25000 ஏக்கர் விலை நிலங்களை என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்துவதை எதிர்த்து இரண்டு நாட்கள் விழிப்புணர்வு நடைபெறும் மேற்கொண்ட பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கரிவெட்டி கிராமத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது. - Agnipuratchi

25000 ஏக்கர் விலை நிலங்களை என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்துவதை எதிர்த்து இரண்டு நாட்கள் விழிப்புணர்வு நடைபெறும் மேற்கொண்ட பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கரிவெட்டி கிராமத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது.

Share This

25000 ஏக்கர் விலை நிலங்களை என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்துவதை எதிர்த்து இரண்டு நாட்கள் விழிப்புணர்வு நடைபெறும் மேற்கொண்ட பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கரிவெட்டி கிராமத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது.

25000 ஏக்கர் விளை நிலங்களை என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்துவதை எதிர்த்து இரண்டு நாட்கள் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டு இருக்கின்றேன்.

முப்போகம் விளையும் இந்த 25 ஆயிரம் நிலங்களில் நெல், கரும்பு, வாழை, முட்டைக்கோஸ் போன்ற பயிர்கள் விளைகிறது. இந்த நிலத்தினை என்எல்சி  நிர்வாகத்திற்கு அமைச்சர்கள், நிர்வாகிகள் பிடுங்கிக் கொடுக்க ஏன் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இரண்டு நாட்களாக நான் சென்று மக்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றேன். மக்கள் நிலம் எடுப்பதை எதிர்த்து கொண்டிருக்கிறார்கள். நிலங்களை கொடுக்க மாட்டோம் என திட்டவட்டமாக கூறுகிறார்கள். எங்கள் பாட்டன், பூட்டன் வாழ்ந்த இடம். எங்களின் அடையாளம் இது. எங்கள் வருங்கால சந்ததி வாழ வேண்டிய இடம், எங்கள் வீடு, கோயில் எல்லாம் இங்கே இருக்கும் போது நாங்கள் ஏன் எங்கேயோ சென்று அகதிபோல வாழ வேண்டும்? என மக்கள் கொதித்து இருக்கிறார்கள்.

மறுபுறம் தமிழ்நாடு அரசின் கால்நடை கொள்கை ஒன்றை முதலமைச்சர் வெளியிட்டார். அதன்படி 2040 ஆம் ஆண்டிற்குள் ஜீரோ கார்பன் திட்டத்தினை கொள்கையாக வெளியிட்டு இருக்கிறார்கள். அதன்படி புதிய அனல் மின் நிலையங்கள், நிலக்கரி எடுப்பதற்கு அனுமதி அளிக்கக்கூடாது.

இன்னும் 18 ஆண்டுகளில் ஜீரோ கார்பன் நிலையை எட்டுவோம் எனக் கூறியிருக்கும் நிலையில், இந்த விளை நிலங்களை பறித்து கொடுக்க அமைச்சர்கள் துடிப்பது ஏன்? உங்கள் அரசின் கொள்கைக்கு நேர் எதிராக உங்கள் அமைச்சர்கள் செயல்படுகிறார்கள். மக்களை மிரட்டுகிறார்கள்,  அச்சுறுத்தார்கள், வழக்கு போடுவோம் என்கிறார்கள், உங்கள் பிள்ளைகள் படிக்க முடியாது என்கிறார்கள். 25 ஆயிரம் ஏக்கர் விலை நிலங்களை உங்கள் காலநிலை கொள்கைகளுக்கு முரணாக கையகப்படுத்த நினைப்பது தவறான போக்கு.

மறுபுறம் மத்திய அரசும் 2070 க்குள் இந்தியாவில் ஜீரோ கார்பன் நிலமையை எட்டுவோம் என அறிவித்திருக்கிறது. அதேபோல உலக அளவில் 2015ல் பாரிஸ் உடன்படிக்கை, கிளாஸ்கோவில் COP 26 மாநாடு, எகிப்தில் நடைபெற்ற COP 27 மாநாடு ஆகியவற்றில் இந்திய கலந்து கொண்டு கார்பன் வெளியிடுவதை குறைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்வோம் என தெரிவித்திருக்கிறார்கள். அதே போன்று பசுமை இல்லாத வாயுக்களை வெளியிடும் நிலத்திற்கு கீழே இருந்து கிடைக்கும் எரிபொருட்களான நிலக்கரி, பெட்ரோல், டீசல், மீத்தேன், ஈத்தேன் போன்றவற்றின் பயன்பாட்டை குறைப்போம். அதன் மூலம் புவி வெப்பம் ஆவதை குறைப்போம் என தெரிவித்திருக்கிறார்.

மாநில அளவில், மத்திய அளவிலும் ஜீரோ கார்பன் என்ற நிலையை எட்ட வேண்டும் என்ற கொள்கையை வைத்திருக்கும் நிலையில், 25 ஆயிரம் விளை நிலங்களை ஏன் கைப்பற்ற வேண்டும்? இதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மறுபுறம் தமிழகத்தில் உள்ள பிற கட்சிகளை சார்ந்தவர்கள் ஏன் போராடவில்லை? கோவை மாவட்டம் அன்னூரில் 1500 ஏக்கர் விளை நிலங்கள் எடுப்பதை எதிர்த்து, முன்னாள் முதலமைச்சர் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி போராட்டம் நடத்துகிறார். அறிக்கை வெளியிடுகிறார். பாஜக தலைவர் அண்ணாமலை போராட்டம் நடத்துகிறார். இங்கே ஏன் வந்து போராடவில்லை? 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை பற்றி ஏன் பேசவில்லை? ஏன் போராடவில்லை? திமுகவின் நிலைப்பாடு என்ன? மக்களிடம் வாக்கு மட்டும் கேட்டு வருகிறீர்கள்? பாதிக்கப்பட்டால் வரமாட்டீர்களா? அன்னூருக்கு ஒரு நியாயம், நெய்வேலிக்கு ஒரு நியாயமா? அதே போல தமிழகத்தில் விவசாய சங்கங்கள் எவ்வளவோ இருக்கின்றன. இதுவரை இந்த 25 ஆயிரம் விவசாய நிலங்களுக்காக ஏன் வரவில்லை? காரணம் அரசியலா? எனக்கு ஒன்னும் புரியவில்லை.

வேளாண்துறை அமைச்சரின் வேலை என்ன? விவசாயிகளை பாதுகாப்பது, மகிழ்ச்சியாக வைப்பது. இததான் அவருடைய வேலை. மண்ணை பிடுங்கி, விவசாயிகள் வயிற்றில் அடித்து என்எல்சி நிறுவனத்திடம் ஒப்படைப்பது தான் அவருடைய வேலையா? அவருடைய வேலைக்கு நேரெதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தமிழக அரசின் கொள்கைக்கு நேர் எதிராக செயல்பட்டு கொண்டிருக்கிறார். முதலமைச்சர் ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்?

TELEGRAM: t.me/agnipuratchi1

உலக அளவில் காலநிலை மாற்றம் எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அமெரிக்காவில் சமீபத்தில் ஏற்பட்ட கடுங்குளிரில் 100 பேர் இறந்திருக்கிறார்கள். கடந்த வருடம் கனடாவில் ஏற்பட்ட அதிகப்படியான வெப்ப நிலையில் 1500 பேர் இறந்தார்கள். ஐரோப்பாவில், சைனாவில் மூன்று மாதங்களுக்கு முன்பு கடுமையான வளர்ச்சி நிலவியது. அதே சமயம் மறுபுறம் பாகிஸ்தான், பெங்களூரில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இன்னும் பத்து ஆண்டுகளில் கடுமையான வறட்சி தமிழகத்திலும் ஏற்படக்கூடும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விளை நிலங்களை பாதுகாக்க வேண்டும். நாம் இப்பொழுது விட்டுவிட்டால் பிற்காலத்தில் கிடைக்காது.

என்எல்சி நிர்வாகம் செயல்பட வேண்டும் என்றால், 1987 ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட பத்தாயிரம் ஏக்கர் நிலங்கள் இன்னும் கையில் இருக்கிறது.  அதனை வைத்து இன்னும் 40 ஆண்டுகளுக்கு என்எல்சி நிர்வாகம் செயல்பட முடியும்.  இதற்கிடையில் ஜீரோ கார்பன் கொள்கை அமல்படுத்தியிருக்கும் நிலையில், மேலும் மின் உற்பத்திக்கு புதிய தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. சமீபத்தில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தொழில்நுட்பம் இன்னும் 10, 15 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வந்து விடும். அப்போது என்எல்சி போன்ற நிறுவனங்கள் தேவைப்படாது. 

என்எல்சி செயல்படாவிட்டால், தமிழ்நாடு இருண்டுவிடும் என்ற பொய்யான கட்டுக்கதையை பரப்பி வருகிறார்கள். தமிழகத்தின் ஒரு நாள் தேவை 18000 மெகாவாட், என்எல்சி 2000 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் 40% மட்டுமே மாநில அரசுக்கு கொடுக்கப்படுகிறது. 40 சதவீதம் என்றால் 800 மெகாவாட். 800 மெகாவாட் கொடுக்கவில்லை என்றால் தமிழகம் இருண்டு விடுமா? 60% உற்பத்தியை மத்திய அரசுக்கு தான் என்எல்சி வழங்கிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட என்எல்சி நிர்வாகத்திற்கு ஆதரவாக அமைச்சர்களும் நிர்வாகமும் சாதகமாக செயல்படாமல், விவசாயிகளுக்கு சாதகமாக செயல்பட வேண்டும்.

இது வரை எங்கள் கட்சியின் சார்பில் அமைதியான போராட்டங்களை நடத்தி வருகிறோம். முன்னதாக கருத்து கேட்டு கூட்டம், பின்னர் என் தலைமையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம், அதன் பிறகு சட்டமன்ற உறுப்பினர் குழு கருத்து கேட்பு கூட்டம், தற்போது இரண்டு நாட்கள் விழிப்புணர்வு நடைபயணம் என அமைதியான முறையில் நான் போராடிக் கொண்டிருக்கின்றேன். எங்களுடைய போராட்டம் கடுமையான போராட்டமாக இருக்கும். அமைச்சர்கள், நிர்வாகங்கள் மக்களை அச்சுறுத்தக் கூடாது. என்எல்சி போதும் இதோடு மூடி விடுங்கள்.

சமீபத்தில் 299 பொறியாளர்களை தேர்வு செய்தார்கள் அதில் ஒருவர் கூட மண்ணின் மைந்தர்கள் இல்லை ஏன், தமிழர்களே இல்லை என்ற நிலையில் எதற்காக என்எல்சி நிர்வாகம் செயல்பட வேண்டும். எதற்காக நாங்கள் நிலங்களை கொடுக்க வேண்டும்?  இதுவரை 55 ஆயிரம் கோடி லாபம் பார்த்துள்ள என்எல்சி, தமிழகத்தில் என்ன முதலீடு செய்து இருக்கிறது? மண்ணின் மைந்தர்களுக்கு என்ன செய்கிறது? உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பீஹார், ஒரிசா மாநிலங்களில் முதலீடு செய்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் எந்த விதத்திலும் பயன் அளிக்காத என்எல்சி நிர்வாகம் எதற்கு?  இதுவரை நாங்கள் அமைதியாக போராடிக் கொண்டிருக்கிறோம், இதற்கு மேல் மண்ணையும் மக்களையும் உறுதியாக காப்போம். பாட்டாளி மக்கள் கட்சி எந்நேரத்திலும் மக்களுக்காக நிற்கும் துணை நிற்கும். அதற்காக கடுமையான போராட்டங்களையும் நடத்தும்" என அன்புமணி பேசினார்.

மற்ற கட்சிகள் போராட்டம் நடத்தவில்லை என நீங்கள் கூறியிருக்கும் நிலையில், அதிமுக மற்றும் திமுகவின் கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தி இருக்கிறது என செய்தியாளர் ஒருவர் கேட்ட போது, அவையெல்லாம் கண்துடைப்பு, அவர்கள் அமைச்சருடனான புரிதலில் போராட்டம் நடத்துகிறார்கள் அவர்களின் கோரிக்கை என்பது வேறு. அவர்கள் கூடுதல் பணம் இழப்பீடு கேட்டு போராட்டம் நடத்துகிறார்கள். எங்களுடைய கோரிக்கையே வேறு. நாங்கள் என்எல்சியை வெளியேற வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறோம். இன்னும் இரண்டு ஆண்டுகளில் தனியாருக்கு தாரைவார்க்கும் நிலையில் எதற்காக 25 ஆயிரம் நிலத்தை கையகப்படுத்த வேண்டும், தேவையே இல்லையே.

அதேபோன்று நடை பயணம் தொடங்கிய இடத்தில் மாவட்ட ஆட்சியர் நடத்திய கூட்டத்தில் 547 பேர் கூடுதல் இழப்பீடு கேட்டதாகவும், அவர்களில் 240 பேருக்கு இழப்பீடு கொடுத்ததாகவும் சொல்லியிருக்கிறார்கள் என கேட்ட போது, அவர்கள் எல்லாம் திமுக அமைச்சரின் வற்புறுத்தலில் வாங்கி இருக்கிறார்கள் என்று தெரிவித்த அன்புமணி,  இழப்பீடு வாங்கிய சிலருக்காக 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை விட்டுக் கொடுக்க முடியாது.

இதுவரை பலகட்ட போராட்டங்கள் நடத்திய உங்களிடம் என்எல்சி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியதா என்று கேட்டபோது,   நான் பேசவே விரும்பவில்லை. அந்த நிறுவனமே எனக்கு தேவையில்லை என்ற போது அந்த நிறுவனத்திடம் நான் ஏன் பேச வேண்டும்? அந்த நிறுவனம் வெளியேற வேண்டும் என்பதுதான் என்னுடைய கோரிக்கை. எங்களுடைய போராட்டம் கடுமையாக இருக்கும். எங்கள் போராட்டம் எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரியும். எங்கள் கட்சி போராட்டத்தில் வளர்ந்த கட்சி. எங்கள் போராட்டம் எப்படி இருக்கும் என்பதை பார்க்க தானே போறீங்க! என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேசி நிறைவு செய்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages