அக்னிப்புரட்சி இன்றைய (06.02.2023) முக்கிய செய்திகள்.
* 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யவும், முடக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 93 கடன் செயலிகளை தடை செய்யும் பணி தொடங்கியது.
உடனடி மற்றும் அவசர நடவடிக்கையாக சூதாட்ட செயலிகளை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
* எட்டு மாத கர்ப்பமான தந்தை இந்தியாவில் இது முதல் முறை.
திருவனந்தபுரம், நம் நாட்டில் முதல் முறையாக மூன்றாம் பாலின தம்பதி கருத்தரித்து, பெற்றோராக உள்ளனர். பெண்ணாக இருந்து ஆணாக மாறிய கேரளாவைச் சேர்ந்த சஹாத், தற்போது எட்டு மாத கர்ப்பமாக உள்ளார்.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் கணக்காளராக பணியாற்றி வருபவர், சாஹத், 23. இவர், பெண்ணாக பிறந்து, ஆணாக மாறியவர்.
இதே ஊரைச் சேர்ந்தவர் ஜியா, 21. இவர், ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர். இவர், நாட்டியக் கலைஞர்.
இவர்கள் இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு ஏற்பட்டதால், கடந்த மூன்று ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
பாலினம் மாறுவதற்காக இருவரும் அறுவை சிகிச்சை செய்து கொண்டனர். இதற்காக சாஹத்தின் மார்பகம் அகற்றப்பட்டது. ஆனாலும், அவரது கர்ப்பப்பை அகற்றப்படவில்லை.
இதற்கிடையே, இருவரும் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்தனர்.
ஆனால், மூன்றாம் பாலினத்தவர்கள் குழந்தை பெறுவதில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல், உடல் ரீதியான பிரச்னை, சமூகத்தின் அங்கீகாரம் போன்றவற்றின் காரணமாக தயங்கினர்.
இறுதியில் இருவரும் பேசி, குழந்தை பெறுவது என முடிவு செய்தனர்.
இதையடுத்து, சாஹத் தற்போது எட்டு மாத கர்ப்பமாக உள்ளார்.நம் நாட்டில் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர், கர்ப்பமாவது இது தான் முதல் முறை.
சஹாத் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, ஜியா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
'ஒரு குழந்தைக்கு பெற்றோராக வேண்டும் என்ற எங்கள் கனவு, இன்னும் இரண்டு மாதங்களில் நனவாகப் போகிறது' என, சமூக வலைதளத்தில் ஜியா தெரிவித்துள்ளார்.
TELEGRAM: t.me/agnipuratchi1
* BSNL தொலைதொடர்பு நிறுவனம், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட '4ஜி' சேவைகளை விரைவில் துவங்கவுள்ளது.
இது தொடர்பாக பி.எஸ்.என்.எல்., மனிதவள இயக்குனர் அரவிந்த் வட்னர்கர் கூறியதாவது:
பி.எஸ்.என்.எல்., நிறுவனம் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4ஜி சேவையை, விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. இது உலகத் தரம் வாய்ந்த 4ஜி சேவையாக இருக்கும்.
இந்த சேவையை கிட்டத்தட்ட 28 ஆயிரம் கிராமங்களில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
குறிப்பாக, மொபைல் கவரேஜ் இல்லாத கிராமங்களும் இதில் அடங்கும்.
மஹாராஷ்டிராவில், 4,900 கிராமங்களில் 4ஜி சேவை வழங்கப்படும். மேலும், மிகக் குறுகிய காலத்தில் 5ஜி சேவையிலும் பி.எஸ்.என்.எல்., இறங்கும். எங்களது அனைத்து முயற்சிகளுக்கும், நிதி மற்றும் பிற உதவிகளை மத்திய அரசு செய்கிறது.
பி.எஸ்.என்.எல்., நிறுவனம் வரும் 2026 --27 ஆம் ஆண்டிற்குள் லாபமீட்ட துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
TELEGRAM: t.me/agnipuratchi1
* தென்னிந்திய பல மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.35ஆயிரம் சம்பளத்தில் வேலை..!
தென்னிந்திய பல மாநில வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில் காலியாக உள்ள Doctor பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிறுவனம் - தென்னிந்திய பல மாநில வேளாண்மை கூட்டுறவுச் சங்கம்
பதவி - மருத்துவர்
காலியிடங்கள் - 19
கல்வித்தகுதி - பிஏஎம்எஸ்
சம்பளம் - ரூ.15800 முதல் ரூ.35500
வயது வரம்பு - 22 - 35 வரை
பணியிடம் - வேலூர்
தேர்வு முறை - நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை - ஆப்லைன்
விண்ணப்பக்கட்டணம் - Gen/UR/OBC/EWS Candidate fee: Rs.500/-
SC/ST candidates fee: Rs.250/-
முகவரி - Managing Director South India Multi-State Agriculture
Co-Operative Society Ltd,
Town Hall Campus, Near Old Bus Stand
Vellore- 632004.
இணையதள முகவரி - https://simcoagri.com/index.html
கடைசி தேதி - பிப்.28,2023
TELEGRAM: t.me/agnipuratchi1
* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.42,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.5,365க்கு விற்கப்படுகிறது.
சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் குறைந்து ரூ.74க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
* புதிதாக நியமிக்கப்பட்ட 5 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதவியேற்றனர்
நீதிபதிகள் பங்கஜ் மித்தல், சஞ்சய் கரோல், பி.வி. சஞ்சய் குமார், அசானுதீன் அமானதுல்லா, மனோஜ் மிஸ்ரோ ஆகியோர் பதவியேற்பு
5 நீதிபதிகளுக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
* மின் இணைப்பு எண் - ஆதார் இணைப்பில் குழப்பம்: மின்சார வாரியம் விளக்கமளிக்க வேண்டும் - பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்
1. தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்னுடன் ஆதாரை இணைப்பதில் பெரும் குழப்பங்கள் நிகழ்ந்திருப்பதாகவும், மின் இணைப்பு எண்களுடன் எந்த வகையிலும் தொடர்பில்லாத ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது!
2. எந்த ஒரு சீர்திருத்தத்திற்கும் முறையான திட்டமிடலும், காலக்கெடுவும் தேவையாகும். போதிய காலக்கெடு வழங்காமல், நோக்கம் என்ன? என்பதை தெரிவிக்காமல் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கும் திட்டத்தை மக்கள் மீது திணித்ததன் விளைவு தான் இதுவாகும்!
3. மின் இணைப்பு எண்களுடன் ஆதாரை இணைப்பதில் எத்தகைய குழப்பங்கள் நடந்துள்ளன? அதற்கான காரணங்கள் என்ன? அதனால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படக்கூடும்? அதை மின்வாரியம் எவ்வாறு சரி செய்யப்போகிறது? என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க வேண்டும்!
4. மின் இணைப்பு எண் - ஆதார் இணைப்புக்கான நோக்கம் என்ன? என்பதை இப்போதாவது மின்வாரியம் தெரிவிக்க வேண்டும். வீடுகளுக்கு மின்வாரிய ஊழியர்களை அனுப்பி ஆதார் மற்றும் மின் இணைப்பு எண்களைப் பெற்று அவற்றை இணைப்பதற்கு மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
TELEGRAM: t.me/agnipuratchi1
* ஆதாருடன் பான் இணைக்காவிட்டால்... வரிச்சலுகை இல்லை: மார்ச் 31 கடைசி நாள் என அறிவிப்பு .
புதுடில்லி-''இதுவரை தனிநபர்களுக்கு வினியோகிக்கப்பட்டுள்ள, 61 கோடி, 'பான்' எனப்படும் நிரந்தர கணக்கு எண்களில், 48 கோடி பேரின் எண்கள், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன.
மார்ச் 31க்குள் மீதமுள்ளவர்கள் இணைக்காவிட்டால், வர்த்தகம் மற்றும் வரி தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடும் போது சலுகைகளை அனுபவிக்க முடியாது,'' என, மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா தெரிவித்தார்.
வருமான வரித்துறையால் வினியோகிக்கப்படும் 10 இலக்க எழுத்து மற்றும் எண்கள் உடைய அட்டை, 'பான்' எனப்படும்நிரந்தர கணக்கு எண் என அழைக்கப்படுகிறது.
கால அவகாசம்
வங்கிக் கணக்கு துவங்குவது முதல், வருமான வரி தாக்கல் வரையிலான பல்வேறு நிதி நடவடிக்கைகளுக்கு நிரந்தர கணக்கு எண் அவசியமாகிறது.
யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும் இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையத்தால் அனைத்து குடிமகன்களுக்கும் ஆதார் எண் வழங்கப்பட்டுஉள்ளது.
இந்த ஆதார் அட்டையுடன், நிரந்தர கணக்கு எண்ணை இணைக்கும்படி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதற்கான கால அவகாசம் பல்வேறு முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், மார்ச் 31 கடைசி நாள் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் கூறப்பட்டு உள்ளது.
இந்நிலையில், மத்திய நேரடி வரி விதிப்பு வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தனி நபர்களுக்கான, 61 கோடி நிரந்தர கணக்கு எண்கள் இதுவரை வினியோகிக்கப்பட்டுஉள்ளன.
TELEGRAM: t.me/agnipuratchi1
நடைமுறை
இதில், 48 கோடி எண்கள், ஆதாருடன் இணைக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள 13 கோடி எண்கள் இணைக்கப்படவில்லை. கடைசி நாளான மார்ச் 31க்குள் அவை இணைக்கப்பட்டுவிடும் என நம்புகிறோம்.
இந்த இணைப்புக்கான கால அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டது. இந்த முறை நிச்சயம் நீட்டிக்கப்படாது.
மார்ச் 31க்குள் ஆதாருடன் இணைக்கப்படாத பான் அட்டைகள் ஏப்., முதல் செயலற்றதாகிவிடும். வர்த்தகம் மற்றும் வரி தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடும் போது சலுகைகளை அனுபவிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
* ஆதாருடன், நிரந்தர கணக்கு எண்ணை இணைக்காவிட்டால், என்னென்ன விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:
பான் அட்டை செயலற்றதாகிவிட்டால், வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய முடியாது. நிலுவையில் உள்ள கணக்கு தாக்கல் நடைமுறை முடக்கப்படும். வருமான வரித்துறையிடம் இருந்து வரவேண்டிய தொகை கிடைக்காது. வரி பிடித்த விகிதம் அதிகரிக்கும்.
வங்கி உட்பட இதர நிதி சம்பந்தமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் சிக்கல் ஏற்படும் இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
* விவசாயிகளுக்கு பயிர் நிவாரண உதவி - முதல்வர் அறிவிப்பு.
நடப்பாண்டு 2023 ஜனவரி கடைசி வாரத்திலும், பிப்ரவரி முதல் வாரத்திலும் பெய்த பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மற்றும் இதர மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு பயிர் நிவாரண உதவி - முதல்வர் அறிவிப்பு.
கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்து பாதிக்கப்பட்ட விதிமுறைகளின்படி, 33 சதவிகிதம் மற்றும் அதற்குமேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள இனங்களில் எக்டேருக்கு ரூபாய் 20 ஆயிரம் வழங்கப்படும்.
நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக எக்டேருக்கு ரூபாய் 3 ஆயிரம் வழங்கப்படும்.
நெல் தரிசில் உளுந்து தெளித்து கனமழையால் பாதிக்கப்பட்ட உளுந்து விவசாயிகளுக்கு மீண்டும் உளுந்து விவசாயம் செய்ய 50 சதவிகிதம் மானியத்தில் ஒரு ஏக்கருக்கு 8 கிலோ பயறு விதைகள் வழங்கப்படும்.
கன மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நெல் அறுவடையை உடன் மேற்கொள்ள வேளாண் பொறியியல் துறை மூலம் 50 சதவிகிதம் மானியத்தில் நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு வழங்கப்படும்.
* ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இருந்து ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ்- ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன் சென்னையில் அறிவிப்பு.
தேர்தல் ஆணையத்தில் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் ஆவணங்களைச் சமர்ப்பித்தார்.
பொதுக்குழுவைக் கூட்டி இடைத்தேர்தலில் வேட்பாளரை தேர்வு செய்ய அதிமுகவின் இருதரப்புக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
* துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.
தென்கிழக்கு துருக்கியில் உள்ள காசியான்டெப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.
நுர்தாகி அருகே 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி - சிரியா எல்லை அருகே அமைந்துள்ளது.
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் லெபனான், ஜோர்டான், பிரிட்டன், ஈராக் உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டது.
துருக்கியில் நிலநடுக்கம் காரணமாக எரிவாயுபைப்லைன் வெடித்து சிதறியதால் பதற்றம் ஏற்பட்டது.
இதனிடையே, துருக்கியில் அவசர நிலையை பிரகடனம் செய்த அரசு, மீட்புப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
துருக்கியை தொடர்ந்து சிரியாவிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுவரை சுமார் 2300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
துருக்கி நிலநடுக்கத்தை தொடர்ந்து இத்தாலி, சுனாமி பேரலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
TELEGRAM: t.me/agnipuratchi1
மீட்பு பணிகளில் உதவ உலக நாடுகளிடம் கோரிக்கை வைத்துள்ளது துருக்கி அரசு.
No comments:
Post a Comment