அக்னிப்புரட்சி இன்றைய (24.01.2023) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (24.01.2023) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (24.01.2023) முக்கிய செய்திகள்.

* எப்போது திருமணம்? - ராகுல் காந்தி அளித்த ருசிகர பதில்...!

சரியான பெண் கிடைத்தால் நான் திருமணம் செய்து கொள்வேன் என்றார். மேலும், எனது பாட்டியார் இந்திரா தான் எனது வாழ்வின் காதல், இரண்டாம் தாய். நான் அது போன்ற ஒரு பெண்ணை தேர்வு செய்வேன். தான் விரும்பும் பெண் அம்மா மற்றும் தன் பாட்டியின் குண நலன்கள் கலந்து இருந்தால் நல்லது என பதில் அளித்துள்ளார்.

* அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு - 9 பேர் உயிரிழப்பு.

அமெரிக்காவில் மீண்டும் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர்.

கலிஃபோர்னியா அருகே ஹாஃப்மூன் பே பகுதியில் 2 இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்.

ஐயாவா பகுதியில் நடந்த மற்றொரு துப்பாக்கிச்சூட்டில் 2 மாணவர்கள் உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்.

* பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. உணவு, எரிபொருள் தட்டுப்பாட்டால் பாகிஸ்தானில் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பாகிஸ்தானில் தேசிய மின்வாரியத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிக்கின்றனர்.

கராச்சி, லாகூர், இஸ்லாமாபாத் உள்ளிட்ட பாகிஸ்தானின் அனைத்து முக்கிய நகரங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. முழுமையாக மின்சாரம் வழங்க சுமார் 12 மணி நேரம் ஆகும் என மின்துறை அமைச்சர் தெரிவித்தார்.

* இந்திய அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி திருமணம் நேற்று நடைபெற்ற நிலையில், புதுமணத் தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

* 2022ஆம் ஆண்டுக்கான ஐசிசி டி20 ஆண்கள் அணியில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர்கள் விராட்கோலி, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இடம் பிடித்து அசத்தியுள்ளனர்.

* சென்னையில் ஓபிஎஸ் அணி சார்பில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளரிடம் ஓபிஎஸ் பேசுகையில்...

எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்வதாக தேர்தல் ஆணையத்திடம் கடிதம் அளித்துவிட்டார். ஆகவே ஒருங்கிணைப்பாளராக நான் மட்டும் இருக்கிறேன். ஆகவே இரட்டை இலை சின்னம் கோரி என்னால் மட்டுமே தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க முடியும். விரைவில் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை அறிவிப்பேன். அதே நேரத்தில் பாஜக போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் ஆதரவளிக்கவும் தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.

* பெண்களுக்கான இலவச அரசு பேருந்தில் பயணித்த பெண்ணை பார்த்து, ஓசி பயணம் என சுட்டிக்காட்டி தரக்குறைவாக பேசிய பேருந்து நடத்துநர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் சங்கீதா. இவர் கடந்த 19-ம்தேதி எழும்பூரில் இருந்து திருவொற்றியூர் நோக்கி செல்லும் (தடம் எண் 28) அரசு பேருந்தில் பயணித்தார்.

அப்போது, கூட்டநெரிசலில் பேருந்து நடத்துநர் சிவசுதன், சங்கீதா மட்டுமின்றி அங்கிருந்த சில பெண் பயணிகளை குறிப்பிட்டு ஓசி பயணம்தான செய்றீங்க என்ற தொணியில் தரக்குறைவாக பேசினார்.

இச்சம்பவம் குறித்து சங்கீதா புதுவண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் செய்தார். இந்நிலையில் பெண் பயணியை தரக்குறைவாக பேசிய நடத்துநரை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது.

TELEGRAM: t.me/agnipuratchi1

* மீனவர்கள் கட்டுப்பாடுகளுடன் சுருக்குமடி வலைகளை பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி. -

நிபந்தனைகள்:

வாரத்தில் திங்கள், வியாழன் என 2 நாட்கள் மட்டும் சுருக்குமடி வலையுடன் மீன்பிடிக்க அனுமதி.

சுருக்குமடி வலையுடன் காலை 8 மணிக்கு சென்றுவிட்டு மாலை 6 மணிக்குள் மீனவர்கள் திரும்ப வேண்டும்.

12 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் சுருக்குமடி வலையை மீனவர்கள் எடுத்துச் செல்ல அனுமதி.

சுருக்குமடி வலையை பயன்படுத்த பதிவு செய்த படகுகளுக்கு மட்டுமே அனுமதி.

மீனவர்கள் தங்களது படகுகளில் உரிய Tracking System பொருத்தியிருக்க வேண்டும்.

சுருக்குமடி வலையுடன் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் அடையாள அட்டை வைத்திருப்பது கட்டாயம்.

நாட்டுப்படகு மீனவர்களும், விசைப்படகு மீனவர்களும் சமமான பலனைப் பெறவே இந்த உத்தரவு.

சுருக்குமடி வலைக்குத் தடை விதித்த தமிழ்நாடு அரசின் உத்தரவை எதிர்த்து மீனவர்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

* திண்டுக்கல்லில் ‘துணிவு’ படம் பார்த்து Bank Heist செய்தவரை, கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்.

திண்டுக்கல்லில் உள்ள IOB வங்கியில்்ஊழியர்கள் மீது மிளகாய் பொடி தூவி, கைகளை கட்டிப்போட்டு கொள்ளையடிக்க முயற்சி.

ஊழியர் ஒருவர் வெளியே ஓடி வந்து 'கொள்ளை கொள்ளை' என கூச்சலிட்டதால், கொள்ளையடிக்க முயன்ற கலீல் ரகுமான், பொதுமக்கள் உதவியுடன் பிடித்து போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

போலீசார் விசாரணையில், 'வாழ்க்கை' வெறுத்து விட்டதாகவும், அதனால், ‘துணிவு’ உள்ளிட்ட படங்களை பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகவும், கலீல் ரகுமான் தெரிவித்துள்ளர்.

* புதுச்சேரி சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் பிப்ரவரி 3ஆம் தேதி தொடங்குகிறது.

மார்ச் மாதம் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் முழுமையான பட்ஜெட் தாக்கல்.

12 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி சட்டப்பேரவையில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது - புதுச்சேரி சபாநாயகர் செல்வம்.

* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.5,355-க்கு விற்கப்படுகிறது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.42,840-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் குறைந்து ரூ.74-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒருகிலோ பார் வெள்ளியின் விலை ரூ.74,000-க்கு விற்பனை ஆகிறது.

* சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு புதிய உத்தரவு.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ கல்லூரி இயக்குநரகத்தில் ஆஜரானார் சித்த மருத்துவர் ஷர்மிகா.

தன் மீது குவிந்த புகார்களுக்கு, வாய்மொழியாக விளக்கம் அளித்த நிலையில், வரும் 10ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என புதிய உத்தரவு.

* டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

தலைநகர் டெல்லியின் சுற்றுவட்டார பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்.

* கோபத்தில் திமுக தொண்டர்கள் மீது கல்லை தூக்கி எறிந்த அமைச்சர் நாசர்:

திருவள்ளூர் அருகே முதல்வர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர் நாசர் நாற்காலி எடுத்து வர தாமதமானதால் கோபம் அடைந்து கல்லை தூக்கி எறிந்த சம்பவத்தால் பரபரப்பு…..

* பெங்களூரு கே.ஆர்.மார்க்கெட் மேம்பாலத்தின் மேல் இருந்து, ₹10 நோட்டுகளை பறக்கவிட்டு பணமழை பொழியவிட்ட நபர்; மேம்பாலத்தின் கீழ் இருந்த மக்கள், ரூபாய் நோட்டுகளை எடுக்க போட்டா போட்டி.

பெங்களூருவில் மேம்பாலத்தில் இருந்து ₹10 நோட்டுகளை பறக்கவிட்ட அருண் என்பவர் கைது; எதற்காக பணத்தை வீசினார் என்பது குறித்து விசாரணை.

நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் நடத்திவரும் அருண் மீது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக வழக்கு.

* நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி: முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 385/9 ரன்கள் எடுத்துள்ளது.

ரோஹித் 101, கில் 112, கோலி 36, இஷான் 17, பாண்டியா 54, சூர்யகுமார் 14 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

* திண்டுக்கல் : பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வரும் 27ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை - தமிழக அரசு

* திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே ரூ.3,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் முனியப்பன் கைது.

பட்டா மாறுதலுக்காக லஞ்சம் பெற்றபோது மல்லகுண்டா விஏஓ முனியப்பனை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்தது.

* சொத்துக்குவிப்பு வழக்கில் போய்ஸ் கார்டன் இல்லத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விட, உடனடி நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சேலைகள், செருப்புகள் மற்றும் பிற பொருட்களை பொது ஏலம் விட, சிறப்பு வழக்கறிஞரை அரசு நியமித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் -பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவு.

11,344 சேலைகள், 750 செருப்புகள், 1040 வீடியோ கேசட்கள் என பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

* நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி.

மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இந்தியா வெற்றி; 90 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 எனக் கைப்பற்றி, நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்தது.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை ஒயிட் வாஷ் செய்ததை தொடர்ந்து ஐசிசி தரவரிசையில் இந்தியா 114 ரேட்டிங் உடன் முதலிடம் பிடித்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages