அக்னிப்புரட்சி இன்றைய (25.01.2023) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (25.01.2023) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (25.01.2023) முக்கிய செய்திகள்.

* குடியரசு தினத்தையொட்டி ஜனாதிபதி முர்மு இன்று உரை ஆற்றுகிறார்!..

நாடு தனது 74-வது குடியரசு தினத்தை நாளை (26-ந் தேதி) கோலாகலமாக கொண்டாடுகிறது.

இதையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (புதன்கிழமை) உரை ஆற்றுகிறார்.

இதுகுறித்து ஜனாதிபதி மாளிகை நேற்று விடுத்த அறிக்கையில், “நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி 25-ந் தேதி இரவு 7 மணிக்கு உரை ஆற்றுகிறார். இதை அகில இந்திய வானொலி தனது அனைத்து அலைவரிசையிலும் நேரடியாக ஒலிபரப்புகிறது. இதே போன்று தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்புகிறது. இந்தியிலான இந்த உரையைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் வரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தூர்தர்ஷன் தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் ஜனாதிபதியின் உரையை ஒளிபரப்பும். அகில இந்திய வானொலியிலும் இரவு 9.30 மணிக்கு மாநில மொழிகளில் ஜனாதிபதி உரை ஒலிபரப்பாகிறது.

ஜனாதிபதி முர்மு பதவி ஏற்ற பிறகு குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு உரை ஆற்றுவது இதுவே முதல் முறை ஆகும்.

TELEGRAM: t.me/agnipuratchi1

* ஒரே பந்துல 16 ரன்னு!

ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக் தொடரில், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரே பந்தில் ஸ்டீவன் ஸ்மித்...

ஜோயல் பாரிஸ் வீசிய 2வது ஓவரின் 3வது பந்தில் சிக்ஸ் அடிக்க அது No ball என அறிவிப்பு; அடுத்த பந்து Wide ஆகி 4 ரன்கள் கிடைக்க, அடுத்த பந்தில் 4 ரன்கள் விளாச 1 பந்தில் 16 ரன்கள் கிடைத்தது.

கடைசியில் ஸ்மித், 33 பந்தில் 66 ரன்கள் குவித்து அணியை வெற்றி அடைய செய்தார்.

TELEGRAM: t.me/agnipuratchi1

* நியூசிலாந்தின் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவி ஏற்றுக்கொண்டார்.

44 வயதான கிறிஸ் ஹிப்கின்ஸ் நியூசிலாந்தின் 41-வது பிரதமாக பதவி ஏற்றுக்கொண்டார்.

பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த வாரம் ஜெசிந்தா அடர்ன் அறிவித்ததை அடுத்து புதிய பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.

* காவல் நிலையத்தில் உயிரிழந்த எஸ்ஐ:

சிதம்பரம் நகர காவல் நிலைய எஸ்.ஐ. மகேந்திரன் (58) மாரடைப்பால் காவல் நிலையத்திலேயே உயிரிழப்பு.

இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், அதிகாலையில் காவல்நிலையத்தில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.

* ட்ரோன்கள் பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை!

நாடு முழுவதும் நாளை 74வது குடியரசு தினம் கொண்டாடப்பட இருக்கிறது. தமிழகத்திலும் சென்னை காமராஜர் சாலையில் ஆளுநர் கொடி ஏற்ற இருக்கிறார்.

குடியரசு தின விழாவை முன்னிட்டு பாதுகாப்புக்காக இன்றும்(25), நாளையும் சென்னையில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி விமானங்கள் பறப்பதற்கு தடை விதித்து சென்னை காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

* ஃபாஸ்டேக் மூலம் குவிந்த வசூல்!

வாகனங்களில் சுங்கக்கட்டணம் பாஸ்டேக் மூலம் வசூலித்ததால் கடந்த ஆண்டு 46% வசூல் அதிகரித்துள்ளதாக நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2021ன் பிப்.16ம் தேதி முதல் வாகனங்களில் பாஸ்டேக் முறை கட்டாயமாக்கப்பட்டது. தொடர்ந்து, நாளொன்றுக்கு சராசரியாக ₹134.44 கோடி சுங்கச்சாவடிகளில் வசூல் ஆவதாகவும், பாஸ்டேக் முறையிலான வருவாய் 2022ல் ₹50,855 கோடியாக வசூலானதாகவும் கூறப்பட்டுள்ளது.

* பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.

செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய அவர், மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அறிவுறுத்த ப்பட்டுள்ளது. விதியை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் அரசுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றார்.

* உண்மை வெளிவந்தே தீரும்'

2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை மத்திய அரசு முடக்கியது.

இதுகுறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, பகவத் கீதை உபநிஷத்துகளில் உண்மையை மறைக்க முடியாது என்று உள்ளது. உங்களால் ஊடகங்களை ஒடுக்க முடியும், தடைவிதிக்க முடியும்.

சிபிஐ, அமலாக்கத்துறையை பயன்படுத்த முடியும். ஆனால், உண்மை உண்மைதான். அதனை தடுக்க முடியாது என்றார்.

* தேர்தலில் துடிப்பான பங்களிப்பை மேலும் வலுப்படுத்தி ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம்"

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ட்விட்டரில் வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து.

* துணை சபாநாயகர் பிச்சாண்டி தலைமையில் சட்டசபை உரிமைக்குழு கூட்டம் தொடங்கியது

ஜன.9ம் தேதி சட்டசபையில் ஆளுநரின் விருந்தினர் செல்போனில் புகைப்படம் எடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் உரிமைக்குழு ஆய்வு

குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவரால் அறிவிக்கப்படும் காவலர்களுக்கான விருது தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு அறிவிப்பு

* சென்னை ஐஜி தேன்மொழி, செங்கல்பட்டு ஏஎஸ்பி பொன் ராமு, அரியலூர் ஏஎஸ்பி ரவி சேகரன் ஆகியோருக்கு விருது அறிவிப்பு

மொழிப்போர் தியாகிகள் மணி மண்டபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

மொழி காக்க இன்னுயிர் நீத்தவர்களின் உருவ படங்களுக்கு மலர்தூவி மரியாதை

* ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவு - கமல்ஹாசன்.

* புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து.

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

புகையிலை பொருட்களுக்கு முழு தடை விதிக்க உணவு பாதுகாப்பு மற்றும் உணவு தரச்சட்டத்தில் வழிவகை இல்லை - நீதிபதிகள்.

* 'வாழும் கலை' அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்

பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் சென்ற போது கடும் பனிமூட்டம் காரணமாக சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதியில் தரையிறக்கப்பட்டது.

* கர்நாடகா: ஹோஸ்பேட் பகுதியில், சாலையில் பைக் சாகசம்; தூக்கி வீசப்பட்ட இளைஞர்.

திரைப்பட பாணியில் பைக் ஸ்டண்ட் செய்ய முயன்ற இளைஞர்கள் தடுப்பு சுவரில் மோதி கீழே விழும் விபத்து காட்சி.
(Warning: Viewer discretion is advised)

* 2012ம் ஆண்டு சென்னை தாம்பரம் அருகே பள்ளி பேருந்து ஓட்டை வழியே விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கில், கைதான 8 பேரும் விடுதலை.

பள்ளி தாளாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

10 ஆண்டுகளாக நடந்த வழக்கில் செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு.

* ஆஸ்திரேலிய ஓபன் - கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் போபண்ணா இணை, இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.

7-6, 7-6 என்ற நேர் செட்டில் பிரிட்டனைச் சேர்ந்த இணையை வீழ்த்தினர்.

* ஐசிசி ஒருநாள் போட்டி பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் முதலிடம் பிடித்தார்.

ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் ட்ரென்ட் போல்ட் ஆகியோர்களை பின்னுக்கு தள்ளி 729 புள்ளிகளுடன் முகமது சிராஜ் முதலிடத்திற்கு முன்னேறினார்.

ஜோஷ் ஹேசில்வுட் 727 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், 708 புள்ளிகளுடன் ட்ரென்ட் போல்ட் 3வது இடத்திலும் உள்ளனர்.

* போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்று ஷார்ஜா சென்று கோவை வந்த வங்கதேச வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஷார்ஜாவில் இருந்து கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, 'ஏர் அரேபியா' விமானம் வந்தது. விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இதில் விமானத்தில் வந்த ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த நபரின் பாஸ்போர்ட்டை சோதனை செய்தனர். அதில் அவர் மேற்குவங்கம், கோல்கட்டாவை சேர்ந்தவர் என, குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதையடுத்து, அவரிடம் ஷார்ஜாவிலிருந்து கோல்கட்டா செல்லாமல் கோவை வந்ததற்கான காரணம் குறித்து கேட்டனர். தொடர்ந்து குடும்பத்தினர் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

அதிகாரிகளின் கேள்விகளுக்கு அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. சந்தேகமடைந்த அதிகாரிகள் அந்த நபரை தேசிய கீதம் பாடும்படி கூறினர். ஆனால், அவரால் தேசிய கீதத்தை முழுமையாக பாட முடியவில்லை. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் வங்கதேசத்தை சேர்ந்த அன்வர் உசேன், 28 எனத் தெரிந்தது. மேலும், போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் எடுத்ததும் தெரிந்தது.

அன்வர் உசேன், 2018-ம் ஆண்டு திருப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் டெய்லராக பணிபுரிந்து உள்ளார். அங்கிருந்து பெங்களூரு சென்ற அவர், போலியான பிறப்பு சான்றிதழ் தயார் செய்து, மேற்குவங்க மாநிலம் கோல்கட்டா முகவரியில் ஆதார் எண் பெற்றார். இந்த ஆவணங்கள் வாயிலாக, 2020ம் ஆண்டு இந்திய பாஸ்போர்ட் பெற்றார்.

அந்த பாஸ்போர்ட் பயன்படுத்தி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு வேலைக்கு சென்றார். அங்கு அவருக்கு 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாக கிடைத்தது. இதையடுத்து அவர் மீண்டும் திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு செல்ல முடிவு செய்தார்.

இதற்காகவே அவர் ஷார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு வந்தது தெரிந்தது. இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள், அன்வர் உசேனை கோவை பீளமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார், சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

* இந்தித் திணிப்புக்கு எதிராகவும், தமிழ் மொழியைக் காக்கவும் நமது போராட்டம் என்றும் தொடரும் - திருவள்ளூரில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை.

தமிழ் மொழிக்கும், தமிழினத்துக்கும் எதிரான சக்திகள் தேர்தல் களத்தில் மட்டுமல்ல அரசியல் களத்திலும் தோற்கடிக்கப்பட வேண்டும் - ஸ்டாலின்.

திராவிட இயக்கத்தின் கொள்கைகள், கோட்பாடுகள், இலட்சியங்களை நிறைவேற்ற வந்துள்ள காலத்தின் வாரிசுகள் நாம்  - முதலமைச்சர் ஸ்டாலின்.

* இருளர் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்களான தமிழகத்தை சேர்ந்த வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகியோருக்கு 2023-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது அறிவித்து மத்திய அரசு கௌரவம்.

* பத்ம விருதுகள் அறிவிப்பு

கலை, சமூக சேவை, பொது சேவை, அறிவியல் - தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு 2023 ஆண்டு தோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்தாண்டு பத்மவிருதுக்கு தேர்வு பெற்ற 106 பேரின் பெயர்கள் இன்று (ஜன.25) மத்திய அரசு வெளியிடப்பட்டது.

தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இருளர் இன பாம்புபிடி வீரர்கள் வடிவேல் கோபால், ம.சி.சடையன், மற்றும் சினிமா பாடகி வாணி ஜெயராம் உள்பட 106 பேர் பத்ம விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.

* பத்மவிபூஷன்: (6)

1) திலீப் மஹாலானபிஸ் (மருத்துவத்துறை )

2) பாலகிருஷ்ண தோஷி

3) ஸ்ரீ ஜாகீர் ஹூசேன்

4) ஸ்ரீனிவாஸ் வரதன்.

5)முலயாம்சிங் யாதவ்

6) எஸ்.எம். கிருஷ்ணா

* பத்மபூஷன்: (9)

1) குமார்மங்கலம் பிர்லா

2) தீபிகா தர்.

3) வாணி ஜெயராம்

4) எஸ்.எல். பைராப்பா

5) சுவாமி சின்ன ஜியார்.

6) சுமன் கல்யாண்பூர்

7) கபில் கபூர்.

8) சுதா மூர்த்தி.

9) கமலேஷ் பட்டேல்.

பேரின் பெயர்கள்

" பத்மஸ்ரீ விருதுகள்: (91)

1) வடிவேல் கோபால்

2) ம.சி. சடையன்

3) எம்.எம். கீரவாணி

உள்பட 91 பேர் என 106 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages