையல் வெண்ணெய் விலை ரூ.52-லிருந்து 55 ஆக உயர்த்தப்பட்டது.

* 2002 ஆம் ஆண்டு பில்கிஸ் பானோ கூட்டு பலாத்கார வழக்கில் 11 குற்றவாளிகள் விடுதலை   உத்தரவுக்கு எதிராக பில்கிஸ் பானோ தரப்பில் தாக்கல் செய்த மறுஆய்வு மனு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

* காணிக்கை தங்கத்தை திருடிய செயல்அலுவலர்: காட்டிக்கொடுத்த சிசிடிவி!

திருச்சி: சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சக்தி ஸ்தலமாகும்.

கடந்த நவம்பர் மாதம் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் உதவி ஆணையர்கள் முன்னிலையில் தன்னார்வலர்கள், கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் பக்தர்கள் வழங்கிய காணிக்கையாக ரூ.83 லட்சத்து 79 ஆயிரத்து 394 ரொக்கமும், 2 கிலோ 667 கிராம் தங்கமும், 3 கிலோ 121 கிராம் வெள்ளியும், 104 வெளிநாட்டு பணமும் கிடைத்தது.

கோயில் கண்காணிப்பாளர் அழகர்சாமி காணிக்கை என்னும் பணியினை சிசிடிவியில் ஆய்வு செய்ந போது, திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் வெற்றிவேல் என்பவர் சுமார் 30 கிராம் எடையுள்ள தங்க நாணயங்களை திருடி அவரது பேன்ட் பாக்கொட்டில் மறைத்து வைக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதுகுறித்து சமயபுரம் கோயில் இணை ஆணையர் கல்யாணியிடம் கண்காணிப்பாளர் அழகர்சாமி தெரிவித்தார். அதனை தொடர்ந்து 1.50 லட்சம் மதிப்புள்ள 30 கிராம் தங்க நாணயங்களை திருடிய வெற்றிவேலிடமிருந்து பறிமுதல் செய்தனர்.

மேலும் இத்திருட்டு குறித்து சமயபுரம் காவல் நிலையத்திலும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு கோயில் இணை ஆணையர் கல்யாணி புகார் அளித்தார்.

இதை அறிந்த செயல்அலுவலர் வெற்றிவேல் தற்போது தலைமறைவாகியுள்ளார். பக்தர்கள் வழங்கிய காணிக்கையை கோவில் செயல் அலுவலரே திருடிய சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

செயல்அலுவலரை உடனே கைது செய்யாமல் தப்பவிட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

* ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா நதியில் குளிக்கச் சென்ற 5 சிறுவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக போலீசார் இன்று (சனிக்கிழமை) தெரிவித்தனர்.

வெள்ளியன்று ஐந்து சிறுவர்கள் கிருஷ்ணா நதியில் குளிக்கச்சென்றுள்ளனர். நீரின் வேகம் திடீரென அதிகரித்துள்ளது.
முதலில் ஒரு சிறுவன் மூழ்குவதைக் கண்டதாகவும், மேலும் நான்கு பேர் அவரைக் காப்பாற்றச் சென்றதாகவும் நேரில் பார்த்த ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

மூன்று சடலங்கள் இன்று மீட்கப்பட்ட நிலையில், இரண்டு பேர் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து தாடேபள்ளி காவல் ஆய்வாளர் சேஷகிரி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

* ஹாரன் அடித்து தொல்லை தந்த டிரைருக்கு நூதன தண்டனை

திருவாரூரில் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் தடை செய்யப்பட்ட ஏர்காரனை தொடர்ந்து அடித்தவாரே சென்ற லாரியை விரட்டி பிடித்து  நூதன தண்டனை வழங்கிய போக்குவரத்து துணை காவல் ஆய்வாளர்

ஏர் காரனை லாரியை ஏற்றி  உடைக்க  செய்து நூதன முறையில் தண்டனை

* தென் அமெரிக்காவின் சிலி நாட்டை தாக்கிய வெப்ப அலை!

வெப்பநிலை மற்றும் மழையின்மை காரணமாக, ஏற்பட்ட காட்டுத் தீயில் 17,000 ஏக்கர் நிலங்கள் எரிந்து நாசம்.

* ஜல்லிக்கட்டிற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளை தள்ளுபடி செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு எழுத்து பூர்வமான வாதம்!

ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் தொடந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது!

ஐல்லிககட்டு என்பது பொழுதுபோக்கிற்காக நடத்தப்படும் விளையாட்டு அல்ல; தமிழர்களின் வாழ்வோடு ஒன்றிப்போனது -உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்!

காளைகளை பெருமைப்படுத்தவும், கெளரவிக்கவும் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது - தமிழ்நாடு அரசு

* ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ட்வீட்

கடந்த 9 மாதத்தில் மட்டும் 3 முறை ஆவின் நெய் விலையை உயர்த்தியுள்ளது தமிழக அரசு

எளிய மக்களுக்கு ஆவின் பொருட்களை எட்டாகனியாக்கி, இனி பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது - ஈபிஎஸ்

* இரயிலில் வழங்கப்பட்ட ஆம்லெட்டில் கரப்பான் பூச்சி இருந்ததை பயணி ஒருவர் புகைப்படம் எடுத்து சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

இரயில்வே துறையில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவில் மெத்தனமாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தில்லியிலிருந்து பயணித்த இரயிலில் தனது 2 வயது குழந்தைக்காக பயணி ஒருவர் ஆம்லெட் வாங்கியுள்ளார். இரயில்வே ஊழியர்கள் வழங்கிய ஆம்லேட்டில் கரப்பான் பூச்சி இறந்த நிலையில் இருந்துள்ளது.

அதனை பயணி ஒருவர் புகைப்படம் எடுத்து சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது, டிசம்பர் 16ஆம் தேதி தில்லியிலிருந்து பயணித்தோம். எங்கள் குழந்தைக்காக ரயிலில் கூடுதலாக ஆம்லெட் ஆர்டர் செய்திருந்தோம். அதில் என்ன இருந்தது என புகைப்படத்தில் காணுங்கள். கரப்பான் பூச்சி! என் மகளுக்கு இரண்டரை வயதுதான் ஆகிறது. இதை உண்டு என் மகளுக்கு ஏதாவது ஆனால், யார் பொருப்பேற்பது என கேள்வி எழுப்பி, பிரதமர் அலுவலகம், ரயில்வே அமைச்சகம், பியூஷ் கோயல் உள்ளிட்டோரை அவர் டேக் செய்துள்ளார்.

இதற்கு ஐஆர்சிடிசி பதிலளித்துள்ளது. தங்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம். தயவு செய்து பிஎன்ஆர் எண்ணையும், தொலைப்பேசி எண்ணையும் கொடுங்கள் என சுட்டுரையில் பதிவிட்டுள்ளது.

* பாலாற்று வெள்ளத்தில் தரைப்பாலம் உடைந்தது- 30 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

காஞ்சிபுரம்: தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாயும் பாலாற்றில் 5500 கன அடி நீர் சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் காஞ்சிபுரம் அருகே பெரும்பாக்கம் பகுதியில் உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் உடைந்து போனது. தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்வதால் போக்கு வரத்து தடை செய்யப்பட்டு உள்ளது.

இதனால் பெரும்பாக்கத்தில் இருந்து வட இலுப்பை  பிரம்மதேசம், நாட்டேரி, செய்யனூர், சீவரம், புதூர், சித்தனைகால் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. வாகனங்கள் சுமார் 25 கிலோமீட்டர் சுற்றி செல்கின்றன. இதேபோல் வாலாஜாபாத்தில் இருந்து அவலூர் செல்லும் தரைப்பாலம் ஏற்கனவே சேதம் அடைந்து தற்போது பலவீனமாக உள்ளது.

இதனால் கல்குவாரிக்கு செல்லும் லாரி மற்றும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆபத்தை உணராமல் அப்பகுதி மக்கள் மீன்பிடிப்பது புகைப்படம் எடுப்பது மற்றும் வாகனங்களில் சென்று வருகின்றனர். காஞ்சிபுரம் நகர் வழியே செல்லும் வேகவதி ஆற்றில் கடந்த நான்கு நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு செல்கிறது. இதில் 4தரைப்பாலங்கள் அடித்து செல்லப்பட்டன.

காஞ்சிரம் அடுத்த பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் பின்புறம் உள்ள முருகன் குடியிருப்பு, பல்லவர் குடியிருப்பு, தாட்டி தோப்பு, கிருஷ்ணா நகர், பல்லவர் நகர், வரதராஜன் குடியிருப்பு, செல்லியம்மன் நகர் என 10க்கும் மேற்பட்ட குடியிருப்பில் உள்ள 1000க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வசித்து வருகின்றனர்.

தொடர் மழை காரணமாக வேகவதி ஆற்றின் வெள்ளத்தால் குடியிருப்புக்கு செல்லும் முக்கிய பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் வாழும் நெசவாளர் குடும்பங்கள் அவ்வழியே செல்ல முடியாமல் 10 கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்காக அவர்கள் ஆபத்து அறியாமல் ஆற்றில் இறங்கி கடந்து செல்லும் நிலை உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் உயர்மட்ட பாலம் அமைத்து தர கோரி பலகட்ட போராட்டம் நடத்தியும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

* கடலூர் மாவட்டத்தின் சுற்றுச்சூழலையும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் என்.எல்.சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி ஜனவரி 7 மற்றும் 8ஆம் தேதிகளில் கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எழுச்சி நடை பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். எந்தெந்த நேரத்தில் எந்தெந்த பகுதிகள் வழியாக பயணிக்கிறேன் என்பது உள்ளிட்ட எழுச்சி நடை பயணத்தின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்- பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்.

* திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு வரும் ( 02.01.2023)  திங்கள் கிழமை உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்.

திருச்சியிலுள்ள தமிழ்நாடு அரசின் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்.

ஆயினும், பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது.

இவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 07.01.2023  சனிக்கிழமை அன்று வேலை நாள் - திருச்சி கலெக்டர் திரு.மா. பிரதீப்குமார்.

* வருகின்ற நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக - பாஜக கூட்டணி அமையவுள்ளது"

திமுகவுடன் கூட்டணி வைத்தவர்கள் ஓட போகிறார்கள் - நெய்வேலியில் அதிமுக எம்.பி.  சி.வி.சண்முகம் பேச்சு

* உதயநிதி அல்ல... அவரது மகன் இன்பநிதி வந்தாலும் நாங்கள் வாழ்க என்று தான் சொல்வோம். - அமைச்சர் கேஎன் நேரு

* முன்னாள் மாணவர்கள் சந்திப்பு - முதல்வர் பங்கேற்பு

சென்னை, கிறிஸ்துவ கல்லூரி மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

முதலமைச்சராக வரவில்லை, முன்னாள் மாணவராக தான் வந்துள்ளேன்

நான் படித்த பள்ளிக்கு போகிறேன் என்று நேற்றிரவு முதலே மகிழ்ச்சியில் இருந்தேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

என்னை முதல்வராக்கியது இந்த பள்ளி" முதலமைச்சராக என்னை உருவாக்கியது இந்த பள்ளி தான்.

அரசு பேருந்தில் தான் பள்ளிக்கு வருவேன். படிக்கும் போது நான் அமைச்சரின் மகனாக நடந்து கொண்டதில்லை.

தற்போதும் பேருந்தில் தான் வரவேண்டும் என்று நினைத்தேன் ஆனால் பாதுகாவலர்கள் அனுமதிக்க மாட்டார்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* வெற்றியை நோக்கி இந்தியா

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் - வங்கதேச அணியின் வெற்றிக்கு 241 ரன்கள் தேவை

4ம் நாள் ஆட்ட முடிவில் வங்கதேச அணி, 6 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்துள்ளது

எஞ்சிய 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, வெற்றி பெறும் வாய்ப்பில் இந்திய அணி உள்ளது.

* உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2022: மூன்றாவது இடத்தை குரோஷியா.

இன்று நடைபெற்ற மூன்றாவது இடத்திற்கான போட்டியில் குரோஷிய அணி மொராக்கோ அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

குரோஷியா அணி மூன்றாவது இடத்தை பிடித்தது.

நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் - அர்ஜென்டினா அணிகள் மோத உள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages