அக்னிப்புரட்சி இன்றைய (31.01.2023) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (31.01.2023) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (31.01.2023) முக்கிய செய்திகள்.

* இன்று கடைசி நாள் - மின்வாரியம் அறிவிப்பு.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

https://www.tnebltd.gov.in/BillStatus/billstatus.xhtml என்ற இணையதளத்தில் தங்களது மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் எண்ணை அளித்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கலாம்.

* மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒடிசா அமைச்சரை போலீஸ் எஸ்ஐ சுட்டுக் கொன்றது ஏன்? மர்மங்கள் நீடிப்பதால் சிஐடி விசாரணைக்கு உத்தரவு!..

புவனேஸ்வர்: மனநலம் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்த போலீஸ் எஸ்ஐ ஒருவர், ஒடிசா அமைச்சரை கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவத்தில் மர்மங்கள் நீடிக்கிறது. அதையடுத்து இவ்வழக்கு சிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது.

அவரது அமைச்சரவையில், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த நபா கிஷோர் தாஸ் (60), நேற்று முன்தினம் ஜார்சுகுடா மாவட்டம் பிரச்ராஜ் நகரில் குறைதீர்க்கும் அலுவலகத் திறப்பு விழாவில் பங்கேற்க சென்றார்.

அப்போது, காரில் இருந்து இறங்கி விழா மேடைக்கு அமைச்சர் நபா கிஷோர் தாஸ் நடந்து சென்றபோது, சட்டஒழுங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் எஸ்ஐ கோபால் தாஸ், அமைச்சரை நோக்கி 2 முறை துப்பாக்கியால் சுட்டார். இதில், 2 குண்டுகள் மார்பில் பாய்ந்ததில் அமைச்சர் நபா கிஷோர் தாஸ் நிலை குலைந்து சரிந்தார்.

அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு காரில் கொண்டு சென்றனர். அவரது உடல்நிலை கவலைக்கிடமானதையடுத்து, ஜார்சுகுடா விமான நிலையத்தில் இருந்து வான் வழியாக புவனேஸ்வருக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.

மருத்துவமனையில் உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இதுவரை கொலைக்கான காரணம் தெளிவாக தெரியாத நிலையில், இவ்வழக்கை சிஐடி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே கொலையாளியான போலீஸ் எஸ்ஐ கோபால் தாசின் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரிகள் கூறுகையில், ‘அமைச்சர் நபா கிஷோர் தாஸின் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் எஸ்ஐ கோபால் தாஸ், கடந்த 8 ஆண்டுகளாக மனநலம் சார்ந்த பிரச்னைகளை எதிர்கொண்டிருந்தார். தொடர் சிகிச்சையில் இருந்த அவர் கடந்த ஓராண்டாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை.

கடந்த 5 மாதங்களாக அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கூட சென்று பார்க்கவில்லை.

மேற்கண்ட விவகாரங்கள் குறித்து கோபால் தாஸின் மனைவி ஜெயந்தி தாஸ் மற்றும் மனோதத்துவ டாக்டரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. தற்போது இவ்வழக்கை சிஐடி விசாரணை நடத்தி வருகிறது.

குற்றம்சாட்டப்பட்ட கோபால் தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சரின் கொலையின் வேறு ஏதேனும் சதி வலைகள் பின்னப்பட்டுள்ளதா? என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது’ என்றனர்.

TELEGRAM: t.me/agnipuratchi1

* அந்தமான் நிக்கோபார் தீவில் 4.9 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம்.

அதிகாலை 3.40 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

* ’’தமிழைத் தேடி..” பயணத்திற்காக இலட்சினையை - மருத்துவர் அய்யா அவர்கள் வெளியிட்டார்கள்!

பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் தமிழ்நாட்டில் தமிழை வளர்த்தெடுப்பதற்கான தேவையை வலியுறுத்தி ’’தமிழைத் தேடி...’’ என்ற தலைப்பில் பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

உலக தாய்மொழி நாளான பிப்ரவரி 21-ஆம் நாள் சென்னையில் தொடங்கும் இந்த பயணம் பிப்ரவரி 28-ஆம் நாள் மதுரையில் நிறைவடையவுள்ளது. இந்த பயணத்திற்காக பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் இலட்சினை  தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இலட்சினையை மருத்துவர் அய்யா அவர்கள் இன்று காலை வெளியிட்டார். இலட்சினையை பாட்டாளி மக்கள் கட்யின் இணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே.மூர்த்தி பெற்றுக் கொண்டார்.

* நாமக்கல் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம் சஸ்பெண்ட்

அரசு நிகழ்ச்சியில் தேசிய கீதத்தை மதிக்காமல் செல்போன் பேசிய வீடியோ வைரலானதை தொடர்ந்து நடவடிக்கை

* நாடாளுமன்றம் வந்தடைந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் வரவேற்றனர்

நாடாளுமன்றத்தின் மைய அரங்கில், இன்னும் சற்று நேரத்தில் உரையாற்றினார் குடியரசுத் தலைவர் முர்மு

🔴 அரசியலை விட்டு விலகத் தயார்: அண்ணாமலை பரபரப்பு பேட்டி...

Watch: https://youtu.be/r1yoPOAHuIY

* குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்.

இன்று தன்னம்பிக்கையில் உயர்ந்து நிற்கிறது இந்தியா; உலகமே இந்தியாவை எதிர்நோக்கி உள்ளது-குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை.

ஏழை மக்கள் முன்னேற்றத்துக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது; நாட்டின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளது.

உலகின் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வுகளை இந்தியா வழங்கி வருகிறது; தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

ஜல்ஜீவன் திட்டம் மூலம் கிராமப்புறங்களில் பெரும்பான்மையான மக்கள் பயனடைந்து வருகிறார்கள்.

இன்று நாட்டில் உறுதியான, அச்சமற்ற தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்ளும் அரசு ஆட்சியில் உள்ளது.

* சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைத்தால் அதை உடைப்போம்; வேண்டுமென்றால் அண்ணா அறிவாலயத்தில் வைத்துக் கொள்ளட்டும்"

- சென்னையில் கருத்துக்கேட்பு கூட்டத்தில் பங்கேற்றபின் சீமான் ஆவேசம்

"பள்ளிக்கூடத்தை சீரமைக்க நிதியில்லை, பேனா நினைவுச் சின்னம் அமைக்க எங்கிருந்து நிதி வருகிறது?"

"பேனா நினைவுச் சின்னத்தை கடலில் வைப்பதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும்" - நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான்

"கருணாநிதி பேனா பற்றி மாற்று கருத்து சொன்னால் கூச்சல் போடுகிறார்கள்"

"நிதி இல்லை என்று சொல்பவர்கள் கடலில் பேனா வைக்கலாமா?

"கடலுக்குள் பேனா சிலை வைப்பதையே எதிர்க்கிறோம்"- நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான்

🔴 மெரினா கடலில் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் வைத்தால் உடைப்பேன்"

வீடியோ: https://youtu.be/jzUTMtjDzDo

கருத்துக்கேட்பு கூட்டத்தில் சீமான் அதிரடி பேச்சு

* மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு.

பிப்ரவரி 15 வரை அவகாசத்தை நீட்டித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு.

* மேகேதாட் அணை விவகாரத்தில் - தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு.

பெங்களூரு குடிநீர் திட்டத்திற்கு காவிரியிலிருந்து  நீரை எடுக்க கூடாது என கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்-தமிழ்நாடு அரசு

* மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இளைஞர் சடலம் கடலூர் அருகே பரபரப்பு.

கடலூர்: விருத்தாசலம் அருகே இராஜேந்திரபட்டினம் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில், பொறியியல் பட்டதாரி சடலமாக கண்டெடுப்பு; போலீசார் விசாரணை.

* ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பொருத்தவரை இதுவரை எந்த முடிவும் எடுக்கபடவில்லை”

ஒரிரு நாட்களில் எங்களது முடிவு தெரிவிக்கப்படும்; அதிமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

எங்கள் முடிவுக்காக அதிமுக காத்திருக்கட்டும்; அது பற்றி கவலை இல்லை - பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி- பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி

* தமிழ்நாடு முழுவதும் கோயில்கள் பெயரில் உள்ள அங்கீகரிக்கப்படாத, சட்டவிரோதமான, போலி இணையதளங்களை முடக்க உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

போலி இணையதளங்களை இயக்குவோர் மீது உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவும் ஆணை.

* ஆந்திரா தலைநகரமானது விசாகப்பட்டினம்.

ஆந்திராவின் தலைநகரமாக விசாகப்பட்டினம் அறிவிப்பு; விரைவில் அரசு அலுவல் நடவடிக்கைகள் அனைத்தும் விசாகப்பட்டினத்துக்கு மாற்றப்படும் என முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு.

ஆந்திர மாநிலம் 2014 ஜூன் மாதம் இரண்டாக பிரிக்கப்பட்டது; விசாகப்பட்டினம் தலைநகராக அறிவிக்கப்பட்டதன் மூலம் 3 தலைநகரம் திட்டம் கைவிடப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages