அக்னிப்புரட்சி இன்றைய (30.01.2023) முக்கிய செய்திகள்.
* அமைச்சர் கே.என்.நேரு பிளான் - வீடியோ வெளியிட்ட அண்ணாமலை!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக பணப்பட்டுவாடா: வீடியோ வெளியிட்டு அண்ணாமலை புகார்!
வீடியோ: https://youtu.be/W3psKD9o9B4
அமைச்சர் கே.என்.நேரு போட்ட திட்டம் குறித்த வீடியோவை அண்ணாமலை வெளியிட்டார்!.
* பிரதான எதிர்க்கட்சியுடன் கூட்டணி சேர்ந்து திமுகவிற்கு பாடம் கற்று தர வேண்டும் சேலத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி
"மக்கள் நினைக்கும் மாற்றம் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் உறுதியாக ஏற்படும்"
நாளுக்கு நாள் திமுகவிற்கு எதிராக ஓட்டு போட மக்கள் தயாராக உள்ளார்கள்"
"மக்களை ஏமாற்றிய அரசாக திமுக அரசு உள்ளதால் மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். இதனை வருகின்ற தேர்தலில் மக்கள் எதிரொலிப்பார்கள் - ஜி.கே.வாசன்
* 'ஜி-20' கருத்தரங்கம் சென்னையில் நாளை துவக்கம்!..
சென்னை: ஜி - 20' அமைப்பின் கல்வி சார்ந்த மூன்று நாள் கருத்தரங்கம், சென்னையில் நாளை(ஜன.,31) துவங்குகிறது. இதில், கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள, 20 நாடுகள் மட்டுமின்றி, ஒன்பது நட்புறவு நாடுகளில் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
உலக பொருளாதாரத்தில் உள்ள முதன்மை சிக்கல்களைத் தீர்க்க, வளர்ச்சி அடைந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரங்களை ஒன்றிணைப்பதற்காக, 'ஜி -- 20' அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, கனடா, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட, 20 நாடுகள் உள்ளன.
தமிழகத்தில் நாளை முதல், பிப்., 2 வரை, மூன்று நாட்களுக்கு கல்வி துறை சார்ந்த கருத்தரங்கம், ஜி - 20 அமைப்பின் கல்வி பிரிவு தலைவர் சைதன்யா பிரசாத், மத்திய கல்வித் துறை இணை செயலர் நீட்டா பிரசாத் தலைமையில் நடக்கிறது.
கல்வித் துறை சார்பில், சென்னை ஐ.ஐ.டி.,யில், 31ம் தேதி; நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில், பிப்., 1, 2ம் தேதிகளிலும்கருத்தரங்கம் நடக்கின்றன.
இந்த கூட்டத்தில் பங்கேற்க, 'ஜி -- 20' அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகள், 20 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், ஒன்பது நட்புறவு நாடுகளின் பிரதிநிதிகளும் சென்னை வரத் துவங்கி உள்ளனர்.
அவர்களை வரவேற்கும் விதமாக, சென்னை விமான நிலையம் உள்ளே ரங்கோலி கோலம் போடப்பட்டு, 'ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்' என்ற வாசகங்கள்அடங்கிய பேனரால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ஜி -- 20 கருத்தரங்கிற்கு வரும் பிரதிநிதிகள் விரைவாகவும், பாதுகாப்பாகவும் வெளியே வர, தனி கவுன்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
* இங்கிலாந்திற்கு எதிரான ODI போட்டி: 342 ரன்கள் அடித்து வென்ற தென்னாப்பிரிக்கா
இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான 2வது ODI போட்டி புளோம்பாண்டீன் நகரில் நேற்று (ஜனவரி 29) நடைபெற்றது. முதலில் ஆடிய இங்கிலாந்து 342 ரன்கள் எடுத்தது. அடுத்த களமிறங்கிய தென்னாப்ரிக்க அணியின் கேப்டன் பௌமா 109 ரன்கள் எடுத்து அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய டேவிட் மில்லரும், மார்கோ ஜேன்சனும் 342 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து அணியை வெற்றிபெற வைத்தனர்.
* ஆஸ்கர் இறுதிப்பட்டியலில் முதுமலை குட்டி யானைகள் நடித்த ஆவணப்படம்
2022ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது தேர்வின் இறுதிப்பட்டியலில் முதுமலை புலிகள் காப்பகத்தில் படமாக்கப்பட்ட, ’தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ (The Elephant whisperers) ஆவண திரைப்படம் இடம் பிடித்துள்ளது. தாயைப் பிரிந்து தவிக்கும் முதுமலை குட்டியானைகளை பராமரிக்கும் தம்பதியின் யதார்த்த வாழ்வே இந்த ஆவணப்படம். கார்த்திகி கொன்சால்வ்ஸ் என்ற பெண் இயக்குநர் 2 ஆண்டுகளில் இப்படத்தை எடுத்துள்ளார்.
* குடியரசுத் தலைவர் உரையுடன் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (ஜனவரி 31) தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் முர்மு, தான் பதவியேற்ற பிறகு முதல் முறையாக, இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றுகிறார். நாளை மறுதினம் காலை 11 மணிக்கு மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
* ஒடிசா அமைச்சரை சுட்ட காவலர் மனநோயாளியா?
ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நிபா கிஷோர் தாஸ், காவல்துறையை சேர்ந்த கோபால்தாஸ் என்பவர் சுட்டதில் உயிரிழந்தார். இந்நிலையில் கோபால்தாஸின் மனைவி ஜெயந்தி தாஸ், "அவர் ஒரு மனநோயாளி. கடந்த 8 ஆண்டுகளாக இதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார். மேலும் அவர் வீட்டுக்கு வந்தே 6 மாதங்களுக்கு மேலாகிறது. என்ன நடந்தது என்று தெரியவில்லை" என்றார்.
* அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி வைத்த வேண்டுகோள்
டில்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர், "உங்கள் அமைச்சகத்தின் நலத்திட்டங்களை உங்களது சமூக வலைதளங்களின் வாயிலாக மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் பின் தங்கிய மக்களுக்கு சென்று சேருகிறதா என்பதையும் அமைச்சர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்" என்றார்.
* சாலை ஆய்வாளர் பணி: விண்ணப்பிக்க கடைசி தேதி?
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையில் 761 சாலை ஆய்வாளர் பதவிக்கான காலியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. மாத சம்பளம் ரூ.19,500-ரூ.71,900. ஐடிஐ, சிவில் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். www.tnpscexams.in/ www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பிப்ரவரி 11க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
* அவதூறுகாரர்களுக்கு பதிலளிக்காதீர்கள்'
அவதூறு பரப்புவதையே முழுநேர பணியாக செய்து வரும் சிலருக்கு பதில் தந்து நேரத்தை வீணடிக்காதீர்.
ஆக்கபூர்வமாக விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்; விமர்சனங்கள் பாஜக வளர்ச்சிக்கான உரம்.
என் மீதான விமர்சனங்களுக்கு பாஜகவினர் சமூகவலைதளங்களில் எதிர்வினையாற்றும்போது கவனம் தேவை - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை
* பொங்கல் தொகை - ரூ.43 கோடி திரும்பியது"
தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசுத்தொகையாக வழங்கப்பட்ட ரூ.1,000
4 லட்சத்து 40 ஆயிரம் பேர் பரிசுத்தொகையை வாங்கவில்லை - தமிழ்நாடு உணவுத்துறை.
அரசு கருவூலத்திற்கு ரூ,43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் பணம் திரும்பியது.
* முடிவுக்கு வந்த ‘இந்திய ஒற்றுமை பயணம்'
செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் 'இந்திய ஒற்றுமை பயணம்', காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இன்று நிறைவடைந்தது.
116 நாட்களில், 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களை கடந்து, 4080 கி.மீ. தூரம் நடந்துள்ளார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.
இந்த பயணத்தில் 12 பொதுக்கூட்டங்கள், 13 செய்தியாளர் சந்திப்புகள் நடத்தியுள்ளார், 375க்கும் மேற்பட்டோருடன் கலந்துரையாடியுள்ளார் ராகுல்.
* கல்வராயன் மலைப்பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ்
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ் அவர்களின் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் சாராய ஊரல்களை அழிப்பது, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த தனிப்படை அமைத்து மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 29.01.2023-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடி தலைமையில் தனிப்படை காவலர்கள் அதிகாலை முதல் கல்வராயன்மலை பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது குரும்பாலூர் கிழக்கு மற்றும் மேற்கு ஓடையில் மறைத்து வைத்திருந்த கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 500 லிட்டர் வீதம் பிடிக்கக்கூடிய 02 பிளாஸ்டிக் பேரல்களில் 1,000 லிட்டர் மற்றும் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய பிளாஸ்டிக் பேரலில் 200 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.தாரனேஸ்வரி தலைமையில் எழுத்தூர் காட்டுப்பகுதியில் மறைத்து வைத்திருந்த கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 21 பிளாஸ்டிக் பேரல்களில் சுமார் 4,200 லிட்டர் என இரண்டு இடங்களிலும் மொத்தமாக 5,200 லிட்டர் சாராய ஊரல் மற்றும் 200 லிட்டர் கள்ளச்சாராயம் கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் இக்குற்ற செயலில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை தனிப்படை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
* பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு - 17 பேர் பலி
பாகிஸ்தான், பெஷாவரில் உள்ள மசூதியில் பயங்கர குண்டு வெடிப்பு
17 பேர் பலி, 80க்கும் மேற்பட்டோர் படுகாயம் என தகவல்
தற்கொலை படை தாக்குதல் என பாகிஸ்தான் ஊடகங்கள் தகவல்
* மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்காதவர்கள் விரைந்து இணைத்திட வேண்டும் - அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழ்நாட்டில் மின் இணைப்புடன், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்சார எண்னுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் நேற்று மாலை வரை 87.44% நிறைவடைந்துள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும், துவங்கப்பட்ட மின் இணைப்புடன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், நேற்று மாலை வரை 2.34 கோடி இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.
இது மொத்தமுள்ள 2.67 கோடி வீடு, குடிசை, கைத்தறி, விசைத்தறி & விவசாய இணைப்புகளில் 87.44% ஆகும். இதுவரை இணைத்திடாதவர்கள் விரைந்து இணைத்திட வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
TELEGRAM: t.me/agnipuratchi1
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும், துவங்கப்பட்ட மின் இணைப்புடன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், நேற்று மாலை வரை 2.34 கோடி இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.
* சேலம் திருமலைகிரி மாரியம்மன் கோவிலில் நுழைந்த பட்டியலின இளைஞரை திட்டிய திமுக நிர்வாகி மாணிக்கம் என்பவர் கைது செய்துள்ளனர்.
பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர் கொடுத்த புகாரின்பேரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டார். முன்னதாக சேலம் தெற்கு திமுக ஒன்றிய செயலாளராக இருந்த மாணிக்கம் கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
* தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.
தமிழ்நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு
நெல்லை ஆட்சியராக கார்த்திகேயன், தென்காசி ஆட்சியராக ரவிச்சந்திரன், கன்னியாகுமரி ஆட்சியராக ஸ்ரீதர் நியமனம் - தமிழ்நாடு அரசு
* முதலமைச்சருக்கு சனி ஞாயிறு விடுமுறை எதுவும் கிடையாது
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை திமுக கூட்டணி பெறும்
உங்களில் ஒருவன் பதில்கள் நிகழ்வில் பல்வேறு கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் பதில்
களப்பணி எனக்கு புதியது அல்ல, களத்தில் இருந்து வந்தவன் நான்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மட்டுமல்ல, எந்த தேர்தலிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
No comments:
Post a Comment