தொலைந்து போன கன்று திரும்பி வந்ததால் பசு அடைந்த மகிழ்ச்சியை நானும் அடைகிறேன். - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா மகிழ்ச்சி - Agnipuratchi

தொலைந்து போன கன்று திரும்பி வந்ததால் பசு அடைந்த மகிழ்ச்சியை நானும் அடைகிறேன். - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா மகிழ்ச்சி

Share This

தொலைந்து போன கன்று  திரும்பி வந்ததால் பசு அடைந்த மகிழ்ச்சியை நானும் அடைகிறேன். - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா மகிழ்ச்சி

பா.ம.க.வில் இரவிராஜ் இணைந்த நிகழ்ச்சியில்  மருத்துவர் அய்யா பேச்சு
பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து சில காலம் விலகியிருந்த  கோ. இரவிராஜ், இன்று  தைலாபுரம் தோட்டத்தில் கட்சியின் நிறுவனர் மருத்துவர்  சந்தித்து பாட்டாளி மக்கள் கட்சியில் மீண்டும் இணைத்துக் கொண்டார்.  இந்த நிகழ்ச்சியில்  பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி,  வன்னியர் சங்க செயலாளர் கார்த்தி, திருக்கச்சூர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்த ரவிராஜை  வரவேற்று பேசிய மருத்துவர் அய்யா அவர்கள்,’’ கன்றுக்குட்டி தொலைந்து போன பசுவின் நிலையில் தான் நான் இவ்வளவு காலம் இருந்தேன். தொலைந்து போன கன்றுக்குட்டி   திரும்பி வந்ததால் பசு அடைந்த மகிழ்ச்சியை இப்போது நானும் அடைகிறேன். பாட்டாளி மக்கள் கட்சியின்  வளர்ச்சிக்காக அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். நமது இலக்கை அடையை கடுமையாக உழைக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages