அக்னிப்புரட்சி இன்றைய (28.01.2023) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (28.01.2023) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (28.01.2023) முக்கிய செய்திகள்.

* ஆசிரியர் தகுதித் தேர்வு 2 ம் தாளுக்கான கணினி வழித் தேர்வு, பிப்ரவரி 3 முதல் 14-ம் தேதி வரை நடைபெறும்;

அதற்கான ஹால்டிக்கெட், trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது - ஆசிரியர் தேர்வு வாரியம்

* கச்சத் தீவு விழாவில் பங்கேற்க 3,500 பேருக்கு இலங்கை அரசு அனுமதி.

ராமேஸ்வரம்: கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா மார்ச், 3, 4ல் நடக்க உள்ளது.

விழாவுக்கு தமிழக பக்தர்கள், 3,500 பேர் பங்கேற்க இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த ஆண்டு மார்ச், 3ல் விழா கொடி ஏற்றப்பட்டு அன்றிரவு சிலுவை பாதை திருப்பலி பூஜையும், மறுநாள் திருவிழா திருப்பலி பூஜையும் நடக்கிறது.

இவ்விழாவில், தமிழக பக்தர்கள், 3,500 பேரும், இலங்கை பக்தர்கள், 4,500 பேரும் பங்கேற்க இலங்கை அரசு அனுமதி அளித்து உள்ளது.

மார்ச், 3ல் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் படகில், 3,500 பக்தர்கள் கச்சத்தீவு சென்று மறுநாள், திருவிழா முடிந்ததும் ராமேஸ்வரம் திரும்புவர்.

* மத்திய பிரதேச மாநிலம் மொரீனா என்ற பகுதியில், இந்திய ராணுவத்தின் சுகோய்-30 மற்றும் Mirage2000 ரக போர் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது!

விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மீட்பு பணி தொடங்கப்பட்டுள்ளது

* ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனித்தே களம் காண உள்ளோம்” -அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மாற்றத்தை ஏற்படுத்தும்; அதிமுக-வில் அனைவரும் ஒருங்கிணைந்தே
செயல்படுகிறோம் ஆனால் இடைத்தேர்தலில் அதிமுக தனித்தே களம் காண்கிறது.

இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து பாஜக கருத்து தெரிவிக்காத நிலையில், அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவிப்பு.

* பாமக நிறுவனர் இராமதாசு அய்யா கடும் கண்டனம்:

'மத்திய அரசின் ‘http://mygov.in' இணையதளத்தில் தமிழ்நாட்டின் பெயர் 'TamilNaidu' என்று குறிப்பிடப்பட்டுள்ளது கடுமையாக கண்டிக்கத்தக்கது; இந்த பிழை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.

‘தமிழ்நாடு’ பெயர் அண்மைக்காலமாக தேவையின்றி சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு வரும் சூழலில், மத்திய அரசு இணையதளத்தில் தமிழ்நாட்டின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டிருப்பது பல்வேறு வகையான ஐயங்களை ஏற்படுத்துகிறது.

* அதிமுக பொதுக்குழு விவகாரம் - 30ம் தேதி விசாரணை

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய கோரி - ஈபிஎஸ் தரப்பு மனு

முறையீடு பட்டியலில் இடம்பெற்றதால் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு  - உச்சநீதிமன்றம் அனுமதி

* தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்த ஓபிஎஸ்.

வைத்திலிங்கம் தலைமையில் 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அறிவிப்பு.

பாஜக போட்டியிடாவிட்டால் ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர் நிச்சயம் களமிறக்கப்படுவார் - ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி பிரபாகர்.

* அறிமுகமாகும் முதலமைச்சரின் புதிய திட்டம்.

“கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தை பிப்ரவரி 1ம் தேதி வேலூர் மண்டலத்தில் தொடங்கி வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதற்கட்டமாக பிப்ரவரி 1, 2ல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

“கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தை பிப்ரவரி 1ம் தேதி வேலூர் மண்டலத்தில் தொடங்கி வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதற்கட்டமாக பிப்ரவரி 1, 2ல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

“குடிநீர், சுகாதாரம், கல்வி, மருத்துவம், குழந்தைகள் ஊட்டச்சத்து, இளைஞர் திறன் மேம்பாடு பற்றி கள ஆய்வு மேற்கொண்டு, கிடைக்கும் தகவல் அடிப்படையில், " திட்ட செயல்பாடுகள் குறித்து பிப்ரவரி 2ல் ஆட்சியர்களுடன் விவாதிக்கவுள்ளார்.

TELEGRAM: t.me/agnipuratchi1

* 🏆 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா முதன்முறையாக சாம்பியன்.

* குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள 'முகல் கார்டன்' - 'AMRIT UDYAN' என பெயர் மாற்றம்.

வரும் 31ம் தேதி முதல் மார்ச் மாதம் 26ம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதி.

* கையை வெட்டுவேன்! அதுதான் நியாயம்; டி.ஆர்.பாலு

மதுரையில் தி.க. சார்பில் திறந்தவெளி மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய திமுக எம்பியும் பொருளாளருமான டி.ஆர்.பாலு, “ராமர் பாலம் ஒரு கட்டுக்கதை, அதை நினைவுச்சின்னமாக மாற்ற விடமாட்டோம். சேது சமுத்திரத் திட்டத்தை நிறுத்தியவர்கள் பாவிகள். அய்யா வீரமணி மீது கைவைத்தால் அவர்கள் கையை வெட்டுவேன். அதுவே என் நியாயம், தர்மம்” என ஆக்ரோஷமாகப் பேசினார்.

வீடியோ: https://youtu.be/j9dQZIJdaOk

* மெல்போர்ன் மைதானம் குறித்து உணர்ச்சிவசப்பட்ட சானியா மிர்சா

ஆஸ்திரேலியாவில் நடக்கும் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் சானியா மிர்சா - போபண்ணா ஜோடி இரட்டையர் பிரிவு இறுதி போட்டியில் தோல்வியை தழுவி 2ம் இடத்தை பிடித்தனர். சானியா மிர்சா, "எனது டென்னிஸ் பயணத்தை மெல்போர்னில் தொடங்கினேன். இந்த மைதானம் எனது வாழ்க்கையில் சிறப்பு வாய்ந்தது. எனது கடைசி ஆட்டத்தை முடித்து கொள்ள இதை விட சிறந்த இடம் வேறு இல்லை" என தெரிவித்தார்.

* நாளை முதல் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஜன.31ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து பிப். 1ல் இலங்கை கடற்பகுதிகளை சென்றடைய கூடும்.

நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

* நேபாள துணை பிரதமர் பதவியிலிருந்து அதிரடி நீக்கம்

நேபாளத்தின் துணை பிரதமர் ராபி லாமிச்சனே மீது போலி குடியுரிமை சான்று, பாஸ்போர்ட் தயாரித்தது போன்ற வழக்குகள் தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதிகள், "அவர் அமெரிக்க குடியுரிமையை மறைத்து போலி ஆவணங்கள் மூலம் குடியுரிமை பெற்றுள்ளார். அவரது நேபாள குடியுரிமை செல்லாது. அவர் குற்றவாளி" என அறிவித்தது. மேலும் அவர் துணை பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பதவிகளிலிருந்து நீக்கப்பட்டார்.

* ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் காஷ்மீரில் ஓர் புத்துணர்வை உருவாக்கியுள்ளது;
- காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி ட்வீட்

* 2019க்கு பிறகு முதல் முறையாக அதிக எண்ணிக்கையிலான மக்கள், வீட்டை விட்டு வெளியே வந்துள்ளனர். அவரோடு நடந்து சென்றதில் மகிழ்ச்சி
- மெகபூபா முஃப்தி

* மத்திய அரசு கடந்த எட்டாண்டுகளில் அனைத்து மக்களுக்கான வாழ்வாதார திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றி வருகிறது"
- பிரதமர் நரேந்திர மோடி

* நடிகர் ரஜினியின் ஒப்புதல் இல்லாமல் அவரது பெயர், புகைப்படம், குரல் பயன்படுத்த தடை

"பயன்படுத்தினால் உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்" நடிகர் ரஜினி சார்பில் அவரது வழக்கறிஞர் பொது அறிவிப்பு

* முதுகலை பட்டப் படிப்புகளில் சேர, பிப்ரவரி 1ம் தேதி முதல் விண்ணப்பம்

எம்.பி.ஏ., எம்.சி.ஏ. உள்ளிட்ட படிப்புகளுக்கு பிப்.1 - 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
- அண்ணா பல்கலை. அறிவிப்பு

* கடந்த 26 நாட்களில் 55 பேருக்குத் தூக்கு தண்டனை.... உலகை உலுக்கும் ஈரானின் மரண தண்டனைகள்

ஈரான், இந்த ஆண்டில் துவங்கி கடந்த 26ம் தேதிக்குள் மட்டும் 55 பேர் ஈரானில் தூக்கிலிடப்பட்டுள்ளதாக நார்வேயை தளமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் அமைப்பு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

ஹிஜாப் போராட்டக்காரர்களுக்கு எதிரான ஈரான் அரசின் மரண தண்டனைகள் உலகையே உலுக்கி வருகின்றன. இந்நிலையில், போராட்டங்களில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று இளைஞர்கள் 18 வயதே நிரம்பியவர்கள் என்றும், காவலில் "கொடூரமான சித்திரவதைக்கு" உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டங்கள் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் 4 பேரும், அதே நேரத்தில் பெரும்பாலான குற்றவாளிகள் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாகவும் தூக்கிலிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 107 பேர் மரண தண்டனை விதிக்கப்படும் அபாயங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

TELEGRAM: t.me/agnipuratchi1

* அடக்கி வாசிக்கும் அண்ணாமலை: இடைத்தேர்தல் மூலம் வரும் இடி - என்ன காரணம்?

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை அறிவித்து பிரச்சாரத்தை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளது. அதிமுக கூட்டணியில் அதிமுக போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில் இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் தனித்தனியாக வேட்பாளரை இறக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இடைத்தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில் பாஜக மட்டும் அடக்கி வாசிக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. தமிழ்நாட்டில் நாங்கள் தான் எதிர்கட்சி என்று கூறிவந்த அண்ணாமலை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே தனது ஆக்ரோஷத்தை குறைத்துக் கொண்டார். அதிமுக தான் பெரிய கட்சி, அவர்களிடத்தில் தான் ஏற்கெனவே வெற்றி பெற்றவர்கள் இருக்கிறார்கள் என பேசி வருகிறார்.

மத்தியில் ஆளும் கட்சி, பல மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்த கட்சிக்கு ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளரை அறிவிக்க கூட ஆள் இல்லையா என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பாஜக போட்டியிட்டால் ஆதரவளிக்க தயார் என வாசல் ஏறிப் போய் ஓபிஎஸ்ஸும் சொல்லிவிட்டு வந்த பின்னரும் பாஜக யோசிக்கிறது. தேர்தல் வரும் வரை மட்டுமே அண்ணாமலை குரல் கொடுப்பாரா, என்ன நடக்கிறது கமலாலய வட்டாரத்தில் என்று விசாரித்தோம்

தேசிய ஜனநாயக கூட்டணியில் மத்தியில் பாஜக தலைமை வகிக்கிறது என்றாலும், தமிழ்நாட்டில் அதிமுக பெரிய கட்சி. அதனால் அவர்களது முடிவுக்கு மதிப்பு கொடுத்து காத்திருக்கிறோம். மேலும் மக்களவைத் தேர்தலை குறிவைத்து முக்கிய நகர்வுகளை மேற்கொண்டு வருகிறோம்’ என்று கூறுகிறார்கள். ஆனால் அரசியல் விமர்சகர்கள் மத்தியிலோ வேறு மாதிரியான பேச்சு நிலவுகிறது.

ஈரோடு கிழக்கில் பாஜகவுக்கு பெரியளவில் வாக்கு வங்கி இல்லை. 2011 தேர்தலில் அக்கட்சி அங்கு 3,244 வாக்குகள் பெற்றது. 2016 தேர்தலில் 5,549, வாக்குகள் பெற்றது. அந்த தொகுதியில் அக்கட்சி பெற்ற அதிக வாக்குகளே அது தான் எனும் போது தனித்துப் போட்டி என்ற விஷப் பரீட்சைக்கு எப்படி முன்வரும்? மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு காலமே உள்ளது. அதற்கு முன்பாக பாஜக இந்த தேர்தலில் போட்டியிட்டு சொற்ப வாக்குகளை மட்டும் பெற்றால் அது மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும்.

TELEGRAM: t.me/agnipuratchi1

பாஜக தமிழ்நாட்டில் வளர்கிறது என்று கூறிவரும் நிலையில் இடைத்தேர்தல் முடிவு இடியாய் இறங்கி விடக்கூடாது என்பதற்காகவே அடக்கி வாசிப்பதாக சொல்கிறார்கள். இதனால் தான் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, “சிலர் ரொம்ப அடக்கமாகப் பேசுகின்றனர். அடக்கமே தெரியாதவர்கள் ரொம்ப அடக்கமாக பேசுகிறார்கள். அதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை. இந்த தேர்தல் அவர்களுக்கு ஒரு நல்ல படிப்பினையைத் தந்திருக்கிறது என்று கருதுகிறேன்" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages