அக்னிப்புரட்சி இன்றைய (29.01.2023) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (29.01.2023) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (29.01.2023) முக்கிய செய்திகள்.

* இந்த ஆண்டு அதிக விசா வழங்க அமெரிக்கா முடிவு.

2023ல் அதிக எண்ணிக்கையில் இந்தியர்களுக்கான விசாவுக்கு ஒப்புதல் அளிக்க அமெரிக்க தூதரகம் முடிவு.

இதற்காக கூடுதல் அதிகாரிகளை நியமித்தும், சனிக்கிழமைகளில் தூதரக அலுவலகங்களைத் திறந்தும் விசா ஒப்புதல்களை துரிதப்படுத்த திட்டம்.

இதனால் விண்ணப்பிப்பவர்களின் காத்திருப்புக் காலம் குறையும்- மும்பையில் உள்ள அமெரிக்க தூதரகத் தலைவர் ஜான் பல்லார்ட் தகவல்.

* தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.

மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை வலுப்பெறக்கூடும்.

இதனால் இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்.

* சென்னையில்  மருத்துவ அறிவியல் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை வளாகத்தில் காது, மூக்கு, தொண்டை, தலை மற்றும் கழுத்து மருத்துவ அறிவியல் மாநாடு தமிழில் முதன்முறையாக நடைபெற உள்ளது.

தமிழை, தமிழே என்று சொல்லும் போது கிடைக்கும் சுகம் எங்கும் கிடைப்பதில்லை; முத்தமிழ் பேரவையில் நடைபெறும் இந்த மாநாட்டை  பார்ப்பதற்கு கலைஞர் இருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்.- முதல்வர் ஸ்டாலின்.

* பழனி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு இன்று முதல் பத்து நாட்களுக்கு தைப்பூச திருவிழா தொடக்கம்

வரும் பிப்ரவரி 3ம் தேதி திருகல்யாண வைபவம், பிப்ரவரி 4ம் தேதி தைப்பூச‌த் தேரோட்டம்.

* ஈரானில் நிலநடுக்கம்!

ஈரான்: கோய் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு: 7 பேர் உயிரிழப்பு; 440 பேர் காயம் என தகவல்.

* அனைத்து சமூகத்தினரும் முன்னேற்றமடைய வேண்டும்”- பிரதமர் நரேந்திர மோடி

அனைத்து சமூகத்தினரும் அதிகாரம் பெற்று, முன்னேற்றமடைய வேண்டும். இதற்காக மத்திய அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஸ்ரீ தேவ்நாராயண் அவதரித்த 1111-ம் ஆண்டு விழா மலசேரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் நடைபெற்றது. குர்ஜாத் சமூகத்தை சேர்ந்த இவரை, ராஜஸ்தான், ம.பி.யின் சில பகுதிகள், குஜராத் போன்ற மாநிலங்களில் கடவுளாக வழிபடுகின்றனர். அவரது ஜெயந்தியை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலம் மலசேரி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சமூக அதிகாரம் என்பது இந்தியாவின் பயணத்தில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. அந்த வகையில் நாட்டில் உள்ள அனைத்து சமூகத்தினருக்கும், சமூக அதிகாரம் வழங்குவதற்காக பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு சமூக அதிகாரம் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

TELEGRAM: t.me/agnipuratchi1

சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட, நலிவடைந்த ஒவ்வொரு சமூகத்துக்கும் அதிகாரம் வழங்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதையே தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம். இந்தியா என்பது மக்கள் கூட்டம் அதிகம் உள்ள சாதாரண நாடு அல்ல. நமது நாகரிகம், கலாச்சாரம், மத நல்லிணக்கம், திறமை இவை அனைத்தும் உள்ளடங்கியது தான் இந்தியா. நமது பாரம்பரியத்தை நினைத்து நாம் பெருமைப்படலாம். அடிமைத்தனமான மனநிலையில் இருந்து நாம் வெளிவர வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கான நமது கடமையை நினைவுகூர வேண்டும் என பிரதமர் பேசினார்.

* தவணை முறை அடிப்படையில் சொத்து வரி செலுத்தலாம் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி மூலம் வரும் வருவாய் மிகவும் முக்கியமானது. இந்த வரி மூலம் கிடைக்கும் வருவாயில் சென்னை நகருக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள், திடக்கழிவுகளை அகற்றுதல், தெரு விளக்குகள், பூங்காக்கள், சாலைகளை பராமரித்தல், பொது சுகாதாரம், நோய் தடுப்பு போன்ற அத்தியாவசியமான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

முந்தைய சென்னை மாநகராட்சி பகுதிகளில் 24 ஆண்டுகளுக்கு பிறகும், சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட உள்ளாட்சி பகுதிகளில் 14 ஆண்டுகளுக்கு பிறகும் சொத்து வரி பொது சீராய்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 2022-23ம் நிதியாண்டில் சென்னையில் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் சொத்து வரி செலுத்தி உள்ளனர். அதே நேரத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் சொத்து வரி செலுத்தாமல் உள்ளனர்.இந்த நிதியாண்டு முடிவதற்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் சொத்து வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

TELEGRAM: t.me/agnipuratchi1

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-சொத்து வரியை அதன் உரிமையாளர்கள் ஒவ்வொரு அரையாண்டுகளின் தொடக்கத்தில் முதல் 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்துபவர்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு சொத்துவரி வசூல் ரூ.1500 கோடியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.சொத்து வரி உயர்த்தப்பட்டதால் வட்டி இல்லாமல் 2-ம் அரையாண்டுக்கான சொத்து வரி செலுத்த ஜனவரி 15-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.

இதுவரை 7 லட்சம் சொத்து உரிமையாளர்களிடம் இருந்து ரூ.1213 கோடி வசூலிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 5 லட்சம் பேரிடம் இருந்து ரூ.287 கோடி வசூலிக்க வேண்டியுள்ளது. இந்த நிதியாண்டு வருகிற மார்ச் 31-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் சொத்து வரி செலுத்தாதவர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை உடனடியாக செலுத்த வேண்டும்.

சொத்துவரி செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு கட்டிடம் சீல் வைக்கப்படும். அதேபோல் வீட்டு கதவில் நோட்டீஸ் ஒட்டுதல், அருகில் பேனர் வைத்தல், பொருட்கள் ஜப்தி உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

மேலும் அதிக தொகை பாக்கி வைத்திருப்பவர்கள் பட்டியல் மாநகராட்சி இணையதளத்திலும் வெளியிடப்படும். ஏற்கனவே சொத்து வரி செலுத்தாத 499 நிறுவனங்கள் மற்றும் தனிநபர் குறித்த பட்டியல் மாநகராட்சி இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி, சொத்து உரிமையாளர்கள் எளிதில் சொத்து வரியினை செலுத்தும் வகையில் பல்வேறு வழிமுறைகளை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி சொத்து வரியினை தங்களது இல்லம் தேடி வரும் தபால் துறை ஊழியர்கள், வரி வசூலிப்பாளர்களிடம் காசோலை, வரைவோலை, கடன் மற்றும் பற்று அட்டைகள் மூலமாக செலுத்தலாம்.மேலும் இ-சேவை மையங்கள், சென்னை மாநகராட்சி இணையதளம், பே.டி.எம்., நம்ம சென்னை ஆகிய செல்போன் செயலிகள் மூலம் பரிமாற்ற கட்டணம் இல்லாமல் செலுத்தலாம்.

'பாரத் பில் பேமண்ட் சிஸ்டம்' மூலமாகவும் சொத்து வரியை எளிதாக செலுத்த முடியும்.மேலும் தவணை முறை அடிப்படையிலும் சொத்து வரியை செலுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. தவணை முறை திட்டத்தை எச்.டி.எப்.சி. வங்கியுடன் இணைந்து சென்னை மாநகராட்சி செயல்படுத்தியுள்ளது.

இதற்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 2 சதவீதம் முதல் 8.6 சதவீதம் வரைக்கும் இருக்கும். கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் தவணை முறை திட்டத்துக்கு தகுதியானவர்கள் ஆவர்.குறைந்த வட்டி விகிதத்தில் தவணை முறை திட்டத்தை செயல்படுத்த வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ரூ.6 லட்சம் அளவில் கடன் வைத்திருப்பவர்கள் தவணை முறையை பயன்படுத்தி வரி செலுத்த முடியும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

* முதுநிலை ஆராய்ச்சியாளர் உதவித் தொகைபெற யு.ஜி.சி அனுமதி பெற தேவையில்லை என அறிவிப்பு

யு.ஜி.சி செயலர் ரஜ்னிஷ் ஜெயின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

அறிவியல், மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி மேற்கொள்வோருக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. அந்த வகையில் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவோர், முதுநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கான நிபந்தனைகளில் தளர்வு அளிக்கப்படுகிறது.

அதன்படி, தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித் தொகை பெறுவோர், தனது துறை அல்லது பல்கலைக்கழகம் வாயிலாக முதுநிலை ஆராய்ச்சியாளர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிப்போரின் ஆராய்ச்சியை மதிப்பீடு செய்யகண்காணிப்பாளர், துறைத் தலைவர் மற்றும் வெளியில் இருந்து பாட நிபுணர் ஒருவர் என மூவர் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும்.

அவர்கள் ஆராய்ச்சியை மதிப்பிட்டு, அது தொடர்பான பரிந்துரைகளை யுஜிசிக்கு அனுப்பி வைத்தால் போதுமானது. இதற்கு யுஜிசி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. இதையடுத்து விண்ணப்பதாரர் முதுநிலை உதவித் தொகை பெற தகுதியுடையவராவார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

TELEGRAM: t.me/agnipuratchi1

* உலகையே வியக்க வைக்கும் உத்திரமேரூர் கல்வெட்டு: பிரதமர் மோடி.

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று 'மன் கி பாத் ' நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு ரேடியோ மூலம் உரையாற்றி வருகிறார்.

இந்தாண்டின் முதல் 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பழங்குடியினர் மற்றும் அந்த சமூகத்துடன் தொடர்புடையவர்களுக்கு குறிப்பிடத்தக்க அளவு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு உள்ளது.

நகர வாழ்க்கையுடன் ஒப்பிடுகையில் பழங்குடியின வாழ்க்கை வித்தியாசமானது. அதற்கு என சவால்கள் உள்ளன.

இதனையும் தாண்டி, தங்களது பாரம்பரியத்தை பாதுகாக்க பழங்குடியினர் ஆர்வமாக உள்ளனர்.

இந்தியா முன்மொழிந்ததை தொடர்ந்து, சர்வதேச யோகா தினம் மற்றும் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டை கொண்டாட ஐக்கிய நாடுகள் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக நடக்கும் இரண்டு பிரசாரங்களிலும் மக்கள் பங்கேற்பதால், புரட்சி வரும்.

யோகாவையும், உடற்தகுதியையும் தங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மக்கள் ஏற்றுள்ளதால், இந்த பிரசாரத்தில் அதிகளவில் பங்கேற்றுள்ளனர்.

அதேபோல், சிறுதானியங்களையும் அதிக மக்கள் எடுத்து கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் ஒரு சிறிய கிராமம், அனைவராலும் நன்கு அறியப்பட்ட கிராமம் உத்திரமேரூர்.

இங்கு ஏறக்குறைய நூற்றுகணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு உலகையே வியக்க வைக்கிறது.

இந்தக் கல்வெட்டு ஒரு மினி- அரசியலமைப்பு போன்றது. கிராம சபையில் உள்ளதையும், கிராமசபை செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் மற்றும் அதன் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் செயல்முறை எப்படி இருக்க வேண்டும் என்பதையும் விரிவாக விளக்குகிறது- என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

* ஆஸ்திரேலிய ஓபன் இரட்டையர் மகளிர் சாம்பியன் பட்டத்தை செக் குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா, கேத்ரினா ஜோடி வென்று அசத்தல்

இறுதிப் போட்டியில் ஜப்பானின் ஷுகோ அயோமா, எனா ஷிபஹரா ஜோடியை 2-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அபாரம்

🔴 ஒடிசாவில் பரபரப்பு

ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மீது துப்பாக்கிச்சூடு

உயிருக்கு ஆபத்தான நிலை...

வீடியோ: https://twitter.com/IndiaNewsDigest/status/1619604422933487616?t=0qc8QFoEFbM2Iku2PsGU2Q&s=19

* துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்றுவரும் ஒடிசா சுகாதார துறை அமைச்சர் நாபா தாஸ் மேல் சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் புவனேஷ்வருக்கு கொண்டுசெல்லப்பட்டார்

* ரூ.10 நாணயங்களை வாங்க மறுக்கிறார்களா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரிசர்வ் வங்கி!

மத்திய ரிசர்வ் வங்கி கடந்த 2009ம் ஆண்டு 10 ரூபாய் நாணயங்களை அறிமுகம் செய்தது. ஆனாலும் 10 ரூபாய் நாணயத்தின் நம்பகத்தன்மை குறித்து அவ்வப்போது வதந்திகள்  பரவின. இதனால் 10 ரூபாய் நாணயங்கள் வைத்திருப்பவர்களின் சிரமத்தை சொல்லில் விளக்கவே முடியாது.

கடைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், பஸ்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவற்றை வாங்க மறுப்பதாக புகார் எழுந்தன. ஆக, 10 ரூபாய் கையில் இருந்தும்  அதை செலவழிக்க முடியாது. தமிழ்நாட்டில் சென்னையை தவிர எந்த ஊரிலும் அதை வாங்க மாட்டார்கள்.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 10 ரூபாய் நாணயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது: 10 ரூபாய் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு 14 ஆண்டுகள் ஆகியும் அதன் நம்பகத் தன்மை குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களும், வதந்தியும் பரப்பப்படுகிறது.

இதனால் பொதுமக்கள், வியாபாரிகளிடம் இருந்து பல்வேறு புகார்கள் வந்தன. குறிப்பாக பஸ் கண்டக்டர்கள், கடைக்காரர்கள், சில வங்கிகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக  நாணய மேலாண்மை குழு கூடி விவாதித்தது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன்படி அரசு போக்குவரத்து கழக ஊழியர்களிடம் 10 ரூபாய் நாணயங்களை வாங்குமாறு மாநில அரசு அறிவுறுத்த வேண்டும். பஸ்களில் இதுதொடர்பாக அறிவிப்பு போஸ்டர் ஒட்ட வேண்டும். மேலும் வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து 10 ரூபாய் நாணயங்களை வாங்க வேண்டும். வங்கிகளிலும் இது குறித்த அறிவிப்பை ஒட்ட வேண்டும்.

இதுதொடர்பாக அனைத்து வங்கிகளும் இணைந்து விளம்பரங்கள் வெளியிட வேண்டும். இதை மத்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.

இதன் மூலம் 14 ஆண்டுகளாக தொடரும் 10 ரூபாய் நாணய வதந்திக்கு மத்திய ரிசர்வ் வங்கி முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்று கூறுகின்றனர்.

TELEGRAM: t.me/agnipuratchi1

* பேருந்து கவிழ்ந்து விபத்து... 40 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் அருகே பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

குவெட்டாவில் இருந்து கராச்சி நோக்கி சென்ற பேருந்து பாலத்தில் இருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் பேருந்தில் பயணம் செய்த 40 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

* முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது

நாடாளுமன்றத்தில் குரலெழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது

பிபிசி ஆவணப்பட சர்ச்சை உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை விவாதிக்க திமுக எம்.பி.க்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

தமிழ்நாடு அரசால், மத்திய அரசுக்கு எழுதப்பட்டுள்ள கடிதங்களின் நிலை குறித்தும் கேள்வியெழுப்ப எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தல்

நீட் மசோதா, மதுரை எய்ம்ஸ், சேது சமுத்திர திட்டம், என்.எல்.சி. வேலைவாய்ப்பு உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்க அறிவுறுத்தல்

இந்திய பங்குச் சந்தையில் அதானி குழுமத்தால் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பாக வெளிவந்துள்ள அறிக்கை குறித்தும் கேள்வியெழுப்ப அறிவுறுத்தல்

* டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் ரூ.70ஆயிரம் சம்பளம்..! 

தேசிய கால்நடை தொற்றுநோயியல் மற்றும் நோய் தகவல் நிறுவனத்தில் காலியாக உள்ள YP, SRF, Assistant Manager, Project Associate விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிறுவனத்தின் பெயர் - தேசிய கால்நடை தொற்றுநோயியல் மற்றும் நோய் தகவல் நிறுவனம்

பதவி - YP, SRF, Assistant Manager, Project Associate

காலியிடங்கள் - 12

கல்வித்தகுதி - 12th, Diploma, MA, Any Degree, Master Degree, Graduate

சம்பளம் - ரூ.15,000 முதல் ரூ.70,000 வரை
வயது வரம்பு - 18 முதல் 50
பணியிடம் - பெங்களூரு
விண்ணப்பிக்கும் முறை - ஆப்லைன்
விண்ணப்பக்கட்டணம் - இல்லை
தேர்வு முறை - நேர்காணல்

முகவரி - ICAR-NIVEDI, Ramagondanahalli, Yelahanka, Bengaluru- 560064

இணையதள முகவரி - https://nivedi.res.in/
கடைசி தேதி - பிப்.13,2023

TELEGRAM: t.me/agnipuratchi1

* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் 10வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார் ஜோகோவிச்!

இறுதிப் போட்டியில் கிரீக் நாட்டை சேர்ந்த சிட்சிபாஸை 6-3, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்

22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று ரஃபேல் நடாலை சமன் செய்துள்ளார்.

* ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், இத்தொகுதியில் நாதக வேட்பாளர் 11,629 வாக்குகளை பெற்றிருந்தார்

* ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிசோர் தாஸ் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

காவல் ஆய்வாளரால் சுடப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் உயிரிழந்ததாக அப்பல்லோ மருத்துவமனை தகவல்.

* U19 மகளிர் உலகக்கோப்பை - இந்தியா சாம்பியன்

இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் U19 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன்

அறிமுக தொடரிலேயே இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அபாரம்

69 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 14 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 69 ரன்கள் எடுத்து வெற்றி

19 வயதிற்குட்பட்ட பெண்கள் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.5 கோடி பரிசு - BCCI செயலாளர் ஜெய்ஷா அறிவிப்பு.

🔴 கொட்டும் மழையில் முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி!

மனதை கவரும் ஒளி-ஒலி காட்சிகளுடன் முப்படை வீரர்கள் பாசறை திரும்பின

வீடியோ: https://youtu.be/zw48Zd-l4tU

அணிவகுப்பு; இசை நிகழ்ச்சி; 3,500 ட்ரோன்கள் பங்கேற்ற கண்கவர் நிகழ்ச்சி

* ஹாக்கி உலகக் கோப்பையை வென்றது ஜெர்மனி!.

உலகக் கோப்பை ஹாக்கி தொடர் இறுதிப் போட்டியின் ஆட்ட நேர முடிவில் 3-3 என சமனில் முடிந்ததால், பெனால்டி ஷூட் அவுட்டில் நடப்பு சாம்பியனான பெல்ஜியத்தை 5-4 கோல் கணக்கில் வீழ்த்தி 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது ஜெர்மனி.

* நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டி: இந்திய அணி வெற்றி.

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி போராடி வெற்றி.

100 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 19.5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்று 1-1 என்ற சம நிலையில் உள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages