அக்னிப்புரட்சி இன்றைய (02.01.2023) முக்கிய செய்திகள்.
* வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் பரமபத வாசல் திறக்கும் வைபவம் அமோகம்
அதிகாலையில் பக்தி பரவசத்துடன் பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று அதிகாலை 4.45 மணியளவில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்ப்டது.
இரவு முதல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் திரண்டிருந்த பக்தர்கள் சொர்க்க வாசல் திறக்கப்பட்டதும் பக்தி பரவசத்துடன் இறைவனின் திருநாமத்தை சொல்லி கோஷமிட்டனர்.
* ராஜஸ்தான் மாநிலம் பாலி அருகே சூரியநகரி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலின் 8 பெட்டிகள் இன்று அதிகாலையில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. மார்வார் சந்திப்பிலிருந்து ரயில் புறப்பட்ட 5 நிமிடங்களுக்கு உள்ளாக விபத்து நடந்தது.
* ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு இன்று காலை 4. 45 மணிக்கு நடந்தது.
பாண்டியன் கொண்டை, கிளிமாலை, ரத்தின அங்கியுடன் பரமபத வாசலை கடந்த நம்பெருமாள், ஆயிரம் கால் மண்டபம் மணல் வெளியில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
TELEGRAM: t.me/agnipuratchi1
* வேலையில்லாமல் திண்டாடும் இந்தியர்கள்!
இந்தியாவில் 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடந்த டிசம்பர் மாதம் வேலைவாய்ப்பின்மை, 8.3% ஆக பதிவு; நவம்பர் மாதம் 8% இருந்த நிலையில் ஒரே மாதத்தில் 0.3% உயர்வு!
நகர்ப்புறங்களில் 8.96% இருந்த வேலைவாய்ப்பின்மை, டிசம்பரில் 10.09% உயர்ந்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவிப்பு.
* மொபைல் போனில் பேசியபடி சென்று சாலை விபத்து: 1,040 பேர் பலி; மத்திய அரசு தகவல்!..
நாட்டில் 2021-ம் ஆண்டில் மொபைல் போன் பயன்படுத்தியபடி வாகனத்தில் சென்று ஓட்டுனர்கள் 1,997 சாலை விபத்துகளை ஏற்படுத்தி உள்ளனர். அவர்களால் 1,040 பேர் உயிரிழந்து உள்ளனர் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அறிக்கை தெரிவிக்கின்றது.
இந்தியாவில் சாலை விபத்துகள் என்ற பெயரிடப்பட்ட அந்த அறிக்கையின்படி, 2021-ம் ஆண்டில் சிவப்பு நிற விளக்கு எரியும்போது, கடந்து சென்று சாலை விபத்து ஏற்படுத்திய எண்ணிக்கை 555 என்றும், அதில் 222 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சரியாக செப்பனிடப்படாமல் குண்டும், குழியும் ஆக காணப்படும் சாலைகளால் ஏற்பட்ட விபத்துகள் 3,625 என்றும் அதில் 1,481 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் அறிக்கை தெரிவிக்கின்றது.
TELEGRAM: t.me/agnipuratchi1
* தி இந்து நாளிதழின் மூத்த புகைப்பட கலைஞர் கே.வி.சீனிவாசன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மறைந்த பத்திரிகையாளர் கே.வி.சீனிவாசன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
பத்திரிகையாளர் கே.வி.சீனிவாசன் மாரடைப்பால் இறந்தார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் பிரபலமான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அதிகாலை விசேஷ அபிஷேகங்கள் நடைபெற்று, சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பு தரிசனத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, சொர்க்கவாசல் திறப்பு சிறப்பு நிகழ்வை சிறப்பான வகையில் புகைப்படம் எடுக்கும் பணியில், தி இந்து நாளிதழின் மூத்த புகைப்பட கலைஞர் கே. வி .சீனிவாசன் ஈடுபட்டிருந்தனர்.
அச்சமயம் உடல்நிலை பாதிக்கப்பட்டு பணியின் போதே திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
பின்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிர் பிரிந்தது.
புகைப்படம் எடுக்க சென்று உயிரிழந்த மூத்த புகைப்பட கலைஞர் கே. வி .சீனிவாசன் மறைவுக்கு செய்தித்துறையினரும், அரசியல்கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.
* மெக்சிகோ சிறையில் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 24 பேர் தப்பியோடியுள்ளனர்.
மெக்சிகோவின் சியுடட்ஜூவாரேஸ் பகுதியில் உள்ள சிறையில் மர்ம நபர்கள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 10 சிறை காவலர்கள் உள்பட 14 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த நபர் சிறையில் இருந்து 24 பேரை தப்பிக்க வைத்துள்ளனர். அந்த 24 குற்றவாளிகளை தப்பிக்கவைக்கத் தான் இந்த துப்பாக்கிச்சூடு நடந்திருக்குமா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுமார் 5 மணி நேரமாக இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. இதனால் சிறைக்குள்ளும் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிறையில் உள்ள பொருள்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச்சூடு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்த பிறகு மர்ம நபர்களின் ஒரு வாகனத்தை காவல்துறையினர் துரத்திப் பிடித்து 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
TELEGRAM: t.me/agnipuratchi1
* பணி நீட்டிப்பு பெறாத ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.
மக்களை தேடி மருத்துவம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாற்றுப்பணி வழங்கப்படும் என அறிவிப்பு.
* கோவில்களை ஆய்வு செய்ய பறக்கும் படை:
கோவில் நிர்வாகங்களை ஆய்வு செய்ய 4 துணை ஆட்சியர்களை கொண்ட பறக்கும் படை அமைப்பு - இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு.
* ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்களுக்கு வரைவு விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது.
ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு இந்திய முகவரிகள், விளையாடுவோரின் முகவரிகள் சரிபார்ப்பு அவசியம் என தெரிவித்தது.
பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களாக உள்ள நிறுவனங்கள் நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என அறிவிக்கை வெளியிட்டது.
* தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம் வரும் 4ம் தேதி தொடங்கப்படும் என மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 18 வருடங்களாகவே போலியோ இல்லாத நிலைமை உள்ளது.
போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் உருவெடுத்தாலும் முன் எச்சரிக்கையாக பிறந்த குழந்தைகளுக்கு 9வது மாதம் முதல் 12 மாதங்களுக்குள் போலியோ சொட்டு மருந்து வழங்க மத்திய அரசு முடிவு செய்தது.
இந்நிலையில் தமிழகத்தில் வரும் 4ம் தேதி முதல் போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு தகுதியின் அடிப்படையில் வழங்க வேண்டும்.
இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட சுகாதார அலுவலர்கள் முன்னெடுக்க வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* 6 நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு 100% கொரோனா பரிசோதனை சான்றிதழ் இருக்க வேண்டும்- மத்திய சுகாதாரத்துறை.
சீனா, சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்கங் கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு 100% கொரோனா பரிசோதனை சான்றிதழ் இருக்க வேண்டும் - மத்திய சுகாதாரத்துறை.
பயணிகள் 72 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு நெகடிவ் என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
6 நாடுகளில் இருந்து வேறு எந்த நாடுகளுக்கு சென்று விட்டு இந்தியா வந்தாலும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்று தெரிவித்துள்ளனர்.
* பொங்கல் பரிசாக தரப்படும் ரூ.1000-ஐ ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த முடியுமா? - ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி.
தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
* ஆதார் அட்டையை சரிபார்த்த பின் மக்களை சுட்ட தீவிரவாதிகள்; 4 பேர் பலி
காஷ்மீரில் தீவிரவாதிகளால் 4 பேர் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் மாநிலம் ராஜவுரி மாவட்டத்தில் டாங்கரி என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்திற்குள் சில தீவிரவாதிகள் ஊடுருவினார்கள். ஒவ்வொரு வீடுகளாகச் சென்று வீட்டில் இருந்தவர்களை துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டி அவர்களது ஆதார் அட்டைகளை வாங்கி சரி பார்த்தனர்.
அவ்வாறு சரிபார்த்ததில் மூன்று வீடுகளில் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் வசித்தது தெரிய வந்தது. மூன்று வீடுகளில் வசித்தவர்களைக் கண்மூடித்தனமாகத் தீவிரவாதிகள் சுட்டனர். இத்தாக்குதலில் 4 பேர் பலியாகினர். 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்த பாதுகாப்பு படை வீரர்கள் உடனடியாக கிராமத்திற்கு வந்து தீவிரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், உமர் அப்துல்லா போன்றவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
TELEGRAM: t.me/agnipuratchi1
* சாலையில் கிடந்த பெண்ணின் நிர்வாண உடல்; வெட்கித் தலைகுனிவதாக ஆளுநர் வேதனை
டெல்லி சுல்தான்புரி பகுதியில் அதிகாலை 3 மணியளவில் பெண் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். பின்னால் அதிவேகமாக வந்த கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து காலை 4 மணியளவில் உடலில் காயங்களுடன் இளம் பெண்ணின் உடல் சாலையில் கிடப்பதாகக் காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு மங்கோல்புரியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் காரை பறிமுதல் செய்து விசாரித்தனர். விசாரணையில் காரில் நான்கு பேர் இருந்ததும் அவர்கள் அனைவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதும் தெரிய வந்தது. மேலும் சம்பவத்தின் போது அவர்கள் மது அருந்தி இருந்தனரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த விபத்து குறித்து பேசிய டெல்லி லெப்டினண்ட் ஆளுநர், “குற்றவாளிகளின் இந்த கொடூரமான உணர்வு என்னை அதிர்ச்சி கொள்ளச்செய்கிறது. இந்த குற்றத்திற்காக நான் வெட்கித் தலைகுனிகிறேன்” எனக் கூறியுள்ளார். டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால் இவ்விவகாரத்தை தானே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இது குறித்து காவல்துறையினருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், “விபத்தில் சிக்கிய இளம்பெண் காருடன் சில கி.மீ இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரது உடல் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தின் முழு உண்மையும் வெளிவர வேண்டும். இளம்பெண்ணுக்கு எவ்வாறு நீதி வழங்கப் போகிறீர்கள்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
* ஒன்னு சொன்னா நாங்க நூறு சொல்லுவோம்; சீண்டினால் பதிலடி தான்” - ஜெயக்குமார் ஆவேசம்
அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் ஈபிஎஸ்-இன் ஆதரவாளரான ஜெயக்குமார் இன்று சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக தான் அன்புமணியை அடையாளம் காட்டியது. தற்போது அதிமுகவை தவறாகப் பேசுவது சரியல்ல எனக் கூறினார்.
அவர் பேசியதாவது, “அதிமுக தான் அன்புமணியை எம்.பி என அடையாளம் காட்டியது. அப்படி எல்லாம் இருந்து விட்டு தற்போது அதிமுக நான்காக உடைந்துவிட்டது என்றால் நிச்சயமாக இந்தக் கருத்தை யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். கண்டிப்பாக அன்புமணியைப் பார்த்து எள்ளி நகையாடும் வகையில்தான் அவரது கூற்று உள்ளது. இதுபோன்ற கருத்துகளை சொல்லி சிறுமைப்படுத்தும் வேலையில் தயவு செய்து எதிர்காலத்தில் ஈடுபட வேண்டாம். அப்படி வீணாக சீண்டினால் அதற்கு தக்க பதிலடி நிச்சயமாக நாங்களும் கொடுப்போம். ஒன்று சொன்னால் நாங்கள் நூறு சொல்லுவோம்.
அதிமுக ஆட்சியில் பணியில் அமர்த்தப்பட்ட செவிலியர்களை திமுக அரசு வெளியேற்றியுள்ளது. சரியான ஆவணங்கள் இல்லாததால் வெளியேற்றி உள்ளதாக மா.சுப்ரமணியன் சொல்கிறார். திமுகவை பொறுத்தவரை தேர்தல் வாக்குறுதியில் என்ன சொன்னார்கள். 3.5 லட்சம் அரசுப் பணிகள் காலியாக உள்ளது. அதை நிரப்புவோம் எனக் கூறினார்கள். அதோடு மட்டுமல்லாமல் வருடத்திற்கு 1 லட்சம் பேரை வேலைக்கு எடுப்போம் எனக் கூறினார்கள். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை
ஒருபக்கம் ஒப்பந்த ஊழியர்கள் போராடுகிறார்கள். சம ஊதியம் சம வேலை எனச் சொன்னது திமுக தான். பல நாட்களாக போராட்டம் செய்கிறார்கள். போராட்டத்திற்குத் தீர்வு காணும் விதத்தில் குழு ஒன்று போடுகிறார்களாம். அந்தக் குழுவே கண் துடைப்புக் குழுதான். குழு போடுவதெல்லாம் சுத்த விடும் வேலைதான்” எனக் கூறினார்.
* பாலியல் தொல்லை கொடுத்த திமுக நபர் கதறி அழுத பெண் காவலர் - நடந்தது என்ன?
முன்னாள் திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டதில் பெண் போலீசாருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக திமுக நபர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விருகம்பாக்கம் தசரதபுரம் பேருந்து நிறுத்ததில் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக கனிமொழி எம்.பி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி. மற்றும் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்ததும் பாதுகாப்பு பணியில் இருந்த 22 வயதான பெண் காவலரிடம் அக்கூட்டத்தில் இருந்த இரண்டு இளைஞர்கள் அத்துமீறி பாலியியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். ஒரு கட்டத்தில் எல்லை மீறவே அந்த பெண் காவலர் கதறி அழுதுள்ளார். இதையடுத்து அருகே இருந்த போலீசார் ஒருவரை பிடித்த நிலையில், மற்றோருவர் தப்பியோடியுள்ளார். இதையடுத்து விரட்டிச் சென்ற காவல் ஆய்வாளர் தாம்சன் சேவியர் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சாலிகிராமத்தைச் சேர்ந்த பிரவீன் (23), சின்மயா நகரைச் சேர்ந்த ஏகாம்பரம் (24), என்பதும் இவர்கள் இருவரும் திமுக நிர்வாகிகள் என்பதும் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர். அப்போது விருகம்பாக்கம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா மற்றும் திமுக நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்த திமுக நிர்வாகிகளை அழைத்துச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
திமுக ஆட்சியில் திமுக நிர்வாகிகள் பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை பெரிதுபடுத்த வேண்டாம் என சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர ராஜா காவல் துறையினரிடம் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண் காவலர் கதறி அழுதும் எந்த நடவடிக்கையும் செய்ய முடியாமல் காவல்துறை உயர் அதிகாரிகள் கையை பிசைந்து கொண்டிருப்பதை கண்டு அங்கிருந்த பெண் காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
TELEGRAM: t.me/agnipuratchi1
* ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வரைவு விதிமுறையை வெளியிட்டது மத்திய அரசு!..
ஆன்லைன் விளையாட்டுகள் மீதான மோகமும் அதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
இதன் காரணமான ஆன்லைன் தொடர்பான குற்றங்களும் பிரச்சனைகளும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் இவற்றை முறைப்படுத்த வேண்டும், இவற்றிற்காக விதிகளை வகுக்க வேண்டும் என்ற தேவை நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே இருந்தது.
இந்நிலையில் மத்திய அரசு இவற்றை ஒழுங்குமுறைப் படுத்துவதற்கான ஒரு வரைவு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுக்கள் சுயஒழுங்குமுறை அமைப்பிடம் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என தெரிவித்துள்ளது.
இந்த சுயஒழுங்குமுறை அமைப்பானது இந்த ஆன்லைன் விளையாட்டுகளுக்கு பொறுப்பு ஏற்க கூடிய ஒரு அமைப்பாக இருக்கும். ஏதேனும் குறைகள் ஏற்பட்டாலும் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் இந்த அமைப்பு உரிய வழிமுறைகளை கொண்டு இதை தீர்க்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் பந்தயம் போன்றவற்றில் ஈடுபடக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல அதில் விளையாடுபவர்களின் விவரங்களை சரிபார்ப்பது, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் முகவரியை பதிவு செய்வது போன்ற பல்வேறு விஷயங்கள் இந்த வரைவு அறிக்கையின்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது வரைவு விதிமுறைகள் மீது, பொதுமக்கள் மற்றும் உரிய அமைப்பினர் வரும் ஜனவரி 17ம் தேதிக்குள் கருத்துக்களை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கருத்துகளுக்கு பின்னர் வரும் பிப்ரிவரி மாத இறுதிக்குள்ளாக இந்த விதிகள் உறுதி செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
* குஜராத் கடற்பகுதியில் போதை பொருளுடன் நுழைந்த 22 பாக். மீனவர்கள் கைது!..
குஜராத் கடல்பகுதியில் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறிய 79 படகுகளில் வந்த பாகிஸ்தானை சேர்ந்த 22 மீனவர்கள் கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.
குஜராத் மாநிலம் புட்ச் கடல்பகுதியில் கடலேரா காவல்படையினர் ரோந்து சுற்றிவந்தனர். அப்போது 79 மீன்பிடி படகுகள் இந்திய கடல்பகுதிக்குள் அத்துமீறி நுழைவதை கண்டுஅப்படகு
ளை சுற்றி வளைத்தனர்.
படகுகளை சோதனை செய்ததில் அதில் 22 பேர் இருந்தனர். அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த மீனவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்கள் வந்த படகுகளை கடலோர காவல் படையினர் சோதனையிட்ட போது அதில் ஹெராயின் போதை பொருள் மற்றும் சில புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து ரூ.250 கோடி மதிப்புள்ள 50 ஹெராயின் பாக்கெட்டுகள் மற்றும் ரூ.2.49 கோடி மதிப்புள்ள 61 புகையிலை பாக்கெட்டுகளை இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.
குஜராத் கடற்பகுதியில் அவ்வப்போது பாகிஸ்தானை சேர்ந்த மீனவர்கள் அத்துமீறி நுழைவதும், அவர்களிடம் இருந்து போதை பொருட்களை பறிமுதல் செய்வதும் சமீபகாலமாக அதிகரித் துள்ளது.
மத்திய அரசு தற்போது போதைபொருட்களை ஒழிக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எனவே நாட்டின் எல்லை பகுதிகள், மாநில எல்லைகள், கடற்பகுதிகளில் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
TELEGRAM: t.me/agnipuratchi1
* உன்னிடம், செல்வாக்கு இருக்கிறதோ, இல்லையோ, உன்னுடைய, உயர்வான எண்ணங்கள்தான், உன்னை உயர்ந்த இடத்தில் வைக்கும்!
மௌனத்திலுள்ள வார்த்தைகளையும், கோபத்திலுள்ள அன்பையும், யாரால் புரிந்து கொள்ள முடிகிறதோ, அவரே, உனக்கு கிடைத்த உன்னதமான உறவு!!
ஒரு நிமிடம், உன் கவலைக்கு இடம் கொடுத்தால், நீ ஒவ்வொரு நிமிடமும், உன் மகிழ்ச்சியை இழப்பாய், உன் வாழ்வில் எதை இழந்தாலும், துணிச்சலோடு போராடு!!!
🙏இனிய இரவு வணக்கம்
No comments:
Post a Comment